World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Massive police buildup for Pittsburgh G20 summit

பிட்ஸ்பர்க் G20 உச்சிமாநாட்டிற்கு பாரிய போலீஸ் பாதுகாப்பு

By Samuel Davidson
24 September 2009

Use this version to print | Send feedback

வியாழன் மற்றும் வெள்ளியன்று நடைபெற உள்ள G20 மாநாட்டுத் தயாரிப்பிற்காக பென்சில்வானியா பிட்ஸ்பர்க் நகரத்திற்குள் ஆயிரக்கணக்கான போலீசார், தேசியப் பாதுகாப்புப் படையினர், FBI உளவுத் துறையினர் மற்றும் பிற அதிகாரிகள் வெள்ளமென நகரத்துள் வந்து பாரிய போலீஸ் முஸ்தீபு உருவாகிக் கொண்டிருக்கிறது


பிட்ஸ்பர்க் தெருக்களில் ரோந்து சுற்றும் ஒரு குழுவினர்

பென்சில்வேனியா மற்றும் அப்பகுதி நெடுகில் இருந்து அறுபது போலீஸ் துறைகள் தங்களது அதிகாரிகளை நகரத்திற்குள் அனுப்பியுள்ளன. எத்தனை பேர் உண்மையில் நகரத்திற்குள் வந்துள்ளனர் என்பதை பிட்ஸ்பர்க் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை; ஆனால் நகரவை இரண்டு நாள் நிகழ்விற்கு 4,000 போலீசார் தேவை என்று கூறியிருந்தது. பிட்ஸ்பர்க்கின் 900 போலீஸ் அதிகாரிகள் 12 மணி நேர ஷிப்ட் வேலைபுரிவர்; அனைத்து விடுமுறைகள், விடுப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உள்ளூர்ப் போலீசைத் தவிர,1,200 பென்சில்வேனியா மாநிலப் போலீஸும் 2,500 தேசியப்பாதுகாப்புத் துருப்புக்களும் திரட்டப்பட்டு நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த உச்சி மாநாட்டினை தேசிய சிறப்பு பாதுகாப்பு நிழ்வு (NSSE) என்று வெள்ளை மாளிகை அறிவித்து, பாதுகாப்பை அமெரிக்க உளவுத் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொடுத்துள்ளது. பல மாதங்களாக உளவுத் துறை ஏஜென்டுகள் பிட்ஸ்பர்க்கில் நிகழ்விற்காகத் திட்டமிட்டு வருகின்றனர். குறுகிய இடத்திற்கான தொலைக்காட்சி காமிராக்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.


பெடரல் கட்டிடத்தைச் சுற்றி எஃகு வேலியும் தடுப்புக்களும்


எதிர்ப்பாளர்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ காமராக்களை தொழிலாளர்கள் நிறுவுகின்றனர்
.

ஒரு நிலவறைக் கட்டுப்பாட்டு மையம் பெயர் கூறப்படாத இடத்தில் நிறுவப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுகிறது. பல துறைகளின் ஏஜென்டுகளும் தொலைக்காட்சித் திரைகளைக் கண்காணித்து சட்ட அமலாக்க ஏஜென்சிக்களின் பணிகளை ஒழுங்குபடுத்துகிறார்கள்

போலீசாரைத் தவிர பல ஆயிரக்கணக்கான தனியார் பாதுகாப்புப் பிரிவுகளும் நகரத்திற்கு வந்ததுள்ளனர். சிலர் ஏராளமான பிரதிநிதிகள் குழுக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கின்றனர்; மற்றவர்கள் பாதுகாப்பிற்காக விடுதிகள், மற்றும் வணிக அமைப்புக்களால் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஒரு போர்ப்பகுதி போன்ற தோற்றத்தை பிட்ஸ்பர்க் கொண்டுள்ளது. நான்கு அடி உயர கான்கிரீட் தடுப்புக்கள் பல அலுவலகக் கட்டிடங்களுக்கு முன்னாலும் தெருக் கோடிகளிலும் போக்குவரத்தை நிறுத்த போடப்பட்டுள்ளன.


நகரம் முழுவதும் பல அலுவலகக் கட்டிடங்களுக்கு முன்னால் கான்கிரீட் தடுப்புக்கள் போடப்பட்டுள்ளன, அவை தெருக்களை அடைத்துள்ளன.

வெளிர் நிற கண்ணாடிகளுடன் பெரிய, கறுப்பு SUV வரிைசகளும், மற்றும் அடையாளம் காட்டப்படாத வாகனங்களும் நகரம் முழுவதும் சீறிப் பாய்ந்து செல்லுகின்றன. 15 முதல் 20 பேர் அடங்கிய தேசியப் பாதுகாப்பு துருப்புக்கள், மாநில போலீசார் மற்றும் பிற ஏஜென்டுகளின் குழுக்கள் வாகனங்களுக்குள் நுழைதும், வெளியேறுவதும் நகரத் தெருக்களில் அணிவகுத்துச் செல்லுவதுமாக இருக்கின்றனர்.

நகரத்தினுள் நுழையும் அனைத்து வாயில்களிலும் போலீசார் சோதனைச் சாவடிகளை நிறுவி, உள்வரும் வெளிச்செல்லும் அனைத்து போக்குவரத்தையும் கண்காணிக்கின்றனர். அனைத்துவித சிறப்பு சாதனங்களும், கவச வாகனங்கள் உட்பட, நகரத்திற்குள் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க கொண்டுவரப்பட்டுள்ளன.

விளக்குகள், ரேடியோக்கள், சைரன்கள் ஆகியவை பொருத்தப்பட்ட 50 எடை குறைந்த, உயர் தொழில்நுட்ப இரு சக்கர வண்டிகளை பிட்ஸ்பர்க் போலிசார் பெற்றுள்ளனர்; துறையினர் இதை "பசுமையாகச் செல்லுதல்" என்று விவரித்துள்ளனர்!

ïèKன் மூன்று ஆறுகள், இவற்றில் இரண்டு "சந்திப்பு புள்ளியில்" குறுக்கிடுகின்றன, அனைத்து ஆற்றுப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுவிட்டதோடு அமெரிக்க கடலோரப் பாதுகாப்புப் படையினரால் ரோந்திற்கு உட்பட்டுள்ளன; இதைத்தவிர உள்ளூர், மாநில போலீசாரும் ரோந்து சுற்றுகின்றனர்.


Point State Park ன் நடைவழிப் பாதை மூடப்பட்டுள்ளது.

மாநிலப் போலீஸும் தேசியப் பாதுகாப்புப் படையும் நகரத்தின் சில பள்ளிக் கட்டிடங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்; பட்ெஜட் வெட்டுக்களால் மூடப்பட்ட சில பள்ளிகளையும் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளனர். இவை உறங்குவதற்கும், உண்பதற்கும் பயன்படுத்தப்படும்; சில தற்காலிக மருத்துவமனைகளாகவும் பயன்படும்; பள்ளிகளின் கால்பந்து மைதானங்கள் ஹெலிகாப்டர்களை இறக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

மூன்று பாதுகாப்புப் பகுதிகள்

அமெரிக்க உளவுத் துறை போலிசாரும் நகரப் போலீசாரும் பிட்ஸ்பர்க் நகரத்தை மூன்று பாதுகாப்புப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

பிட்ஸ்பர்க்கின் நில அமைப்பு பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு, இப்பகுதி ஒரு முக்கோணம் போல் உள்ளது, இரு ஆறுகள் உள்ளன--Allegheny, Monoghel இரண்டும் ஓகையோ ஆற்றில் "The Point" என்னும் இடத்தில் சந்திக்கின்றன; இதையொட்டி இரு பக்கங்களிலும் தொடர்ச்சியான நெடுஞ்சாலைகள் உள்ளன, மலைகள் மூன்றாம் பகுதியாக உள்ளது.


தடைசெய்யப்பட்ட பகுதிகளக் காட்டும் நகர வரைபடம்

பசுமைப் பகுதி என்பது அனைத்து நகர்ப்புறம் மற்றும் சில புறநகர்ப்பகுதிகளைக் கொண்டுள்ளது. நகரத்திற்குள் நுழைவதற்கு மூன்று நுழைவு இடங்கள்தான் இருக்கும், முக்கோணத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒன்று என்ற முறையில். பெரும்பாலான கார்கள் மற்றும் டிரக்குகள் பசுமைப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டா. பஸ்கள், டாக்ஸிக்கள் மற்றும அவசர வாகனங்கள் மட்டும்தான் நகரத்திற்குள் அனுமதிக்கப்படும். நகர வணிகப் பொருட்களைக் கொடுக்கும் டிரக்குகள் காலை 5ல் இருந்து 7 மணிவரைதான் அனுமதிக்கப்படும்; கவனிப்பு இல்லாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக அவற்றில் குறைந்தது இரு டிரைவர்கள் இருக்க வேண்டும். வாகன நிறுத்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிடும்; தெருக்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டுவிடும்.


Allegheny  G
20 உச்சிமாநாடு நடக்கும் டேவிட் லாரன்ஸ் மாநாட்டு மையம்

பசுமைப் பகுதிக்குள் வசிக்கும் மக்கள் கார் ஓட்ட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்; ஆனால் அவர்களுடைய காரோட்டி உரிமம் அப்பகுதியில் இருப்பவர்கள் என்று காட்டினால் அங்கு அனுமதிக்கப்படுவர். சிலர் நகரத்திற்குள் நுழைவதற்கே மூன்று அல்லது நான்கு மணி நேரம் கலாம் என்று கூறியுள்ளனர்.

பசுமைப் பகுதிக்குள் சிவப்புப் பகுதி உள்ளது. இங்கு எல்லா தெருக்களும் மூடப்பட்டு பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 200,000 மக்கள் நகரத்திற்குள் பணிபுரியவும் பொருட்களை வாங்கவும் வருகின்றனர். நூற்றுக்கணக்கான வணிக நிலையங்கள் இரண்டு நாட்கள் மூடிவிடுவது என்று முடிவெடுத்துள்ளன;ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளனர்; இல்லாவிடின் ஊதியம் கிடையாது. திறந்து வைத்திருக்க முடிவெடுத்துள்ள மற்ற வணிகங்கள், தொழிலாளர்களை நகரத்திற்கு வெளியே உள்ள இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். இன்னும் பலர் தொழிலாளர்களிடம், பணியிடத்திற்கு வந்து சேருவது அவர்களுடைய பொறுப்புத்தான் என்று கூறிவிட்டனர்; சிலரிடம் அலுவலகத்திலேயே இரவைக் கழிக்க தூங்கும் பைகளுடன் வருமாறு சொல்லிவிட்டனர்.

பசுமைப் பகுதிக்குள் நீலப் பகுதி உள்ளது; இது உச்சிமாநாடு நடக்கும் இடமான டேவிட் லாரன்v மாநாட்டு மையத்தில் இருந்து மூன்று தெருக்களுக்கு விரிந்துள்ளது. நீலப் பகுதி முற்றிலும் 10 அடி உயர வேலிகள், கான்கிரீட் தடுப்புக்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகினது. நீலப் பகுதிக்குகள் நுழைய விரும்புவோர் உலோகச் சோதனைக் கருவிகளைக் கடந்து பின்னர் இரண்டு பிளாக்குகள் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கும் பகுதியில் நடக்க வேண்டும்.


G/font>20 உச்சிமாநாட்டுத் தயாரிப்பிற்காக பல அலுவலகங்கள் மற்றும் கடை முகப்புக்கள் பொலிவூட்டப்படுகின்றன

நகரப் பகுதியைத் தவிர, ஓக்லாந்து புறநகரிலும் போலீசார் மிகப் பெரிய முறையில் குவிக்கப்படுவர்; இங்கு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் கார்னிகி மெல்லோன் பல்கலைக்கழகங்கள் உள்ளன; அவற்றில் 50,000 மாணவர்களுக்கும் அதிகமாய் பயில்கின்றனர்.


ஆர்ப்பாட்டங்கள்

திட்டமிடப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களில் சிலவற்றிற்கு கடைசி சில தினங்களுக்குள்ளாகத் தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன்.

மாநாட்டு மையத்தின் èட்டிடத் தொகுப்புகளுக்குள்ளாக எந்îMî ஆர்ப்பாட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது. கடந்த ஞாயிறு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக மாநாட்டு மையத்திற்கு அருகே அணிவகுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு வேறுபாதையில் செல்லுமாறு நகரப் போலீசாரால் கூறப்பட்டு விட்டது.

மூன்று "தடைற்ற பேச்சுரிமை உள்ள பகுதிகள்" நகரவையால் நிறுவப்பட்டுள்ளன; இங்கு மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட அனுமதிக்கப்படுவர். இவற்றுள் இரண்டு Allegheny ஆற்றின் குறுக்கே நகரத்தில் இருந்து எதிர்ப்புறம் உள்ளன; மாநாட்டு மையத்தின் பார்வையிலிருந்தே மரங்கள், பாலங்கள் ஆகியவை மறைத்து விடும். மூன்றாவது, மாநாட்டு மையத்தின் வடகிழக்கில் உள்ள வாகன நிறுத்துமிடத்திTM Üமைந்துள்ளது. மற்ற இரு இடங்களையும்விட மாநாட்டு மையத்திற்கு அருகில் இருந்தாலும், ஒரு சாலை மற்றும் இரயில் தண்டவாளங்கள் ஆகியவை குறுக்கே உள்ளன. இதனால் மாநாட்டு மையத்தில் இருந்து இதைப் பார்க்க முடியாது.

இதைத்தவிர, பாதுகாப்பு முறைகள் வகுக்கப்பட்டிருக்கும் தன்மையில், இந்த இடத்தைப் பயன்படுத்த விரும்பும் எதிர்ப்பாளர்கள் முதலில் Allegheny ஆற்றை 7 வது தெருப் பாலத்தில் கடந்து நகரத்திற்குள் சென்று, ஆற்றங்கரையோரமாக ஒன்பது பிளாக்குகள் நடந்து பின்னர் மறுபடியும் ஆற்றைக் கடந்து நகரத்திற்குள் செல்ல வேண்டும்.

ஆர்ப்பாட்டங்களுக்கு திட்டமிட்டுள்ள ஆறு குழுக்கள், இவை ACLU மற்றும் அரசியல் சட்ட உரிமைகளுக்கான மையம் (Center for Constitutional Rights) ஆதரவு பெற்றவை, பெடரல் நீதிமன்றத்தில் நகரவை மீது வழக்குத் தொடுத்தன. கடந்த வாரம் நீதிபதி ஒரு வழக்கைத் தவிர மற்றவற்றில் நகரவைக்கு ஆதரவாக உத்தரவிட்டார். ஆர்ப்பாட்டப் பகுதியை அடைவதற்கு சுற்றிவளைத்துச் செல்லும் வகையில் பாைî அமைந்திருப்பது "ஒரு அசெளகர்யம் மட்டும்தான்" என்று கூறி, இன்றைய தொழில்நுட்பத்தையும் மற்றும் உச்சிமாநாட்டில் எதிர்பார்க்கப்படும் செய்தியாளர்களின் âண்ணிக்ைèயையும் கணக்கில் ெèாண்டால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்களில் தட்டுப்பட முடியவில்லை என்றாலும் கூட அவர்களின் செய்தி சரியாக சென்று சேர முடியும் என்றும் அறிவித்தார்.

Three Rivers Climate Convergence என்னும் குழு மாநாட்டு மையத்தில் இருந்து பல மைல்கள் தூரத்தில் இருக்கும் நகர பூங்கா ஒன்றில் இரவு தங்குவதற்கான முகாம்கள் நிறுவுவதற்கு அனுமதி கோரியதை நிராகரித்ததும் நீதிபதி நிராகரித்த மற்றொரு முக்கிய கோரிக்கை ஆகும். ஏற்கத்தகு வாழ்க்கைமுறை குறித்த நடைமுறை நிலையை விளங்கப்படுத்தவே இந்தக்குழு கூடார நகரம் ஏற்பாடு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பிய. உகண்டாவின் குழந்தை அகதிகள் நிலை பற்றி கவனத்தை ஈர்க்க 200 மாணவர்கள் முகாம்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டதையும், மாணவ சாரணப் பணியினர் பூங்காவில் இரவு முகாம்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டதையும் முன்னுதாரண நிகழ்வுèளாè வழக்கின் வாதுரையில் ACLU எடுத்துக்காட்டியது. ஆனால், நகரத்திற்கு வெளியிலிருந்து வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மலிவான இடவசதிக்கான ஏற்பாடு தான் இது என்று கூறி, இந்த வழக்கில் நீதிபதி ஆணவப்போக்குடன் குழுவின் தடையற்ற கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை நிராகரித்தார்.

பிங்க் கோடு (Pink Code) ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஒன்றிற்குத்தான் நீதிபதி ஒப்புதல் கொடுத்தார்; இது ஒரு போர் எதிர்ப்புக் குழு, பெரும்பாலும் மகளிரைக் கொண்டது; ஞாயிறு முதல் செவ்வாய் வரை Point State Park ல் ஒரு சிறிய இடத்தில் ஆர்ப்பாட்டத்தை அது நடத்தும்.

போலீஸின் தூண்டிவிடுபவர்களும் எதிர்ப்பாளர்களும்

பெரும்பாலான குழுக்கள் அமைதியான எதிர்ப்புக்கள் நடத்துவதாகக் உறுதி கூறி அனுமதியைப் பெற்றாலும், கடந்த புதனன்று இதுவரை அறியப்படாத ஒரு குழு, தன்ைù "பிட்ஸ்பர்க் G20 எதிர்ப்புத் திட்டம்" என்று அழைத்துக் கொண்டு, தன் வலைத்தளத்தில் "மக்களின் எழுச்சி, செப்டம்பர் 24 வெகுஜன ஆர்ப்பாட்டம் நி20 உச்சிமாநாட்டை குலைப்பதற்கு" என்று அழைப்பு விடுத்தது.

உச்சிமாநாட்டை நிறுத்தும் இலக்குடன் இக்குழு லாரென்ஸ்வில்லே புறநகரில் இருந்து மாநாட்டு மையத்திற்கு பேரணி நடத்தும் திட்டம் கொண்டுள்ளது; கடந்த கோடையில், இதேபோன்ற குழுக்கள் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை தடுக்கும் திட்டங்களை அறிவித்தன. பெடரல் மற்றும் மாநில ஏஜென்டுகள் அந்த குழுவுக்குள் ஊடுருவி குழுவின் எட்டு தலைவர்களை மாநாடு துவங்குவதற்கு முன் கைது செய்தனர். பிட்ஸ்பர்க் ஆர்ப்பாட்டங்களிலும் இத்தகைய தூண்டுதல் புரிவோர் செயல்படுவார்கள் என்பது முற்றிலும் சாத்தியமே.

பிட்ஸ்பர்க் உச்சிமாநாட்டில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்று என்று கூறப்படுது அமெரிக்க ஐக்கிய எஃகுத் தொழிலாளர்கள் சங்கம், ஜனநாயக மாநில செனட்டர் ஜிம் பெர்லோ மற்றும் காலநிலை பாதுகாப்பு கூட்டணி (Alliance for Climate Protection) ஆகிய அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோரே அங்கு உரையாற்றுபவர்களில் ஒருவராக இருக்கக்கூடும் என்று Pittsburgh Post-Gazette தெரிவிக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தேசிய மற்றும் சுயபாதுகாப்புவாத செயல்திட்டத்தை அளிக்கும்; இது குறிப்பாக, தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவு என்ற பெயரில் சீனாவிற்கு எதிரானதாக இருக்கும்.