World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China maintains discriminatory measures against rural migrants

கிராமப்புற குடிபெயரும் தொழிலாளர்களிடம் சீனா பாகுபாட்டு நடவடிக்கைகளை தொடர்கிறது

By Jean Shaoul
8 April 2010

Use this version to print | Send feedback

கடந்த மாதம் வெறுக்கப்படும் ஹுகெள வீட்டில் குடியிருப்போர் பதிவு முறை (Hukou household registration system) அகற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஒரு தலையங்கத்தின் துணை எழுத்தாளராக இருந்ததற்காக ஒரு செய்தித்தாளின் ஆசிரியர் வேலையை இழக்க நேரிட்டது. குடிபெயரும் கிராமப்புறத் தொழிலாளர்களை பல ஆண்டுகள் வசித்து, உழைத்து வாழும் நகரங்களில் ஹுகெள கட்டுப்பாட்டின் கீழ் வேலைகள், கல்வி, மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றை மறுத்து, இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற நிலைக்கு தள்ளுகிறது.

The Economic Observer ன் முன்னாள் துணை ஆசிரியரான Zhang Hong தேசிய மக்கள் காங்கிரஸிற்கு முன்பு தான் எழுதிய தலையங்கம் சீனாவில் 13 செய்தித்தாள்களில் வந்ததற்காக தண்டைக்கு உட்பட்டுள்ளதாக கூறினார். அவருடைய சக ஊழியர்களும் "விளைவுகளை உணர்ந்தனர்." எல்லா செய்தித் தாள்களும் கட்டுரையை தங்கள் வலைத்தளத்தில் இருந்து அகற்றிவிட்டன அதேபோல் அனைத்து முக்கிய இணையத்தள செய்தி அமைப்புக்களும் அகற்றிவிட்டன. எந்த அளவிற்கு குடிபெயரும் தொழிலாளர்கள் பிரச்சினை ஒரு தீவிர உணர்வுத் தன்மையை கொண்டுள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது.

சீனாவில் ஆளும் உயரடுக்கிற்கு குடிபெயரும் தொழிலாளர்களின் சமூக நிலமையை மாற்றும் அக்கறை இல்லை. ஹகெள முறை அகற்றப்படுவது பற்றிய நம்பிக்கையை பிரதமர் வென் ஜியாபோ வீழ்த்தியதுடன், மாறாக பொதுப் பாதுகாப்புச் செலவிற்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளார்.

புதிய குடியேறுபவர்கள் பெருமளவில் இல்லாவிட்டால், தென் மேற்கு ஆசியாவில் அதனுடைய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா குறைவூதியத் தொகுப்பின் மூலம் பெற்றுள்ள நலன்கள் இதையொட்டி அரிக்கப்படும். பெருநகர அதிகாரிகள் ஹுகெள முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டு வருவது சமூக நலப் பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர். ஏற்கனவே கூடுதலான வளங்கள் இல்லாமல் அவர்கள் திணறுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் நிலத்தை விற்பதின் மூலம் நகரத்திற்கும் தங்களுக்கும் வருமானத்தை தோற்றுவித்து வளர்ச்சியடைய நம்பியுள்ளனர். பல ஊழல் மிகுந்த நகர, பொது அதிகாரிகள் நேரடியாக பெறும் இலஞ்சங்களை குடியேறும் தொழிலாளர்களிடம் பெறுவதை நம்பியுள்ளனர். பிந்தையவர் நகரத்தில் சட்டவிரோதமாக தங்க விரும்புகின்றனர். தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தொடர்கின்றனர்.

ஹுகெள முறை சீனாவின் குறைவூதியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய கூறுபாடு ஆகும். அரசாங்கம் வீட்டில் குடியிருப்போர் பதிவு முறையை 1958ல் ஏற்படுத்தியபோது இது நடைமுறைக்கு வந்தது. அதன்படி நகர்ப்புற அல்லது கிராமப்புற வாசி என்று வீட்டுப்பதிவு முறை நடைமுறைக்கு வந்தது. நகரவாசிகளுக்கு வேலைகள், வீடுகள், உணவு மற்ற தேவைகளைப் பெறுவதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் கிராமப்புற வாசிகளுக்கு இந்த உரிமைகள் ஏதும் கிடையாது. அவர்கள் தங்கள் பண்ணைகளில் உழன்றனர்.

சந்தைச் சீர்திருத்தங்களின்கூறுபாடுகளில் ஒன்று விவசாயிகள் தங்கள் உற்பத்தியில் ஒரு பகுதியை, அனைத்தையும் அரசாங்கத்திற்கு என்பதற்கு பதிலாக, சந்தையில் விற்பனை செய்ய அனுமதித்தது ஆகும். இது உணவு உற்பத்தி மற்றும் விவசாயிகளுடைய சுதந்திரத்தை அதிகரித்தது. 1984ம் ஆண்டு அரசாங்கம் சிறு முயல்வோரை சிறு சந்தைகள் இருக்கும் சிறு நகரங்களில் உழைக்க அனுமதித்தது. விரைவில் குடியேற்றம் சுறுசுறுப்பு அடைந்தது. கிராமப்புற குடியேறுபவர்களின் இரண்டாம் அலை நகரங்களில் தற்காலிக வேலை பார்க்கத்தான் முடிந்தது. இப்பொழுது குடியேறுபவர்கள் நகரங்களுக்கு தங்கள் குடும்பங்களையும் அழைத்து வந்தனர்.

1990 ஐ ஒட்டி, 60 மில்லியன் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். பெரும்பாலும் பேர்ல் மற்றும் யாங்சி ஆறு முகத்துவாரப் பகுதிகளில் இருந்து பெருநகர ஆலைகளுக்கு ஈர்க்கப்பட்டனர். இன்று இந்த எண்ணிக்கை மிகவும் பெருகிவிட்டது. ஆனால் குடியேறியவர்களுடைய எண்ணிக்கை பற்றிய மதிப்பீடு மொத்தத்தில் நகர்ப்புறத்தில் உள்ள 622 மில்லியனில் 167 ல் இருந்து 230 மில்லியன் என்று காட்டுகிறது.

Migrant construction workers in Beijing
பெய்ஜிங்கில் குடிபெயர்ந்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள்

கட்டுமானப் பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர்களும் அவர்களுடைய ஆபத்தான பணி நிலைமையினால் இழிவிற்கு உட்பட்டுள்ளனர். இதைத்தவிர, கடுமையான ஆலை விதிகள், உணவிடங்கள், பொருள்கள் வழங்குமிடங்கள், வீட்டு வேலைகள், குப்பை சேகரித்தல், விபச்சார விடுதிகள் ஆகியவற்றிலும் அவர்கள் உள்ளனர். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்கள் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினராக உள்ளனர். இதில் இளம் பெண்கள் உட்பட, Shenzhen, Dongguan இன்னும் தெற்கு சீனாவில் உள்ள மற்ற ஆலை நகரங்களிலும் இருக்கும் எல்லை ஆலைத் தொழிலாளர்களும் கிராமப்புற குடிபெயர்ந்தவர்கள்தாம்.

இந்தத் தொழிலாளர்கள்தான் வானளாவிய கட்டிடங்கள், பரந்த புதிய நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைத் தொடர்புகள் ஆகியவற்றைக் கட்டியதுடன் உலகின் தொழிற்சாலையாக சீனாவை மாற்றிய ஆலைகளிலும் வேலை செய்வதுடன் செல்வந்தர்களுக்கு எண்ணிலடங்கா செல்வத்தையும் தோற்றுவித்தவர்கள் ஆவார்கள்.

நகர்ப்புற தொழிலாளர்கள் பெரும் ஊதியத்தில் கால் பகுதிக்கும் குறைவாகப் பெறும் கிராமவாசிகள் நிலத்தைவிற்று ஏராளமான எண்ணிக்கையில் நீங்குகின்றனர். பல கிராமங்களில் மிக வயதானவர்களும் சிறு குழந்தைகளும்தான் உள்ளனர். தாத்தாக்கள் தான் வயல்களை உழுது நகரத்தில் உள்ள குடிபெயர்ந்த தொழிலாளிகளின் குழந்தைகளை பாதுகாக்கின்றனர். அவர்கள் வருமானத்தில் முக்கால் பகுதி சிறு நகரங்கள், நகரங்களில் இருந்து அனுப்பப்படும் பணம்தான். 150 முதல் 200 மில்லியன் மக்கள் வரவிருக்கும் காலத்தில் நகரங்களில் வேலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கில் உள்ள வறட்சி நிலை, இப்பொழுது விவசாயிகளை அழித்துக் கொண்டிருப்பது, இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கும்.

சில கிராமவாசிகளைத் தவிர, குறிப்பாக 10 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் தீய வழியில் முகவர்களால் தள்ளப்படும் நிலைக்கு உள்ளாவதாக All-China Women's Federation மற்றும் International Labour Organisation அறிக்கை ஒன்று கூறுகிறது. சீனப் பொலிசார் கடந்த ஆண்டு ஒன்பது மாதம் நடத்திய நடவடிக்கைகளில் 3,400 குழந்தைகளையும், 7,300 பெண்களையும் மீட்டனர். ஆனால் இது பனிப்பாறையின் உச்சி மட்டும்தான்.

சீனாவின் குடிபெயரும் தொழிலாளர் தொகுப்பு மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய குடிபெயர்ந்த தொகுப்பாக உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் நடந்துள்ளது. சரியான முன்னோக்கில் காண வேண்டும் என்றால், ஒரு நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்ற குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கையை போல் இது குறைந்தது நான்கு மடங்கு அதிகமாகும்.

இதில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் 1980க்கு பின்னரும், 40 மில்லியன் பேர் 1990க்குப் பின்னரும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான குறைவூதிய, மோசமான இருப்பிட நிலைமை அனுபவங்களைக் கொண்டாலும், சில முக்கிய வேறுபாடுகளும் உள்ளன. 1980 க்கு முன்பு பிறந்தவர்கள் நாட்டில் நிலப் பதிவை உடையவர்கள். ஆனால் 1980க்குப் பின் பிறந்தவர்களுக்கு அப்பதிவு இல்லை. எனவே பெரும்பாலான குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு நகரங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால் வேறு எந்தப் பிடிப்பும் இல்லை. வயல்களில் வேலைபார்த்த அனுபவமும் கிடையாது.

குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை நரக வேதனைக்கு குறைந்தது அல்ல. பல ஆண்டுகள் அவர்கள் பொலிசில் இருந்து தப்பித்து வாழும் கட்டாயத்தில் இருந்தனர். ஏனெனில் வசிக்கும் அனுமதி உரிமை இல்லாதவர்கள் அபராதம் செலுத்தி கிராமத்திற்குத் திரும்ப வேண்டும். அவர்களுக்கு சமூக நலன்கள், குறைந்தபட்ச வாழ்வதற்கு உத்தரவாதத் திட்டம் என அறியப்படுவது கிடையாது. அதேபோல் அவர்களுடைய குழந்தைகளுக்கு நகர்ப்புற பொதுப் பள்ளிகளில் இடவாய்ப்பு குறைவுதான். உள்ளூர் நிதியத்தில் இயங்கும் வீடுகளிலும் இடம் கிடையாது. சிலர் முதலாளிகள் ஒதுக்கும் இடத்தில் வசித்தாலும், மற்றவர்கள் நகருக்கு வெளியே உள்ள சேரிகளுக்கும், தற்காலிக மோசமான வீடுகளுக்கும் செல்கின்றனர்.

சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் திட்டங்கள் வேலையுடன் தொடர்பு உடையவை, அதாவது ஹுகெள அல்லது வீட்டில் குடியிருப்போர் பதிவு முறை அனுமதியை அடிப்படையாகக் கொண்டவை. குடிபெயர்பவர்கள் தங்கள் ஆயுள், சுகாதாரப் பாதுகாப்புக் கட்டணத்தை தாங்களே தான் போதுமான அளவு சம்பாதித்தால் கட்ட வேண்டும். அவர்கள் குறுகிய கால ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தப்படுவதால், நகரத்தை விட்டு நகரத்திற்கு சென்று வேலையைத் தேட வேண்டும். இந்தக் காப்பீடுகள் ஒருங்கிணைக்கப்பட முடியாததால், அவை உரிய பாதுகாப்பைக் கொடுப்பதில்லை.

பெரும்பாலானவர்கள் சுகாதாரப் பாதுகாப்பிற்கு குறைந்த விலைப் பொருட்களையும், பின் தெரு டாக்டர்களையும் தான் பெரிய மருத்துவமனைகளுக்கு பதிலாக நம்பியிருக்கும் நிலை உள்ளது. ஒரு மருத்துவமனையில் தடிமன் சிகிச்சைக்கு சராசரிக் கட்டணம் 110 யுவான் ஆகும். இது குடி பெயர்ந்த தொழிலாளரின் சராசரி வருமானத்தில் 10 சதவிகிதம் ஆகும். இதையொட்டி மனச்சாட்சி இல்லாத அடகுக் கடைக்காரர்கள் தயவிற்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். சீனாவில் ஒவ்வொரு பெரிய நரத்திலும் சட்ட விரோத "மருத்துவ மனைகள்" ஆயிரக்கணக்கில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவை பெரிய அடுக்கு மாளிகை வீடுகளில் மறைவாக செயல்படுகின்றன. கட்டுமானப் பகுதிகளில் இருக்கும் தந்திக் கம்பங்களில் இது பற்றி விளம்பரங்கள் உண்டு. அதே போல் அதிக குடிபெயர்ந்த சமூகத்தினர் பகுதியிலும் உண்டு. கடந்த ஆண்டு மூவாயிரம் சட்டவிரோத மருத்துவமனைகள் பெய்ஜிங்கில் மூடப்பட்டன.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை சட்டவிரோத கூடுதல் பணி நேரம் வாடிக்கை என்றும், பல குடியேறிய தொழிலாளர்கள் தெற்கு, கிழக்கு சீனாவை விட்டு அகன்ற காரணம் குறைந்த ஊதியம், மோசமான பணி நிலை என்று தெரிவிக்கிறது. இவர்கள் மாதத்திற்கு சராசரியாக 26 நாட்கள் வேலை பார்க்கின்றனர். இது வாரத்திற்கு 58.4 மணித்தியாலங்கள் என ஆகும். சட்டபூர்வ வரம்பைவிட 14.4 மணித்தியாலயங்கள் அதிகம் ஆகும். 2009ல் சரசாரி மாத ஊதியம் 5.7 சதவிகிதம் அல்லது 77 யுவான் ($11.28) அதிகரித்தது. அதாவது 1,417 யுவான் ($207.58 என ஆயிற்று. இது செலவுத் தரத்துடன் இயைந்து இல்லை. குறிப்பாக வீட்டுச் செலவுகளுடன். நிலச் சொத்துக்களின் விலைகள் கடந்த ஆண்டு 30 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் தாம் (42.8 சதவிகிதம்) தங்கள் முதலாளிகளுடன் முறையான ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். கட்டுமானத் துறையில் இந்த எண்ணிக்கை 26 சதவிகிதம் ஆகும். பல குடிபெயர்ந்தவர்களுக்கு காப்பீடு இல்லை. 21.8 சதவிகிதத்தினருக்குத்தான் வேலை தொடர்புடைய காயங்களுக்கான காப்பீடு உண்டு. 12.2 சதவிகிதத்தினருக்குத்தான் மருத்துவக் காப்பீடு உண்டு. 7.6 சதவிகிதத்தினருக்குத்தான் ஓய்வூதியத் திட்டம் உண்டு.

ஊதியங்கள் வாடிக்கையாகத் தாமதமாகத்தான் கொடுக்கப்படுகின்றன. பல நேரமும் மாதக்கணக்கில் பாக்கி இருக்கும். முதலாளிகள் ஆலைகளை மூடிவிட்டுத் தங்கள் தொழிலாளர் தொகுப்பிற்கு பணம் கொடுக்காமல் ஓடிவிடுவது பெரிய விஷயம் அல்ல.

ஊதியங்கள் உயரும் விலைவாசியுடன் சமமாகத் தொடரவில்லை என்பதால், சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதி ஆலைகள் இருக்கும் Pearl River Delta வில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை 2009ல் கிட்டத்தட்ட 10 மில்லியன் குறைந்து 32.82 மில்லியன் என்று இருந்தது. யாங்சி ஆற்று முகத்துவாரப் பகுதியில் 7.8 சதவிகதச் சரிவு அல்லது 2.38 மில்லியன் மக்கள் 2009ல் குறைந்துவிட்டனர். ஏனெனில் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அருகே இருக்கும் சிறு நகரங்களில், வாழ்க்கைச் செலவினங்கள் குறைந்து இருக்கும் இடங்களில் வசிப்பதை பெரு நகரங்களைவிட அதிகம் விரும்புகின்றனர்.

சீனப் புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர், கிராம வீடுகளுக்கு சென்ற 6 மில்லியன் தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் Peasrl River Deltas விற்கு மீண்டும் வரவில்லை. இது ஆலைகளை ஊதியங்களை அதிகரிக்க வைத்தது. உதாரணமாக Zhejiang TM 400,000 வேலைகள் காலியாக இருந்தன இது கடந்த ஆண்டை விட 19 சதவிகிதம் அதிகம் ஆகும். பதிவு செய்திருந்த வேலை தேடுவோர் எண்ணிக்கை 106,800 என்று 30 சதவிகிதச் சரிவைக் கண்டது. குவாங்டாங்கில் மட்டும் 900,000 தொழிலாளர் தேவை இருந்தது, Dongguan ல் 200,000 தொழிலாளர்களுக்கு தேவை இருந்தது.

2004ல் இருந்து நகரவைகளும் குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது ஒரு இழிவான பிரச்சார நோக்கம் கொண்டது. எவ்விதக் கூடுதல் வளங்களையும் அரசாங்கம் அளிக்கவில்லை.

குடிபெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் பள்ளிகள் பெய்ஜிங்கில் ஜனவரி மாதம் இடிக்கப்படுவதற்கு குறிக்கப்பட்டு அவற்றில் புதிய கட்டுமானத் திட்டங்கள் வரவுள்ளன. கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் பள்ளிகளை விட்டு நீங்கின. பலரும் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். பள்ளி உரிமையாளர்கள் புதிய பள்ளிகளை நிறுவ முடியவில்லை. ஏனெனில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு ஏதும் பெறுவதில்லை. இவர்கள் உரிமம் பெறாமல் பள்ளிகளை நடத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்தகைய பள்ளிகள் 300 உள்ளன. ஆனால் 70 மட்டுமே உரிமம் கொண்டவை.

ஹுகெள முறையில் சில சீர்திருத்தங்கள் இருந்தாலும், இவை சிறு நகரங்களில் மட்டும் காணப்படுகின்றன அதே மாநிலம், உட்பகுதிகளின் குடியேறுபவர்களை (prefecture or county) இலக்கு கொண்டுள்ளன. ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் பகுதிக்கு வெளியேதான் வேலையில் உள்ளனர். சீனாவில் 2008ல் 655 நகரங்கள் உள்ளன இவற்றுள் 122 மிகப் பெரிய நகரங்கள், ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையை கொண்டவை 118 பெரு நகரங்கள் 500,000 த்தில் இருந்து 1 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளன.

19 மில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நிரந்தர வசிக்கும் உரிமை இல்லாத ஷாங்காய் அதன் சீர்திருத்தங்கள் பற்றி அதிகம் பேசுகிறது. ஆனால் இவை வெறும் வனப்புப் பூச்சுக்கள்தான். கடந்த ஆண்டு பெப்ருவரியில் நகரவை சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் குடி பெயர்ந்தவர்களுக்கு வசிக்கும் உரிமை கொடுக்கப்படும் என்று அறிவித்தது--அவர்கள் நகரத்தின் சமூகப் பாதுகாப்பு முறைக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும், வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும், நடுத்தர அல்லது உயர் தொழில்திறன் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், நாணயமாக இருந்திருக்க வேண்டும், குற்றங்கள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியிருக்கக்கூடாது. ஹுகெள பெறுவதற்கு இதையொட்டி 3,000 பேர்தான் தகுதி பெற்றனர் என்று அதிகாரிகள் கூறினர். குவாங்டாங் மாநிலத்தின் கவர்னர் ஆண்டு ஒன்றிற்கு அதிக பட்சம் 600,000 வசிக்கும் உரிமைகள் குடிபெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படலாம் என்றார். இது கடலில் ஒரு திவலை நீர் போன்றது.