World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek public sector workers strike to oppose austerity measures

கிரேக்க பொதுத்துறைத் தொழிலாளர்கள் கடும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By Stefan Steinberg
23 April 2010

Use this version to print | Send feedback

பல்லாயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் கிரேக்கத்தில் வியாழனன்று கடும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர். அரசாங்க அதிகாரிகள், மருத்துவமனை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், சுங்க மற்றும் வரித்துறை அதிகாரிகளும் பங்கு பெற்றனர். அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் காட்சியகங்களும் மூடப்பட்டுவிட்டன.

வியாழனன்று நடந்த வேலைநிறுத்தங்கள் கிரேக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த இரண்டாவது நாள் கூட்டங்கள் நடைபெற்றபோது இணையாக நடத்தப்பட்டன.

சமூக ஜனநாயக PASOK அரசாங்கமானது பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் தலைமையிலும் மற்றும் ஐரோப்பிய, சர்வதேச நிதிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கிரேக்கத்திற்கு உதவி கொடுப்பதின் நிபந்தனைகள் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். கொள்கை அளவில் இந்த மாதம் ஒரு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக 45 பில்லியன் யூரோக்கள் பொதி ஒப்புக் கொள்ளப்பட்டது, ஆனால் அது இன்னமும் செயல்படுத்தப்படவில்லை.

கடன்களை கொடுப்பதற்கான முடிவு --மூன்றில் இரு பங்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்தும், மூன்றில் ஒரு பகுதி IMF ல் இருந்து வருவதும்-- இன்னும் ஆழ்ந்த பாதிப்புக்களை கிரேக்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இணைந்து நிற்கும்.

வியாழனன்று "கிரேக்கத்திற்கு மோசமான நிலைமை வருவதைத் தவிர்க்கும் முடிவுகளை எடுக்கும் வரலாற்றுத் தன்மை வாய்ந்த கடமைகளை நாங்கள் கொண்டிருக்கிறோம்" என்று கூறிய விதத்தில் பாப்பாண்ட்ரூ இத் தாக்குதல்களை செயல்படுத்த தன் விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

கிரேக்கத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல், ஐரோப்பா முழுவதும் இதே போன்ற நடவடிக்கைகளை கொண்டு வருவதற்கு முக்கியம் என்று காணப்படுகிறது. அவற்றில் அரசாங்கப் பற்றாக்குறைகளானது நிதிய நெருக்கடி மற்றும் வங்கிகள் பிணை எடுப்பை ஒட்டி மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளன.

IMF அதிகாரிகள், ஏப்ரல் 21ம் தேதி ஏதென்ஸுக்கு முதல் நாள் வந்திருந்தபோது கிரேக்க நிதி அமைச்சரகத்தின் வெளியே "IMF வேண்டாம்" என்று அறிவித்த கோஷங்களை தாங்கிய பதாகைகள் மூலம் வரவேற்கப்பட்டனர். அன்றே துறைமுகத் தொழிலாளர்கள் Piraeus துறைமுகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி சில பயணிகள் படகுகளை புறப்படமுடியாமல் தடுத்தனர்.

வியாழனன்று நடந்த வேலைநிறுத்தங்கள் கிரேக்கத் தொழிலாளர்களிடையே செல்வந்தர்களின் பிணை எடுப்பிற்கு தாங்கள் விலை கொடுக்கும் கட்டாயத் தேவை பற்றிய எதிர்ப்பின் ஆழ்ந்த விரோதப் போக்கை வெளிப்படுத்தின. வேலைநிறுத்தம் செய்பவர்கள் எழுப்பிய கோஷங்களில், "பிரமைகள் தேவையில்லை; செல்வந்தர்களுக்கு எதிரான போர் வேண்டும்" என்பதும் இருந்தது.

ALCO கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் Costas Panagopopulos ராய்ட்டர்ஸிடம், "மக்கள் குருதி (தீவிர நடவடிக்கை) கோருகின்றனர். சமூக வன்முறை, மிகத் தீவிர விளைவுகள் வரும் என்று உண்மையில் நான் அஞ்சுகிறேன்." என்றார்.

PASOK அரசாங்கத்திற்கு அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் பங்கு பற்றி பெருகிய மக்கள் எதிர்ப்பு உள்ளது. கடந்த வாரம் வெளிவந்த ஒரு கருத்துக் கணிப்பு கிரேக்கத்தில் மூன்றில் இரு பகுதியினர் PASOK அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி அதிருப்தி அடைந்ததையும், 66 சதவிகிதத்தினர் சமூக அமைதியின்மை வரவிருக்கும் மாதங்களில் அதிகமாகும் என்ற நம்பிக்கையை வெளியிட்டதையும் காட்டுகிறது.

கிரேக்கத்தின் வேலையின்மை விகிதம் ஆறு ஆண்டுகள் இல்லாத உயர்ந்த 11.3 சதவிகிதம் என்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இது 9.4 சதவிகிதம் என்று இருந்தது ஒப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத் தகவல்களின்படி, ஐந்து கிரேக்கக் குடிமக்களில் ஒருவர் வறுமைக் கோட்டு நுழைவாயிலில் ஏற்கனவே வாழ்கிறார்.

"நிலைமை முன்னேற்றம் அடையும் என நான் நம்பவில்லை" என்று 49 வயதான அலுலக எழுத்தர் அனஸ்டாசியா கிரிவா கூறினார். "நான் ஒன்றும் இன்னும் தியாகங்களுக்குத் தயாராக இல்லை, ஏனெனில் இந்த நடவடிக்கைகளோ வருங்காலக் குறைப்புக்களோ நம்மை நெருக்கடியில் இருந்து வெளியே கொண்டுவராது என்றுதான் நான் நினைக்கிறேன். இது நம் தவறு இல்லை. செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், வரி ஏய்ப்பவர்கள் தான் இதற்கு விலை கொடுக்க வேண்டும்."

சமூக எதிர்ப்பின் ஆபத்து பாப்பாண்ட்ரூ மற்றும் சர்வதேச நிதிய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் மனங்களில் பெரிதும் நிறைந்திருந்தது. இவர்கள் தொழிற்சங்கத்தைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர். மேலும் அவற்றுடன் மத்தியதர வர்க்க அமைப்புக்களான SYRIXZA போன்றவற்றையும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உதவும் என்று நம்புகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு விரிவான தாக்குதலாக பெருகுகையில், தொழிற்சங்கத்தின் எதிர்கொள்ளலானது அணிதிரட்டலை கைவிட்டு, தனிமைப்படுத்தி, எதிர்ப்பை சளைக்கச் செய்துவிடுவது என்று உள்ளது. வியாழனன்று நடைபெற்ற வேலைநிறுத்தங்களானது அரசாங்க ஊழியர் சங்கமான ADEDY மற்றும் PAME தொழிற்சங்கமான கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த அமைப்பினாலும் அழைப்புவிடுக்கப்பட்டு இருந்தன. முந்தைய எதிர்ப்புக்களை போலவே தொழிற்சங்கங்கள் தனித்தனி வேலைநிறுத்தங்களை செய்தன--ADEDY 24 மணி நேரத்திற்கும், PAME 48 மணிநேரத்திற்கும். அதே போல் தனித்தனி ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தான் இருந்தன.

வியாழக்கிழமை வேலைநிறுத்தங்கள் பெப்ருவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட பொது வேலைநிறுத்தங்களை விட சிறியதாக இருந்தன. அப்போது அவற்றில் 2 மில்லியன் தனியார் துறை தொழிலாளர்கள் பங்கு பெற்றதும் அடங்கியிருந்தது. தனியார் துறை தொழிற்சங்கமான GSEE அடுத்த மாதம் வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளது.

ஏதென்ஸைச் சுற்றியுள்ள பகுதியில் போக்குவரத்துக்கள் செயற்பட்டன. வியாழனன்று பஸ், ரயில் மற்றும் தெருக்கார்களின் தொழிலாளர்கள் வேலை செய்தனர். அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சியும் வாடிக்கையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்--தங்கள் இருநாள் வேலைநிறுத்தத்திற்கு முதலில் திட்டமிட்டிருந்தவர்கள்--ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பை அடுத்து நின்று போயிருந்த விமானப் பயணங்கள் பரந்த அளவில் மீண்டும் தொடர்ந்ததை அடுத்து தங்கள் நடவடிக்கையை இரத்து செய்தனர்.

வெட்டுக்களுக்கு பகிரங்கமாகக் குறைகூறினாலும், தொழிற்சங்க அதிகாரிகள் PASOK அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து அரசியல் எதிர்ப்பு வளர்வதைத் தடுக்க முழு நனவுடன் செயல்படுகின்றனர்.

தொழிற்சங்கத் தலைமைகள் பலமுறையும் தங்கள் சிக்கன நடவடிக்கைளை ஏற்றுச் செயல்படுத்தத் தயார் என்று தெளிவாக்கியுள்ளன. ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் எந்த வெட்டுக்கள் செய்யப்பட வேண்டும் என்ற முடிவு எடுப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளில் தாங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். வெட்டுக்கள் நல்ல முறையில் தொகுக்கப்பட வேண்டும், அதையொட்டித்தான் தொழிற்சங்கங்கள் அவை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதிக்கின்றன எனக்கூறி ஆதரவு கொடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றன.

சமீபத்திய வேலைநிறுத்தம் மற்றும் IMF, EU, ECB க்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் கிரேக்கக் கடனைச் சூழ்ந்துள்ள ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு நடுவே வந்துள்ளன. ஒரு கூட்டு EU-IMF மீட்புப் பொதிக்கான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், கிரேக்கக்கடன் பத்திரத்தின் (Bond) மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இலாபம் உயர்ந்துள்ளது. வியாழனன்று 10 ஆண்டு பத்திரங்களுக்கு கிடைக்கும் பணம் 8.83 சதவிகிதம் என்று 1998 க்கு பின்னர் மிக அதிகமாக இருந்தது.

ஊக வணிகர்கள் உந்துதலில் நடந்த மிகச் சமீபத்திய அதிகரிப்பில், ஐரோப்பிய ஒன்றிய-IMF உதவியுடன் கூட கிரேக்க அரசாங்கமானது கிரேக்கப் பொருளாதாரத்தை மறுகட்டமைக்க முடியாது, பொது எதிர்ப்பு பெருகுகையில் அதன் கடன் சுமையை தீர்க்கப் போதுமான குறைப்புக்களை செய்ய முடியாது என்ற அச்சங்கள் தான் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தின் 2009 பற்றாக்குறை பற்றிய அதன் மதிப்பீட்டை வியாழனன்று கிட்டத்தட்ட 1 சதவிகிதப்புள்ளி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.6 சதவிகிதம் என்று உயர்த்தியுள்ளது. இது Moody யின் நாணயத்தர மதிப்பு கொடுக்கும் நிறுவனத்தை கிரேக்கக்கடன் பற்றி 1 படி குறைவாக A2 ல் இருந்து A3 வாகக் குறைக்க வைத்தது. மேலும் இன்னும் குறைப்பிற்கும் வாய்ப்பு உறுதியாக உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

கிரேக்கக் கடன் தாமதத்தின் ஆபத்துக்கள் பற்றி எச்சரித்த IMF அதன் சமீபத்திய உலகப் பொருளாதார பார்வையில் (World Economic Outlook), "மிகச் சமீபத்தில் முக்கியமான இடராபத்து--அது தடுக்கப்படாவிட்டால்--அரசாங்கத்தின் திவால் தன்மை மற்றும் அனைத்து கடன்களையும் தீர்க்கும் திறன் தன்மை பற்றிச் சந்தையின் கவலைகளாக இருக்கும். இது முழு அளவு வெடித்து தொற்றக்கூடிய அரசாங்கக் கடன் நெருக்கடியாக மாறக்கூடும்." என்று அறிவித்துள்ளது.

கிரேக்க பத்திரங்களின் (Bonds) விலை உயர்வு போர்த்துக்கல் பத்திரங்களின் விலை உயர்வின் தீவிர அதிகரிப்பிற்கு இணையாக உள்ளது. இரு நாடுகளிலும் பங்கு சந்தைகள் இந்த வாரம் குறிப்பிடத்தக்க விதத்தில் சரிந்தன. ஐரோப்பாவின் வலுவற்ற பொருளாதாரங்கள் பற்றி உள்ள புதிய உறுதியற்ற தன்மையை ஒட்டி, யூரோவும் இடருக்கு உட்பட்டது--டாலர், பவுண்ட், யென்னிற்கு எதிராகக் குறைந்தது.