World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Plantation workers oppose wage sell-out

இலங்கை: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வியாபாரத்தை எதிர்க்கின்றனர்

By our correspondents
16 September 2009

Use this version to print | Send feedback

ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை (இ.தொ.கா.) நிராகரிப்பதோடு, ஞாயிற்றுக் கிழமை தொழிற்சங்களும் முதலாளிகளும் கைச்சாத்திட்ட சம்பள வியாபார உடன்படிக்கையை எதிர்த்து தமது ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்கின்றனர். இலங்கை முதாலாளிகள் சம்மேளனத்துடனான புதிய கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதோடு இந்த ஒப்பந்தத்தின் கீழ் 500,000 தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலும் இரண்டு வருடங்களுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்துக்கு உழைக்க நிர்ப்பந்திக்கப்படுவர்.

நேற்று இந்த உடன்படிக்கைக்கு எதிராக பொகவந்தலாவையில் தொழிலாளர்கள் உள்ளமர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு பரவுவதை தடுக்கும் முயற்சியில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளூர் தலைவர்களுக்கு உபதேசம் செய்வதற்காக உள்ளூர் தொழிற்சங்க அலுவலகங்களுக்கு சென்றார். தொழிலாளர்களின் ஊர்வலம் நகரை நெருங்குவதை தடுக்க பொலிசார் முயற்சித்த போதிலும், அலுவலகத்தை விட்டு தொண்டமான் சென்றவுடனேயே தொழிலாளர்கள் அங்கு பாய்ந்தனர். பொலிசார் கூட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை வீசியதோடு எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர்.


பொகவந்தலாவையில் பொலிசார் தொழிலாளர்களை தடுக்க முனைகின்றனர்

கடந்த மூன்று நாட்களாக ஹட்டன் பகுதியில் அக்கரபத்தனை, பொகவந்தலாவை, டிக்கோயா மஸ்கெலியா போன்ற நகரங்களில் இந்த உடன்படிக்கையை எதிர்த்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்கள் ஒரு சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் தமது சொந்த சுயாதீனமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என தேயிலை தோட்டப் புறங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜாவின் உரையை மிகவும் அக்கறையுடன் கேட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் கொழும்பில் மிகவும் அமைதியிழந்த பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. பெருந்தோட்ட அமைச்சர் டி.எம். ஜயரத்ன, தொழிலாளார்களின் எதிர்ப்புக்களை அடக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏனைய தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொண்டார். "அவர்கள் (தொழிலாளர்கள்) வீதிகளில் முறைகேடான சம்பவங்களை உருவாக்குவதை கடுமையாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்," என அவர் எச்சரித்தார்.

நேற்றைய ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், பலவித பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான போட்டியால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டியதோடு "பெருந்தோட்டங்களில் எதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கக் கூடிய பூரணமாக செல்வாக்குப் பெற்ற போராட்டமாக அபிவிருத்தியடைவதற்கு முன்னர், தோட்டப் பிரச்சினையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. "கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்த தொழிற்துறை போதுமானளவு சிரமத்தை எதிர்கொண்டதோடு அதை காப்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது," என அது மேலும் கூறுகிறது.

அரசாங்கத்தை தலையிடுமாறு விடுக்கும் அழைப்பு ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச இயந்திரத்தை தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தயங்கப் போவதில்லை. 2006 நடந்த வேலை நிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாகவும் "பயங்கரவாத" தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்வதாகவும் அவர் கண்டனம் செய்தார். இப்போது, பூகோள பொருளாதார பின்னடைவின் மத்தியில், சம்பள உயர்வை தாங்க முடியாது என்றும் தொழிலாளர்கள் மீண்டும் அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தளவில், புதிய ஒப்பந்தத்தை தாங்க முடியாது. ஆரம்பத்தில் 750 ரூபா மொத்த நாள் சம்பளத்தை கோரிய இ.தொ.கா. இறுதியில் வெறும் 405 ரூபாவை (3.50 அமெரிக்க டொலர்) ஏற்றுக்கொண்டது. இந்த தொகை, அடிப்படை சம்பளம் 290 ரூபாவையும், வருகைக்கான கொடுப்பணவு மற்றும் வணிகப் பொருளின் விலை மற்றும் உற்பத்தியைப் பொறுத்து வழங்கப்படும் கொடுப்பனவையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

இதற்கு மேலும் சம்பள உயர்வு செலவை தாங்க முடியாது என பிரகடனம் செய்யும் அதே வேளை, ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பே ஏற்றுக்கொள்வதாவது: "தோட்டத் தொழிலாளர்கள் வெறுக்கத் தக்க வறுமையில் வாழ்கிறார்கள், ஒரு சிறந்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை." 2007ல் இ.தொ.கா. செய்த காட்டிக் கொடுப்பின் விளைவாக, தற்போது வழங்கப்படும் மொத்த நாள் சம்பளம், வெறும் 290 ரூபா மட்டுமே. கடந்த இரு ஆண்டுகளாக, உத்தியோகபூர்வ வாழ்க்கைச் செலவு சுட்டெண் 55 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஆகிய ஏனைய இரு சங்கங்களும், இ.தொ.கா. கைச்சாத்திட்ட புதிய சம்பள உடன்படிக்கைக்கு தமது அடிப்படை உடன்பாட்டை நேற்று வெளிப்படுத்தின. தாம் திருத்தங்களை எதிர்பார்ப்பதாக LJEWU தெரிவித்த போதிலும் அதை தெளிவுபடுத்தவில்லை.

LJEWU ஆனது, பெருந்தோட்டங்களை தனியார்மயப்படுத்துவதை தொடக்கி வைத்த, வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) சார்ந்த தொழிற்சங்கமாகும். லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சங்கங்கள் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியில் அடங்குகின்றன. இ.தொ.கா. போன்று இந்த இரு கட்சிகளும் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

பல தொழிற்சங்கங்கள் இ.தொ.கா. வின் உடன்படிக்கையை எதிர்ப்பதோடு 500 ரூபா சம்பளத்துக்காக அழைப்பு விடுக்கின்றன. இலங்கை தொழிலாளர் முன்னணியின் (இ.தொ.மு.) பொதுச் செயலாளர் எஸ். சதாசிவம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் (அ.இ.தோ.தொ.ச.) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசுடன் (ஜ.தொ.கா.) சேர்ந்து கூட்டுப் பிரச்சாரமொன்றை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) பங்கெடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

ஆயினும், 2006 வேலை நிறுத்தத்தில் காணப்பட்டது போல், இந்த "எதிர்ப்பு" வெறும் தந்திரம் மட்டுமே. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரிப்பதையிட்டு நன்கு விழிப்படைந்துள்ள இந்த சங்கங்கள், அவற்றை தணிக்கவும் மற்றும் தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் அடிபணியச் செய்யவும் செயற்படுகின்றன.

ஞாயிற்றுக் கிழமை, 500 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொண்டு "துரோகம்" செய்துவிட்டதாக இ.தொ.கா. வை குற்றஞ்சாட்டிய ம.ம.மு. தலைவர் பெ. சந்திரசேகரன், இந்தப் பிரச்சினையை தீர்க்க தலையிடுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். இ.தொ.கா. தலைவர் தொண்டமானைப் போல், சந்திரசேகரனும் ஒரு அமைச்சரவை அமைச்சராக இருப்பதோடு தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கம் தாங்க வேண்டும் ஏன்ற அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளவராவார்.

அ.இ.தோ.தொ.ச. சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தொழிற்சங்கமாகும். ஜே.வி.பி. 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததோடு அவர் 2006 நடுப்பகுதியில் இனவாத யுத்தத்தை புதுப்பித்ததையும் ஆதரித்தது. 2006ல் தோட்டத் தொழிலாளர்களை "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்" என இராஜபக்ஷ வகைப்படுத்திய பின்னர், சம்பள வியாபாரத்துக்கு எதிராக ஜே.வி.பி. மற்றும் அ.இ.தோ.தொ.ச. முன்னெடுத்த மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தையும் நிறுத்திக்கொண்டன.

நேற்று பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் மத்தியில் பேசிய சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, 2006 போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை பெறுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "முதலில் இ.தொ.கா. உடன்படிக்கையை செய்துகொண்டது. பின்னர் ஏனைய தொழிற்சங்கங்கள் அதை ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தன. தொழிலாளர்கள் இந்த தொழிற்சங்கங்களை நிராகரித்து, போராட்டத்தை தொடர்வதற்காக தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினருடனும் ஐக்கியப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் இங்கு மட்டுமன்றி உலகம் பூராவும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்கின்றன.

ஒரு சோசலிச முன்நோக்குக்காக வாதிட்ட தேவராஜா விளக்கியதாவது: "முதலாளித்துவ அமைப்பு பூகோள பொருளாதார நெருக்கடியில் இருப்பதோடு சப்பாட்டுக்குக் கூட போதுமான சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்க முடியாத அமைப்பாக இருக்கிறது. நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம், தொழிலாளர்கள் போராட்டத்தை தமது சொந்தக் கைகளில் எடுப்பதற்கும் மற்றும் ஒழுக்கமான சம்பளம், வேலை நேரங்கள் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற ஏனைய தேவைகளைப் பற்றி முடிவெடுக்கவும் முதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த நியாயமான கோரிக்கைகளை வழங்க முதலாளித்துவ முறையால் முடியாதெனில், அது அப்புறப்படுத்தப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் சமுதாயத்தை உச்சி முதல் அடிவரை மறு ஒழுங்கு செய்ய வேண்டும். இதை சோசலிச கொள்கையின் அடிப்படையிலான தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் மட்டுமே செய்ய முடியும்."


சோ.ச.க. முன்நோக்கை கேட்ட பின்னர் பெல்மோரல் தொழிலாளர்கள்

கூட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளர்கள் இ.தொ.கா. வின் வியாபாரத்தை கடுமையாக எதிர்த்ததோடு தமது ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தின் பின்னர், ஒரு சுயாதீன நடவடிக்கை குழுவை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலில் 15 தொழிலாளர்கள் பங்குபற்றினர். அவர்கள் சகல தொழிலாளர்களுக்கும் விநியோகிப்பதற்காக "இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச முன்நோக்கு" என்ற சோ.ச.க. அறிக்கையின் சுமார் 500 பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

சோ.ச.க. குழுவொன்று பண்டாரவளை பிரதேசத்தில் ஐஸ்லபி தோட்ட தொழிலாளர்களுடன் உரையாடியது. அவர்கள் தமது ஒத்துழையாமை போராட்டத்தை நிறுத்தியிருந்தது இ.தொ.கா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதால் அல்ல. மாறாக, தொழிற்சங்கங்கள் மீதான அதிருப்தியின் காரணமாகவேயாகும்.

தொழிலாளர்கள் விளக்கியது போல்: "தொழிற்சங்கங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே நாம் மீண்டும் வேலைக்குச் சென்றோம். இந்த சம்பள அதிகரிப்பு போதாது. யுத்தத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என முன்னர் இந்த அரசாங்கம் சொன்னது. ஆனால் யுத்தம் [மே மாதம்] முடிவடைந்த பின்னரும் நாம் அதையே அனுபவிக்கின்றோம். தொழிற்சங்கங்கள் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராட தயாரில்லை. நாம் இந்தத் தலைவர்களின் கீழ் போராடினால் எங்களுக்கு எதுவும் கிடைக்காது. நாங்கள் போராட வேண்டும். ஆனால், தொழிலாளர்களை பிளவுபடுத்தாமல் அவர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு உண்மையான தலைமைத்துவம் எமக்கு வேண்டும்."

பண்டாரவளைக்கு அருகில் நாயபெத்த தோட்டத்தில் தொழிலாளர்கள் தமது பிரச்சாரத்தை தொடர்கின்றனர். "இந்த தோட்டத்தில் உள்ள சுமார் 1,000 தொழிலாளர்களிடம் இருந்து மாதம் கிட்டத்தட்ட 65.000 ரூபாவை தொழிற்சங்கங்கள் சேகரித்துக்கொண்டு, தங்களுக்கு எதுவும் செய்யாததையிட்டு" அவர்கள் கசப்புடன் எதிர்த்தனர். தொழிற்சங்கத்துக்கான சந்தாப் பணமாக இந்த 65 ரூபா மாதாந்தம் அறவிடப்படுகின்றது.

முகாமையாளரின் வீட்டில் வேலை செய்வதை நிறுத்துவதும் ஒத்துழையாமை போராட்டத்தின் ஒரு பாகமாகும். ஒரு தொழிலாளி ஆத்திரத்துடன் விளக்கியதாவது: "தோட்ட முகாமையாளரின் மாத சம்பளம் 80,000-100,000 ரூபாவுக்கு இடையில் இருக்கிறது. அவரது பங்களாவில் வேலை செய்ய சுமார் ஐந்து பேர் ஒதுக்கப்பட்டுள்ளனர். அந்த மாளிகையில் உள்ள நாய்க்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இறைச்சி கொடுக்கப்படுகிறது. அப்படியானால் அவர்கள் எங்களது சம்பளத்தை கூட்ட மறுப்பது ஏன்?

தற்போதைய நாள் சம்பள முறைக்கு மாறாக, உத்தரவாதம் செய்யப்பட்ட மாத சம்பளத்தை தொழிலாளர்கள் கோரியதோடு தமது வருகைக்கான கொடுப்பணவு அடிக்கடி கொடுக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக் காட்டினர். "நாங்கள் சிரமப்பட்டு வேலை செய்வதால் எங்களுக்கு முதுகு வலி மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படுகின்றன. வேலை செய்யும் போது எங்களை அட்டை கடிக்கிறது. உடனடியாக சுகமடைய வேண்டுமெனில் நாம் நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். இல்லையெனில் எங்களால் வேலைக்கு போக முடியாமல் போகும், அதனால் எங்களது வருகைக்கான கொடுப்பணவு குறைக்கப்படும்," என ஒரு தொழிலாளி தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், தொடர்ந்தும் கூட்டங்களை நடத்தவும் அவர்களுக்கு அரசியல் கற்பிக்கவும் சோ.ச.க. உறுப்பினர்கள் மீண்டும் அங்கு வரவேண்டும் என அந்தக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.