சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

US-China tensions over South China Sea

தென்சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம்

By John Chan
4 August 2010

Use this version to print | Send feedback

கடந்த மாதம் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) பாதுகாப்பு சபையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆத்திரமூட்டும் தோரணையில் பேசியுள்ளார். தென் சீனக் கடற்பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை உலகளவில் கவனத்தை தூண்டிவிட்டுள்ளது. சீனாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், கொரியத் தீபகற்பத்தில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்பயிற்சியில் ஈடுபடும் என ஒபாமா நிர்வாகம் அறிவித்துள்ள சில நாட்களின் பின்னர் அவரின் கருத்து வெளிவந்துள்ளது.

வியட்நாமில் ஜூலை 23ந் தேதி நடந்த ஆசியான் மாநாட்டில், சீனா பிராந்திய உரிமை கொண்டாடுவதை கிளிண்டன் நிராகரித்தார். ``தென் சீனக் கடற்பகுதியில் சர்வதேச சட்டத்தை சீனா மதித்தல், அங்கு சுதந்திரமாக கடற்பயணம் நடைபெறுதல், ஆசியாவின் கடற்பிராந்தியத்தை அனைவரும் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து அமெரிக்கா ஒரு தேசிய நலன்களை கொண்டுள்ளது'' என்றார் அவர். ``யாரும் உரிமை கொண்டாடி பயன்படுத்துவதையோ, அச்சுறுத்தலாக விளங்குவதையோ எதிர்க்கிறோம்'' என்று கூறிய கிளிண்டன், தென் சீனக் கடற்பகுதியில் ``பிராந்திய நடத்தை நெறிமுறைகளை'' வகுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இப்பகுதியை ஒரு மூலோபாயரீதியான கூருணர்வுள்ள இடமாக அறிவித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சீனாவின் முயற்சிக்கு கிளிண்டன் கருத்து தடைபோடுவதாக அமையும்.

இராஜாங்க ரீதியில் தனது பேச்சு குழப்பத்தை உருவாக்கும் என்பது கிளிண்டனுக்கு நன்றாகவே தெரியும். தென்சீனக் கடல் பகுதியில் உள்ள ஸ்பிராட்லி-பாரசல் தீவுகளில் யார் உரிமை கொண்டாடுவது என்பதில் வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணே ஆகிய நாடுகளுடன் சீனா பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டுள்ளது. ஆசியான் நாடுகளிடையே பிரிவினையை வளர்க்கவும், பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை தடுக்கவும்தான் ஒபாமா நிர்வாகம் இப்பிரச்சனையை திட்டமிட்டு பயன்படுத்துகிறது. கிளிண்டன் பேச்சை சீனா நிராகரித்துவிட்டாலும், பெரும்பாலான ஆசியான் நாடுகள் வரவேற்றுள்ளன.

தைவான், திபெட், சிங்ஜியான் ஆகியவற்றுடன் சீனக் கடல் பகுதியையும் தனது `அதிமுக்கியத்துவம் வாய்ந்த' ஒன்றாக சீனா கருதுகிறது என பெய்ஜிங் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன். ஈரான் அணுசக்தித் திட்டங்களைச் செயல்படுத்திவருவதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபை கடும் தடை விதிக்க ஆதரவு அளிக்குமாறு கடந்த மார்ச் மாதம் பெய்ஜிங் வந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு சீனாவைக் கேட்டுக் கொண்டது. ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதற்கும், ஒபாமாவின் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அதிபர் ஹூ ஜிண்டாவோ பங்கேற்பதற்கும் சீனாவின் எல்லைப் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்ற கடும் நிபந்தனைகளை சீனா விதித்தது.

ஆசியான் சபையில் கிளிண்டன் நடவடிக்கையும், சீனாவுக்கு வெகு அருகிலேயே தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டதும், சீனாவின் மூலோபாய கூருணர்வுத்தன்மையை அமெரிக்கா கருத்திலெடுக்க்கும் நோக்கமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டில் பேசிய கிளிண்டன், தென்கிழக்கு ஆசியாவிற்கு அமெரிக்கா திரும்பிவந்து விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஈரானுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வலிமை மற்றும் செல்வாக்கை தடுத்து நிறுத்த தனது பழிவாங்கும் போக்கையும், இராணுவ பலத்தையும் அமெரிக்கா வெளிக்காட்டத் தொடங்கிவிட்டது

பொருளாதார ரீதியாக சீனாவைச் சார்ந்தும், அமெரிக்காவுடன் இராணுவ உறவும் கொண்டுள்ள ஆசியான் நாடுகளிடையே குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கில்தான் தென்சீனக் கடல் தொடர்பான கிளிண்டன் பேச்சு அமைந்துள்ளது. இக்கடற் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் சீனா, ஆசியான் நாடுகள் இடையிலான உறவுகளை பலவீனமடையச் செய்துள்ளன. ஆசியான் அமைப்பு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சீனாவுடன் ஒருமித்த கருத்தை எட்டவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கடந்த 2002ல் ஆசியான் அமைப்புடன் சீனா பேச்சு நடத்தியபோது தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளவும், சர்ச்சைக்குரிய பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில், தென் சீனக் கடற் பகுதி பிரச்சனையில் ஆசியான் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதன் மூலம், ஆசியான்-சீனா இடையே பிளவை உண்டாக்கி, இப்பிராந்தியத்தில் நெருங்கிய உறவை ஏற்படுத்த நினைக்கும் சீனாவின் முயற்சிகளுக்கு தடைபோடவே விரும்புகிறது.

இதுதவிர, அமெரிக்கா ஒரு உயர் பொறுப்பற்ற போட்டிமிக்க விளையாட்டை விளையாடுகின்றது. உலகின் மூன்றாவது பெரிய கடல் வர்த்தகம் தென் சீனக் கடல் பகுதியில்தான் நடைபெறுகிறது. இவ்வழியாகத்தான் சீனா, ஜப்பான் ஆகியவை தங்கள் எரிசக்திக்கு தேவையான பொருட்களை கொண்டுசெல்கின்றன. அத்துடன் சீனாவின் 60% வெளிநாட்டு வர்த்தகமும் இவ்வழியாகவே நடைபெற வேண்டியுள்ளது. அருகில் உள்ள மலாக்கா ஜலசந்திக்கு 80%சீனக் கப்பல்கள் செல்கின்றன. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் கப்பல்களில் 80%க்கும் மேற்பட்டவை இவ்வழியாகவே செல்கின்றன. தனது வலிமையான எதிரியாக விளங்கும் சீனாவின் முக்கிய விநியோகங்களை தடுத்து நிறுத்தி ``கடல்நிலைகளை'' கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது சீனாவுக்கும் நன்றாகவே தெரியும்.

தனது முக்கிய கடல்பாதைகளை பாதுகாக்க தனியாக கடற்படையை உருவாக்கும் பணியை தற்போது சீனா தொடங்கியுள்ளது. தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளில் தயாராகும் அணுஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களை தென்சீனக் கடலை ஒட்டியுள்ள ஹைனர் தீவில் சீனா குவித்து வைத்துள்ளது. சீனாவில் கட்டப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கிக் கப்பல் தென்சீனக் கடல்பகுதியில் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்காணிக்கவும், கடல் பகுதியை அளவிடவும் அமெரிக்கா அனுப்பிய `Impeccable' உளவுக் கப்பலுடன் கடந்த மார்ச் மாதம் சீனக் கடற்படை மோதலில் ஈடுபட்டதால், இப்பகுதி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

இக்கடல் பகுதி தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற விவாதம் இச்சம்பவத்திற்குப் பின்னரே எழுந்தது. தனிப்பட்ட பொருளாதார மண்டலம் என்று தான் அறிவித்துள்ள பகுதிகளில் வெளிநாட்டு ராணுவக் கப்பல்கள் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடும் எதிர்ப்பையும் மீறி முக்கியமான இராணுவத் தளத்தை கண்காணிக்க `Impeccable' கப்பலை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆசிய பொது கடற்பகுதியை ``சுதந்திரமாக தங்கள் கப்பல்கள் செல்ல'' ``உரிமை'' உண்டு என்று அமெரிக்கா வாதிடுகிறது. இதே நிலைப்பாட்டை சீனாவும் மேற்கொண்டு, ஹவாய் அல்லது சாண்டியாகோவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் அருகே ``சர்வதேச கடற்பகுதியில்'' சீனா தனது உளவுக் கப்பலை நிறுத்தினால் அமெரிக்க அரசியல், பத்திரிகை ஆளும்பிரிவினர் மத்தியில் கூக்குரலை எழுப்பும்.

தென் சீனக் கடல் பகுதியில் அதிகளவில் அதாவது 35 பில்லியன் டன் அளவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீனா உரிமை கொண்டாடும் ஸ்பார்ட்லி தீவைச் சுற்றி வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா, புருணே ஆகியவை நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகளை தோண்டியுள்ளன. வியட்நாமில் எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்திவரும் எக்சான் மோபில் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் உதவி வழங்குவதற்காகவே, தென்சீனக் கடல்பகுதியை ``சுதந்திரமாக பயன்படுத்த'' அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு சபையில் அமெரிக்க வெளியுறவுத் துறை ... அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் பேசும்போது, அமெரிக்க நிறுவனங்களை சீனா ``மிரட்டுவதாக'' குற்றம் சாட்டினார். 2007ல், தென்சீனக் கடல் பகுதியில் எண்ணெய்க் கிணறுகளை தோண்டக்கூடாது என அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. ``எங்கள் கொள்கை தெளிவானது. ஸ்திரத்தன்மை, சுதந்திரமான கடற்பயணம், தடையற்ற- கட்டுப்பாடு அல்லாத பொருளாதார வளர்ச்சியை தொடர வேண்டும்'' என்று கேட்ஸ் மேலும் கூறினார்.

ஆசியான் சபையில் கிளிண்டன் வலிந்து சண்டைக்கு இழுக்கும் வகையில் பேசியதை வலதுசாரி அமெரிக்க தொழில்வழங்குனர் நிறுவனத்தைச் சேர்ந்த டேனியல் ப்ளமென்தால் வரவேற்றுள்ளார். ``சீனாவை பயமுறுத்தும் வகையில்'' செயல்பட்டு, ஆசியான் நாடுகளின் ``ஒட்டுமொத்த ஆதரவைப்'' பெற்றுள்ளமைக்காக. ஒபாமாவைப் பாராட்டி கடந்த வாரம் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதிய அவர், ``இதன் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் பிரித்தாளும் தந்திரத்திற்கு' முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இராஜதந்திரரீதியிலான முயற்சிகளுடன் அமெரிக்கா இராணுவரீதியாகவும் பலத்தை பிரயோகிக்க வேண்டும் என ப்ளூமென்தால் வலியுறுத்தினார். சீனாவுக்கு எதிராக ஆசியாவில் அமெரிக்கக் கூட்டாளிகள் இணைந்து ஆசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சீனாவைத் தனிமைப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளில் வியட்நாமைத்தான் அமெரிக்கா பெரிதும் நம்பியுள்ளது. 1975ல் அமெரிக்காவை தோற்கடித்த பின் ஸ்ராலினிசத்தை பின்பற்றும் வியட்நாம் ``சோஷலிச'' அல்லது ``கம்யூனிசம்'' ஆகியவற்றில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டது. சீன முதலாளித்துவத்தின் சிறுபகுதியாக உருவெடுக்கத் தொடங்கியது. சர்வதேச நிறுவனங்களுக்கு மலிவான ஊதியத்தில் பணியாளர்கள் கிடைத்தனர். பல பத்தாண்டுகளாக வியட்நாம் மக்கள் கடுமையாக எதிர்த்த அதே ஏகாதிபத்திய சக்தியின் பக்கம் தான் திரும்பியதையிட்டு ஹெனோய் தனது மனக்கிலேசத்தை காட்டவில்லை.

வியட்நாமில் அமெரிக்க இராணுவம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உடனேயே அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், 1972ம் ஆண்டில் சீனாவிடம் அமெரிக்கா நெருங்கி வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 1974ல் வியட்நாம் போர் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது பாரசல் தீவுகளைக் கைப்பற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் அதாவது 1979ல், சீனாவின் கூட்டாளியான கம்போடியாவின் "பொல்போட்டை" கவிழ்த்த வியட்நாம் ஆட்சியை சீர்குலைக்க அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் சீனா போரைத் துவக்கியது. ஸ்ப்ராட்லி தீவை கைப்பற்றுவதில் போட்டி ஏற்பட்டு 1998ல் ஜான்சன் ரீஃப் பற்றிய இராணுவ மோதலாக வெடித்தது. அப்போது சீனா மூன்று வியட்நாம் கப்பல்களை மூழ்கடித்தது.

1980களில் சீனாவில் பொருளாதார எழுச்சி ஏற்பட்டு பெரும் மாற்றத்துக்கு வழிவகுத்தது. சீனாவை எதிர்கொள்ள ஏதுவாக கடந்த 1995ல் வியட்நாமில் அமெரிக்கா உறவை சுமுகமாக்கிக் கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்க கடற்படையினர் "காம் ராண் பே" போன்ற துறைமுகங்களுக்கு வருகின்றனர். பல அமெரிக்க நிறுவனங்கள் வியட்நாமில் முதலீடு செய்துள்ளன. அதே நேரத்தில், சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான ஜப்பானும், ராணுவக் கூட்டாளியான இந்தியாவும் வியட்நாமுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தியுள்ளன.

தென்சீனக் கடல் தொடர்பான கிளிண்டனின் கருத்துக்கு சீனா அளித்துள்ள பதில் இப்பிரச்சனையின் தன்மையை வெளிக்காட்டுகிறது. தென் சீனக் கடல் பிரச்சனையை சர்வதேச விஷயமாக்கி ""சீனாவின் மீது தாக்குதலை'' அமெரிக்கா நடத்தி வருகிறது என சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜிய்சி எழுதியுள்ள கட்டுரையில் குற்றம் சாட்டியுள்ளார். ""இது பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்வதோடு, தீர்வு காண்பது மிகவும் கடினமாகிவிடும்'' என்று அதில் எழுதியுள்ளார். ஆசியான் கூட்டம் முடிந்த உடனேயே தென் சீனக் கடல் பகுதியில் சீனா பிரம்மாண்ட கடற்போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

"சீனா- அமெரிக்க பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்கலாம் என சில தென்கிழக்கு நாடுகள் கருதுகின்றன. ஆனால் பிற பிராந்தியங்களில் நிகழ்வதைப் போல இந்நாடுகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. பொருளாதார ரீதியாக சீனாவை அண்டியும், ராணுவ ரீதியாக சீனாவுக்கு எதிராக பாதுகாக்கப்பட்டும் வருகின்றன'' என சீனாவின் "குளோபல் டைம்ஸ்' ஏடு கடந்த ஜூலை 26ந் தேதி வெளியிட்ட தலையங்கத்தில் ஆசியான் நாடுகளுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளது. "அமெரிக்கா சீனா ஆகியவற்றிற்கிடையில் சமநிலைப்படுத்தும் விளையாட்டில் அதிகளவில் பலன்பெற்று விடலாம் என நினைத்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் காய்நகர்த்துகின்றன. அது ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சீனாவின் நீண்டகால இராணுவத் திட்டத்தைக் குறைத்து மதிப்பிடலாகாது. ஒருவேளை இராணுவ மோதல் வெடிக்கும் பட்சத்தில் அது இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையுமே மோசமாக பாதிக்கும். இருப்பினும் இராணுவ நடவடிக்கைகளுக்காக தனக்கு விருப்பமுள்ள விஷயங்களைப் பாதுகாப்பதில் உரிமையை சீனா விட்டுக்கொடுக்காது'' என்றும் அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆசியான் பாதுகாப்பு சபையில் வெளிப்படையாகப் பேசியதன் மூலம், ஒபாமா நிர்வாகம் மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுப்பி இரு வல்லரசு நாடுகளுக்கு இருந்து வரும் பதற்றமான உறவுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.