World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year since the collapse of Lehman Brothers

லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவின் ஓராண்டிற்கு பின்னர்

Nick Beams
15 September 2009

Use this version to print | Send feedback

இன்றைக்கு ஓராண்டிற்கு முன்னர், 158 ஆண்டுகள் செயல்பட்டு வந்த, அமெரிக்காவின் நான்காம் மிகப் பெரிய அமெரிக்க முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் பொறிவைச் சந்தித்தது. அது உலக நிதிய முறை முழுவதையும் சூழ்ந்திடும் அபாயகரமான ஒரு சரிவை செயலுக்கு கொண்டு வந்தது.

இதற்கு இரண்டு நாட்களுக்கு பின்னர், American International Grou (AIG) எனும் முன்னணி காப்பீட்டு நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் $85 பில்லியனைப் பிணையெடுப்பாக அளித்தது. அதற்கு பின்னர் வந்த வாரங்களில், சர்வதேச நிதிய சந்தையில் $3.6 டிரில்லியன்கள் கொட்டப்பட்டன. உலக முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு நிதிய உராய்வை எளிமைப்படுத்தும் வகையில், வியாபாரரீதியான காகித சந்தை அதை கைப்பற்றியது. நிதி தங்களுக்கே தேவைப்படலாம் என்பதாலோ அல்லது கடன் வாங்கும் நிறுவனங்கள் பொறிவைச் சந்தித்தால் என்ன செய்வது என்ற அச்சத்தாலோ, வங்கிகளும், நிதிய நிறுவனங்களும் அவற்றின் ரொக்க கையிருப்புக்களை வெளியிடாததால், கிட்டத்தட்ட ஒவ்வொரு சந்தையிலும் நிதி பரிமாற்றங்கள் உறைந்து போயின.

தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளின் மலிவு கடனால் வளர்த்துவிடப்பட்ட, வீட்டுத்துறை குமிழியைத் தொடர்ந்து, 2007 தொடக்கத்தில் அமெரிக்க அடைமான நிதிய சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியில் நெருக்கடி நிலையின் ஆரம்ப காரணங்கள் தோன்றின. அடைமான தளத்தைக் கொண்ட பத்திரங்களை வாங்குவதும் விற்பதும் வோல்ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு கூடுதலான முக்கியதுவம் என ஆயிற்று; இது, அதிக ஆபத்தான முதலீடுகளின் அடிப்படையில் அமைந்திருந்த "துணை-முக்கிய" சந்தை" (sub-prime market) என்றழைக்கப்பட்டதன் விரிவாக்கத்திற்கு இட்டு சென்றது.

நெருக்கடி சர்வதேச அளவில் பரவத் தொடங்கிய போது, அமெரிக்க அடைமான சந்தையில் பெரும் தொடர்பு கொண்டிருந்த இரண்டு ஜேர்மனிய வங்கிகள் பிணையெடுக்கப்பட்டன, அதனோடு சேர்ந்து, ஆகஸ்ட் 2007ல் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியுடன் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் சரிவுகூட வரலாம் என்ற கணிப்புக்கள் ஒருகட்டத்தில் ஏற்பட்டிருந்தன வீட்டுத்துறை குமிழின் முடிவு வோல்ஸ்ட்ரீட்டை பாதித்தது.

முந்தைய நிதிய புயல்களில் குறுக்கிட்டதைப் போலவே அக்டோபர் 1987ன் வோல் ஸ்ட்ரீட் சரிவு, 1997ல் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடி, 1998ல் நிகழ்ந்த நீண்டகால மூதலீட்டு நிர்வாகத்தின் தோல்வி, 2001ல் ஏற்பட்ட dot.com குமிழி வெடிப்பு போன்றவை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறுக்கிட்டு, வட்டி விகிதங்களைக் குறைந்து, கடன் கொடுப்பதற்கான நிபந்தனைகளையும் தளர்த்தியது. ஆனால் இம்முறை, இந்த நடவடிக்கைகள் நெருக்கடியைக் குறைப்பதில் தோல்வியுற்றன.

அடுத்து வந்த மாதங்களில், நிதிய சந்தைகளின் பிரச்சினைகள் மோசமடைந்தன; அமெரிக்க அரசாங்கம் ஒரு $30 பில்லியன் நடவடிக்கையைத் தொடங்கி, JP Morgan Chase நிறுவனத்தால் Bear Stearns முதலீட்டு வங்கி கையகப்படுத்தப்பட்ட போது மார்ச் 2008ல் ஏற்பட்ட வெடிப்பு வரை அவை அவ்வாறே மோசமடைந்திருந்தன. அமெரிக்காவின் இரண்டாம் மிகப் பெரிய அடைமான பத்திரங்களுக்கு உறுதியளிக்கும் Bear Stearns நிறுவனம், அதன் இரண்டு ஹெட்ஜ் நிதியங்கள் (hedge funds) முந்தைய ஜூலையில் தோல்வி அடைந்ததால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தது; கடன்களைத் திருப்பிக் கொடுக்க போதுமான ரொக்கம் அதனிடம் இல்லை என்ற அச்சமும் பெருகியது.

மார்ச் 18ல் வெளியான உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு அறிக்கை ஒன்று, Bear Stearns சரிவின் உட்குறிப்புக்கள் பற்றி அறிக்கை விடுத்தது: "அடுத்த சில வாரங்களில் வோல்ஸ்ட்ரீட் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும், ஒரு வரலாற்றுத் தன்மை நிறைந்த பெரும் நெருக்கடி இப்பொழுது வெளிப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. வோல் ஸ்ட்ரீட்டில் நிதிய மந்திரங்களிடும் புத்திசாலிகளைப் பற்றியும், முதலாளித்துவ சந்தையின் பிழைக்கிடமில்லாத தன்மையைப் பற்றியும் செய்தி ஊடகங்கள் ஒரு தலைமுறை இடைவிடாமல் செய்த பிரச்சாரத்திற்குப் பின்னர், மாபெரும் அழுத்தத்திற்குப் பின்னர் ஒருபோதும் காணாப்படாத அளவிற்கு, அமெரிக்க பொருளாதாரம் இப்பொழுது ஒரு பொருளாதார நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது."

ஆறே மாதங்களுக்கு பின்னர், இந்த எச்சரிக்கை உறுதிபடுத்தப்பட்டது.

2008 செப்டம்பர் மற்றும் அக்டோபர் நெருக்கடியானது, அமெரிக்க நிர்வாகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்கள் முன்னோடியில்லாத அளவிற்கு பிணையெடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தூண்டியது. நிதிய முறையை முட்டு கொடுத்து நிறுத்த மகத்தான நிதியங்களை உட்செலுத்தப்படுவது, பொருளாதாரப் பேரழிவைத் தடுக்கும் ஒரு வழிவகை என்று விளம்பரப்படுத்தப்பட்டது; அமெரிக்காவில் முழுமையான உறுதி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றால், அதற்கு மட்டும் $23.7 டிரில்லியன் தேவைப்பட்டது. தொடக்கத்திலிருந்தே, இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்ட விதம், அதன் அடிப்படை நோக்கத்தை வெளிப்படுத்தியதுஅதாவது, எப்படியும் மிகச் சக்தி வாய்ந்த நிதிய நலன்களைப் பாதுகாத்தல் என்பதே அது.

அப்போதைய அமெரிக்க நிதி மந்திரியும், முன்னாள் கோல்ட்மேன் சாக்ஷ்ஸின் தலைமை நிர்வாகியுமான ஹென்ரி போல்சன் தலைமையிலான ஒரு சிறிய குழுவால், ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் கூட்டம், நியூயோர்க் பெடரல் ரிசேர்வின் அலுவலகங்களில் நடைபெற்றது. தற்போதைய அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் (அப்போது நியூ யோர்க் பெடரல் ரிசேர்வின் தலைவராக இருந்தவர்) மற்றும் கோல்ட்மன் சாக்ஷ்ஸின் தலைமை நிர்வாகி Lloyd Blankfein ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

இதை தொடர்ந்து வந்த வாரங்களில் அடிக்கடி எழுப்பப்பட்ட கேள்வியாவது: லெஹ்மன் பிரதர்ஸ் ஏன் பிணையெடுப்பைப் பெறவில்லை, ஆனால் இரண்டு நாட்களுக்குப் பின்னர் AIG ஐக் காப்பாற்ற $85 பில்லியன் ஏன் கொடுக்கப்பட்டது? அப்பொழுது அதிகம் அறியப்படாவிட்டாலும், கோல்ட்மன் சாக்ஷ்ஸ் AIG உடைய மிகப் பெரிய வணிகப் பங்காளியாகும், காப்பீட்டு பெருநிறுவனம் சரிந்தால் குறைந்தது $20 பில்லியன்களை இழக்க நேரிடும்.

ஆரம்பத்தில் கூடிய அவசரகால கூட்டங்கள், அதன்பின் தொடர்ந்த வழிவகைகளை நிறுவின; பிணையெடுப்புகள் தேவையான நிதி மற்றும் சட்டங்கள் அரசாங்க அதிகாரிகளை கொண்டு ஏற்பாடு செய்யப்படும். அவை வங்கிகளால், வங்கிகளுக்காக அளிக்கப்படுபவை.

உலக நிதிய நெருக்கடியின் தொடக்கத்திலிருந்தும், 1930களுக்கு பின்னர் ஆழ்ந்த மந்தநிலை தொடங்கியதிலிருந்தும் உலக தொழில்துறை உற்பத்தியில் சரிவு, உலக வணிக, உலக பங்குகளின் விலை 1929-30 ஆண்டுகளை விட அவ்வாண்டு ஜூனில் கூடுதலாக இருந்தும் முக்கிய அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை வங்கி பிணையெடுப்புகள் மற்றும் ஊக்கப்பொதிகளுக்குச் செலவிட்டன; இவை உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 18 சதவீதத்திற்கு சமமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பங்குச்சந்தைகளின் எழுச்சி, நிதிய முறையின் ஸ்திரத்தன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகளுக்கு கூடுதலான இலாபங்கள் ஆகிய வடிவங்களில் "மீட்பிற்கான" அறிகுறிகளை இது உருவாக்கி இருக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டிலும் வேலையின்மை 10 சதவீதத்தை எட்டும் நிலையுடன், தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் நிலைமைகள், தொடர்ந்து மோசமடைந்துள்ளன.

டிரில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்பட்டிருக்கையில், அவற்றிற்கு வழிவகுத்த அடிப்படை பிரச்சினைகளில் ஒன்று கூட தீர்க்கப்படவில்லை, அவற்றிற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, சரிவிற்கு காரணமாக இருந்த அதே நிதிய முறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நெருக்கடி இன்னமும் தீர்க்கப்படவில்லை. மகத்தான கடன்களும், வங்கிகள், நிதிய நிறுவனங்களின் "உபயோகமற்ற சொத்துக்களும்", முதலாளித்துவ அரசாங்கத்தின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது தான் நடந்திருக்கிறது; இது நிதிய பிரபுத்துவத்தின் நிர்வாக குழுவைப் போல் செயல்படுகிறது. இந்த கடன், இப்போது தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது கடுமையான தாக்குதல் ஏற்படுத்துவதன் மூலமாக தான் தீர்க்கப்படும்.

"ஒரு வெளியேறும் மூலோபாயம்" தயாரிக்கப்பட வேண்டிய தேவை பற்றிய சமீபத்திய உரையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் Dominique Strauss-Kahn இப்போது நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பட்டியலை வகுத்து கொடுத்தார்: "ஓய்வூதியம், சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களைக் குறைப்பது தான் மிக முக்கியமான நடவடிக்கையாகும்... இந்த துறையில் செலவினங்களைக் குறைக்கும் சீர்திருத்தங்கள் அரசியல் அளவில் கடினமாக இருந்தாலும், நிதிய நிர்வாகம் தொடர்ந்து நடப்பதற்கு அவை இன்றியமையாதவையாகும்."

இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கார் தயாரிப்பு தொழிலை "மறு கட்டமைத்த பின்", ஒபாமா நிர்வாகம் சுகாதார பாதுகாப்பு செலவினங்களை பெரிதும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வரவிருக்கும் தேர்தல்களுக்குப் பின்னர் பிரிட்டனில் எந்த கட்சி பதவிக்கு வந்தாலும், மிகப் பெரிய அளவில் செலவினங்களைக் குறைக்கும். இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள சமீபத்திய கட்டுரை ஒன்று, பிரிட்டனின் நுகர்வு 2006-07 ஆண்டு அளவுகளை விட 20 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் நுழையாத ஆஸ்திரேலியாவில், ரூட்டின் தொழிலாளர் கட்சி அரசாங்கம், பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக ஏற்கனவே "மீட்பின் வேதனை" என்பது பற்றி எச்சரிக்கை அளித்துள்ளது.

"மீட்பு", "மூலையைக் கடந்து கொண்டிருக்கிறது" போன்றவை உத்தியோகபூர்வ "விறுவிறுப்பு செய்திகளாக" இருக்கும் நிலையில், பிரச்சினை ஒன்றும் தீர்க்கப்படவில்லை, மேலும் சரிய கூடிய ஆபத்துக்கள் தான் தொடர்கின்றன என்று கூர்மையாக ஊகிக்க கூடிய விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் சர்வதேச நிதிய அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் சைமன் ஜோன்சன் கருத்தின்படி, நிதிய முறையில் அதிக "சீர்திருத்தம்" நடக்கவில்லை, அது பற்றிய விவாதம் இல்லை. "நடைமுறை உண்மைகள்" மிகவும் வெளிப்படையானவை என்று அவர் குறிப்படுகிறார்: "எமது வங்கிகளும், அவற்றின் "நிதிய புதுமைகளும்" மாற்றப்படவில்லை. உண்மையில் அவை இன்னும் ஆபத்தான தன்மையில் தான் இருக்கின்றன.... மகத்தான நெருக்கடியை நாம் கடந்து வந்துள்ளோம், ஒரு பெரிய இரண்டாம் மந்தநிலைக்கு அருகில் இருந்தோம் என்பதை உணர்ந்த போதும் கூட, வருங்காலத்தில் அத்தகைய நிலை வரக்கூடாது என்பதைத் தடுக்க ஏதும் செய்யப்படவில்லை."

இந்த ஓராண்டில், தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியிலிருந்து போதுமான படிப்பனைகளைப் பெற வேண்டும். பொருளாதார நிகழ்வுகளின் உடனடி போக்கு எப்படி இருந்தாலும், தீர்வு காண்பதற்கு அது அதன் கைகளையே பயன்படுத்தி, அதன் தலையைச் சூழ்ந்துள்ள பேராபத்து அச்சுறத்தலை அகற்ற பாடுபட வேண்டும்.

இந்த பெரும் வரலாற்று தன்மை வாய்ந்த நெருக்கடிக்கு, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் பகுத்தறிவார்ந்த தீர்வு எதுவும் இல்லை. திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதின் மூலம், இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தன்னுடைய கைகளில் திறமையுடன் அரசியல் அதிகாரத்தைக் குவித்திருக்கும் நிதிய தன்னலக்குழுவை அகற்றுவதால் மட்டும் தான் எதிர்காலம் பாதுகாக்கப்பட முடியும். இதுவே உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காகும்.