World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the German elections

ஜேர்மனிய தேர்தலின் முக்கியத்துவம்

Ulrich Rippert
25 September 2009

Use this version to print | Send feedback

இந்த ஞாயிறு செப்டம்பர் 27 அன்று கூட்டாட்சிப் பாராளுமன்றத்திற்கு நடக்கவிருக்கும் தேர்தல்கள் மூலம் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டிருக்கும் எந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படமாட்டாது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச சோலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது. நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) தேர்தலில் பங்கு பெறுவதின் முக்கியத்துவம் இதுதான்.

வரும் ஞாயிறுத் தேர்தல்கள் சூழ்ச்சியாய் கையாளப்பட்டுள்ளது போல் இதற்கு முன் எந்த கூட்டாட்சிப் பாராளுமன்ற தேர்தல்களும் இந்த அளவிற்கு சூழ்ச்சியாய் கையாளப்பட்டதில்லை. பல மாதங்களாக அரசாங்கம், ஸ்தாபனமயப்பட்ட கட்சிகள் மற்றும் செய்தி ஊடகங்கள் தேர்தலுக்குப் பின் வரவிருப்பதை மறைக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

1930 களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில், நெருக்கடி பற்றிய பிரச்சனை ஒரு விவாதத்திற்கு உரிய பொருளாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. பணச்சுருக்கத்திற்கு பின்னர் நாணயச்செலாவணியின் பழைய நிலையை அடைவதற்கான பணவீக்க நடவடிக்கைக்காக அரசாங்கம் பல பில்லியன்களை செலவழிக்கின்றது; கார்கள் வாங்குவதற்கு ஊக்கங்கள், தேர்தல் முடியும்வரை சமூக மோதலை ஒத்திப்போடுவதற்கு குறுகிய கால வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமான நீட்டிப்பு போன்றவற்றில் பில்லியன் கணக்கில் செலவழித்துள்ளது.

CDU வின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஜனாதிபதித் தேர்தல் பாணியில் ஒரு தேர்தலை நடத்தி உருப்படியான திட்டங்கள் எதையும் முன்வைப்பதை தவிர்த்துவிட்டார். கூட்டாட்சி பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளும் இந்த போலித்தனத்திற்கு உடந்தையாக உள்ளன. இவை அனைத்தும் பலவித உறுதிமொழிகளையும் கொடுத்துள்ளன; மகத்தான அரசு கடன்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய வேலை தொடக்கப்படும் என்பதை நன்கு அறிந்த விதத்தில், இவை அனைத்தும் வாக்குச்சாவடிகள் மூடப்பட்டதும் கைவிடப்பட்டுவிடும்.

சமூக ஜனநாயகக் கட்சி, குடும்பம் மற்றும் கல்விக் கொள்கைகளில் சீர்திருத்தங்களை அறிவித்தது. குழந்தைகளுக்கான நலன்களில் உயர்வை CDU ஆலோசனையாக கூறியுள்ளது. சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) சுவரொட்டிகள் "வேலைகள் பயனுடையதாக மீண்டும் இருக்க வேண்டும்!" என்று கோருகின்றன. மிகவும் ஏமாற்றுத்தனம் செய்வது இடது கட்சிதான், ஏனெனில் வங்கிகள், பெருநிறுவனங்களின் சக்தியை சவாலுக்கு இழுக்காமல், 1970 களின் சீர்திருத்த அரசியலுக்கு திரும்புவது சாத்தியமே என்று இது தீவிரமாகக் கூறுகிறது.

சமீபத்திய நாட்களில்தான் திரை ஓரளவிற்கு நகரத் தொடங்கியுள்ளது. செய்தி ஊடகத்தில் இருப்பவர்களில் சிலர் தேர்தலுக்கு பின்னர் என்ன வர உள்ளது என்பதை மக்கள் கருதவேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கின்றனர். திரைக்குப் பின்னால், அனைத்துக் கட்சிகளும் --இடது கட்சி உட்பட-- தொழிலாள வர்க்கத்தின் மீது போரை அறிவிக்கும் அரசாங்கம்தான் தேவை என்பதில், நாட்டின் அனைத்து பலாத்கார வழிமுறைகளையும் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை இறக்கி வைக்கும் அரசாங்கம் வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ளன.

பொருளாதார வார ஏடான Wirtschaftswoche அதன் முதல் தாக்குதலை கடந்த வாரம் தொடங்கியது. தேர்தல் முடிந்த மறுநாள் காலை "ஜேர்மனியர்கள் ஒரு வேறுநாட்டில் கண்விழிப்பர்" என்று அது எழுதியுள்ளது. அதன் பின் ஒவ்வொருவரும் "தேர்தல் பிரச்சாரம் என்று கூறப்பட்ட நேரத்தில்" குறிப்பிடப்படாதது பற்றி பேசிக் கொண்டிருப்பர்" என்றும் கூறியுள்ளது.

"வருமானத்தில் 152 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறை, புதிய கடன்கள் 320 பில்லியன் யூரோக்கள், சமூக காப்பீட்டுத் திட்டத்தில் பெரும் ஓட்டைகள், கார்த் தொழிலில் ஆபத்தில் இருக்கும் 90,000 வேலைகள், நிதியத் துறையில் நீக்கத்தை எதிர்பார்க்கும் 180,000 வேலைகள், விரைவில் நான்கு முதல் ஐந்து மில்லியன் என்று வேலையின்மை எண்ணிக்கை பெருகுதல். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அடுத்த அரசாங்கம் "இரத்தம், வியர்வை, கண்ணீர்" ஆகியவற்றைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கும்.

ஞாயிறு மாலை நடந்த Anna Will உரையாடல் நிகழ்வில், பொருளாதார மந்திரி Karl-Theodor Freiherr zu Guttenberg (CSU) மற்றும் நிதி மந்திரி Peer Steinbrück (SPD) ஆகியோர் கடுமையான சிக்கன நடவடிக்கைகளின் தேவைபற்றிப் பேசினர்: Guttenberg, "ஆம். நாம் அதிக சேமிப்புக்களைக் கொள்ள வேண்டும்; அதுவும் நம்முடைய வசதிகள் சிலவற்றை இழந்துவிடும் முறையில்" என்றார். புது வரவு-செலவு திட்ட பற்றாக்குறை 100 பில்லியன் யூரோக்கள் இருக்கக்கூடும் என்று Steinbrück கூறி, இப்பற்றாக்குறையும் வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 320 பில்லியன் குறைப்பும் கடுமையான குறைப்புக்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன என்றார்.

அப்பொழுது முதல், முதலாளிகள் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் வரவிருக்கும் அரசாங்கத்திடம் இருந்து தாங்கள் எதிர்பார்ப்பதை --இன்னும் துல்லியமாக, அடுத்த அதிபரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பதை தெளிவாக்கியுள்ளனர். "ஒரு கடுமையான சிக்கனப் போக்கு" தவிர்க்க முடியாதது. குறுகிய நேரப் பணிவிதிகள் முடிவடைதல் என்பது வேலையின்மையில் மிகப் பெரிய அதிகரிப்பை கொடுக்கும். சமூகப் பாதுகாப்பு முறையில் அழுத்தம் பெருகும்; எனவே நலன்கள் குறைக்கப்படும், அரசு வருவாய் வரி உயர்வின் மூலம் உயர்த்தப்பட வேண்டும்.

வங்கிகளும் ஊகவணிகர்களும் நூறாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை தங்கள் இழப்புக்களை ஈடுசெய்யப் பெற்றிருக்கையில், இந்த நிதியப் பேரழிவிற்கு காரணமாக ஒரு நபர்கூட பொறுப்பேற்க வைக்கப்படவில்லை; ஆனால் நமக்கு இப்பொழுது, "கருவூலம் காலியாக உள்ளது, மக்கள் பெருகியுள்ள அரசாங்கப் பற்றாக்குறைக்கு ஈடுசெய்ய பணம் கொடுக்க வேண்டும்" என்று கூறப்படுகிறது. அரசாங்க கருவூலத்தைக் கொள்ளயடித்து வங்கி மீட்புப் பொதிகளில் இருந்து மில்லியன் கணக்கில் போனஸ் பெற்றுள்ள இதே வங்கியாளர்களும் நிர்வாகிகளும்தான் இப்பொழுது கடுமையான சமூக வெட்டுக்கள் வேண்டும், குறைவூதிய தொழிலாளர் விரிவாக்கப்பட வேண்டும், மதிப்பு கூடுதல் வரிவிதிப்பு அதிகமாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

முன்பு சமூகத்தின் வர்க்கத் தன்மை இவ்வளவு தெளிவாக அபூர்வமாகத்தான் வெளிப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய வினாக்கள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டன. வாக்காளர்கள் இதைப்பற்றி விவாதத்தில் ஈடுபடுதல் மறுக்கப்பட்டுள்ளது; அதே போல் தங்கள் விருப்பத்தை இந்த முக்கிய பிரச்சினையில் பதிவு செய்வதும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டது.

மற்றொரு வினாவும் தேர்தல் பிரச்சாரத்தில் நசுக்கப்பட்டுள்ளது: அது ஆப்கானிஸ்தான் போர். திரைக்குப் பின்னால் நீண்ட காலத்திற்கு முன்பே தேர்தலுக்கு பின்னர் ஜேர்மனிய துருப்புக்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது; இது ஜேர்மனிய துருப்புக்களின் இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தும். குண்டுஸில் நடந்த சமீபத்திய படுகொலை, இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு பின்னர் ஜேர்மனிய இராணுவத்தால் நடத்தப்பட்ட மிகப் பெரிய போர்க்குற்றம் இந்தப் புதிய போக்கை அடையாளம் காட்டியுள்ளது.

ஒரு ஜேர்மனிய அதிகாரியின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதல் பல சிவிலியன்கள் உட்பட, குறைந்தது நூறு உயிர்களையேனும் காவுகொண்டுவிட்டது. செய்தி ஊடகமும் அரசியல் வாதிகளும் போர் வெறி விளைவை எதிர்கொண்டனர். Suddeutsche Zeitung "சர்க்கரை தடவி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுவது" முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி போரில் ஈடுபட்டுள்ளது, "அதை இறுதியில் சரியாகச் செய்யவேண்டும்" என்று அது கூறுகிறது.

அதிபர் மேர்க்கெல் சிறிதும் தயக்கமின்றி இராணுவத் தலைமைக்கு ஆதரவு கொடுத்ததோடு அரசாங்க அறிக்கை ஒன்றில் எந்தக் குறைகூறலையும் --"உள்நாட்டில் இருந்து என்றாலும், வெளியில் இருந்து என்றாலும்"-- தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையிலும் வாக்காளர்கள் அரசாங்கக் கொள்கை மீது செல்வாக்கு செலுத்துவது ஒதுக்கப்பட்டுள்ளது; ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானில் போரை எதிர்க்கின்றனர். உலகில் மிக முக்கியமான எண்ணெய், எரிபொருள் இருப்புக்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான போரில் இருந்து ஜேர்மனிய இராணுவப் படைகள் திரும்பப்பெறப்பட மாட்டாது என்பதை கூட்டாட்சிப் பாராளுமன்றமும் ஒப்புக் கொள்கிறது.

இங்கும் இடது கட்சி குறிப்பிடத்தக்க வகையில் இழிந்த பங்கைத்தான் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து ஜேர்மனியத் துருப்புக்கள் உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று அதன் தேர்தல் சுவொரொட்டிகளில் அது கோரியிருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்னரே அது கூட்டாட்சி அரசாங்கத்தின் அரசியலுக்கு ஏற்ப மாறியுள்ளது. குண்டுஸ் படுகொலையை அது எதிர்கொண்டவிதம் உடனடியாகப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அது கொடுக்கவில்லை, மாறாக "வெளியேறும் மூலபாயத்தைத்தான்" விரும்புகிறது எனக் காட்டுகிறது.

"வெளியேறும் மூலோபாயம்" என்பது போரை விரிவாக்குதல் மற்றும் இருக்கும் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் என்பவற்றிற்கு மறு பெயர் ஆகும். இதே சொற்றொடர்தான் வெளியுறவு மந்திரி ஸ்ரைன்மயரால் ஜேர்மனிய சிப்பாய்கள், பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை விரிவாக்கும் திட்டத்திற்கான ஆதரவிலும் கூறப்பட்டது.

இந்த மலரும் ஜேர்மனிய இராணுவவாதம் வெளிநாடுகளுக்கு எதிராக மட்டும் இல்லாமல், உள்நாட்டிலும் இயக்கப்படுகிறது. ஹிட்லர் இராணுவத்தின் குற்றங்களுக்கு பின்னர், ஜேர்மனிய இராணுவப் பிரிவுகள் உள்நாட்டில் செயல்பாட்டைக் கொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் இத்தடைகளை அகற்றுவதற்கான உள்துறை மந்திரியின் திட்டங்கள் மிக அதிகமான முன்னேற்ற நிலையில் உள்ளன. இது பெருகிய முறையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள்மீது கடுமையான தடைகளை கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு அரசாங்கம் தொலைபேசி, கணினி உரையாடல்களின் மீதான மேற்பார்வையை 30 சதவிகிதம் அதிகரித்தது. அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் மக்களை விரோதிகள் என்று காண்பதுடன் கீழிருந்து வரும் அனைத்து எதிர்ப்புக்களையும் அடக்குவதற்கு தயார் செய்து வருகின்றனர்.

வரவிருக்கும் ஞாயிறு தேர்தல் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் ஆப்கானிஸ்தான் போர் விரிவாக்கமும் தொடருமா என்பதை முடிவெடுக்காது. இந்த முடிவுகள் நீண்ட காலத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டன. ஆனால் தேர்தலானது, எந்த அரசாங்கத் தொகுப்பு அவற்றைச் செயல்படுத்தும் என்பதைத்தான் நிர்ணயிக்கும்.

சமீப காலம்வரை, ஆளும் வட்டங்களில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற கருத்து இருந்தது. FDP வணிக நலன்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும், அரசாங்கத்தில் நுழைவதின் மூலம் அது CDU வின் வணிகப் பிரிவையும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சமூக ஜனநாயக வாதிகள் (SPD) எதிர்த்தரப்பில் மீண்டும் உட்காருவது என்பது பாராளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் சக்திவாய்ந்த எதிர்ப்புக்களை 1960களில் சிஞிஹி-ஷிறிஞி பெரும் கூட்டணிக் காலத்தில் எழுந்தது போல் திசைதிருப்ப பயன்படுத்தப்படும்.

ஆனால் இந்தத் திட்டம் இப்பொழுது மிக ஆபத்தானது என்று கருதப்படுகிறது. FDP தலைவர் Westerwelle மற்றும் அதிகம் சம்பாதிப்பவர்கள் மற்றும் முதலாளிகளுக்கு வரிக் குறைப்புக்கள் என்ற அவரது கோரிக்கை பெரும் குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது. இவை எதிர்ப்பைத் தூண்டி CDU/CSU மற்றும் FDP க்கும் இடையே வரக்கூடிய கூட்டணிக்கு பாதிப்பைக் கொடுக்கக்கூடும்.

இன்னும் சமீபத்தில், இருக்கும் CDU-SPD பெரும் கூட்டணி தொடர வேண்டும் என்று அழைப்புக் கொடுத்தவர்களுக்கு கூடுதல் ஆதரவு வந்துள்ளது. இவ்வாரத் தொடக்கத்தில் Die Zeit "மீண்டும் CDU-SPD கூட்டணி சிறப்பானதாக இருக்கும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளது. "நாட்டை எதிர்கொள்ள இருக்கும் சோதனைகள்", "ஒரு வலுவான தன்னம்பிக்கை உடைய SPD யினால்தான் நிர்வகிக்கப்பட முடியும்" என்று வாதிட்டுள்ளது. முந்தைய SPD தலைமையில் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் இருந்த அரசாங்கம் நடத்திய சமூகக் குறைப்புக்கள் இதைத்தான் நிரூபித்துள்ளன. வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளுவது என்றால், "வருங்காலக் கூட்டாட்சி அரசாங்கத்திடம் இருந்து அனைத்தும் எதிர்பார்க்கப்படும்". இரண்டு மக்கள் கட்சிகள்தான் தேவையானவற்றைச் செய்ய முடியும், அவையும் நீண்ட காலம் முன்னரே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒன்றாக வரட்டும்!'

இவ்விதத்தில் அதிபர் மேர்க்கெல் (CDU) வின் தலைமையில் பெரும் கூட்டணி செப்டம்பர் 27 தேர்தலில் தப்பிப்பிழைத்து அதிகாரத்தில் தொடரக்கூடும். ஆனால் அனைத்துமே அப்படியே இருக்கும் என்ற பொருளை இது தராது. தொழிலாள வர்க்கத்தின்மீது வரவிருக்கும் தாக்குதல்கள் நீண்ட காலமாகவே தயாரிப்பில் உள்ளன.

இடது கட்சியும் பசுமைவாதிகளும் இதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இரு கட்சிகளும் ஏற்கனவே அவை சிறிதும் தயக்கமின்றி தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுப்பதைக் காட்டியுள்ளன.

SPD உடன் கூட்டணியில் இருந்த பசுமைவாதிகள் ஹார்ட்ஸ் விதிகள் மற்றும் 2010 செயற்பட்டில் என்ற பெயரில் சமூக நலன்கள், தொழிலாளர் "சீர்திருத்தங்களை" இயற்றியது. அவர்கள் ஜேர்மனிய படைகள் மீதிருந்த தடைகளை அகற்றி, சர்வதேச இராணுவ நடவடிக்கைகளில் அவை பங்கு பெற செய்வதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.

இடது கட்சியின் சமூகக் குறைகூறல், கடந்த எட்டு ஆண்டுகளாக பேர்லின் நகர சட்ட மன்றத்தில் எத்தகைய பொய்யைக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது. எங்கேல்லாம் இக்கட்சி அரசாங்கப் பொறுப்பை எங்கு எடுத்துக் கொண்டாலும், அது அரசாங்கத்தின் வலதுசாரிக் கட்சியை போல்தான் செயல்பட்டுள்ளது.

புதிய பாராளுமன்றத்தில் இடது கட்சியும் பசுமைவாதிகளும் இரட்டைப் பங்கைக் கொள்ளும். இவை பாராளுமன்றத்தில் போலித்தன எதிர்ப்பைக் காட்டும்: இது பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பு வளர்வதை தடுக்கும். அதே நேரத்தில் இவை இரண்டுமே ஏதேனும் ஒருவிதத்தில் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொள்ள தயாராக உள்ளன.

இந்த நிலைமைகள்தான் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) தேர்தல்களில் பங்கு பெறுவதின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாக உழைக்கும் மக்கள் குறுக்கிடுவதற்கு உதவும் வகையில் ஒரு புதிய கட்சியைக் கட்டமைக்கத்தான் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். முதலாளித்துவம் தோற்றுவிட்டது, இன்றைய பாரிய சமூகப் பிரச்சினைகள், சமூகம் சோசலிச உருமாற்றம் கொள்வதின்மூலம்தான் தீர்க்கப்பட முடியும் என்று வெளிப்படையாகக் கூறும் ஒரே கட்சி எங்களுடையதுதான்.

பெரிய வரலாற்று நிகழ்வுகளின் நிழலில் இத்தேர்தல் நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது; அதன் கொடூரமான விளைவுகள் இன்றளவும் உணரப்படுகின்றன. அப்பொழுது போல் தொழிலாள வர்க்கம் இப்பொழுதும் இரண்டு விளைவுகள் மட்டும் இருக்கக்கூடிய சமூகப் போராட்டத்தை எதிர்கொள்கின்றது: ஒன்று, அதிகாரத்தை தொழிலாள வர்க்கம் கைப்பற்றி, தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்து, வங்கிகளின் சர்வாதிகாரத்தை முறித்து, பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தும்; அல்லது ஆளும் வர்க்கம் சர்வாதிகார நடவடிக்கைகளை பயன்படுத்தி 1933ல் நடந்ததைப் போல் சர்வாதிகாரம், பாரியளவிலான வறுமை மற்றும் போர் ஆகியவற்றைத்தான் திணிக்கும்.

கடந்த காலப் போராட்டங்களின் படிப்பினைகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய கட்சியை கட்டாயம் கட்டியமைக்க வேண்டும். தேசியமும், நாட்டுவெறியும் முறையாக ஊக்குவிக்கப்படும்போது, PSG நான்காம் அகிலத்தின் ஜேர்மனியப் பிரிவு என்ற முறையில், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கு போராடுகிறது.

இச்சூழலில் PSG -ஐ கட்டியமைப்பது என்பது மகத்தான முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் கொண்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை செப்டம்பர் 27 அன்று PSG க்கு வாக்களித்து நம் கட்சியைக் கட்டியமைப்பதில் தீவிர பங்கு பெறுமாறு அழைப்பு விடுகிறோம்.