World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greece: Karamanlis calls for early elections

கிரேக்கம்: கரமனலிஸ் முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கிறார்

By John Vassilopoulos
12 September 2009

Use this version to print | Send feedback

பொதுத் தேர்தல்கள் முன்கூட்டியே அக்டோபர் 5ல் நடத்தப்பட வேண்டும் என்று கிரேக்க பிரதம மந்திரி கரமன்லிஸ் அழைப்பு விடுத்துள்ளார். கரமனலிஸின் புதிய ஜனநாயகக் கட்சிக்குள் (New Democracy - ND) இருக்கும் பலர், அவருடைய முடிவைக் கண்டித்துள்ளனர்; முன்னாள் மந்திரி மைக்கேல்ஸ் லியாபிஸ் இதை "அரசியல் தற்கொலை" என்று கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கரமனலிஸ் அவருடைய நிர்வாகத்தில் தந்திர உத்திக்கு அதிக இடமிருக்காது என்று கணிக்கிறார். அவருடைய நிர்வாகம் பல ஊழல்களை எதிர்கொண்டுள்ளதாலும், கிரேக்கத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களை அவர் நிர்வாகம் திறமையாக கையாளவில்லை என்று கூறப்படுவதாலும், அது பெரிதும் செல்வாக்கிழந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதார நெருக்கடியின் விளைவுகளில் இருந்து, கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கைப் பிணையெடுப்பதற்கு தேவையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள, கடுமையான முறைமைகளை எடுத்துச்செல்லும் சட்ட ஆணைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியை தான் கரமனலிஸின் நடவடிக்கை எடுத்துகாட்டுகிறது. தற்பொழுது அவருக்கு கிரேக்கப் பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு வித்தியாச பெரும்பான்மைதான் உள்ளது. To Vima ல் வந்த சமீபத்திய கட்டுரை ஒன்றின்படி, "ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டு நெறிகளின்படி பட்ஜேட் பற்றாக்குறை 3 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை அதற்கும் கீழ் குறைக்க, ஐரோப்பிய ஒன்றியத்தை அரசாங்கம் கோரி வருவதை இரண்டு ஆண்டுகளுக்கு விரிவாக்குவதற்கான ஒரு புதிய முறைமைகளை அறிவிப்பது குறித்து அவர் சிந்திக்கவும் கூட விரும்பவில்லை. அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது பற்றி நினைக்கும் போதெல்லாம் அவருக்கு தலைவலி வரும்; பட்ஜட்டை ஒட்டி அவர் ஊதிய உயர்வுகளை முடக்க வேண்டியிருக்கும், மறைமுக வரிகள் (stealth taxes) மூலம் பெரிய சுமைகள் ஏற்படும்." என்று கூறுகிறது.

அவருடைய முக்கிய போட்டி கட்சியான George Papandreou ன் தலைமையிலான Panhellenic Socialist Movemenjt (PASOK) கட்சியிடமிருந்து முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்பு வருவதற்கு முன்னதாகவே, அந்த முனைவை தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இந்த நடவடிக்கை இருந்தது.

அடுத்த மார்ச் மாதம் நடக்கவிருக்கும் தேசத்தலைவர் தேர்தலைப் பயன்படுத்தி, ஒரு தேர்தலைக் கட்டாயமாக கொண்டு வர Papandreou திட்டமிட்டிருந்தார். தற்பொழுது நாட்டின் தலைவராக இருக்கும் Karolos Papoulias பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்; வெற்றிபெறும் வேட்பாளருக்கு மூன்றில் இரு பங்கு வாக்குகள் பெரும்பான்மை தேவைப்படும். கிரேக்கச் சட்டத்தின்படி, இப்படிப் பெறாவிட்டால் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே Papoulias க்கு தன் ஆதரவை திரும்பப் பெற இருப்பாததாக அச்சுறுத்தி Papandreou தேர்தலுக்கு கட்டாயப்படுத்திவிட்டார். மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை அவருடைய செல்வாக்கை மேலும் குறைத்துவிடும் என்று கரமனலிசின் அஞ்சுகிறார்.

இந்த தேர்தல் பல ஊழல்களுடன் தொடர்புடைய அரசாங்க உறுப்பினர்களை, வெளியே அனுப்புவதற்கான வாய்ப்பாகவும் பயன்படும். இந்த ஊழல்களில் குறிப்பாக, Mount Athos ல் இருக்கும் Vatopaidi மடாலய நிலங்களின் மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட ஊழலும் உள்ளது. இதில், செழிப்பான அரசு நிலங்களை மந்திரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து மடாலயம் இவற்றை கையகப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

நிதிய நெருக்கடி, 1993க்கு பிறகு முதன்முறையாக கிரேக்க பொருளாதாரத்தைச் சுருங்க வைத்துள்ளது; அது ஆகஸ்டில் ஆண்டுக்குஆண்டு 0.2 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டிருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் இருக்கும் சுற்றுலா பிரிவு, இந்த ஆண்டு 10 சதவீதமாக சரிந்துள்ளது. ஏற்றுமதி பொருட்களில், குறிப்பாக எண்ணெயில் உலக பொருளாதாரம் சரிவைக் கண்டுள்ளதால், கப்பல்சார் துறையும் கடினமான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.

கிரேக்க வங்கிகள் மிக உயர்வான நீண்டகால பொருளாதார பணயங்களை மேற்கு ஐரோப்பாவில் எதிர்கொண்டு வருவதாக Standard & Poorன் ஒரு சமீபத்திய செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது: "இலக்குக்குட்பட்ட சில சந்தைகளில் இருக்கும் பெரும் பொருளாதார சமசீரற்ற தன்மையோடும், அவை அனுபவிக்கும் திடீர் பொருளாதர சுருக்கத்தின் பின்புலத்திலுள்ள ஆபத்து நிறைந்த பெரும் பொருளாதார சந்தைகளில் கிரேக்க வங்கி பெருமளவில் காலூன்றி உள்ளதால் அவற்றின் அபாய கடன்களின் அளவும் உயர்ந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம்."

இச்சந்தைகளில், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, துருக்கி, உக்ரைன் ஆகியவையும் அடங்கும்.

அவருடைய அரசாங்கமும், கிரேக்கத்தின் ஆளும் வர்க்கமும் எதிர்கொண்டுள்ள பெரும் திகைப்பூட்டும் நிலைமை பற்றி இந்த வாரம் 74வது சர்வதேச சலோனிகா பொருட்காட்சியில் கரமனலிஸ் வெளிப்படையாகவே கூறினார்: "அடுத்த இரு ஆண்டுகள், குறிப்பாக 2010ம் ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும். எனவே நாம் தேவையான கொள்கைகளைச் செயல்படுத்தி நீண்ட கால வளர்ச்சிக்கு அஸ்திவாரங்களை அமைக்க வேண்டும்... நாம் நேரடியாகவும், உறுதியாகவும் செயல்படவில்லை என்றால் ஆபத்துக்கள் அதிகரித்துவிடும்."

அவர் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், சுகாதாரம், கல்வித் துறைகளில் நியமன முடக்கத்தை பரந்த முறையில் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க கூடும் என்பதை அவர் அந்த உரையில் சுட்டி காட்டினார். ஊதிய உயர்வுகள் தேசிய பணவீக்கத்திற்காக மட்டும் நிர்ணயிக்கப்படாமல், ஐரோப்பிய ஒன்றிய பிராந்திய அடிப்படையிலும் இருக்கும். பொதுத்துறை ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றில் முடக்கம் இருக்கும். நடுத்தர காலத்தில் பட்ஜெட்டைக் கட்டுப்படுத்தும் விதத்தில், பொதுப் பணம் செலவழிக்கப்படுவது கூடுதலான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் என்றார்.

கரமனலிஸ்ஸின் உரையின்போது, 10,000 பேர் பங்கு பெற்ற, தொழிற்சங்கங்களும், பல இடதுசாரிப் பிரிவுகளும் அழைத்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடந்தது. ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி PASOK க்கு 30.4 சதவிகித வாக்குகளும், 24.1 சதவிகிதத்தில் ND பின் தங்கியிருக்க கூடும் என்பதும் தெரியவருகிறது. முழு அரசியல் பற்றிய மக்களின் பரந்த இழிவுணர்வையும் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது; ஏனெனில் 27.6 சதவிகிதத்தினர் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளனர். குட்டி முதலாளித்துவ தேர்தல் கூட்டணியான SYRIZA 3 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது; அதே நேரத்தில் தீவிர வலது அமைப்பான LAOS 4 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

அரசியல் முறைக்கு கணிசமான விரோதம் பற்றி வெளிப்படையாக இகழ்வைக் காட்டிய கரமனலிஸ், சலோனிகா உரையில் அவருடைய அரசியல் தளம் எவ்வளவு குறுகியது என்பதை நிரூபித்தார். அவருடைய அடிப்படை ஆதரவாளர்கள் பலர் LAOS க்கு சென்றுவிடக்கூடும் என்ற அச்சத்தில், அரசாங்க சக்திகள் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும், பல்கலைக்கழக காப்பு எனும் உரிமை மறுப்பு போன்ற ஜனநாயக விரோத முறைமைகளை அறிவித்ததன் மூலம், அவர் மேலும் வலதிற்கு திரும்பினார். 1974 இராணுவ ஆட்சி வீழ்ந்தவுடன் கிடைத்திருந்த ஜனநாயக உரிமையாகும் இது; அதற்குக் காரணம் அந்ந ஆண்டு ஏதென்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் டாங்குகள் நுழைந்ததால் மாணவர் எழுச்சி பரபரப்புடன் ஏற்பட்டிருந்தது.

மற்ற கட்சிகள் எதுவும் உண்மையான மாற்றீட்டை பிரதிபலிக்கவில்லை. ஒரு தேர்தலுக்கான அழைப்பை எதிர்கொள்ளும் வகையில், PASOK பொருளாதாரத்தைச் சீர்செய்யவும், ஜனநாயக வழிவகை மீதான நம்பிக்கையை மீட்கவும் தெளிவற்ற நடவடிக்கைகளாக இருக்கும் அழைப்புக்களை விடுத்துள்ளது. ஆனால் இக்கட்சியின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இல்லை. 40 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள், பொருளாதார நெருக்கடிக்கு புதிய ஜனநாயக கட்சியைப் போலவே இதையும் குறை கூறுகிறார்கள். 1980 களில் வந்த குறைந்த அளவு சீர்திருத்தங்களைக் கூட தகர்க்கும் அளவில் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு முந்தைய PASOK நிர்வாகம், அஸ்திவாரம் போட்டது. PASOK மட்டும் ஊழலுக்கு அறிமுகமாகாத ஓர் அமைப்பல்ல. பல நாடுகளுக்கு Siemens கொடுத்திருந்த லஞ்சங்கள் தொடர்பாக ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் வழக்கு ஒன்றில், 1980லிருந்த PASOK அரசாங்கத்தின் உறுப்பினர்களையும் உள்ளடங்கி உள்ளனர்.

SYRIZA சமீபத்திய ஐரோப்பிய தேர்தல்களில் பேரழிவைச் சந்தித்தது. கூட்டணியின் தலைவராக இருந்த Alekos Alavanos ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அது தலைமை பற்றிய நெருக்கடியிலும் ஆழ்ந்துள்ளது. தேர்தல்கள் அறிவிப்பிற்கு விடையிறுக்கும் வகையில், SYRIZA ன் முக்கிய கூறுபாடான Synaspismos (இடது இயக்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் கூட்டணி), பொருளாதார நெருக்கடியின் விளைவுகளால் கஷ்டப்படும் தொழிலாளர்களையும், பொருளாதாரரீதியில் வறியவர்களையும் காப்பாற்றுவதற்கு "ஒற்றுமை" என்ற பொதுக் கேடயம் வேண்டும் என்று கூறுகிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான (சோவியத் கம்யூனிஸ்ட் சார்புடைய KKE, மற்றும் யூரோ கம்யூனிஸ்ட் சார்புடைய கிரேக்க இடது) தேர்தல் கூட்டணியுடன் தான், இந்த Synaspismos அதன் வாழ்க்கை போக்கைத் தொடங்கியது.