சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Greek military mobilised to break truck drivers strike

பார ஊர்தி சாரதிகள் வேலைநிறுத்தத்தை முறியடிக்க கிரேக்க இராணுவம் அணிதிரட்டப்படுகிறது

By Robert Stevens
2 August 2010

Use this version to print | Send feedback

சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் நாடு தழுவிய பார ஊர்தி சாரதிகள் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்த இருக்கும் முடிவானது கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் வர்க்க உறவுகளின் துருவப்படுத்தலின் அப்பட்டமான அடையாளம் ஆகும்.

அரசாங்கம் தற்போதைய பார ஊர்திகளுக்கு உரிமம் வழங்கும் முறையை நீக்க இருக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராகத் திங்களன்று 33,000 பார ஊர்தி சாரதிகள் பணியை நிறுத்தினர். இந்த மாற்றம் பல உரிமையாளர்-இயக்குபவர்களை திவால் நிலைமைக்குத் தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை “மூடப்பட்ட வியாபாரம்” என அழைக்கப்படும் தொழில்களில், பொருட்களை நகர்த்துவது உட்பட, “தாராளமயமாக்கப்பட வேண்டும்” என்ற தொடர்ந்த கோரிக்கைகளின் ஒரு பகுதி ஆகும். இவை ஐரோப்பிய ஒன்றியத்தாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் கிரேக்கத்திற்கு பிணை எடுப்பதற்காக EU-IMF கொடுக்கும் 110 பில்லியன் யூரோக்கள் (142 பில்லியன் டாலர்) பொதிக்கு ஈடாக ஆணையிட்டுச் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதி ஆகும்.

ஞாயிறு பின்னிரவில் பார ஊர்தி சாரதிகள் ஒரு குறுகிய பெரும்பான்மையில் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு வாக்களித்ததாக அறிவிக்கப்பட்டது. பல நாட்களாக அரசாங்கம் மற்றும் அதன் ஆதவாளர்களின் விரோதப் போக்கு நிறைந்த பிரச்சாரத்தையும், எரிபொருட்கள் மற்றும் பிற முக்கிய பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவம் அணிதிரட்டப்படுதல் மற்றும் மறியல் களத்தில் கலகப் பிரிவு பொலிஸ் தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொண்டிருந்தனர். இந்த வேலைநிறுத்தம் கிரேக்கப் பொருளாதாரத்தை முடக்கி, நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறைகளையும் கிரேக்கத் தீவுகளில் உணவுத் தட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியது.

கடந்த வெள்ளியன்று, சாரதிகள் வேலைக்கு திரும்புக அல்லது சிறைத்தண்டனையை எதிர்நோக்குக என்ற அரசாங்கத்தின் உத்தரவை மீறினர். ஆனால் அவர்களுக்கு தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களில் இருந்து எந்தத் தீவிர ஆதரவும் கிடைக்கவில்லை. அவை மற்றத் தொழிலாள வர்க்கத்தை இவர்களுடைய பாதுகாப்பிற்காக அணிதிரட்டவும் ஏதும் செய்யவில்லை. ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கத் தலைமை வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி அதை விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப் பாடுபட்டன. அரசாங்கத்தின் முழுவலிமையையும் பார ஊர்தி சாரதிகளே எதிர்கொள்வதற்கு கைவிட்டது.

ஆறு நாள் நடவடிக்கை பல முக்கிய படிப்பினைகளைக் கொண்டுள்ளது. பெருகும் சமூக அமைதியின்மையை சமாளிக்க ஐரோப்பாவின் அரசியல் உயரடுக்கு மேற்கொள்ளும் தயாரிப்புக்கள் முழுமையாக தொழிலாள வர்க்கத்தால் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

புதனன்று வேலைநிறுத்தம் எரிபொருள் பற்றாக்குறைக்கு வகை செய்தபின், PASOK பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ “பொருளாதார, சமூக வாழ்விற்கு தீவிர தடைகொடுக்கும் வேலை நிறுத்தத்தை முடிப்பதற்கு” ஒரு சிவில் அணிதிரள்வு உத்தரவை வெளியிட்டார்.

இரண்டாம் உலகப் போர் காலத்திற்கு செல்லும் சட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ள இச்சட்டம் கட்டாயமாக பணிகள் செய்ய வேண்டும் என்பதை அனுமதிக்கிறது. இதன் பொருள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பார ஊர்தி சாரதிகள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் அல்லது அவர்களுடைய பார ஊர்திகள் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடும் என்பதுதான்.

போக்குவரத்து மந்திரி டிமிட்ரிஸ் ரெப்பாஸ் விடுத்துள்ள அறிக்கை எப்படி அனைத்து உத்தியோகபூர்வ கட்சிகளும், குறிப்பாக சமூக ஜனநாயகவாதிகள், இப்பொழுது வெளிப்படையாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசாங்க அடக்குமுறையின் கருவியாகச் செயல்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. “அரசாங்கம் ஒன்றும் வலுப்படுத்தப்படாமல் இல்லை, சமுதாயம் ஒன்றும் பாதுகாப்பற்ற தன்மையில் இல்லை” என்றார் ரெப்பாஸ்

BBC க்கு கொடுத்த அறிக்கை ஒன்றில் மால்கம் பிராபன்ட் இந்த ஆணை போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது “இராணுவச் சட்டத்தை” சுமத்தியுள்ளதற்கு சமம் என்று விளக்கினார். “எட்டு மாதமாக நீடித்துள்ள நிதிய நெருக்கடிக் காலத்தில் கிரேக்கத்தை பாதித்துள்ள அனைத்து வேலைநிறுத்தங்களிலும் இதுதான் பொருளாதாரத்தை தாராளமயமாக்குதல், கடும் சிக்கன நடவடிக்களை சுமத்துதல் என்னும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு மிகத் தீவிர அச்சுறுத்தலைக் கொடுத்தது” என்று சேர்த்துக் கொண்டார்.

வாரம் முழுவதும் கலகப் பிரிவுப் பொலிசார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் பார ஊர்தி சாரதிகளுடன் மோதினர். வியாழனன்று பொலிஸ் கண்ணீர்ப் புகை குண்டுகளை ஏதென்ஸில் உள்ள போக்குவரத்து அமைச்சரகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நூற்றுக்கணக்கான பார ஊர்தி சாரதிகள் மீது வீசினர். அதே தினத்தில் கலகப் பிரிவுப் பொலிஸார் தெசலோனிகியில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடனும் மோதினர்.

வெள்ளிக்கிழமை ஆரம்பத்தில், அரசாங்கமானது விமான நிலையங்கள், மின் ஆலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிபொருள் விநியோகங்களை நகர்த்துவதற்கு இராணுவத்தைக் கொண்டு வந்தது. தேவையானால் கடற்படை தரையிறங்கும் தளவாடங்களும் திரட்டப்படும் என்றும் அச்சுறுத்தியது.

வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முக்கிய பங்கைத் தொழிற்சங்கங்கள் கொண்டிருந்தன. சிவில் அணிதிரள்வு உத்தரவு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் அளவில் நிலைமையை வெளிப்படுத்தும் கருத்தைக் கூறும் விதத்தில், பார ஊர்தி சாரதிகள் தொழிற்சங்கத் தலைவர் ஜோர்ஜியாஸ் ஜௌர்ட்ஜாடோஸ் ஆல்டர் தொலைக்காட்சி நிலையத்திடம், “இப்பொழுது நாங்கள் கிரேக்க அரசின் சிப்பாய்கள், எங்களுக்கு என்ன உத்தரவு வருகிறது என்பதைப் பார்ப்போம்.” என்றார்.

எதிர்ப்புக்களை முடிவிற்கு கொண்டுவர அனைத்தையும் தொழிற்சங்க அதிகாரத்துவம் செய்யும் என்பதற்கு இது ஒரு தெளிவான அடையாளம் ஆகும்.

வெள்ளியன்று ஜொர்ட்ஜாடோஸ் வெளிப்படையாக வேலைநிறுத்தம் முடிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். “அவர்கள் [பார ஊர்தி சாரதிகள்] சமூகத்திற்கு தங்கள் செயல்கள் ஏற்படுத்தியுள்ள இடர்களைக் கவனிக்க வேண்டும், கிரேக்கத்தில் தற்பொழுது நிலவும் கடுமையான பொருளாதார நிலைமைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும்” என்று அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார்.

அன்று ANA எனப்படும் ஏதென்ஸ் செய்தி நிறுவனம் ஏதென்ஸில் “புயல் போன்ற கொந்தளிப்பு இருந்த பொதுக்கூட்டம்” பற்றி விளக்கி, ஜொர்ட்ஜாடோஸ் அரசாங்கத்துடன் தான் நடத்திய பேச்சுக்களைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.

நடவடிக்கையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற அதிகாரத்துவத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டும் விதத்தில் ANA தெரிவித்தது, “கூட்டத்தில் மற்ற குரல்கள், குறிப்பாக தாங்கி பார ஊர்தி உரிமையாளர்கள் இன்னும் போராளித்தன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று எழுந்தன. ஆனால் இவை இறுதியில் உறுதியாயின.”

தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தைத் தொடர ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உடன்பாட்டை அடைய முயற்சித்தது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது என்று ANA அடையாளம் காட்டியுள்ளது. “வேலைநிறுத்தத்தை தொடர்வதற்கு ஆதரவான வாக்களிப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேர விவாதத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பினால் அல்ல, கைகளை உயர்த்திக் காட்டுவதின் மூலம்” என்று ANA கூறியுள்ளது.

மற்றொரு தகவலின்படி, இதன் பின் பார ஊர்தி சாரதிகள் பாராளுமன்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, “நம் [தொழிற்சங்க] தலைவர் பைத்தியம்” என்று கோஷமிட்ட வண்ணம் அணிவகுத்துச் சென்றனர்.

சனிக்கிழமை Le Monde பார ஊர்தி சாரதிகள் தொழிற்சங்கத்தில் எரிவாயுப் பிரிவின் தலைவர் ஜியோர்ஜியாஸ் சாமோஸ், “எங்கள் உறுப்பினர்கள் சிறைக்குப் போகவோ, கைதுசெய்யப்படவோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இன்று பிற்பகல் தொடங்கி, எரிவாயு நிலையங்களுக்கு மீண்டும் அளிப்புக்கள் செல்லுதல் தொடங்கும் என்று நினைக்கிறேன்.” என்றார். அதே நேரத்தில் “மிகவும் கோபத்தில் உள்ள தொழிற்சங்க உறுப்பினர்களின் விடையிறுப்பிற்கு தான் பதில் கூற முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.

ஒரு சிறு பெரும்பான்மையினர் ஞாயிறன்று சாரதிகள் வேலைநிறுத்தத்தை முடிக்க வாக்களித்தனர். ஆனால் அராங்கம் சிவில் அணிதிரள்வு உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று கோரினர். ANA தகவல்படி, சாரதிகள், “ஒப்பந்தத்தின் தங்கள் கடமைகளைக் கௌரவப்படுத்த அரசாங்கம் தவறினால் தாங்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தைத் தொடர்வோம் என்று எச்சரித்தனர்.”

தனியார்துறை கிரேக்கப் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்போ (GSEE) அல்லது பொதுத்துறை ஆட்சி ஊழியர்கள் கூட்டமைப்போ (ADEDY) பல மில்லியன் தொழிலாளர்களை பிரதிநிதிப்படுத்துபவை சாரதிகளுக்கு ஆதரவாக ஒரு வேலைநிறுத்தமோ அல்லது எதிர்ப்போ நடத்தவில்லை. GSEE கடந்த பல வாரங்களாக PASOK அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி உடன்பாடு கொண்டுள்ளது. இதன்படி அதன் இரு மில்லியன் உறுப்பினர்கள் மீது ஊதியக் குறைப்புச் சுமத்தப்படும்.

கிரேக்கத்தின் அரசியல் வாழ்வில் இராணுவத் தலையீடு —1967ல் இருந்து 1974 வரை இராணுவக் குழுவினால் ஆளப்பட்ட நாட்டில்— தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இராணுவக் குழுவில் இருந்து தற்பொழுது உயிருடன் இருக்கும் கடைசி அதிகாரி சமீபத்தில், “எங்கள் காலத்தில் கடன் ஏதும் இல்லை. ஒரு ட்ரச்மா கூட வீணாக்கப்படவில்லை. கிரேக்கர்கள், ஜேர்மனியர்கள் மற்றும் பிரிட்டிஷ் போல் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அவர்களுக்கு மேலே அதிகாரம் வேண்டும்.” என்றார்.

PASOK சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகள் பற்றிக் கூறுகையில் அவர், “அரசியல் போக்குகளின் மத்தியிலோ, இறுதியிலோ நாம் இல்லை…. இப்பொழுது தான் தொடங்கி இருக்கிறோம்.” என்று எச்சரித்தார்.

சமீபத்திய மாதங்களில் வெட்டுக்கள் என்ற முறையில் பல பில்லியன் யூரோக்கள் பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி, ருமேனியா போன்ற நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தோற்றுவித்துள்ள சமூக எதிர்ப்பை அடுத்து ஆளும் உயரடுக்கு அடக்குமுறையிலான, அசாதாரண நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது. அது சர்வதேச நிதிய மூலதனத்தின் தேவைகளை சுமத்துவதற்காகத்தான். ஜூன் மாதம் ஸ்பெயின் நாட்டின் சமூக ஜனநாயக PSOE அரசாங்கம் மாட்ரிட்டில் வேலைநிறுத்தம் செய்த மெட்ரோ தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தங்கள் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய தொழிலாளர்களின் முயற்சிகள் இப்பொழுது உடனடியாகவும் நேரடியாகவும் முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் முகவர்கள், தொழிற்சங்கங்கள் உட்பட, ஆகியவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டம் நடத்துவதில்தான் உள்ளது.