World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain to continue privately run school academies

பிரிட்டன் தனியார் கல்விக்கழகங்களைத் தொடரவிருக்கிறது

By Harvey Thompson
31 August 2009

Use this version to print | Send feedback

புதிய கல்வியாண்டு நெருங்கி வரும் வேளையில், பிரெளன் இன் தொழிற்கட்சி அரசாங்கம் அதன் முன்னணி திட்டமான தனியார் கல்விக்கழகங்களை தொடர்வதை முன்வைக்க திட்டமிடுகிறது.

பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களால் இவ்விடயத்தில் கல்விக்கழகங்களுக்கு எதிர்ப்பு இருக்கும் நிலையில், இதுபோன்ற பெருநிறுவன ஆதரவிலான பள்ளிகள் பலவற்றின் கல்வித்தரமும் மோசமாக உள்ளது.

அரசாங்கத்தின் கருத்துப்படி, 64 உள்ளூர் ஆணையங்களில் தற்போது 133 கல்விக்கழகங்கள் உள்ளன. 2009 செப்டம்பரில் மேலும் 80 கல்விக்கழகங்களும், 2010ல் மற்றுமொரு 100 கல்விக்கழகங்களும் திறக்கப்படவுள்ளன. மொத்தமாக குறைந்தபட்சம் 400 கல்விக்கழகங்களை உருவாக்க பொறுப்பேற்றிருப்பதாக சமீபத்தில் அரசாங்கம் அறிவித்தது.

கல்விக்கழகங்ககள் என்பன எவை?

2000த்தில், டோனி பிளேயர் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் கல்வித்துறை திட்டங்களை அறிவித்தது. நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் மற்றும் மத அமைப்புகளும் குறிப்பிட்ட பள்ளிகளை ஏற்று நடத்த இந்த திட்டங்கள் வழிவகுத்தன. எவ்வித முன் அனுபவமோ அல்லது பொறுப்புக்களோ தேவையில்லை, வெறுமனே மூலதன செலவுகளுக்காக சுமார் ா2 மில்லியன் தொகையைச் செலவிட்டால் போதுமானது. மீத தொகையை அரசு அளிக்கும், சில நேரங்களில் ா30 மில்லியனுக்கும் அதிகமாக கூட அளிக்கும்.

கல்விக்கழக பள்ளிகள் உள்ளூர் கல்வி ஆணையங்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. அவை தேசிய பாடத்திட்டத்திற்கு மிகவும் குறைந்தளவிலான வாய் சேவையை மட்டுமே அளிக்கும்சிக்ஷீமீணீtவீஷீஸீவீsனீ போன்ற மத அடிப்படையிலான தத்துவ போதனைகளை அறிமுகப்படுத்தவும் இது சிலருக்கு உதவி இருக்கிறதுமேலும் தனியார் கல்விக்கழகங்கள் பணியாற்றும் பணியாளர்களின் மீது அவர்களின் சொந்த நிபந்தனைகளையும், சொந்த சம்பளவிகிதங்களையும் திணிக்க கூடும்.

The Great City Academy Fraud என்ற தம் புத்தகத்தில், பத்திரிகையாளரும் கல்வித்துறை எழுத்தாளருமான பிரான்சிஸ் பெக்கெட், 1986ல் மார்கரேட் தாட்சரின் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நகர தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு (City Technology Colleges - CTC's) புதிய தொழிற்கட்சியின் ஆதரவுகளை தொகுத்துரைக்கிறார். இந்த நகர தொழில்நுட்ப கல்லூரிகள், பெருநிறுவன நிதியுதவிகளுக்கும், முன்னர் அரசு பள்ளிகளாக இருந்தவைகளை ஏற்று நடத்தவும் மேல் முறையீடு செய்தன.

தொடக்கத்தில், தொழிற்கட்சி இலக்காக கொண்டிருந்த அந்த பள்ளிகள் "தோல்வி அடைந்து வருவதாக" தோன்றியதுஅதாவது, ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட GCSEல் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவ, மாணவிகள் ஐந்து Aல் இருந்து C கிரேடை எட்டினார்கள். சில காலங்களுக்கு பின்னர், கல்விக்கழக திட்டம் சில "வெற்றிகரமான" பள்ளிகளையும் உள்ளடக்கியது, இதில் தங்களின் குழந்தைகள் சிறந்த வாய்ப்புவளங்களைப் பெறுவதாக பெற்றோர்கள் கூறினார்கள், இந்த சிறப்பு வாய்ப்புவளங்களைத் தாங்கள் அளிப்பதாக தனியாரால் நடத்தப்பட்ட அந்த புதிய பள்ளிகள் உறுதியளித்தன.

பரந்த அரசு வளங்களைத் தனியாருக்கு ஒப்படைப்பதும், இங்கிலாந்தின் பள்ளி அமைப்பு முறைகளின் கணிசமான பகுதியை அவர்களின் கட்டுப்பாட்டில் விடுவதும் தான் இறுதிவிளைவாக இருக்கிறது.

விளைவு

ஓர் கல்விக்கழக பள்ளியின் உருவாக்கம், மாற்றத்திற்கிடமின்றி, உள்ளூர் சமூகத்தில் ஓர் உடனடி பாதிப்பாக ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளது.

வாய்ப்புவளம் குறைந்தவர்களும், பொதுவாக படிக்கும் முயற்சிக்கான சிரமங்களுடனும், அடுத்துள்ள பள்ளிகளின் பிரச்சனைகளுடனும் போராடி வருபவர்கள், அருகிலுள்ள கல்விக்கழகத்தின் அலங்கோலமான பாதிப்பாலும் சூழப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, நன்கு நிதி வசதிப்படைத்த பெருநிறுவன சுழற்சிகளால் செல்வாக்கு பெற்ற பெற்றோர்கள், அவர்களின் குழந்தைகளை "நகரில் வந்திருக்கும் நல்ல புதிய" வாய்ப்புவளங்களில் சேர்க்க முயல்கிறார்கள்.

கல்விக்கழகங்களின் பெருநிறுவன நடத்தைகள், கடுமையான ஒழுக்கநெறிகளின் பொறுப்பைத் திணிக்கின்றன. இதன் விளைவாக, கல்விக்கழகங்கள் தற்போது அரசு பள்ளிகளின் குறைந்தபட்சம் இருமடங்கிலான பல மாணவ, மாணவியரை சேர்ப்பதில்லை. படிப்படியாக களையெடுக்கும் நிகழ்முறையில், பின்னர் இந்த மாணவ, மாணவியர் அடுத்துள்ள பள்ளிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தள்ளப்படும் குழந்தைகளுக்கு, மற்றொரு பயிலகத்தில் ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்க, பொதுவாக இருக்கும் எவ்வித ஒத்துழைப்பும் கூட இல்லாத நிலையில் அவர்கள் பிற பள்ளிகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

கல்விக்கழகங்களை விமர்சிக்கும் தலைமை ஆசிரியர்களும் பொதுவாக முன்கூட்டிய ஓய்வின் மூலமாக, கற்பிப்பதில் இருந்து வெளியில் தள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம், கல்விக்கழகங்களுக்கு எதிராக "வலுவான கருத்தியல் எதிர்ப்புகளுடன்" இருந்த ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பெர்மின்ஹாம் நகர கவுன்சிலினால் வேலை-மாற்று உடன்படிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளதாக பெர்மின்ஹாம் போஸ்ட் குறிப்பிட்டது. "எவ்வாறிருப்பினும், இறுதி முடிவு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆளுநர்களின் கைகளில் இருப்பதால், ஆசிரியர்கள் தானாகவே பிற பள்ளிகளுக்கு மாற்றக்கொள்ள முடியும் என்பதற்கு எந்த உத்தரவும் கிடையாது" என்று அந்த பத்திரிகை ஒத்துக்கொண்டிருந்தது.

பேர்மிங்ஹாமில் உள்ள ஐந்து நடுநிலை பள்ளிகள் (secondary schools) கல்விக்கழகங்களாக மாற்றிக் கொள்வதற்கு வரிசையில் உள்ளன.

கல்வி மற்றும் சமூக சமத்துவமின்மையின் நீண்டகால நிதிஒதுக்கீட்டை கல்விக்கழகங்கள் கொண்டிருப்பதில்லை என்பதாலும், கல்வித்துறை சார்ந்த அமைப்புகளாலும் மற்றும் தனிநபர்களாலும் அவை இட்டுச் செல்லப்படுவதில்லை என்பதாலும் அவற்றின் முன்னதாக தோன்றும் வெற்றியின் மீதான உத்தியோகப்பூர்வ பிரச்சாரம் உடைபடுகிறது.

அரசு ஆய்வு அமைப்பான Ofstedஆல் ஆய்வு செய்யப்பட்ட 29ல் 13 அகாடமிகள் "திருப்திகரமாக உள்ளதாக" மதிப்பிடப்பட்டன. ஆனால் இவை தற்போது உத்தியோகப்பூர்வமாக ஏற்கப்பட முடியாதவை என்ற வகைப்பாட்டில் உள்ளன என்று Sutton Trust என்ற கல்வித்துறை தொண்டு நிறுவனம் அதன் அறிக்கையில் கடந்த ஆண்டு டிசம்பரில் குறிப்பிட்டது.

பின்னர், தங்களின் பள்ளிகளில் மூன்று தனியார் கல்விக்கழகங்களை உருவாக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆண்டின் ஜனவரியில், தெற்கு இலண்டனின் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள்.

ஆசிரியர்களின் தேசிய சங்கத்தின் சுமார் 130 உறுப்பினர்கள் ஒருநாள் வெளிநடப்பில் இறங்கிய

போது, கிரோய்டனில் ஐந்து பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் தனியார் கல்விக்கழகங்களின் தொழிலாளர்களாக மாற விரும்பவில்லை என்று சங்கம் தெரிவித்தது.

பெரிய நகரத்தின் நிர்வாக பிரிவிலுள்ள நடுநிலை பள்ளிகளுக்கான திட்டங்கள் மீதான கிரோய்டன் கவுன்சிலின் ஆலோசனையின் முதல் நாளன்று தான் இந்த ஜனவரி 27 வேலைநிறுத்தமும் நடந்தது.

கிரோய்டன் NUT கிளையின் செயலாளர் டேவ் ஹார்வே தெரிவிக்கையில், "நடுநிலை கல்வி வசதியின் ஓர் ஆய்வை கவுன்சில் வழங்கியுள்ளது. இது கவுன்சிலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய நகரங்களின் நிர்வாக பிரிவிலிருந்து நடுநிலைப்பள்ளிகளை நீக்குகிறது. கிரோய்டனில் உள்ள ஒரேயொரு சமூக பள்ளி கூட இருக்காது, மெய்ம்மை பள்ளிகள் (faith schools), நம்பிக்கை பள்ளிகள் (trust schools), கல்விக்கழகங்கள் மற்றும் பவுண்டேஷன் பள்ளிகள் மட்டுமே இருக்கும். இதை மாகாண சபையின் பொறுப்புகள் நீக்கம் என்று தான் நாங்கள் இதை வரையறுப்போம்." என்றார்.

கிழக்கு இலண்டனின் நியூஹாமிலுள்ள ராயல் டாக்ஸ் பள்ளியின் சுமார் 50 ஆசிரியர்களால் தனியார் கல்விக்கழகங்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட போராட்டம், ஆளுநர் NUT உடன் ஓர் உடன்படிக்கைக்கு வந்தவுடன் விலக்கி கொள்ளப்பட்டது.

மேற்கு யோர்க்ஷேரில் உள்ள South Leeds உயர்நிலைப்பள்ளி ஓர் கல்விக்கழகமாக மாற்றப்படும் என்று ஜூலையில் அறிவிக்கப்பட்டது.

மற்ற இரண்டு பள்ளிகள் மூடப்பட்ட பின்னர், South Leeds உயர்நிலைப்பள்ளி 2004ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. Guardian பத்திரிகையின் கருத்துப்படி, அப்பள்ளியின் கல்வித்தரத்தினால் அல்லாமல், "முந்தைய இரண்டு பள்ளிகளின் தடைகள் அதிகரிப்பிலிருந்து ஏற்பட்ட நிதி பற்றாக்குறையினால்" அது ஜூன் 2008ல் Ofstedஆல் சிறப்பு முறைமைகளின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அண்டையிலுள்ள தெற்கு யோர்க்ஷேரில், இரண்டு ஷெஃபீல்டு கல்விக்கழக பள்ளிகளும் சமீபத்தில் ஆய்வாளர்களால் குறைந்த தரம் கொண்டனவையாக குறிக்கப்பட்டன. இம்மாத தொடக்கத்தில் கல்வித்தர ஆணையம் (Ofsted) பார்வையிட்ட பின்னர், ஷெஃபீட்டு பார்க் கல்விக்கழகம் "போதிய தரத்தில் இல்லை" என்று பரிந்துரைக்கப்பட்டதாக ஜூலை 24ல் The Times Educational Supplement (TES) குறிப்பிட்டது. "சிறப்பு முறைமைகளின்" கீழ் கொண்டு வரப்பட்டதில் இது மூன்றாவது கல்விக்கழகம் ஆகும்.

இதை தொடர்ந்து, அதனைச் சேர்ந்த மற்றொரு கல்விக்கழகமான Sheffield Springs கல்விக்கழகத்திற்கும் ஒரு தீர்மானம் வழங்கப்பட்டது, படிப்பிப்பதில் "போதிய தரம்" அளிக்கப்படவில்லை என்று அதன் ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

இந்த இரண்டு Sheffield கல்விக்கழகங்களும் United Learning Trust (ULT)ஆல் நடத்தப்படுகின்றன, இது தேசியளவில் 15 பள்ளிகளை நடத்தி வருகிறது. கல்விக்கழக பள்ளிகளில் பெருமளவிலான மத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்பதற்கு இந்த கிறிஸ்துவ தொண்டு நிறுவனமே ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக உள்ளது.

"கிறிஸ்துவ கோட்பாடுகளின்" அடிப்படையில் பள்ளிகளை உருவாக்க உதவும் வகையில் 1833ல் உருவாக்கப்பட்ட கல்வி தொண்டு நிறுவனமான United Church Schools Trustஆல் கல்விக்கழகங்களை நிர்வகிக்க ULT உருவாக்கப்பட்டது.

"கல்விக்கழக தலைவர்களை" மேம்படுத்த உதவுவதற்காக, ஒரு மூத்த பதவியில் Fiona Oomenäஎவ்வித ஆசிரிய அனுபவமும் இல்லாத இவர், John Lewis பலசரக்கு கடைகளில் ஒரு முன்னாள் மேலாளராக இருந்தவர்சமீபத்தில் நியமித்ததற்காக ULT விமர்சிக்கப்பட்டது.

தலைமை குழுவில் இருந்து வெளியேறியவர்களின் சமீபத்திய வரிசையில், Sheffield Springsன் கல்விக்கழக தலைவரான டேவிட் லீவிஸூம், Sheffield Parkன் செயல் இயக்குனரும் அவர்களின் பணியைத் தற்போது இராஜினாமா செய்திருக்கிறார்கள்.

ULT கல்விக்கழகங்களின் பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள், பள்ளிகள் திறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளனர். Sheffield Springs, தற்போது மூன்று ஆண்டுகளில் அதன் மூன்றாவது தலைவரைத் தேடி கொண்டிருக்கிறது.

மற்றொரு Sheffield பள்ளியான Meadowhead, ஒரு அறக்கட்டளை பள்ளியாக மாற திட்டமிட்டு வருகிறது. இது தொழிற்கட்சியால் ஊக்குவிக்கப்படும் மற்றொரு வடிவம், அதாவது குறிப்பிட்ட பள்ளிகளின் நிதியை இலக்காக கொண்டு, கல்வித்துறையில் வியாபாரத்தை உட்புகுத்துவது ஆகும். கில்டர்ஸ் மோட்டார் குழுமம் (Gilders motor group) மற்றும் பட்டய கணக்குதுறை நிறுவனமான ஹார்ட்ஷா (Hart Shaw) ஆகியவற்றை Meadowhead அதன் கூட்டாளியாக கொண்டிருக்கிறது.

தனியார் துறையால் முக்கிய பயிலகங்களையும், சேவைகளையும் திறமையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்புகளை பொருளாதார பின்னடைவின் தாக்கம் நன்கு வெளிப்படுத்தி உள்ளது. பிரிட்டனில் தோல்வியடைந்த வங்கிகளை பிணையெடுக்க, வரிசெலுத்துபவர்களின் செலவில் பில்லியன்கணக்கான பவுண்டுகள் செலவழிக்கப்பட்டுள்ளன. இருந்தும், அரசாங்கம் பொதுத்துறை கல்வியை உடைப்பதில் முன்னோக்கி செல்கிறது.