World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government campaigns to entrench autocratic powers

இலங்கை அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நிறுவ பிரச்சாரம் செய்கின்றது

By Vilani Peiris, SEP candidate for Colombo district
5 April 2010

Use this version to print | Send feedback

இலங்கையில் ஏப்பிரல் 8 அன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் அரசாங்கம் முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பிரதான உந்துதல், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கான பலத்தைப் பெறுவதாகும். பொருளாதார சுபீட்சத்தை உருவாக்க "ஒரு பலமான அரசாங்கம்" வேண்டும் என ஆளும் கூட்டணி கூறிக்கொள்கின்றது. உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது அழிவுகரமான தாக்குதலை நடத்துவதன் மூலம் ஒரு பொலிஸ் அரசை நிறுவ அரசாங்கம் முயற்சிக்கின்றது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது.

கடந்த வாரம் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பிரடனம் செய்ததாவது: நான் முப்பது ஆண்டுகால யுத்தத்தை[தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான] முடிவுக்குக் கொண்டுவந்தேன். மற்றும் இப்போது நான் அபிவிருத்தி என்ற முன்னரங்கில் யுத்தத்தை தொடங்கியுள்ளேன்." அவர் "உயர்ந்த சுபீட்சத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்லவும் அபிவிருத்தி முன்னெடுப்புகளை துரிதப்படுத்தவும்... ஒரு பலமான பாராளுமன்றத்தை தேர்வு செய்யுமாறு" வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அவரது சகோதரரும், நாட்டின் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபாய இராஜபக்ஷ, கடந்த புதன் கிழமை காலியில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசிய போது, "உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து வரும் இடைஞ்சல்கள் எதுவும் இன்றி, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தில் ஒரு தீர்க்கமான பெரும்பான்மையைக் கொண்ட பலமான அரசாங்கத்தை அமைப்பது இன்றியமையாததாகும்," என்றார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற பிரமாண்டமான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. பரந்தளவில் நடத்தப்படும் கூட்டங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளைப் போல், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகைகளுமாக அரசாங்கத்துக்கு சொந்தமான ஊடகங்கள், பக்கச் சார்பின்மை பற்றி மெல்லிய பாசாங்கு கூட காட்டாமல் ஏறத்தாழ முழுவதுமாக அரசாங்கப் பிரச்சாரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வன்முறை சம்வங்களில் பெரும்பாலானவற்றில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தவும் மற்றும் தாக்கவும் அரசாங்க-சார்பு குண்டர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய விருப்பு வாக்கு முறைக்கு முடிவுகட்டுவதற்கும் அப்பால், பிரேரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் என்ன என்பது பற்றி அரசாங்கத்தில் உள்ள எவரும் விளக்கவில்லை. இத்தகைய மாற்றம் இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) போன்ற பெரும் கட்சிகள் பாராளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்துவதை இலகுவாக்கும். ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எந்தவொரு எதிர்க் கட்சியும் அரசாங்கத்தை சவால் செய்யவில்லை. அவற்றின் பேச்சாளர்கள், இரண்டில் மூன்று பெரும்பான்மையைப் பெற முடியாது என்று வெறுமனே ஏளனஞ்செய்யவே முயற்சிக்கின்றனர்.

முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும் வாக்காளர்களின் கண்களில் மண்ணைத் தூவுகின்றன. "அபிவிருத்தி முன்னரங்கில் யுத்தம்" பற்றி ஜனாதிபதி பேசும் போது, புலிகள் மீதான தனது யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பிரமாண்டமான கடன் சுமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட வேண்டும் என்பதையே அர்த்த்படுத்துகிறார். அர்சாங்கம் "எந்தவொரு இடைஞ்சலும் இன்றி" செயற்பட வேண்டும் என அவரது சகோதரர் கூறுவதன் அர்த்தம், 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை அது தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்கப் பயன்படுத்தும் என்பதே ஆகும்.

கடந்த மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போது, ஜனாதிபதி இராஜபக்ஷ "சுபூட்சமும் சமாதானமும்" கொண்ட ஒரு புதிய யுகத்தை கொண்டுவருவதாக வாக்குறுதியளித்ததோடு, இப்போது அடுத்த ஆசிய பொருளாதார அதிசயமாக நாட்டை மாற்றுவதாக கூறிக்கொள்கின்றார். யதார்த்தத்தில், பொருளாதாரம் பெரும் கடனில் மூழ்கிப் போயுள்ளதோடு, மொத்த தேசிய உற்பத்தியில் 9.7 வீதமாக உள்ள வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 2011ல் 5 வீதமாக குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோருகின்றது. தேர்தலின் பின்னர் அரசாங்கம் குபொதுச் செலவுகளை வெட்டித் தள்ளவும், வரிகளை அதிகரிக்கவும் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்றுத்தள்ளவும் வேண்டியிருப்பதுடன் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து தவிர்க்க முடியாமல் எழும் எதிர்ப்புகளை நசுக்கவும் வேண்டிவரும்.

ஒரு பொலிஸ் அரசுக்கான சகல வளங்களையும் ஏற்கனவே இராஜபக்ஷ தன்வசம் கொண்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகால யுத்தத்தின் போது, அவர் உறவினர்கள், உதவியாளர்கள், ஜெனரல்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரத்துவத்தினரின் ஒரு ஆளும் கும்பலை உருவாக்க தனது விரிவான நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அரசாங்க நியமனங்களை மேற்பார்வை செய்யும் ஒரு அரசியலைப்புச் சபையை நியமிக்கத் தவறியமை உட்பட, பல தடவைகள் அவர் அரசியலமைப்பையும் உயர் நீதிமன்றத்தையும் அலட்சியம் செய்துள்ளார்.

30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த்தாக இராஜபக்ஷ பெருமை பாராட்டிக்கொண்டாலும், அதன் உள்ளடக்கம் என்ன என்பதை உழைக்கும் மக்கள் கவனமாகப் கருத்திலெடுக்கவேண்டும். மோதலின் கடைசி மாதங்களில், இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களின் ஊடாக ஆயிரக்கணக்கான பொது மக்களை படுகொலை செய்தது. கடந்த மே மாதம் புலிகள் தோல்வியடைந்த பின்னர் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் கால் மில்லியன் பொது மக்கள், அரசியலைமைப்பு மற்றும் சட்ட முறைமை பகிரங்கமாக மீறப்பட்டு இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களில் அடைக்கப்பட்டனர். 2006ல் இருந்தே அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அரசாங்க-சார்பு கொலைப் படைகளால் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.

மோதல்கள் முடிவுக்கு வந்த போதிலும், சகல பாதுகாப்பு இயந்திரங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. துருப்புக்கள் கலைக்கப்படவில்லை. உண்மையில், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இராஜபக்ஷ ஊடகங்களை தணிக்கை செய்யவும் விசாரணையின்றி மக்களை தடுத்து வைக்கவும் மற்றும் வேலை நிறுத்தங்களை தடை செய்யவும் தனக்கு விரிவான அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துள்ளார். அவர் கடந்த அக்டோபரில் பெற்றோலியம், மின்சார சபை, நீர் வழங்கல் சபை மற்றும் துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்ய இத்தகைய அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.

ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுடன், அரசாங்கம் ஒரு அசாதாரணமான அச்சுறுத்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. எதிர்க் கட்சி வேட்பாளரும் ஓய்வு பெற்ற ஜெனரலுமான சரத் பொன்சேகா, ஒரு சதிப் புரட்சியை திட்டமிட்டிருந்தார் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் டசின் கணக்கான அவரது ஆதரவாளர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்களை கண்டு பிடிக்க முடியாமல் போனதால் பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எவ்வாறெனினும், பொன்சேகா கிளர்ச்சிக்காக அன்றி, தொடர்பற்ற, ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டுக்களுக்காக இராணுவத்தால் மூடிய கதவுகளுக்குள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இராஜப்கஷ ஏற்கனவே கொண்டுள்ள விரிவான அதிகாரங்களைப் பொறுத்தளவில், "ஒரு பலமான அரசாங்கத்துக்கான" அவரது வேண்டுகோளின் அர்த்தம் என்ன? இது பிரதானமாக எதிர்க் கட்சியான யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி.க்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டதல்ல. அவை புலிகளுக்கு எதிரான இராஜப்கஷவின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு தொழிலாளர்கள் மீது சுமைகளை சுமத்துவதன் மூலம் இலங்கை முதலாளித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ளவையாகும்.

அரசாங்கத்தின் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்துடன், இராஜபக்ஷவால் தனது அதிகாரங்களை மேலும் பலப்படுத்தி, சட்ட முறைமையின் ஊடான எந்தவொரு சவாலையும் தடுக்க முடியும் மற்றும் பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையின் மட்டத்துக்கு தரம் குறைக்க முடியும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதாக கூறி அவர்களை துரோகிகள் என மீண்டும் மீண்டும் இராஜபக்ஷ கண்டனடம் செய்தார். தனது புதிய "அபிவிருத்துக்கான யுத்தத்தில்" அவர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புக்கள் மீது பாய்வதை நியாயப்படுத்த, நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதாக தொழிலாளர்கள் மீது குற்றஞ்சாட்ட இதே போன்ற வாதத்தை முன்வைப்பார்.

கடந்த காலத்தில் அரசாங்கங்கள் அதிகப் பெரும்பான்மையைக் கொண்டிருந்த போது என்ன நடந்த்து என்பதை தொழிலாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வெண்டும். இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது முன்னாள் ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து 1970ல் நடந்த தேர்தலில் 151 ஆசனங்களில் 116 ஆசணங்களை வென்று ஒரு அதி பெரும்பான்மையை பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அந்த அரசாங்கம், ஜே.வி.பி. யின் எழுச்சியை நசுக்கியதோடு ஒரு மதிப்பீட்டின் படி 15,000 கிராமப்புற இளைஞர்களைக் கொன்றது. பின்னர் அது சிங்களத்தை அரச மொழியாகவும் பெளத்தத்தை அரச மதமாகவும் கொண்ட அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதுடன், யுத்தத்தில் உச்சக் கட்டத்தை அடைந்த இனவாத பதட்டங்களை உக்கிரமடையச் செய்தது. வெகுஜன எதிர்ப்புக்கள் வளர்ந்த நிலையில், அரசாங்கம் அதன் ஆட்சிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ளக்கூடியவாறு அரசியலமைப்பை மாற்றியமைத்தது.

பொருளாதார நெருக்கடியின் மத்தியில், ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான யூ.என்.பி. 1977ல் நடந்த தேர்தலில், 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை பெற்று ஒரு அழிவுகரமான வெற்றியைப் பெற்றது. உடனடியாக அரசியலமைப்பை மாற்றியமைத்த யூ.என்.பி., அர்சாங்கத்தை பதவி விலக்கவும் மற்றும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும் கூடிய விரிவான அதிகாரங்களுடன் தற்போதைய நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டுவந்தது. புதிய அரசியலமைப்பின் கீழ் "ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற" மட்டுமே தன்னுடைய அரசாங்கத்தால் முடியாது என ஜயவர்தன பெருமைபட்டுக்கொண்டார். உலகில் சந்தை சார்பு பொருளாதாரத்தை நிறுவிய முதலாவது தலைவர்களில் அவரும் ஒருவர். அவர் 1980ல் வேலை நிறுத்தம் செய்த 100,000 அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக நெருக்கடிகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில், யூ.என்.பி. தமிழர்-விரோத பேரினவாதத்தையும் படுகொலைகளையும் தூண்டிவிடுவதை நோக்கித் திரும்பியது. இதுவே 1983ல் யுத்தமாக வெடித்தது.

இன்றைய நெருக்கடி பல வழிகளிலும் உக்கிரமடைந்துள்ளது. 26 ஆண்டுகால யுத்தம் பொருளாதாரத்தை சீரழித்துள்ளதோடு, 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பூகோள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பொருளாதாரத்தை முடமாக்கியுள்ளது. பிரமாண்டமான கடன் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது அரசாங்கங்கள் திணிக்க வேண்டும் என உலகம் பூராவும் நிதி மூலதனம் கோரி வருகின்றது. இராஜபக்ஷ நன்கு தெரிந்துகொண்டிருப்பதுபோல் அதை ஜனநாயக முறையில் செய்ய முடியாது. கால் நூற்றாண்டு கால யுத்தத்தில் ஏற்கனவே துன்பங்களையும் இழப்புக்களையும் அனுபவித்துள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்ப்பில் இறங்குவர்.

எவ்வாறெனினும், தனது வர்க்க நலன்களுக்காக போராடும் ஒரு கட்சி இன்மையே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஆபத்தாகும். எதிர்க் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் பொருளாதராத் திட்டங்களை ஆதரிக்கின்றன. அரசாங்க-சார்பு, எதிர்க்கட்சி-சார்பு மற்றும் "சுயாதீன" தொழிற்சங்கள், அதே போல் பலவித முன்னால் தீவிரவாத யாசகர்களும், முதலாளிமாருக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுக்கும் கருவிகளாக செயற்படுகின்றன.

தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் சகல முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான ஒரு அரசியல் இயக்கத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்தவும் அணிதிரட்டவும் இந்த்த் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பங்குபெறுகின்றது. அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரங்களுக்குமான போராட்டம், சமுதாயத்தை செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு மறுகட்டமைப்பு செய்வதுடன் பிரிக்கமுடியாதவாறு பிணைக்கப்பட்டுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரக்காகப் போராடுகின்றது. நாம் இந்த முன்நோக்குடன் உடன்பாடு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, எமது பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்கெடுக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.