World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

CEOs at bailed out banks got $13.8 million apiece last year

பிணை எடுக்கப்பட்ட வங்கிகளில் தலைமை நிர்வாக அதிகாரிகள் கடந்த ஆண்டு தலா 13.8 மில்லியன் டாலரை பெற்றனர்

By Andre Damon
7 September 2009

Use this version to print | Send feedback

கடந்த வாரம் வங்கிகள் வருமானம் பற்றி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று அரசாங்கம் பிணை எடுத்த நிதிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகள் சராசரியாக கடந்த ஆண்டு 13.8 மில்லியன் டாலர் ஊதியம் பெற்றதாகக் கூறுகிறது.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 10.1 மில்லியன் டாலர் என்று இருந்த S&P 500 இல் உள்ள உயர் நிர்வாகிககளின் சராசரி வருமானத்தைவிட 37 சதவிகிதம் அதிகம் ஆகும். 2009 ன் நிறுவனங்கள் அவர்களுக்கு குறைந்த விலைகளில் பங்குகளை கொடுத்தும் உயர் நிர்வாகிகள் அதிலிருந்தும் பலனடைந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு தாராளவாத சிந்தனைக் குழுவான Institute for Policy Studies வெளியிட்டுள்ள இந்த ஆய்வு பங்குப்பத்திர பரிமாற்ற குழுவிற்கு (SEC) வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தங்கள் மாற்று வருமானங்களை பற்றிக் கொடுத்த ஊதிய நடைமுறைகளை தளமாகக் கொண்டு ஒரு விரிவான கண்ணோட்டத்தை புதனன்று வெளியிட்டது.

ஒரு நிதிய தலைமை நிர்வாகியின் ஊதியம் 2008ல் ஒரு சராசரித் தொழிலாளர் அதே காலத்தில் ஈட்டிய ஊதியத்தைப் போல் 430 மடங்கு அதிகம் இருந்ததாக அறிக்கை தகவல் கொடுத்துள்ளது.

மத்திய அரசாங்கத்தில் இருந்து அதிக பணத்தைப் பெற்றிருந்த 20 நிதிய நிறுவனங்களின் உயர்மட்ட ஐந்து நிர்வாகிகள் மொத்தம் 3.2 பில்லியன் டாலரை ஊதியமாக கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்றனர். இதே நேரத்தில் 100 பேர் சராசரியாக தலா 32 மில்லியன் டாலரை பெற்றனர். இக்குழு 2006, 2007 ஆண்டுகளில் மொத்தமாக 1.2 பில்லியனையும், கடந்த ஆண்டு 0.8 பில்லியனையும் பெற்றது.

100 அமெரிக்கத் தொழிலாளர்கள் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தால்தான் இந்த குழு மூன்று ஆண்டுகளில் சம்பாதிப்பதை ஈட்ட முடியும்.

இந்த அறிக்கை கூறுகிறது: "அமெரிக்க நிதிய நிறுவனங்களில் நிர்வாகிகள் ஊதியம் வியத்தகு முறையில் விரைவான மீட்பிற்கு வரவுள்ளது. பல வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் நிர்வாகிகளுக்கு ஆண்டு தொடக்கத்தில் பங்குகள் குறைந்த விலைகளில் இருந்தபோது ஏராளமான விருப்ப பங்குகளைக் (Stock options) கொடுத்தன. ஆனால் பிணை எடுப்பு மற்றும் ஒபாமா நிர்வாகம் வங்கிகள் அடையும் நஷ்டத்திற்கு ஈடு கொடுப்பதாக தொடர்ந்து உத்தரவாதம் கொடுத்த நிலையில் இந்தப் பங்குகளின் மதிப்பு பெருமளவில் உயர்ந்துவிட்டது.

உயர்மட்ட 20 நிறுவனங்களில் பாதி, பிணை எடுப்புக்களை பெற்றவை, ஏற்கனவே இந்த ஆண்டு முன்னதாக கொடுக்கப்பட்ட பங்கு விருப்பங்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் அவற்றின் மதிப்பீடுகள் பற்றித் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து உயர்மட்ட நிர்வாகிகள் பங்கு விருப்பங்களின் மதிப்புகள் $90 மில்லியன் மொத்தத்தில் அதிகரித்ததைக் கண்டனர். JP Morgan Chase உடைய நிர்வாகிகள் அவர்கள் பங்குவிருப்ப மதிப்பு $20.6 மில்லியன் அதிகரித்ததை கண்டனர். இதற்கு அடுத்து American Express மற்றும் PNC இடத்தை பெற்றுள்ளன. இவற்றின் நிர்வாகிகள் விருப்ப பங்கின் மதிப்பு $17.9 மில்லியன் உயர்ந்ததை கண்டனர். இத்தகைய ஏற்றம் தொடர்ந்தால் இவர்கள் இன்னும் அதிக வருமானம் பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்த அறிக்கையின் ஆசிரியரான சரா ஆண்டர்சன் Newsweek இடம் பின்வருமாறு கூறினார்: "மிக அதிர்ச்சி தருவது எப்படி இந்த நிர்வாகிகள் நிதிய நெருக்கடியை பயன்படுத்தி இந்த ஆண்டு இன்னும் பெரிய பணமழைக்கு அதை பயன்படுத்தினர் என்பதுதான். மேலதிக கொடுப்பனவுகள் கொடுப்பதற்குப் பதிலாக பல நிறுவனங்கள் புதிய விருப்பு பங்குகளைக் கொடுத்தன. உதாரணமாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸின் உயர் நிர்வாகிகளின் விருப்பு பங்குகளின் மதிப்பு 18 மில்லியன் டாலர் உயர்ந்தது. ஆனால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பாதிதான் பொருளாதார சரிவினால் உயர்ந்தது. என்ன நடந்தாலும் உயர்மட்ட நிர்வாகிகள் நிறையப் பெறுவர் என்பதைத்தான் இது காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்."

நிர்வாகிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் இந்த ஆண்டு 25 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது. கோல்ட்மன் சாக்ஸ் மட்டும் ஏற்கனவே 2009 முதல் பகுதிக்கு 11 பில்லியன் டாலரை ஊழியகளின் நஷ்ட ஈட்டிற்காக ஒதுக்கியுள்ளது.

"இக்கட்டத்தில் மத்திய அரசாங்கம் கடந்த மூன்று தசாப்தங்களில் மிகப் பெரிய அளவு பெருகியுள்ள நிர்வாகிகள் ஊதிய குமிழியை கலைப்பதற்கு எந்த சட்டபூர்வ கட்டுப்பாடு அல்லது நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்று ஆய்வு முடிவுரையாகக் கூறியுள்ளது.

இது ஒரு அதிர்வுதரும் ஒப்புதல் ஆகும். ஆனால் முற்றிலும் உண்மையானது. நிர்வாகிகளின் ஊதியங்களைக் கட்டுப்படுத்துவதாக அது எவ்வளவு கூறினாலும், ஒபாமா நிர்வாகம் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் உண்மை நிதிய அளவைக் குறைக்கும் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

அத்தகைய நடவடிக்கைக்கு மிக தொடர்புபட்டது அரசாங்கத்திடம் இருந்து சில வகைகளில் உதவி பெறும் நிறுவனங்களில் உள்ள ஊதியத் தொகைகளுக்கு ஒப்புதல் கொடுக்க Kenneth Feinberg ஐ நியமித்துள்ளது ஆகும். இந்த நிறுவனங்களின் 100 உயர்மட்ட ஊழியர்களின் ஊதியத் தொகுப்பை உயர்த்த அல்லது குறைக்கும் அதிகாரம் Feinberg க்கு உண்டு. ஆனால் இக்குறைந்த மேற்பார்வை பிரச்சனைக்குரிய சொத்து உதவித்திட்டத்தில் (Troubled Asset Relief Program) அரசாங்கத்திடம் பணம்பெறும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதுவரை அரசாங்க நிதியத்தை பெற்றுள்ள 20 ல் 8 நிறுவனங்கள் பிரச்சனைக்குரிய சொத்து உதவித்திட்டத்தில் தொகைகளை திரும்பக் கொடுத்துவிட்டன. அதையொட்டி ஊதிய மேற்பார்வையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுவிட்டன. எப்படியும் Feinberg ஏற்கனவே "கொள்கையளவில்" தோல்வியுற்றுவிட்ட AIG காப்பீட்டு நிறுவனத்தின் பல மில்லியன் டாலர்களுக்கு ஒப்புதல் கொடுத்திட்டார். இந்த மாதம் பிற்பகுதியில் தன்னுடை விசாரணையின் முடிவை Feinberg வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு பயனற்ற நடவடிக்கையில், தேசிய சட்ட மன்றம் பெரிய நிதிய நிறுவனங்கள் நிர்வாகிகள் ஊதியத் தொகுப்பின்மீது கட்டுப்படுத்தாத பங்குதரார் வாக்களிப்பை நடத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.

செய்தி ஊடகத்தின் பிரதிபலிப்பு போலியான சீற்றமும், இழிந்த முறையில் ஒத்துக்கொள்ளல் என்பதின் கலவையாக உள்ளது. வியாழனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்றில் David Weidner பின்வருமாறு எழுதினார்: "வோல் ஸ்ட்ரீட்டில் பாரிய நன்கொடைகளையும் மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளை இல்லாதொழித்தலும் பிரயோசனமானது. வணிகத்தின் இயல்பு பேராசைதான். வோல் ஸ்ட்ரீட்டிற்கு வரம்பு கட்டுவது என்பது Apple Inc. இடம் புதிய கண்டுபிடிப்புகளை குறை என்று கூறுவது போல், அல்லது Wal-Mart Stores Inc. இடம் கழிவுகள் அதிகம் கொடுக்காதீர்கள் என்று கூறுவதற்கு ஒப்பாகும்". மாறாக தலைமை உயர் நிர்வாகிகளின் ஊதியம் அவற்றின் நிறுவன நலன்களுடன் பிணைந்திருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டுள்ளார்.

கொள்கையளவில் அது தலைமை உயர் நிர்வாகிகளின் ஊதியத்தின் மீது விரிவான தடையை நிராகரித்திருந்தாலும், இதுதான் ஒபாமா நிர்வாகத்தில் நடைமுறையாகவும் உள்ளது. ஞாயிறன்று முடிவடைந்த G20 நிதி மந்திரிகளின் கூட்டத்தில் பிரான்ஸும் ஜேர்மனியும் நிதியத் தொழிலின்மீது ஒருவித உலக அமைப்பின் மேற்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் என்று முயன்றன. ஆனால் அமெரிக்க நிதி மந்திரி டிம் கீத்னர் அத்தகைய அணுகுமுறையை நிராகரித்து, அதற்குப் பதிலாக வங்கிகள் இருப்பில் கொள்ள வேண்டிய மூலதனம் பற்றி பெயரளவுக் கட்டுப்பாடு போதும் என்று கூறியுள்ளார்.

நிர்வாகிகளின் ஊதியத்தை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முற்றிலும் மாறாக, ஒபாமா நிர்வாகம் அதனால் முடிந்த மட்டும் வோல் ஸ்ட்ரீட் தலைமை நிர்வாகிகளின் மாபெரும் ஊதியங்களை பாதுகாக்க அனைத்தையும் செய்கிறது.