World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Thai military crackdown on anti-government protest leaves 21 dead

அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவ அடக்குமுறை: 21 பேர் மரணம்

By John Braddock and Peter Symonds
12 April 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமை மத்திய பாங்காக்கில் தெருக்களில் கடுமையான மோதல்கள் எழுந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலகப் படையினர் முழு ஆயுதங்களுடன் கலைப்பதற்கு தாக்குதல் நடத்தியபோது குறைந்தது 21 பேர் இறந்தனர் மற்றும் 874 பேர் காயமுற்றனர். இந்த இரத்தக்களரி மோதல்கள் பிரதம மந்திரி Abhisit Vejjajiva ஐ சூழ்ந்துள்ள அரசியல் நெருக்கடியினால் தீவிரமாகியுள்ளன. எதிர்க்கட்சியான சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயக ஐக்கிய முன்னணியானது (UDD) அரசாங்கம் பதவியை இராஜிநாமா செய்து புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

UDD ஆர்ப்பாட்டக்காரர்கள், "சிவப்புச் சட்டையினர்" என்றும் அறியப்படுபவர்கள் புதனன்று தேசியப் பாராளுமன்ற கட்டிடத்தை சூழ்ந்து உள்ளே நுழைந்தவுடன் நெருக்கடிக்கால நிலைமையை அபிசித் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை நெருக்கடிக்கால ஆணையை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்து, அவர்களுடைய ஒரு மாத காலமாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை தொடருமாறும், வெள்ளியன்று "மிக அதிக அளவு" எதிர்ப்புக்கள் வரும் என்றும் உறுதியளித்தனர். 1,000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பாங்காக்கிற்கு 60 கி.மீ. வடக்கே உள்ள தாய்காம் செயற்கைக்கோள் நிலையத்தின் வளாகத்திற்குள் நுழைந்து UDD சார்பு மக்கள் தொலைக்காட்சி நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கு முயன்றனர்--அது அரசாங்கத்தால் கடந்த வாரம் மூடப்பட்டிருந்தது.

வெள்ளி மாலை நாடெங்கும் காட்டப்பட்ட தொலைக்காட்சி உரையில் அபிசித் இராணுவ நடவடிக்கைக்கான அரங்கை அமைத்தார். "சட்டத்தின் ஆட்சியை" உறுதிப்படுத்தாதற்காக இராணுவத்தை அவர் தீவிரமாகக் குறைகூறி, அவருடைய அரசாங்கம் எதிர்ப்புக்குக்கு முடிவு கட்டத் தேவையான "அனைத்து சக்திகள், சட்டபூர்வ நடவடிக்கைகளையும் திரட்டும் என்று எச்சரித்தார். அவர் இராணுவம் இன்னும் கூடுதலாக 30 பிரிவுகளை, 4,500 படையினர்களை நிலைநிறுத்த, தாய்காம் நிலையத்தை மறுபடியும் எடுத்துக் கொள்ள, PTV ஒளிபரப்பை நிறுத்த உத்தரவிட்டார்.

மத்திய பாங்காக்கில் மார்ச் மாத நடுவில் இருந்து UDD ஆதரவாளர்கள் முகாமிட்டிருக்கும் பான் பா பாலம் மற்றும் ஜனநாயக நினைவுச் சின்னம் இவற்றிற்கு இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. புதிய தோட்டாக்கள், கண்ணீர்ப்புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் ஆகியவற்றை துருப்புக்கள் எதிர்ப்பாளர்களை கலைக்க பயன்படுத்தினர். எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் துப்பாக்கியினாலும் பதிலடி கொடுத்தனர் என்று பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

தெரு மோதல்கள் காவோ சான் சாலைப் பகுதிக்கும் பரவியது என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. அப்பகுதி "ஒரு போர்ப்பகுதி போல் " காட்சி அளித்ததாகத் தகவல் தெரிவிக்கின்றது. கடைச் சன்னல்கள் உடைக்கப்பட்டன, கார்கள் நொருக்கப்பட்டன, மக்கள் பலரும் தெருக்களில் காயமுற்றுக் கிடந்தனர். எதிர்ப்பாளர்கள் ஒரு காஸ் சிலிண்டரைப் பற்ற வைத்து அதைப் படையினர்கள் பக்கம் கோக் வுவா சந்திப்புப் பக்கம் உருட்டிவிட்டதாக தொலைக்காட்சி நிருபர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 50 படையினர்கள் காயமுற்றனர்.

பல மணி நேரம் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்புப் படைகள் எதிர்ப்புப் பகுதியை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.ஆனால் இருட்டிய பின்னர் துருப்புக்கள் மீண்டும் ரப்பர் தோட்டாக்களுடன் காவோ சான் சாலையைக்குச் செல்லும் ஒரு சந்திப்பின் அருகே சுட்டனர். சிலர் உண்மையான ரவைகளால் சுட்டனர். அதே நேரத்தில் ஹெலிகாப்டரும் கண்ணீர்ப் புகைக் குண்டைப் போட்டது. "சிவப்புச் சட்டையினர்" டாக்சி, லாரிகளைப் பயன்படுத்தி அப்பகுதியை தடைக்கு உட்படுத்தினர். நேற்று மத்திய பாங்காக் மற்றும் தலைநகரின் முக்கிய வணியப் பகுதியான ரஜ்டும்நியான் சாலை இரண்டிலும் அமைதியற்ற சூழல் நிலவியது. பிந்தைய இடத்தில் UDD ஆதரவாளர்கள் ஒரு இரண்டாவது முகாமை ஒரு வாரத்திற்கு முன் நிறுவியிருந்தனர்.

இன்று வரை இறப்பு எண்ணிக்கை 21 ஆகும்--17 குடிமக்கள், ஜப்பானிய புகைப்படக்காரர் Hiro Muramoto உட்பட, மற்றும் 4 படையினர்கள் என. 874 காயமுற்றவர்களில், கிட்டத்தட்ட 200 பேர் துருப்பினர் ஆவார்கள். பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். UDD தலைவர்கள் எதிர்ப்புக்களை தொடரும் தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, பிரதம மந்திரி அபிசித் பேச்சுக்களை நடத்த அழைத்ததை பேச்சுக்களுக்கான காலம் முடிந்துவிட்டது எனக்கூறி நிராகரித்தனர். நேற்று எதிர்ப்பாளர்கள் படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் காட்டினார்கள். அதில் கலகப் பிரிவு ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவையும் இருந்தன. கவச வண்டிகள், Humvees, ஒரு லாரி ஆகியவை உட்பட, குறைந்தது அரை டஜன் இராணுவ வாகனங்கள் தெரு மோதல்களில் முடங்கிப் போயின.

சனிக்கிழமை இரவு அபிசித் தொலைக்காட்சியில் தோன்றி மோதல்கள் பற்றி விசாரணை இருக்கும் என்று உறுதியளித்தார். அதே நேரத்தில் துருப்புக்கள் "ஆகாயத்தை நோக்கித்தான், தற்காப்பிற்குச் சுட்டனர்" என்றும் கூறினார். இறப்புக்களானது அவருடைய ஜனநாயகக் கட்சி மற்றும் நலிந்துள்ள கூட்டணி அரசாங்கத்தை இன்னும் குறைமதிப்பிற்குத்தான் உட்படுத்தும். இராணுவ சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டும் மற்றும் புதிய தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று 1992ல் ஜனநாயகக் கட்சி தலைமையில் பாங்காக்கில் மத்தியதர வர்க்கம் பெரிதும் நிறைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதற்கு பின்னர் தற்போதைய இராணுவத் தாக்குதல் மிக மோசமானது ஆகும். அந்த மோதலிலும் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தாய் செய்தி ஊடகத்தின்படி, அரசாங்கம் ஒரு தீவிர விவாதங்களில் ஈடுபட்டுள்ளது. Nation இன்று அபிசித்தின் கூட்டணி இளைய பங்காளிகள் அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்பொழுது திட்டமிடப்பட்டுள்ள ஒன்பது மாதத்திற்குள் என்பதற்குப் பதிலாக விரைவில் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால் அவருடைய நிர்வாகம் கவிழ்க்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளனர் என்று Nation இன்று தெரிவித்துள்ளது. அரசியல் அதிருப்தி மோசமாகும் என்னும் ஆழ்ந்த அச்சங்களை பிரதிபலித்த வகையில் செய்தித்தாளின் தலையங்கம் "சிந்தித்து, அமைதியாக செயலாற்றும் காலம்" வேண்டும், "நிலைமை கட்டுக்குமீறிச் செல்லுகிறது" என்று முறையிட்டுள்ளது.

ஆளும் வட்டாரங்களின் கவலை பாங்காக்கின் மோதல் நாட்டின் கிராமப்புற வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் எதிர்ப்பை தூண்டிவிடக்கூடும் என்பதுதான்--அவைதான் UDD யின் முக்கிய சமூக தளம் அது முன்னாள் பிரதம மந்திரி Thaksin Shinawatra இற்கு ஆதரவைக் கொடுக்கிறது. நூற்றுக்கணக்கான "சிவப்புச் சட்டை" எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமையன்று வடக்கு நகர் சியாங் மை மற்றும் வடகிழக்கு நகரம் உடோன் தானி ஆகியவற்றில் உள்ளூர் அரசாங்கக் கட்டிடங்களுக்குள் பாங்காக்கில் நடக்கும் UDD எதிர்ப்புக்களுக்கு ஆதரவைத் தரும் வகையில் நுழைந்தனர் என்று தெரிவித்துள்ளது.

தாய் ஆளும் வர்க்கத்திற்குள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் தீவிரமான குழு சண்டைகளின் விளைவுதான் இந்த அரசியல் நெருக்கடி. ஒரு வலதுசாரி ஜனரஞ்சக பில்லியனரான தாக்சின், 2001 தேர்தல்களில் பரந்த விதத்தில் IMF ன் கடும் சிக்கன நடவடிக்கையை 1997-98 ஆசிய நிதிய நெருக்கடியை அடுத்து சுமத்தியிருந்த ஜனநாயக கட்சியினருக்கும் வணிகத் தட்டினருக்கும் எதிராகப் படர்ந்திருந்த விரோதப் போக்கைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். ஆனால் அரசியல் ஸ்தாபனத்தில் எதிர்ப்பு பெருகவே, தாக்சின் தாய்லாந்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட்டு நாட்டின் மரபார்ந்த உயரடுக்கினரான இராணுவம், முடியாட்சி, அரசாங்க அதிகாரத்துவம் ஆகியவற்றின் பக்கம் சாய்ந்து கொண்டார்.

தாக்சின்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் 2006ல் தன்னுடைய பிரதம மந்திரி பதவியை அவர் அவருடைய ஷின் கோர்ப் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விற்பனையின் நலனை ஒட்டி பயன்பெற்றார் என்ற வகையில் குற்றச் சாட்டுகள் அதிகரித்தன. பல மாத அரசியல் கொந்தளிப்பிற்கு பின்னர் தாக்சின் செப்டம்பர் 2006ல் ஒரு இராணுவ வகை ஆட்சி மாற்றத்தின் மூலம் அகற்றப்பட்டார். ஆனால் இராணுவக் குழு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அழிவைக் கொடுத்தன. அரசியலமைப்பு மீண்டும் எழுதப்பட்ட பின்னர் 2007ல் இராணுவம் அதிகாரத்தைக் கைவிட்டது. தாக்சின் ஆதரவாளர்கள் 2007 தேர்தல்களில் வெற்றி பெற்றனர் இது மற்றொரு ஆண்டு அரசியல் கொந்தளிப்பைக் கொண்டுவந்தது.

தாக்சின் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு அளித்ததை அடுத்து, இராணுவமும், முடியாட்சியும் ஆதரவு கொடுத்ததை அடுத்து, டிசம்பர் 2008 ல் அபிசித் மீண்டும் பதவியில் இருத்தப்பட்டார். இராணுவ குழுத் தலைவர்கள் சிறு கட்சிகளையும் தாக்சின் சார்புடைய மக்கள் சக்திக் கட்சியையும் (PPP) ஆதரவை மாற்றிக் கொண்டு ஜனநாயகக் கட்சிக்கு பாராளுமன்ற பெரும்பான்மை கொடுக்க அழுத்தம் கொடுத்ததில் நேரடிப் பங்கைக் கொண்டிருந்தனர். புதிய தேர்தல்களுக்கான முறையீடுகளை அபிசித் எதிர்த்துள்ளார். இதற்குக் காரணம் அவருடைய ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடும் என்பதுதான். அதிகாரத்தில் இருக்கும்போது தாக்சின் கணிசமான ஆதரவை குறைந்த பட்ச உதவிகள் மற்றும் குறைந்த செலவில் சுகாதாரத் திட்டத்தைக் கொடுத்த விதத்தில் கிராமப்புற ஏழைகளிடையே ஆதரவை வளர்த்தார்.

பொருளாதாரக் கொள்கை, அரசியல் அதிகாரம், ஆதரிப்போர் தன்மை ஆகியவற்றை ஒட்டி ஆளும் உயரடுக்கிற்குள் எழுந்துள்ள கடுமையான வேறுபாடுகள் 2007-2008ல் வெடித்தெழுந்த உலகப் பொருளாதார நெருக்கடியினால் தாக்கப்பட்டுள்ள தாய்லாந்து பொருளாதாரத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளன. இவ்வாண்டு ஏற்றுமதிகள் மீளத் தொடங்கி, பொருளாதார வளர்ச்சி நேரியமாகும் என்று உள்ள நிலையில் உறுதியற்ற தன்மை அரசியல் கொந்தளிப்பால் அதிகரித்துவிட்டது. தாய்லாந்து ஓட்டல்கள் சங்கமானது நெருக்கடி தொடர்ந்தால் தன் உறுப்பினர்கள் நிலைமை "பேராபத்திற்கு உட்படும்" என்று எச்சரித்துள்ளது. ஜப்பானிய கடன் தர அளிப்பு நிறுவனம் தாய்லாந்தின் உள்ளூர் நாணயத்தின் நீண்ட கால மூத்த கடன் அளவை A+ ல் இருந்து A எனக் குறைத்துவிட்டது.

அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ சாதாரண மக்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. தாக்சின் மற்றும் UDD தலைமை பாங்காக் உயரடுக்கிற்கு கிராமப்புற ஏழைகள் கொண்டிருக்கும் விரோதப் போக்கைப் பயன்படுத்தி, புதிய தேர்தலை விரும்புவதுடன் அதிகாரத்திற்கு வரவும் விரும்புகின்றனர். அது அவர்களது வணிகம் மற்றும் அரசியல் ஆதரவாளர்களுக்குத்தான் நலன்களைக் கொடுக்கும். "ஜனநாயகம்" பற்றி என்ன பேசினாலும், தாக்சின் பிரதம மந்திரியாக இருந்தபோது நடத்திய சர்வாதிகார செயல்களினால் இழிவுற்றவர். அபிசின் மற்றும் ஜனநாயகவாதிகளை பொறுத்தவரை, அவர்கள் இப்பொழுது இராணுவ அதிகாரத்தில் சார்ந்திருப்பவர்கள். முன்பு அதை எதிர்த்ததாக இவர்கள் கூறியிருந்தனர். இராணுவமே அதன் கீழ் பிரிவுகளிடம் இருந்து உள் அழுத்தங்களை எதிர்கொள்கிறது. அவை கிராமப்புறங்களில் இருந்து வருபவை, "சிவப்புச் சட்டை" எதிர்ப்பாளர்களுக்கு பரிவு உணர்வு காட்டுபவை. செய்தி ஊடகமானது "தர்பூசிப்பழ (watermelon) படையினர்கள்" பிரச்சினை பற்றி விவாதிக்கிறது--அதாவது காக்கி, பச்சை சீருடை வெளியே, ஆனால் உள்ளே "சிவப்பு" என்று இருக்கும் தன்மை பற்றி.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் என்று ஆளும் வட்டாரங்களில் உள்ள அச்சம் எதிர்ப்பாளர்கள் தங்கள் சொந்த வர்க்கக் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்பதுதான். Nation ஆனது எதிர்ப்புக்கள் நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளிடம் இருந்தும் ஆதரவை ஈர்க்கத் தொடங்கியுள்ளது என்று குறிப்பிடுள்ளது: "தெருக்களில் விற்பனை செய்பவர்கள், எழுத்தர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள், சமையல்காரர்கள், பாதுகாப்புப் பிரிவினர், டாக்சி ஓட்டிகள், மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டுனர்கள், உள்ளுர் மக்கள் அனைவரும் பாங்காக்கின் நெருக்கடியான, வறிய பகுதிகளில் இருந்து வருகின்றனர்" ஆர்ப்பாட்டங்கள் "வறியவர்களிடையே காணப்படும் சமத்துவமின்மையினால் எழும் பெருகிய அமைதியின்மையையும் வர்க்க ஒற்றுமையையும்" உயர்த்திக் காட்டியுள்ளன என்று செய்தித்தாள் கூறியது. கடந்த வெள்ளியன்று UDD தலைவர் Natthawut Saikua தன்னுடைய ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் "தங்கள் கைகளிலே பிரச்சனையை எடுப்பார்கள்" என்று அரசாங்கத்திற்கு எச்சரித்தார்.

தாய்த் தொழிலாளர்களை எதிர்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினையானது தங்கள் வர்க்க சுயாதீன நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை அவர்கள் கொண்டிருக்கவிலை என்பதுதான். எனவே அவர்கள் கிராமப்பு மக்களுக்கு ஒரு மாற்றீட்டுத் தலைமையைக் கொடுக்க முடியவில்லை. போட்டியிட்டுக் கொள்ளும் ஆளும் வர்க்கப் பிரிவுகள் இப்பொழுது கடுமையான அரசியல் மோதல்களில் தங்கள் பொருளாதார நலன்களைக் பாதுகாப்பதற்கு ஈடுபட்டிருக்கையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்கள் முதலாளித்துவ ஆட்சிற்கு எதிராக எந்த அச்சுறுத்தலை வெளிப்படுத்தினாலும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து முழு அளவு இராணுவ அடக்குமுறையைக் கையாள்வார்கள்.