World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington elaborates AfPak strategy amid calls for US troop buildup

அமெரிக்கத் துருப்புக்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்ற அழைப்புகளுக்கு இடையே வாஷிங்டன் AfPak மூலோபாயத்தை விரிவாக்குகிறது

By Bill Van Auken
17 September 2009

Use this version to print | Send feedback

செனட்டின் இராணுவக்குழுவின் இரகசியக் கூட்டத்தில் ஒபாமா நிர்வாகம் அமெரிக்க போர் மூலோபாயத்தை விளக்கியும் பாக்கிஸ்தான் பற்றி சிறப்பாக வலியுறுத்தியும் ஒரு ஆவணத்தை அளித்தது. இந்த இரகசிய செய்தி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு அதிகரித்தளவில் வந்துள்ள எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு ஆப்கானிஸ்தானில் இருக்கும் துருப்புக்கள் கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் எனறு அங்குள்ள அமெரிக்கத் தளபதிகள் தெரிவித்த கருத்துக்களை அடுத்து வந்துள்ளது.

ஜனாதிபதி பாரக் ஒபாமா ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கப்படுவது பற்றி முடிவு உடனடியாக இல்லை என்றும், எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் வாஷிங்டனின் மூலோபாயம் பற்றி தெளிவுபடுத்தப்பட்ட பின்தான் அதிகரிக்கும் என்றும் புதனன்று கூறினார்.

"நாம் மூலோபாயத்தில் சரியாக இருக்கவேண்டும், அதன்பின்தான் இருப்புக்களைப் பற்றி உறுதியாக முடிவெடுக்க முடியும் என்பதில் நான் முற்றிலும் தெளிவாக உள்ளேன்" என்று ஒபாமா கூறினார். இதுவரை அமெரிக்கப் படைகள் "ஒரு தெளிவான மூலோபாயம், பணி நோக்கம் பற்றி கொண்டிருக்கவில்லை என்றும், அதுதான் முக்கிய இலக்குகளை அடைய மிகவும் தேவை என்றும்" அவர் குறிப்பிட்டார்.

ஒபாமாவின் கருத்துக்கள் படைகளின் கூட்டுத் தலைவர் அட்மிரல் மைக் முல்லன் செனட்டின் இராணுவக் குழுவிடம் அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு இருக்கையில் போரைத் தொடர்வதற்கு "கூடுதலான துருப்புக்கள் தேவைப்படும்" என்று கூறிய மறுநாள் வந்தது.

"ஒரு பொருத்தமான வளங்களை கொண்ட எழுச்சி-எதிர்ப்பு நடவடிக்கை என்பதின் பொருள் கூடுதலான துருப்புக்கள்" என்று முல்லன் சாட்சியம் கூறினார். "இன்னும் கூடுதலான வளங்கள் வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகியுள்ளது."

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகளுக்கு தளபதியாக ஒபாமாவால் நியமிக்கப்பட்டிருக்கும் ஜெனரல் ஸ்ரான்லி மக்கிரிஸ்டல் ஆக்கிரமிப்பு படைகள் எதிர்கொண்டிருககும் கடின நிலை பற்றி வெள்ளை மாளிகைக்கு அறிக்கையைக் கொடுத்தபின் முல்லனின் அறிக்கை வந்துள்ளது. இவர் இந்த மாத இறுதியில் இன்னும் படை அதிகரிப்பிற்கான முறையான வேண்டுகோளை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ செய்தி ஆதாரங்கள் இப்பொழுது இந்த இலையுதிர்கால முடிவில் இருக்கக்கூடிய 68,000 துருப்புக்களை விட இன்னும் 45,000 அதிக அமெரிக்கத் துருப்புக்களுக்கான வேண்டுகோளாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. மற்ற நேட்டோ உறுப்பு நாடுகள் அந்நாட்டில் மற்றும் ஒரு 39,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளன.

கடந்த வசந்த காலத்தில் முல்லன் இன்னும் கூடுதலான துருப்புக்களை ஆப்கானிஸ்தானில் செயல்படுத்துவதற்குத் தன் எதிர்ப்பைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது ஒபாமாவின் நிர்வாகத்தால் கட்டளையிடப்பட்டது. இன்னும் கூடுதலான துருப்புக்களை நிலைநிறுத்த தயக்கத்தை வெளிப்படுத்திய பாதுகாப்பு மந்திரி ரொபேர்ட் கேட்ஸ், இப்பொழுது இராணுவத்திற்கு வந்துள்ள அழுத்தம் பற்றிக் கவலை கொண்டுள்ளார். அவரும் மக்கிரிஸ்டல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலைப்பாட்டிற்கு தன் ஆதரவைக் கொடுத்துள்ளார்.

இன்னும் 17,000 அமெரிக்கப் படைகளின் "அதிகரிப்பு" மற்றும் கிட்டத்தட்ட 4,000 பயிற்சியாளர்கள் ஆப்கானிஸ்தானிற்கு ஒபாமாவினால் கடந்த மார்ச் அனுப்பப்பட்டது நாட்டின் பொது வன்முறை மட்டத்தில் அதிகரிப்பைத்தைத்தான் கொடுத்து, அமெரிக்க இறப்பு எண்ணிக்கையிலும் தீவிர அதிகரிப்பை ஏற்படுத்தியது. குறைந்தது 345 அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இது 2008 ஆண்டு முழுவதும் இருந்ததை விட 51 அதிகம் ஆகும்; ஜூலையில் 76, ஆகஸ்ட்ட்டில் 77 என்று படையினர்கள் கொல்லப்பட்ட நிலையில், கடந்த இரு மாதங்கள் மிக அதிக இறப்பு எண்ணிக்கைகளைச் சந்ததித்தன.

இன்னும் முன்று அமெரிக்க படையினர் புதனன்று தெற்கு ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

செனட் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் அமெரிக்கப் போரின் நோக்கம் "பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் அல் குவைடாவை தடைக்கு உட்படுத்தி, தகர்த்துத் தோற்கடிக்க வேண்டும், வருங்காலத்தில் அவர்கள் இரு நாடுகளுக்கும் மீண்டும் வருவதைத் தடுத்தல் ஆகியவை ஆகும்" என்று கூறியுள்ளது.

அப்பகுதியில் அமெரிக்க முன்னேற்றத்திற்கு "அளவு" என்று கூறப்படுபவையும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுள் "மனித உரிமைகளுக்கான ஆதரவு", "அரசாங்க ஊழலை எதிர்த்துப் போரிடல்", மற்றும் "அரசாங்கத்திடம் பெருகிய முறையில் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்தல்" ஆகியவை அடங்கியுள்ளன. "ஆப்கானிஸ்தானிலும் குறிப்பாக பாக்கிஸ்தானிலும் பயங்கரவாதிகளின் வலைப்பின்னலை தடைக்குட்படுத்துதல்" என்ற பிரிவின்கீழ் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் எனப்படுவை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

பாக்கிஸ்தான் மீதான இந்த அழுத்தமானது வலதுசாரி சிந்தனைக் குழுவான American Enterprise Institute ன் முக்கிய நபரான Frederick Kagan கொடுத்துள்ள வாதங்களைத்தான் எதிரொலிக்கின்றது. அவர் புஷ் நிர்வாகம் ஈராக்கில் "விரிவாக்கம்" செய்ய வேண்டும் என்ற கருத்தை இயற்றியவர்களில் ஒருவராவார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துக் கட்டுரையின்படி, ஆப்கானிஸ்தானிலும் இதேபோன்ற விரிவாக்கத்திற்கு Kagan வாதிடுகிறார் என்றும் அதுதான் பாக்கிஸ்தானில் "உறுதிப்பாட்டை" தோற்றுவிக்க வேண்டும் என்னும் அமெரிக்க மூலோபாய நோக்கங்களை அடைய தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

"பாக்கிஸ்தானின் உறுதிப்பாடு, ஆப்கானிஸ்தானைப் போலவே, தனித்து அதன் எல்லைக்குள் மட்டுமே பாதுகாக்கப்பட முடியாது" என்று Kagan எழுதியுள்ளார். "போராளித்தன இஸ்லாமியம் எல்லைக்கு இருபுறமும் ஒரு பொருத்தமான எழுச்சி-எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்துதின் மூலம்தான் தோற்கடிக்கப்பட முடியும்." என மேலும் தெரிவிக்கின்றார்.

ForeignPolicy.com கருத்தின்படி தளபதி மக்கிரிஸ்டலுக்கு ஆலோசகராக பணிபுரிந்துள்ள Kagan கடந்த வாரம் கொடுத்த உரை ஒன்றில் ஒபாமா நிர்வாகம் "அல் குவைடா பற்றி கூடுதல் அலங்காரச் சொற்களைப் பேசுதல் என்ற தவறைத்தான் செய்துள்ளது" என்று வாதிட்டுள்ளார்.

"ஆப்கானிஸ்தானில் இருப்பதற்குக் காரணம் ஆப்கான்தானில் அல் குவைடாவிற்கு எதிராகப் போரிடுவதற்கல்ல" என்று Kagan தெரிவித்ததாகவும் மற்றும் பின்வருமாறு மேற்கோளிடப்பட்டுள்ளார்; "Durand Line இன் [ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானைப் பிரிப்பது] இரு புறங்களிலும் நடக்கும் ஒரு இரு முனைகள் போர் ஆகும் இது."

இதே விதத்தில் தளபதி மக்கிரிஸ்டலே ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தானிய போரை நியாயப்படுத்தியிருப்பது பற்றியும் (அல் குவைடாவை அழித்து மற்றொரு 9/11 ஐத் தடுத்தல்) குறைகூறும் விதத்தில் கடந்த வாரம் நிருபர்களிடம் "ஆப்கானிஸ்தானில் அவ்வளவு பெரியளவில் அல் குவைடா நிலைகொண்டிருப்பதற்கான அடையாளங்களைத் இப்பொழுது தான் காணவில்லை" என்றார்.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்னும் போலிக்காரணத்தின் பின், "வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கி அதை இன்னும் நேரடியாக பாக்கிஸ்தால் எல்லையைக் கடந்து பரப்ப அச்சுறுத்துகிறது. அது அமெரிக்க மக்களை பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராகக் பாதுகாப்பது என்பதற்கு பதிலாக இப்பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள-மூலோபாய இலக்குகளை விரிவாக்குவதற்காகத்தான். குறிப்பாக, ஈராக் போரைப் போலவே பரந்த எரிசக்தி வளங்கள் மற்றும் காஸ்பியன் பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச்செல்லும் குழாய்த்திட்டங்கள் இருக்கும் பகுதியின்மீது அமெரிக்க மேலாண்மையை உறுதிப்படுத்துவதற்குத்தான். அதே நேரத்தில் இது சீன எல்லைகளுக்கு அருகே நிரந்தர இராணுவ இருப்பையும் நிறுவ முற்படுகிறது.

எனவேதான் ஈராக் போரிற்கு எதிராக முன்பு பதிவான அளவை அடைந்துவிட்ட அமெரிக்க மக்களுடைய எதிர்ப்பையும் மீறி போர் தொடர்கிறது. மக்களுடைய போர் எதிர்ப்பு உணர்வினால் ஜனநாயகக் கட்சி பதவிக்கு வந்திருப்பது போரின் விரிவாக்கத்தில்தான் முடிந்துள்ளது.

காங்கிரஸில் இருக்கும் சில முக்கிய ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கூடுதல் துருப்புக்கள் கட்டைமைப்பு பற்றி எச்சரிக்கையுடன் கூடிய எதிர்ப்பை கூறியுள்ளனர். கடந்த வாரம் ஜனநாயகக் கட்சியின் மன்றத் தலைவர் நான்சி பெலோசி நிருபர்களிடம் "இந்நாட்டிலோ அல்லது காங்கிரசிலோ ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான படைகளை அனுப்புவற்கு அதிக ஆதரவு இல்லை" என்றார். இதற்கிடையில் செனட்டின் இராணுவப்பிரிவுக் குழு இன்னும் கூடுதலான படைகளை நிலைநிறுத்துதல் பற்றி அட்மைரல் முல்லன் கொடுத்த சாட்சியத்தின் போது எதிராக வாதிட்டு, ஆப்கானிய கைப்பாவைத் துருப்புக்களுக்கு கூடுதலான அமெரிக்கப் பயிற்சி கொடுக்கப்படலாம் என்று கூறியது.

ஜனநாயகக் கட்சியினர் புஷ்ஷின் கீழ் ஈராக் போர் விரிவாக்கப்பட்டதற்கு இருந்ததை விட ஆப்கானிஸ்தானியப் போர் விரிவாக்கத்திற்கு எவ்விதமான பயன்தரக்கூடிய எதிர்ப்பை காட்டுவர் என்பதை நம்புவதற்குக் காரணம் அதிகம் இல்லை.

அமெரிக்க மூலோபாயம் இன்னும் விரிவாக்கப்படல் என்பது பாக்கிஸ்தானில், குறிப்பாக அதன் இராணுவ தலைமையகத்தினுள் பெரும் பீதியைத் தோற்றுவித்துள்ளது.

பாக்கிஸ்தானிய நாளேடு Dawn புதனன்று, "பாக்கிஸ்தானிய இராணுவத் தலைமை அமெரிக்க நிர்வாகத்திடம் பாக்-ஆப்கான் பகுதியில் புதிய அமெரிக்கக் கொள்கை பற்றி தன்னுடைய தயக்கங்களை கூறியுள்ளது" என்று தகவல் கொடுத்துள்ளது.

மூத்த பாக்கிஸ்தானிய இராணுவத் தளபதிகள் சமீபத்தில் அட்மைரல் முல்லன் மற்றும் அமெரிக்க மையக் கட்டுப்பாட்டின் தலைவர் தளபதி டேவிட் பெட்ரீயஸ் வருகை புரிந்திருந்த போது, புதிய அமெரிக்க கொள்கைக்கு வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

"ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைக்கும் பாக்கிஸ்தானில் இருக்கும் நிலைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்றும், பாக்கிஸ்தானில் அதே போன்ற கொள்கையை அமெரிக்கா செயல்படுத்த விரும்பினால், பின் அது எதிர்மறை விளைவுகளைத்தான் கொடுக்கும் என்பதோடு பாக்கிஸ்தான்-அமெரிக்க உறவுகளையும் பாதிகற்கும் என்று இராணுவத்தின் தலைமை தெரிவித்துள்ளது." என்று நாளேடு கூறியுள்ளது.