World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

G20 finance ministers: empty pledges in face of deepening antagonisms

G20 நிதி மந்திரிகள்: ஆழமடையும் விரோதங்களிடையே வெற்று உறுதிமொழிகள்

By Chris Marsden
8 September 2009

Use this version to print | Send feedback

லண்டனில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற G20 நிதி மந்திரிகள் கூட்டம் எதிர்பார்த்த கூட்டு அறிக்கையில் முடிவுற்றது. ஆனால் வங்கி முறைச் சீர்திருத்தம் அல்லது நிதிய மேலதிக கொடுப்பனவுகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் எந்த உருப்படியான உடன்பாட்டும் அடையப்படவில்லை.

மாறாக அமெரிக்காவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆழ்ந்த அழுத்தங்கள் ஒருபுறமும், ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய சக்திகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே என்று மறுபுறமும் என்ற விதத்தில் கூட்டத்தின் தன்மை இருந்தது. இந்த முழுநிகழ்விலும் இருந்தும் பரந்த அதிருப்தி குறிப்பாக எழுச்சி பெற்றும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா என கூட்டாக பிரிக் (Bric) என அறியப்படும் நாடுகளிடம் இருந்து வந்தது.

கூட்டத்தின் முடிவும் அதன் பல உபயோகமற்ற உறுதிமொழிகளும் அவநம்பிக்கையுடனும் சில முக்கிய பொருளாதார வல்லுனர்கள் மோசமான பொருளாதார பேரழிவு பற்றி எச்சரிக்கைகளையும் சந்தித்தன.

BBC இன் Steve Schieffers "G20 மாநாட்டில் புகையும் கண்ணாடிகளும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். கூட்டத்தில் உருப்படியாக வந்த விளைவுகளுக்கும் வரவிருக்கும் செப்டம்பர் 24/25 பிட்ஸ்பேர்க்கில் அரசாங்கத் தலைவர்களின் G20 மாநாட்டிற்கும் "கொள்கையளவில்" முன்னதாகவே ஒப்புக் கொள்ளப்பட்டவற்றிற்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுட்டிக்காட்டி, "அலங்காரச் சொற்களின்கீழ், நிர்வாகிகள் ஊதியம் பற்றிய மேம்போக்கான பூசலையும் தாண்டி முக்கியமான வேறுபாடுகள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பல இழக்கப்பட்ட விவரங்கள்" பற்றி வோல் ஸ்ட்ரீட் எழுதி "பல விஷயங்கள் முடிவுறாமல் வைத்திருப்பது வரவிருக்கும் வாரங்களில் வேறுபாடுகளை உருவாக்கும் தன்மையை விட்டுவைத்துள்ளது" என்று எழுதியுள்ளது.

"இந்த வாரக் கூட்டம் புதிதாக எதையும் கூறுவதற்கு கஷ்டப்பட்டது. இதே நிலைமைதான் பிட்ஸ்பேர்க்கிலும் இருக்கும்...." என்று Economist கூறியுள்ளது.

நெருக்கடியின் காரணம் பற்றி குறைகூறிய Will Hutton, Observerல் எழுதினார்: "ஒரு நிதிய தன்னலக்குழு பொதுக்கொள்கை மீது கொண்டுள்ள இறுக்கமான பிடி பற்றி எதுவும் பேசப்படவில்லை." இதன் விளைவாக ஒரு இரண்டாம், இன்னும் தீவிர நெருக்கடிக்கான சாத்தியம் காத்திருக்கிறது" என்று அவர் எச்சரித்தார்.

நிர்வாகிகளின் மேலதிககொடுப்பனவுகள் பற்றிய பிரச்சினை அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் சில வர்ணனையாளர்கள் சித்திரிப்பது போல் முக்கியத்துவமற்றது அல்ல. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய சக்திகள் கூட்டத்திற்கு முன் மேலதிககொடுப்பனவுகள் அதிகமாக கொடுப்பதற்கு தடைவேண்டும் என்று பெரிதும் வலியறுத்தி, உச்சவரம்புகள் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியதுதான் இதற்குக் காரணம். இதற்கு வாஷிங்டனும் லண்டனும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டன.

நிதித்துறையில் "மேலதிககொடுப்பனவுகள் பண்பாடு" ("bonus culture") என்று அழைக்கப்படுவதின் உண்மையான உறுதிகுலைக்கும் தாக்கத்தால் ஐரோப்பியர்கள் ஓரளவு உந்தப்பெற்றனர். அது மிகப் பெரிய அளவிற்கு ஊகமுறை, மலை போன்ற கடன் குவிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது என்பதுடன் இத்தகைய மிகையான செயல்களின் விளைவை கடுமையாக எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்திடையே இது பெரும் பாதிப்பைக் கொடுப்பதால் அரசியல் தாக்கத்தையும் கொண்டுள்ளது. பிரான்சின் நிதி மந்திரி Christine Lagarde கட்டாய உச்சவரம்பு வேண்டும் என்று கூறியுள்ளார்; இதற்கு ஜேர்மனி மற்றும் யூரோப்பகுதி நிதி மந்திரிகளின் ஆதரவு இருந்தது. "12 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது நம் சமூகங்களுக்கு மிகக் கொடூரமானது. எமது பொருளாதாரங்களுக்கு பெரும் கொடூரமானது; நாம் இன்னும் அதன் விளைவினால் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

லண்டனும் வாஷிங்டனும் இத்திட்டம் "நடைமுறைக்கு ஒவ்வாது" என்று கண்டித்தன. தங்கள் முக்கிய ஆதரவாளர்களின் நலன்களை பாதிக்கும் எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்ளத்தயாராக இல்லை என்பதை இது அடையாளம் காட்டியது. "மேலதிககொடுப்பனவுகள் பண்பாடு" எல்லாவற்றிற்கும் மேலாக "லண்டன்/நியூ யோர்க் அச்சில் செயல்படுகிறது. நிதிய அடுக்கு வியத்தகு வருமானங்கள் தமக்கு உரியவை என்று உணர்ந்த நிலையில் உள்ளது. ஆனால் இதற்கு மதிப்பை தோற்றுவித்தல் அல்லது இலாபமுறையுடன் தொடர்பு போன்ற பொருளாதார நியாயப்படுத்துதல் என்பது இல்லை.... முதலீட்டுவங்கி இலாபங்களில் 90 சதவிகிதம் இருப்பு நிலைக் குறிப்புக்களை வலுப்படுத்தவோ அல்லது பங்குதாரர்களுக்கு பங்குகளை கொடுப்பதற்கோ பயன்படுத்ப்படவில்லை. மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்திற்கு, வரி செலுத்துபவர்கள் நலனுக்கோ இல்லை. இது வங்கியாளர்களின் மேலதிககொடுப்பனவாகத்தான் செல்கிறது" என்று ஹட்டன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் மேலதிககொடுப்பனவு உச்சவரம்பிற்கான கோரிக்கையை தங்கள் நிதியத்துறையின் மீது ஐரோப்பியத் தாக்குதல் என்று காண்கின்றன. வங்கிகள் மூலதனம் குறைந்திருப்பதுதான் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய குறைபாடு என்றும் உணர்கின்றன. அமெரிக்க நிதி மந்திரி முதல் தட்டு (Tier 1) மூலதன விகிதத்தை கட்டுப்படுத்தும் கால அளவை விரைவுபடுத்த முற்படுகிறார். வங்கிகளின் கணக்குப்படி உள்ள சொத்துக்களின் தரத்தை அவற்றின் சேமிப்புக்களுடன் தொடர்புகாண விழைகிறார். ஆபத்திற்கு எதிராக உலக நிதிய முறையைக் பாதுகாக்க வங்கிகள் இன்னும் கூடுதலான சொந்தமூலதனத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை சுமத்த அமெரிக்க விரும்புகிறது.

இது ஐரோப்பாவால் அதன் வங்கித் துறைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. பைனான்ஸியல் டைம்ஸ் குறிப்பிடுகிறது: "அமெரிக்க வங்கிகளைவிட ஐரோப்பிய வங்கிகளின் மூலதன நிலைப்பாடுகள் "கலவை'' பாதுகாப்புப் பத்திரங்களைக் (hybrid securities) கொண்டுள்ளது. இவை பங்கு என்பதை விட கடன் போல் உள்ளன. சில ஐரோப்பிய வங்கிகள் இத்தகைய "கலவை" பாதுகாப்புப் பத்திரங்கள் மூலம்தான் தாங்கள் சட்டப்படி வைத்திருக்க வேண்டிய மூலதன இருப்புத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்."

இறுதியில் இரு பிரச்சினைகளிலும் ஒரு பொருளற்ற சமரசம் ஏற்பட்டது. மேலதிககொடுப்பனவுகள் மீது உச்சவரம்பு பற்றி உடன்பாடு ஏதும் வரவில்லை. அதற்குப் பதிலாக G20 நாடுகள் வங்கிகள் அவற்றின் உயர்மட்ட ஊழியர்களின் ஊதியம், மேலதிககொடுப்பனவுகள் பற்றி பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதற்கு நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டன. ஏற்கத்தக்கவை அல்ல என்றால் மேலதிககொடுப்பனவுகள் "திரும்பக் கொடுக்கப்பட வேண்டும்" என கூறப்படுகிறது. இது நிதிய உறுதிப்பாட்டுக் குழுவினால் (FSB- Financial Stability Board) நிர்ணயிக்கப்படும். அது ஒவ்வொரு வங்கியும் மேலதிககொடுப்பனவிற்காக ஒதுக்கி வைக்கும் ரொக்கத் தொகை அதிகமா இல்லையா என்று முடிவெடுக்கும். தடைகள் ஏதும் விவாதிக்கப்படவில்லை, கொடுத்த மேலதிககொடுப்பனவுகளை ''திரும்பப் பெறுவதற்கான'' வழிவகையும் விவாதிக்கப்படவில்லை.

அனைத்து வங்கிகளும் நிதிய நெருக்கடி கடக்கப்பட்ட பின்னர், இன்னும் பெரிய மூலதன சேமிப்புக்களை கொண்டிருக்கவேண்டும் என்று G20 கூட்டம் ஒப்புக் கொண்டது. ஆனால் முறையாக எந்த வழிவகைகளும் ஏற்கப்படவில்லை. அப்படியிருந்தும் இத்திட்டத்திற்கு வெளிப்படையான விரோதப் போக்கு இருந்தது. Association of German Banks ன் Bernd Brabander இத்திட்டங்கள் "ஐரோப்பிய வங்கிகளுக்கு போட்டியிடும் திறனில் பாதிப்பை கொடுக்கக்கூடும். இந்த மூலதனத்தொகை பற்றிய கோரிக்கை என்பது எனக்கு சற்று உளைச்சலைக் கொடுக்கிறது என்று அவர் கூறினார்" என்று பைனான்ஸியல் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

இக்கோரிக்கைகளை ஏற்பது என்பது, "இன்னும் கூடுதலான வரிப்பணத்தில் பிணை எடுப்புக்கள்" என்பதை உட்குறிப்பாக காட்டுகிறது, பிரான்ஸும் ஜேர்மனியும் "அவற்றின் பாதிக்கப்பட்ட வங்கிகள் பலவற்றை பகுதி தேசியமயமாக்கும் கட்டாயத்திற்குட்படுத்தக்கூடும்" என்று Telegraph கூறியுள்ளது.

ஞாயிறன்று உலகின் 55 மத்திய வங்கிகளைக் கொண்ட Bank for International Settlements (BIS) உடைய கூட்டம் G20 திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. ஆனால் அவை செயல்படுத்தவதற்கு காலக் கெடு ஏதும் விதிக்கப்படவில்லை.

சீனாவிற்கும் G20 க்குள் உள்ள எழுச்சி பெற்றுவரும் மற்ற நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள வாக்குரிமை உரிமைகள் பற்றி விவாதங்கள் இருந்தன. இது பிற்போடப்பட்டுள்ளது. சீனா ஐரோப்பிய நாடுகளின் வாக்குரிமையில் 7 சதவிகிதக் குறைப்பு வேண்டும் என்றும் அமெரிக்கா 5 சதவிகிதக் குறைப்பு வேண்டும் என்றும் கூறுகின்றன. ஜனவரி 2011 வரை முறையான திட்டங்கள் முன்வைக்கப்படமாட்டா.

பெரும் சக்திகளுக்கு இடையே உள்ள அழுத்தங்களின் மிகக் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு கடந்த ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி செயல்படுத்தப்பட்ட பல ஊக்கப் பொதிகளுக்கு விரைவில் அமெரிக்காவும், பிரிட்டனும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒட்டியது ஆகும். ஜேர்மனியும் பிரான்ஸும் "வெளிவரும் மூலோபாயங்கள்" பற்றி G20 விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைப்புவிட்டன.

G20 கூட்டத்திற்கு முன்பு ஏப்ரல் மாதம் ஏற்கப்பட்டிருந்த சர்வதேச நிதிய அமைப்பு நிர்வகிக்கும் உலக ஊக்கப் பொதிகளில் $1.1 டிரில்லியன் என்று கணிசமான பற்றாக்குறை இருப்பதற்கு அடையாளங்கள் இருந்தன. ஊக்கப் பொதிகள் "உங்கள் அண்டை நாட்டாரைப் பிச்சைக்காரராக்குக என்னும்" தன்மை கொண்டவையாக மாறி முக்கிய சக்திகளின் போட்டியிடும் தேசியப் பொருளாதாரஙக்களை மீட்க இயக்கப்பட்ட பெரும் செல்வக்கொழிப்பு உடையவர்களுடைய பைகளுக்கு திருப்பப்பட்டன.

அப்படி இருந்தும், ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் நீண்டகால பணவீக்கம், அரச பற்றாக்குறை பற்றி எச்சரித்து வந்துள்ளார். ஏனெனில் பல டிரில்லியன் ஊக்கப் பொதிகளும் வங்கிகள் மீட்பும் பல இலட்சம் பணத்தை விழுங்கிவிடும். ஜேர்மனியுடன் ஜப்பானும் பிரான்ஸும் உத்தியோகபூர்வமாக மந்த நிலையில் இருந்து கடந்த காலாண்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சீனா 8 சதவிகித வளர்ச்சிக்குத் திரும்பிவிட்டது. இதனால் அரசாங்கத் தலையீடுகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளுக்கு கூடுதல் உந்துதல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இதற்கு விடையிறுக்கும் வகையில் உலகப் பொருளாதாரம் இன்னும் பாதுகாப்படைவதற்கு பல காலம் பிடிக்கும் என்றும் உலக முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் கொடுக்கப்படும் ரொக்க உட்செலுத்துதலைத்தான் இன்னமும் நம்பியுள்ளது என்று கூறுகின்றன. "G20 எடுக்கும் நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தை பெரும் சீரழிவின் விளம்பில் இருந்து இழுத்துவிட்டன" என்று கீத்னர் கூறினார். "ஆனால், நாம் இன்னும் குறிப்பிடத்தக்க சவால்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டும்."

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் "தற்காலிக மீட்பிற்கான அடையாளங்களை" குறிப்பிட்டு, செலவைக் குறைத்தல் என்பது "மீண்டும் கீழ்நோக்குச் சரிவைக் கொடுக்கக்கூடும்" என்று எச்சரித்தார். ஏப்ரலில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிதிய விரிவாக்கத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த $5 டிரில்லியன் தேவை ஏன்றார். Bric எழுச்சி பெறும் பொருளாதார நாடுகளின் சிறிய உச்சிமாநாடும் நெருக்கடி முடிந்துவிட்டது என்று பேசுவது இப்பொழுது "முன்கூட்டிய செயல்" ஆகும் என்று எச்சரித்துள்ளது.

இறுதியில் நிதி மந்திரிகள் உலகப் பொருளாதாரத்திற்கு மந்த நிலையில் இருந்து மீட்பு அடையும் வரை நிதிய ஆதரவைத் தொடர வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்; அதன் பின் அவர்கள் ஒருங்கிணைந்த "வெளியேறும் மூலோபாயங்களை" அபிவிருத்திசெய்வர்.

ஆயினும் கூட உலகப் பொருளாதாரத்தை எதிர்கொண்டிருக்கும் உண்மையான நிலைமை வாஷிங்டன் மற்றும் லண்டன் கொடுத்தள்ள எச்சரிக்கைகளைவிட மிக மோசமானதாகும். பங்குகளின் மதிப்புக்கள் மீண்டது என்பது பொருளாதாரத்தில் நிதிகள் முன்னோடியில்லாத வகையில் உட்செலுத்தியதின் விளைவு ஆகும். இது தன்னலக்குழுவை தன்னை செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொள்ள உதவியுள்ளதுடன், ஒரு இரண்டாம் ஊக அலையைக் கூட எரியூட்டியுள்ளது. எனவேதான் ஊக்கப் பொதிகள் நடவடிக்கைகள் திரும்பப் பெறக்கூடும் என்பது பற்றித் தீவிரக் கவலைகள் உள்ளன. உண்மையில் பங்குகள் விலைகள் உயர்ந்தாலும், உண்மைப் பொருளாதாரம் மீண்டு விட்டது என்பதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.

அமெரிக்காவில் வேலையின்மை ஏற்கனவே 10 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது. யூரோப் பகுதி முழுவதும் அது சற்று குறைவாக 9.5 என உள்ளது. வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து, ஊதியங்கள் குறையும்போது, தவிர்க்க முடியாமல் நுகர்வு சரியும். பொருளாதார வல்லுனர்கள் இப்பொழுது இதை இந்த ஆண்டின் "இரட்டைச் சரிவு" என்றும் "வேலைகள் கிடைக்கப்பெறாத மீட்பு" என்றும் கூறுகின்றனர். சர்வதே நாணய நிதியத்தின் (IMF) ன் தலைவர் Dominique Strauss Kahn "இந்த நெருக்கடியின் மூன்றாம் கட்டம் வரும், நிதியப் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர்--அதாவது உயர்ந்த வேலையின்மை" என்று எச்சரித்துள்ளார்.

செயல்படுத்தப்பட்டுள்ள பிணை எடுப்புக்களும் ஊக்கப் பொதி நடவடிக்கைகளும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 18 சதவிகிதத்தை பிரதிபலிக்கின்றன. இந்த மிகப் பெரிய தொகை தொழிலாள வர்க்கத்தின் மீதான பெரும் தாக்குதல்கள் வேலை இழப்புக்கள், ஊதிய இழப்புக்கள், அடிப்படை சமூகத் தேவைகள் குறைப்பு என்பவற்றின் மூலம் ஈடு செய்யப்பட முயற்சிகள் உள்ளன.

Guardian ல் எழுதிய Ashley Seager ஆண்டு வணிகம், மற்றும் ஐக்கிய நாடுகளின் வணிகம், வளர்ச்சி பற்றிய மாநாட்டின் (Unctad)ன் அறிக்கை பற்றி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த அறிக்கை "உண்மையான சுய ஆக்கத்துடன் பொருளாதார மீட்பு நடைபெறுகிறதா, எந்த அளவிற்கு என்பது பற்றி அறிக்கை வினா எழுப்புகிறது" என்று அவர் Unctad தலைமைப் பொருளாதார வல்லுனர் Heiner Flassbeck ஐ மேற்கோளிட்டுக் கூறியுள்ளார்.

"சந்தைகளில் இந்த ஏற்றங்கள் அனைத்தும் பொருளாதார மீட்பு பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது; ஆனால் இது மற்றும் ஒரு குமிழிதான்" என்று Flassbeck, கார்டியனிடம் கூறினார். "இல்லாத மீட்பை இச்சந்தைகள் பிரதிபலிக்கின்றன. ஊதிய தட்டுப்பாடு எல்லா இடங்களிலும் மிகப் பெரிய ஆபத்து ஆகும். இது சரியாக உணரப்படவில்லை. வங்கிகள் வரி செலுத்துவோரால் மீட்கப்பட்டு, மீண்டும் சூதாட்டவகை ஊகத்திற்கு திரும்புகின்றன. இச்சூதாட்டம்தான் முதலில் இவ்வளவு பிரச்சனைகளையும் கொண்டுவந்தது."