World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US-China trade tensions sharply escalate

அமெரிக்க -சீன வர்த்தக பதட்டங்கள் கடுமையாய் தீவிரமடைகின்றன

By John Chan
16 September 2009

Use this version to print | Send feedback

ஒரு பெரிய வணிகப் பூசலைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்ட நடவடிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கடந்த வெள்ளியன்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதின்மீது 35 சதவிகித காப்புவரியைச் சுமத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்தத் தீவிர அமெரிக்க நடவடிக்கையும், அமெரிக்க கார் மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் இறக்குமதிகளில் குவித்தலுக்கு எதிரான விசாரணைகள் என்று சீனாவின் விரைவான விடையிறுப்பும் பொருளாதார வர்ணனையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது; இன்னும் பரந்த வணிகப் போர் வரக்கூடும் என்ற அச்சங்களை தூண்டியுள்ளது. சீனா முறையாக அமெரிக்காவை உலக வர்த்தகக் குழுவின் முன் அதன் கார்த்தயாரிப்பு, கோழிப்பண்ணை பொருட்கள் இறக்குமதிகளுக்காக நிறுத்தியுள்ளது.

இந்தப் பூசல்களில் தொடர்புடைய உண்மை வணிகம் ஒப்புமையில் குறைவு என்றாலும் அமெரிக்க-சீன பூசல் 1930களின் பெரு மந்த நிலையில் நடந்தது போல் கட்டுப்பாட்டை மீறி செல்லும் திறனைக் கொண்டுள்ளது. காப்புவரிக் கொள்கையை எதிர்ப்பது பற்றிய முந்தைய அலங்காரச் சொற்கள் இருந்தபோதிலும், உலகின் மிகப் பெரிய மற்றும் மூன்றாம் பெரிய பொருளாதாரங்களும் அடுத்த வாரம் பிட்ஸ்பர்க்கில் நடக்கவிருக்கும் G20 மாநாட்டிற்கு வணிகம் பற்றிய மோதலுடன் செல்லுகின்றன.

அமெரிக்க-சீன வணிகப் முரண்பாடுகள் பாதுகாப்புவாதம் பற்றி உலகம் முழுவதும் வந்துள்ள போக்கின் மிக வியத்தகு வளர்ச்சிதான். WTO மற்றும் Global Trade Alert (GTA) இரண்டும் திங்களன்று, G20 நாடுகள் கடந்த நவம்பரில் வாஷிங்டனில் உறுதிமொழிகள் கொடுத்த போதிலும், ஏப்ரலில் லண்டனிலும் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று திரும்பக் கூறிய போதிலும், தொடர்ந்து காப்புவாத நடவடிக்கைகளை எடுக்கின்றன என்று எச்சரித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. GTA ஒருங்கிணைப்பாளர் சைமன் எவனெட் பைனான்சியல் டைம்ஸிடம் "சராசரியாக G20 உறுப்புநாடு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாதுகாப்புவாதம் இல்லை என்ற உறுதிமொழியை மீறிச் செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

ஏற்கனவே அமெரிக்க-சீன வணிகப் பூசல் பங்குகள், பத்திரச் சந்தைகளை பாதித்துள்ளன. அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பிற டாலர் சொத்துக்களை பெருமளவில் கொண்டுள்ள சீனா அவற்றை வாங்குவதை நிறுத்துதல், இருப்பதை விற்றல் என்ற விதத்தில் பதிலடி கொடுக்கலாம் என்ற அச்சம் உள்ளது. லண்டனில் FTSE குறியீடு செவ்வாயன்று 5,000க்கும் கீழே போயிற்று; ஜப்பானின் Nikkei 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக இழந்தது. வோல் ஸ்ட்ரீட்டின் Dow Jones மற்றும் அமெரிக்கப் பத்திரங்களும் சரிந்தன.

ஜூலை மாதத்திய அமெரிக்க சீன மூலோபாயப் பொருளாதார உரையாடலில், இரு நாடுகளில் இருந்து மூத்த அதிகாரிகள் தங்கள் பொருளாதார இடைத் தொடர்பு நம்பிக்கை பற்றி அதிகம் பேசியிருந்தனர். தன்னுடைய ஏற்றுமதிச் சந்தைக்கு சீனா பெரிதும் அமெரிக்காவை நம்பியுள்ளது; அதே நேரத்தில் வாஷிங்டன் பெய்ஜிங் தனக்குக் கிடைக்கும் ஏற்றுமதி வருவாயை பெரிய அளவில் அமெரிக்கக் கடன்களுக்கு நிதியளித்து மறுசுழற்சி செய்வதின் தேவையைக் கொண்டுள்ளது; திட்டமிடப்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக்குறை $1.56 டிரில்லியனாக இருக்கலாம் என்ற நிலையில், இந்த ஆண்டு இது இன்னும் கூடுதலாக உயரக்கூடும்.

இப்பொழுது காற்று திசை மாறியுள்ளது. ஐக்கிய எஃகுத் தொழிலாளர்கள் தலைமைதாங்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உந்தப்படும் ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்காவில் உயரும் வேலையின்மை, சரியும் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் அதிருப்தியைத் திசை திருப்ப காப்புவாதக் ஆயுதங்களைக் கையாள முற்பட்டுள்ளார். Bloomberg.com க்கு கொடுத்த கருத்துக்களில் ஒபாமா அறிவித்தார்: "நாம் ஒன்றும் ஒரு வணிகப் போருக்கு செல்லப்போவதில்லை." ஆனால் துல்லியமாக அந்தத் திசையில்தான் அவருடைய முடிவு செல்லுகிறது.

அமெரிக்க வணிக பிரதிநிதி Ron Kirk இம்முடிவை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க சர்வதேச வணிகக் குழுவின் முடிவான சீன டயர் இறக்குமதிகளின் "ஏற்றம்" அமெரிக்க டயர் தொழிலை சிதைத்து 5,000 வேலைகளை அழித்துவிட்டது என்பதைக் குறிப்பிட்டார். ஒபாமா நிர்வாகம் அந்த குழுவின் பரிந்துரையான 55 சதவிகித காப்புவரியை நிராகரித்தது; ஆனால் 35 சதவிகித பாதுகாப்புவரியை சுமத்தியுள்ளது; இது இரண்டாம் ஆண்டு 30 சதவிகிதமாகவும், மூன்றாம் ஆண்டு 25 சதவிகிதமாகவும் குறைக்கப்படும்.

தன் முடிவுகள் பாதுகாப்புவாதத் தன்மை உடையவை அல்ல, தன் உரிமைகளை நிலை நாட்டிக் கொள்ளுவதுதான் என்ற கட்டுக்கதையை அமெரிக்க நிர்வாகம் கூறுகிறது. அமெரிக்காவிற்கு சீனாவின் டயர் ஏற்றுமதிகள் 2004ல் 14.6 மில்லியன் அலகுகள் என்பதில் இருந்து 2008ல் 46 மில்லியன் என்று, கிட்டத்தட்ட அமெரிக்கச் சந்தையில் 17 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளன. 2001 ல் WTO வில் சீனாவை அனுமதிக்கும் உடன்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்கா தற்காலிகமாக காப்புவரி சுமத்தும் உரிமையை, சீனப் பொருட்கள் இறக்குமதியில், "ஒரு திடீர் எழுச்சி" இருந்ததால், தக்க வைத்துக் கொண்டது. இது அமெரிக்க வணிக சட்டத்தில் 421 வது பிரிவில் இயற்றப்பட்டது, 2013ல்தான் காலாவதியாகும்.

ஆனால் அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் வேலை அழிப்புக்கள், பணி நிலைமைகள், வாழ்க்கைத் தரங்கள் என்று அவை செயல்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து கவனத்தைத் திருப்ப சீன ஏற்றுமதிகளை பலியாடாக பயன்படுத்திக் கொள்ளுவதில் மன உளைச்சல் ஏதும் கொள்ளவில்லை. வணிகப்போரின் சொல்லாட்சியை பயன்படுத்தி அமெரிக்க எஃகுத் தெழிலாளர்களின் தலைவரான Leo Gerard வாஷிங்டன் போஸ்ட்டிடம், சீனாவின் பதிலடி குறித்து அமெரிக்கா பயப்படத் தேவையில்லை என்றார். "எமது வங்கியாளரை வரம்பிற்கு உட்படுத்துவதற்கு ஒவ்வொருவரும் பயப்படுகின்றனர். பதிலடி கொடுக்க நம் அரசாங்கம் ஊக்கம் கொண்டால், சீனா தோல்வி பெறும் நிலைக்குப் போகும்."

சீனத் தொழாளர்கள் நிலைமை பற்றி முற்றிலும் பொருட்படுத்தாத் தன்மையில் தொழிற்சங்க பிற்போக்குத்தன தேசியவாத முறையீடுகள், "அமெரிக்க வேலைகளைக் காப்பாற்றுக" என்பவை அமெரிக்கத் தொழிலாளர்களை ஜனநாயகக் கட்சிக்கு தாழ்த்தி வைப்பதற்குத்தான் உதவும்; சீனத் தொழிலாள வர்க்கத்துடன் எந்தவித ஐக்கியத்தையும் தடுத்துவிடும். சீன ரப்பர் தொழில் சங்கத்தின் கருத்துப்படி, வாஷிங்டனின் டயர் காப்புவரிகள் சீனத் தொழிலாளர்கள் 100,000 பேர் வரை வேலையிழப்பிற்கு உட்படுத்தும்.

பல நிலைமைகளில் சீன, அமெரிக்க தொழிலாளர்கள் ஒரே நிறுவனங்களால் சுரண்டப்படுகின்றனர். சீனாவின் வணிக அமைச்சரக செய்தித் தொடர்பாளர் Yao Jian அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன டயர்களில் மூன்றில் இரு பங்கு சீனாவில் செயல்படும் நான்கு அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார். பல பகுப்பாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளபடி, உலகளாவிய உற்பத்தி முறை சூழலில், அமெரிக்க காப்புவரிகள் சீனாவில் இருந்து டயர் உற்பத்தியை மற்ற குறைவூதிய தொழிலாள தொகுப்பு அரங்குகளான தென்கொரியா, போலந்து, மெக்சிகோ போன்றவற்றிற்கு மாற்றும் நிலையை விளைவிக்கும்.

அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கையில், முந்தைய புஷ் நிர்வாகம் தொழிற்சங்கங்கள் மற்றும் குறைந்த போட்டியுடைய அமெரிக்க உற்பத்தியாளர் கோரிய பாதுகாப்புவரி நடவடிக்கைகளை பெரிதும் புறக்கணித்தன. அமெரிக்க சர்வதேச வணிகக்குழு சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்த ஆறு பரிந்துரைகளில் புஷ் நான்கை நிராகரித்திருந்தார்.

ஆனால் இப்பொழுது அமெரிக்கா மற்றும் சீனாவில் இருக்கும் ஆளும் உயரடுக்குகள் உகப் பொருளாதாரக் கொந்தளிப்பிற்கு நடுவே, தங்கள் போட்டியாளர்களின் இழப்பில் தங்கள் நலன்களை காக்க பரபரப்புடன் செயல்புரிகின்றன. இரு நாடுகளும் மிகப் பெரிய ஊக்கப் பொதி பிணை எடுப்புக்களைச் செயல்படுத்தியுள்ளன; அவை எல்லாவற்றிகும் மேலாக தங்கள் நிதிய மற்றும் உற்பத்திப் பிரிவுகளைக் காக்கும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும்.

பைனான்ஸியல் டைம்ஸ் குறிப்பிட்டது: "அமெரிக்கா சீனாவை அடிக்கடி தன்னுடைய ஏற்றுமதியாளர்களுக்கு சட்டவிரோத அரசாங்க உதவி கொடுப்பதாக குற்றம் சாட்டுவதால், பெய்ஜிங் எதிர் குற்றசாட்டு முறையைக் கையாள்வதின் மூலம், குறிப்பாகப் பரந்த அமெரிக்க மோட்டார் தொழில்துறை பிணை எடுப்பை ஒட்டி, மதிப்பு நிறைந்த பிரச்சாரக் கருத்துக்களில் வெற்றி பெறும்." அமெரிக்க கார் பாகங்களை பெய்ஜிங் இலக்கு வைப்பது தற்செயல் நிகழ்வு அல்ல; இது அமெரிக்க நிறுவனங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உலகின் மிகப் பெரிய கார்ச் சந்தை என்று அமெரிக்காவையும் கடந்துவிடும் பாதையில் சீனா உள்ளது; இங்கு இந்த ஆண்டு 12 மில்லியன் அலகுகள் விற்கப்பட்டன; இதனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் 10 மில்லியன் வண்டிகள்தான் விற்கப்பட்டன.

அமெரிக்க கோழிப்பண்ணைப் பொருட்களை தனியே பெய்ஜிங் சுட்டிக்காட்டியிருப்பதும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகும். அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் நீண்ட காலமாக சீனச்சந்தைகளில் கூடுதலான இடம் பிடிக்க முயல்கின்றனர்; இது ஏற்கனவே அமெரிக்க கோழிப் பண்ணைப்பொருட்கள் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. தன்னுடைய வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய வணிகப் பிரிவையும் மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளையும் காக்க பெய்ஜிங் முற்பட்டுள்ளது. இப்பொழுது சீனா உலகின் மூன்றாம் மிகப் பெரிய கோழிப்பண்ணைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக, பிரேசில், அமெரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்து உள்ளது; ஆனால் குறைந்த உணவு பாதுகாப்பு தரங்கள் என்ற சாக்குப்போக்கைக் காரணம் காட்டி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதில் இருந்து தடைக்கு உட்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருப்பதைப் போல், சீன ஆட்சியும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே ஆழ்ந்திருக்கும் வர்க்கப் பிளவில் இருந்து கவனத்தைத் திசை திருப்புதற்காக, குறிப்பாக வெளிப்பட்டுவரும் மத்தியதர வகுப்பு அடுக்குகளுக்கு மத்தியில் வேண்டுமென்றே கடுமையான தேசிய உணர்வை ஊக்கப்படுத்தி வருகிறது. சமீபத்திய அமெரிக்க காப்புவரிக் கொள்கை அமெரிக்க எதிர்ப்பு கருத்துக்கள் ஏராளமாக வெளிவருவதற்கு வகை செய்தன; கடுமையான பதிலடி வேண்டும் என்ற கோரிக்கைகளும் வந்துள்ளன. "நம் அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்தின் கடன்களை இந்த அளவிற்கு ஏன் வாங்க வேண்டும்? இத்தகைய அமெரிக்க முதலீடுகளை நாம் அகற்றிவிட வேண்டும்" என்று அறிவிக்கும் "சீற்றமுடைய இளைஞர் குழு"-வினால் அஞ்சலிடப்பட்ட ஒரு இணைய தகவலை டைம்ஸ் மேற்கோள் காட்டியது.

பசிபிக்கின் இரு பக்கங்களிலும் தேசியவாத கூக்குரல் அதன் தர்க்கத்தைக் கொண்டுள்ளது. நேற்று இதைப் பற்றிக் கூறுகையில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கேட்டது: "ஹெர்பர்ட் ஹூவர் காலத்திற்குப் பின்னர் அதன் முதல் பாதுகாப்புவாத ஜனாதிபதியை அமெரிக்கா கொண்டால், உலகப் பொருளாதாரத்திற்கு என்ன நேரும்?" 1930ம் ஆண்டு Smoot-Hawley Act வெளிப்படையான வணிகப் போரை முன்கூட்டிக் கொண்டுவந்தது; அதையொட்டி உலக வணிகத்தில் பேரழிவு தரும் சரிவு ஏற்பட்டது. "வேண்டுமானால் திரு ஒபாமா ஒரு வணிகப் போரைத் தொடக்கும் விருப்பத்தை கொள்ளாமல் இருக்கலாம்; ஆனால் அப்போது ஹூவரும் அப்படி ஒரு போர் வேண்டும் என்று நினைத்து செயல்படவில்லை. அவர் அரசியலைக் கைவிட்டது, வணிக பெரும் ஆர்வங்களை மீண்டும் கட்டவிழ்த்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலைக்கு தள்ளியது" என்று அது எச்சரித்துள்ளது.