World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Scotland: Diageo presses on with 900 job cuts

ஸ்கொட்லாந்து: 900 வேலைகளை வெட்ட டாஜியோ அழுத்தம் கொடுக்கிறது

By Stephen Alexander 
22 September 2009

Use this version to print | Send feedback

மதுபான நிறுவனமான டாஜியோ, மறுகட்டமைப்பு திட்டங்களுடன் அழுத்தத்தை முன்னெடுத்து செல்வதற்கான அதன் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஜோனிவாக்கர் விஸ்கி போத்தல் ஆலையின் கதவடைப்புடன், ஸ்காட்லாந்தில் உள்ள கில்மார்னோக்கில் 700 வேலைகளும் வெட்டப்பட கூடும். Port Dundas வடிகட்டும் மற்றும் cooperage ஆகிய ஆலைகள் மூடப்பட்டு 140 வேலை வெட்டுக்களும், Shieldhall packaging ஆலையில் 30 வெட்டுக்களும் செய்யப்படலாம். அவற்றுடன் கூடுதலாக கிளாஸ்கோவிலும் வேலை வெட்டுக்கள் இருக்கலாம்.

தொழிற்சங்கத்தினால் சுமார் 900 வேலைகளைக் காப்பாற்றப்படும் என்று கருதப்பட்ட ஒரு முன்மொழிவானது நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி, ஸ்கொட்லாந்து தேசிய கட்சி (SNP), தொழிற் சங்கங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் உட்பட பலகட்சி குழுவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஓர் உத்தியோகப்பூர்வ பிரச்சாரத்தின் விளைவாக தான் இந்த திட்டம் உருவாகி இருந்தது.

அண்ணளவாக 500 வேலைகள் பறிபோகக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Fifeல் உள்ள லெவன் நகரில் டாஜியோவின் Cameronbridge distillery ன் ஆலையை விரிவாக்குவதால் (86 மில்லியன் யூரோவில்) 400 வேலைகள் உருவாக்கப்படும், இதன் மூலம் முந்தைய வேலை இழப்புகள் ஈடுசெய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால், உலக சோசலிச வலைத்தளத்தைத் தொடர்பு கொண்ட ஒரு கில்மார்னோக் தொழிலாளியின் கருத்துப்படி, உருவாக்கப்படும் வேலைகள் பகுதி நேர வேலைகளாகவும், மூன்று, ஆறு அல்லது ஒன்பது மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலும் உருவாக்கப்பட இருப்பதாக தெரிகிறது என்றார்.

கில்மார்னோக்கில் மூடப்பட்டால், அதன் உடனடி விளைவாக ஸ்காட்லாந்தில் உள்ள கிழக்கு ஐயர்ஷேரில் வேலையிழந்தோரின் அதிகபட்ச விகிதம் உருவாகும். Port Dundas மூடப்படுவதால் Glasgow ன் பொது நிதியில் 9 மில்லியன் யூரோவிலிருந்து 18 மில்லியன் யூரோ வரையில் செலவாகும். கடந்த ஜூலையில், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 20,000 மக்கள் கில்மார்னோக்கின் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், இதற்கிடையில் கிளாஸ்கோவ் நகரத்திலும் பல தொழிலாளர்கள் சமீபத்தில் போராட்டத்தில் இறங்கினார்கள்.

ஆரம்பத்திலிருந்தே, இந்த முடிவுக்கு எதிரான உத்தியோகபூர்வ பிரச்சாரம், எதிர்ப்புகளை டாஜியோவின் ஒரு வர்த்தகரீதியான முறையீட்டிற்கு அடிபணிய வைக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டிருந்தது. நிதி ரீதியாக ஏற்கக்கூடிய மற்றும் மாற்று வழியாக பொது நிதியிலிருந்து அளிக்க கூடிய, பரந்த இலாபமூட்டும் நிறுவனங்களை ஏற்படுத்துவதன் மூலம், இந்த மூடல்களைத் தடுக்க முடியும் என்று பலகட்சி குழு அறிவுறுத்தியது. சமீபத்திய இலாபங்கள் 2.02 பில்லியனைத் தொட்டிருந்தன.

முக்கிய விஷயத்தில் அவர்கள் டாஜியோவிற்கு உடன்படுகிறார்கள் என்று வியாபார ஆலோசகர்களின் அறிக்கை விபரங்கள் அறிவித்த போது, இந்த அணுகுமுறையின் திவால்தன்மை அடிக்கோடிடப்பட்டது. அந்த அறிக்கை ஒரு வர்த்தகரீதியாக ஏற்புடைய மாற்றை தீர்மானிப்பதற்காக வெளியிடப்பட்டது. டாஜியோவின் திட்டங்களுக்கு பின்னால் இருக்கும் "காரணங்கள்/தர்க்கம்" ஆகியவற்றுடன் ஆலோசகர்கள் BDO Stoy Hayward உடன்படுகிறார்கள், பணிக்குழு விசுவாசத்தின் வர்த்தகரீதியான முக்கியத்துவத்தையும், கிர்மார்னோக்கில் ஜோனி வால்கரின் பாரம்பரியத்தையும் அவர்கள் நிராகரித்தார்கள். இந்த இரண்டும் தான் மாற்றீட்டின் மையமாக இருக்கிறது.

Port Dundas ஆலையை விற்கவும், கில்மார்னோக்கில் மூடப்படுவதற்கு மாற்றாக வேறு இரண்டு சாத்தியக்கூறுகளையும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது. அதாவது, தற்போதிருக்கும் ஆலையையே குறைந்த திறனுடன் நிர்வகிப்பது அல்லது ஒரு பசுமையான பகுதியில் குறைந்த திறனுடன் ஒரு புதிய ஆலையை உருவாக்குவது ஆகிய இரண்டு சாத்தியக்கூறுகள் அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டன. அதன் கணக்குப்படி, இரண்டு சாத்தியக்கூறுகளும் ஸ்காட்லாந்தில் குறைந்தபட்சம் 60 வேலைகளை காப்பாற்றும், அதே சமயம் ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் டாஜியோவின் செலவுகளிலும் மிச்சமாகும். ஸ்காட்லாந்து நிதி செயலாளரான ஜோன் ஸ்வின்னியின் (SNP) தலைமையிலான பலகட்சி குழு, அந்த அறிக்கையை நிராகரித்தது. மேலும் பல வேலைகளைப் பாதுகாக்க கூடிய வர்த்தகரீதியான ஒரு மாற்று ஏற்பாட்டை டாஜியோ அளிக்க முடியும் என்ற கோரிக்கையை அது வைத்திருந்தது.

அந்த கோரிக்கை டாஜியோவால் நிராகரிக்கப்பட்டது. சர்வதேச வினியோகத்திற்கான மேலாண்மை இயக்குனர் டேவிட் கோஸ்னெல், முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் "டாஜியோவிற்கோ அல்லது ஸ்கொட்லாந்திற்கோ நன்மை அளிக்கும் ஒரு வியாபார உத்தியை அளிக்கவில்லை" என்றும், அதில் "பல குறைபாடுகள் இருக்கிறது" என்றும் குறிப்பிட்டார்.

கோஸ்னெல்லின் கருத்துப்படி, "சந்தை நிலவரங்களில் மாற்றம் இருக்கும் என்பதால்" மூடுவதை தற்காலிகமாக தள்ளி வைக்கும்படியான ஒரு அறிவுரையைத் தவிர, முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டத்தில் Port Dundasக்கு மாற்றாக எவ்வித விபரமும் இல்லை. கில்மார்னோக்கிற்கு மாற்றாக கூறப்பட்டிருப்பது என்னவென்றால், குறைந்த திறனுடன் கூடிய ஒரு புதிய ஆலையை பசுமை பிரதேசத்தில் தொடங்க வேண்டும் என்பது தான், இது மறுபயிற்சிக்கும், மறு உருவாக்கத்திற்கும் ஆண்டுக்கு 6 மில்லியன் முதல் 8 மில்லியன் வரை அப்பிரதேசத்தில் பொதுநிதியை வழங்குவதற்கு தான் வழிவகுக்கிறது. கட்டுவதற்கு மட்டும் எந்த நிதியும் அளிக்கப்படாது, ஆனால் அதேசமயம் Fifeல் திட்டமிடப்பட்ட முதலீட்டைத் தியாகம் செய்வதற்கும், கில்மார்னோக்கிற்கும் திருப்பிவிடவும் கோரிக்கையை முன்வைக்கிறது.

இந்த பலவீனமான மற்றும் சரியாக திட்டமிடப்படாத திட்டம் எந்த வகையிலும் டாஜியோவினால் ஆழமாக பரிசீலிக்கப்பட முடியாது. இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், அது செயல்பாடுகளின் திறனைக் குறைத்துவிடும் என்பதோடு, "வெளிநாடுகளுக்கு சென்று பாட்லிங்" செய்ய வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்றும் டாஜியோ ஸ்கொட்லாந்தின் மேலாண்மை இயக்குனர் பிரைன் டோனாகே குறிப்பிட்டார்.

பின்னர் ஏன் இவ்வளவு நீண்டகாலத்திற்கு பிறகு பலகட்சி குழுவால் இதுபோன்றதொரு வெளிப்படையாகவே திவாலான திட்டம் இழுத்து கொண்டு வரப்பட்டிருக்கிறது? என்ற கேள்வி தான் எழுகிறது.

ஆரம்பத்தில் இருந்தே, டாஜியோ தொழிலாளர்களின் எதிர்ப்பையும், அவர்களின் பரந்த சமூகத்தையும், பலகட்சி குழுவின் தலைமையானது ஒரு குருட்டுத்தனமான முட்டுசந்துக்குள் நடத்தி செல்ல விரும்பியது என்பது தான் இதற்கு பதிலாக இருக்கிறது. தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது, மோசடி திட்டத்தை முன்வைப்பது, வெற்றி பெறுவதற்கான அவர்களின் வாய்ப்புகளில் அதிகபிரசங்கித்தனம் செய்வது ஆகியவற்றிற்கு தான் அவர்கள் ஒத்து ஊதி வந்தார்கள். அரசியல்ரீதியாக வெளிக்காட்ட வேண்டுமானால், தொழிலாளர் கட்சியும், SNPயும் தொழிலாளர் வர்க்கத்திற்குள் உருவான தீர்க்கமான மற்றும் சுயாதீனமான எதிர்ப்பைத் தடுக்க விரும்பினார்கள்.

தொழிலாளர்குழுவின் பாதுகாப்பு எந்த வகையிலும் நிலைநிறுத்தப்படுவதைத் தொழிற்சங்கங்களும் சம அளவில் எதிர்த்தன. சமீபத்திய திட்டத்தின் மறுப்பிற்கு பிரதிபலிப்பாக, "திட்டம் இன்னும் முடிந்து விடவில்லை... டாஜியோவிற்கு அளிக்க எங்களிடம் மேலும் பல திட்டங்கள் இருக்கின்றன, இவை இந்த வேலைகளை ஸ்காட்லாந்திற்குள்ளேயே வைத்திருக்க செய்யும்", என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

உலகமெங்கும் 10,000 தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவை மையமாக கொண்ட Bausch & Lombஆல், எடின்பேர்க்கிற்கு அருகில் லிவிங்ஸ்டனில் அமைந்திருக்கும் அதன் கான்டாக்ட் லென்ஸ் ஆலை மூடப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டதற்கு, முக்கிய கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பானது அவர்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டியது.

இது மூடப்படுவதற்கான காரணங்களும், டாஜியோவால் அறிக்கப்பட்ட அதே காரணங்களைப் போலவே இருந்தது. ஒரு சர்வதேச மறுகட்டமைப்பிற்காக மொத்தம் 500 வேலைகள் வெட்டப்பட உள்ளன. வாட்டர்போர்டு, அயர்லாந்து, நியூயோர்க்கின் ரோசெஸ்டர் ஆகிய இடங்களில் தற்போது இயங்கி வரும் ஆலைகளில் உற்பத்தியை ஒருங்கிணைப்பதன் மூலம் அண்ணளவாக 100 மில்லியனைச் சேமிக்க முடியும் என்று Bausch & Lomb எதிர்பார்க்கிறது. உற்பத்தி முறை உயர்ந்தளவில் தானியங்கி முறையில் மாறியிருப்பதால், ரோசெஸ்டர் ஆலையில், இந்த மறுகட்டமைப்பின் போது 30 வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட முடியும்.

இங்கிலாந்தின் 28 சதவீத பெருநிறுவன வரியுடன் ஒப்பிடும் போது அயர்லாந்தில் அது 12 சதவீதமாகும், அத்துடன் செயல்பாட்டு செலவும் குறைவு என்பது தான் விங்ஸ்டன் ஆலையை விட வாட்டர்போர்டு ஆலையைத் தக்க வைப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. எவ்வாறிருப்பினும், டாஜியோவுடன் Bausch & Lomb ஒத்திருந்தாலும் கூட, ஸ்கொட்லாந்து அரசாங்கம் எந்த பொதுநிதி சலுகையையும் வழங்காததால் அது ஸ்கொட்லாந்து பொருளாதாரத்தில் இருந்து அதன் முதலீட்டை முற்றிலுமாக நீக்க விரும்புகிறது. இந்த பெருநிறுவன திட்டங்களுக்கு எதிராக பலகட்சி குழு எவ்வித திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ஸ்கொட்லாந்தின் கவர்ச்சியில் வரும் எதிர்கால முதலீட்டாளர்களை டாஜியோவிற்கு எதிரான திட்டத்தில் ஈடுபடுத்தும் நடவடிக்கைக்குத் குழிதோண்ட, பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்பும், ஸ்கொட்ச் விஸ்கி அமைப்பும் SNPஐ கண்டித்தன. Bausch & Lomb உடனும், ஸ்கொட்ச் விஸ்கி தயாரிக்கும் நிறுவனமான Whyte & Mackay விஷயத்திலும் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் பெருநிறுவனங்களுடன் கைகோர்த்திருந்தார்கள்.

Whyte & Mackay நிறுவனம் ஜூலையில் 100 வேலைகளை வெட்டும் அறிவிப்பை அறிவித்த போது, அந்நிறுவனத்தின் நடவடிக்கைகள் "சமூக பொறுப்புடன்" தான் எடுக்கப்படுகின்றன என்று கூறியும், நீண்டகால விற்பனை வளர்ச்சியைப் பாதுகாக்க அதன் முயற்சிகளுக்கு ஆதரவளித்தும், ஸ்கொட்லாந்து அரசாங்கம் அந்த அறிவிப்பை வரவேற்கும் அளவிற்கு சென்றது. Bausch & Lomb உடனான பேச்சுவார்த்தைகள் நிர்வாக கைமாற்றலுக்கு ஆலோசனை வழங்கும் நிலைக்கு தான் கொண்டு வந்துவிட்டது.

வெஸ்ட்மின்ஸ்டரில் இருக்கும் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு பொறுப்பைத் திருப்பி விட கோரவும், அதன் தேசியவாத பிரச்சாரத்தை உந்துவதற்காகவும் SNP செய்திதொடர்பாளர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: "நாம் நீண்ட-கால சவால்களை ஊக்குவிக்க வேண்டியிருப்பதால், பிற நாடுகளைப் போல, ஸ்கொட்லாந்து அரசாங்கம் பெருநிறுவன வரி போன்ற முக்கிய நிதிய நெம்புகோல்களைக் கட்டுப்படுத்துவதில்லை" என்று தெரிவித்தார்.

பெருநிறுவன வரியை பாதிக்கும் அதிகமாக, 12.5 சதவீதம் வரை குறைப்பதற்கு SNP ஒத்துக்கொண்டிருக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, பெரிய வியாபாரங்களுடன் அது ஒரு நிலைநோக்கைக் கொண்டிருக்கிறது. உயர்ந்து வரும் வேலையின்மைக்கான ஒரு விடையிறுப்பில், வியாபார அமைப்புகளின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் ஒரு "வேலைவாய்ப்பு மாநாட்டை" இந்த ஆண்டு இறுதியில் ஸ்கொட்லாந்து அரசாங்கம் நடத்தும் என்று அது குறிப்பிட்டிருந்தது. ஸ்கொட்லாந்து மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அரசாங்கங்களிடமிருந்து தங்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து சலுகைகள் குறித்தும் பெரிய வியாபாரங்கள் விழிப்போடு இருப்பதை உறுதி செய்வது தான் அதன் தீர்க்கமான நோக்கமாக இருக்கிறது.

உத்தியோகப்பூர்வ டாஜியோ திட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும், குறைந்தபட்சம் தொழிற்சங்கங்கள் கூட, உதவி நிதிகளைப்பெறுவதற்கு முகங்கொடுக்க தள்ளப்பட்ட அந்த மூன்று நிறுவனங்களின் தொழிலாளர்களை ஒன்றிணைக்க சிறிதும் முயற்சிக்கவில்லை என்பதை எடுத்துக்கூறாமல் அதன்பாட்டிற்கு அது சென்றுகொண்டிருக்கிறது