சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: August 9-August 15

வரலாற்றில் இந்த வாரம்: ஆகஸ்ட் 9 ஆகஸ்ட் 15

9 August 2010

Use this version to print | Send feedback

வரலாற்றில் இந்த வாரம் என்ற பகுதி, இந்த வாரம் ஆண்டுப் பூர்த்தியடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்னர்: நிகரகுவா எதிர்ப்பாளர்களுக்கு நிதி வழங்க அமெரிக்கா ஈரானுக்கு ஏவுகனைகளை விற்பனை செய்தது

Reagan admin
1986ல் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகளான கஸ்பர் வெயின்பர்கர், ஜோர்ஜ் ஷல்ட்ஸ், எட் மீசே, டொன் ரீகன் ஆகியோருடன் ரீகன் இருக்கின்றார்

1985ல் இந்தவாரம், நிகரகுவாவில் தேசியவாத சன்டினிஸ்டா அரசாங்கத்துக்கு விரோதமான கொன்றா (எதிர்ப்பாளர்கள்) யுத்தத்துக்கு நிதிவழங்குவதன் பேரில், ஈரானுக்கு ஏவுகனைகளை விற்பதற்கு ரீகன் நிர்வாகம் இரகசிய மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடங்கியது.

ஆகஸ்ட் 8 அன்று கூடிய தேசிய பாதுகாப்பு திட்டமிடல் குழு, இஸ்ரேல் ஊடாக ஈரானுக்கு 100 TOW ஏவுகனைகளை விற்பதற்குத் தீர்மானித்ததோடு, கொன்றாக்களுக்கு அமெரிக்கா நிதி வழங்குவதைத் தடுக்கும் பொலான்ட் திருத்தத்தை (Boland Amendment) பகிரங்கமாக மீறி ஆகஸ்ட் 15ல் கொன்றாக்களுக்கு நிதிவழங்குவதை புதுப்பித்தது. இந்த முடிவு ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், அது நிரூபிக்கப்படவில்லை.

வெளியில் ஈரானின் கசப்பான எதிரியாகத் தெரிந்த இஸ்ரேல், இஸ்லாமியக் குடியரசுக்கு ஏவுகனைகளை விநியோகிக்கவிருந்தது. அப்போது சதாம் ஹுசைனின் பாத் அரசாங்கத்தின் கீழ் ஈராக்குடன் இரத்தக்களரி யுத்தத்தின் மத்தியில் இருந்த ஈரான், கடற்படை லெப்டினன்ட் கேனல் ஒலிவர் நோர் தலைமையிலான ஒரு இரகசிய அமைப்புக்கு இஸ்ரேல் ஊடாக பணத்தை அனுப்பியது. இந்த பணம் மத்திய அமெரிக்காவில் கொன்றா இழிந்த யுத்தத்துக்கு நிதி வழங்கப் பயன்பட்டது.

அமெரிக்க ஆளும் வர்க்கம் குற்றவியல் வழிமுறைகளின்பக்கம் திரும்பிய போது இந்த ஈரான்-கொன்றா விவகாரம் ஒரு மைல்கல்லாக விளங்கியது. வோடர்கேட் சம்பவத்தின் பின்னர் ஒரு தசாப்தம் கடந்த உடனேயே, இன்னுமொரு அமெரிக்க ஜனாதிபதி, வெள்ளை மாளிகைக்குள்ளேயே ஜனநாயகத்துக்கு எதிராக ஒரு சூழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இம்முறை அது மத்திய அமெரிக்காவில் எதிர்புரட்சி கொலைப் படைகளுக்கு நிதி வழங்குவதற்காகும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி அனுப்பப்பட்டது

NASA
அனுப்பப்படுவதற்கு முன்னதாக எகோ வன் (Echo One) செய்மதி

ஆகஸ்ட் 12, 1960ல், அமெரிக்க தேசிய வின்வெளி மற்றும் வளிமண்டல நிர்வாகத்தினால் (நாசா) விசேடமாக வான்வெளிக் கோளத்திற்குள் பூகோள தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்துவதற்காக முதலாவது செய்மதி அனுப்பிவைக்கப்பட்டது.

பூமியில் ஒரு இடத்தில் இருந்து பரப்பப்படும் வானொலி சிற்றலை சமிக்ஞைகளை இன்னொன்று பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வானொலி சிற்றலைகளை பிரதிபலிக்கும் செயற்பாட்டு இயந்திரமாக எகோ வன் வடிவமைக்கப்பட்டது. அது கண்டங்களுக்கிடையிலான வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி சமிக்ஞைகளை வெற்றிகரமாக பரவச் செய்தது.

சுமார் 1000 மைல்கள் உயரத்தில் பூமிக்கு தாழ்வான வான்வெளியில், 100 அடி விட்டம் கொண்ட ஒலித்தெறிப்பு உலோக பலூனை பூமியில் இருந்து தெளிவாக காண முடிவதோடு, பல இடங்களில் இரவு வானில் மிகத் தெளிவான உருவங்களை காணலாம். பிரமாண்டமான பிரதேசத்தை ஈர்க்கும் திறனளவினால், சூழல் அடர்த்தியையும் மற்றும் சூரிய அழுத்தத்தையும் பற்றி எகோ வன்னால் தரவுகளை வழங்க முடியும்.

"வான்வெளி போட்டியில்" சோவியத் ஒன்றியத்தை முந்துவதற்கு அமெரிக்கா முயற்சித்துக்கொண்டிருந்தது. இரு நாடுகளும் முன்னைய மூன்று ஆண்டுகளுள் பல செய்மதிகளை அனுப்பியிருந்தாலும், சோவியத் ஒன்றியம் 1957ல் அதன் இரு ஸ்புட்னிக் (Sputnik) செயற்கை கோள்களை அனுப்புவதில் முன்னணி வகித்தது. இராணுவ விரிவாக்கம் மற்றும் தேசிய செல்வாக்கு தொடர்பான அக்கறைகள் இதில் இருந்தாலும், இந்த இரு வான்வெளித் திட்டங்களும், செய்மதி தொலைத்தொடர்பு உட்பட ஒரு தொகை பெரும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தடைகளை கடப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளன.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: ரூஸ்வெல்ட் சமூக பாதுகாப்பு சட்டத்தில் கைச்சாத்திட்டார்

FDR
ரூஸ்வெல்ட் சமூக பாதுகாப்பு சட்டத்தில் கைச்சாத்திடுகிறார்

1935 ஆகஸ்ட் 14 அன்று, ஜனாதிபதி பிராங்க்லின் ரூஸ்வெல்ட் சமூக பாதுகாப்பு சட்டத்தில் கைச்சாத்திட்டார். புதிய உடன்படிக்கையின் (New Deal) சமூக சீர்திருத்த திட்டங்களின் முக்கிய பகுதியான இந்த சட்டம், "அரசு முதியோர் இலாபம்" என்ற முறைமை ஒன்றை ஸ்தாபித்தது. இது அமெரிக்காவில் மில்லியன் கணக்கான சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது.

அறக்கட்டளை அமைப்பு, தனியார் ஓய்வூதியம், பரஸ்பர நன்மை கூட்டமைப்பு போன்ற தேசத்தின் ஒட்டு போடும் வேலைகள், பெரும் பொருளாதாரப் பின்னடைவின் தாக்கத்தின் கீழ் குழம்பிப் போனது. இது 25 வீதத்துக்கும் அதிகமானவர்களின் வேலையின்மைக்கு வழிவகுத்ததோடு ஒரு சராசரி குடும்பத்தின் வருமானத்தை 40 வீதத்தால் குறைத்தது. சிரேஷ்ட பிரஜைகளில் அரைவாசிக்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்ந்த நிலையில், மில்லியன் கணக்கான ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் அழிவை சந்தித்தனர். 1932ல், அமெரிக்க தொழில்படையில் 15 வீதமானவர்கள் மட்டுமே தமது முதலாளிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றனர். 17 மாநிலங்களில் மட்டுமே சிரேஷ்ட பிரஜைகளுக்கு சட்டப்பூர்வமாக ஓய்வூதியம் வழங்குவது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

முன்னர் அற்ப சேமிப்புக்களிலும், குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அல்லது அறக்கட்டளை அமைப்புக்களில் தங்கியிருக்கத் தள்ளப்பட்ட தொழிலாளர்கள், இப்போது 65 வயதை அடையும் வரை அங்கீகரிக்கப்பட்ட அரசு முதியோர் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கினர்.

இன்னமும் இந்த சமூகப் பாதுகாப்பு முறை புதிய உடன்படிக்கை சீர்திருத்தத்தின் வரையறைகளை அம்பலப்படுத்துகின்றது. ஓய்வு பெற்றவர்களுக்கு நிதியளிப்பதற்காக தற்போதைய தொழிலாளர்களின் சம்பள காசோலைகளில் இருந்து ஒரு சம்பள தீர்வை வரி வெட்டியெடுக்கப்படுகிறது. அது அநேகமான விவசாய தொழிலாளர்கள், அரசாங்க ஊழியர்கள், வீட்டு வேலைக்காரர்கள், மேலும் வேலை செய்ய முடியாதவர்கள் உட்பட தொழிலாள வர்கக்த்தின் பரந்த தட்டினருக்கு கிடைக்கவில்லை.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: கொலம்பஸ், ஒஹியோவில் தெரு வண்டி வேலை நிறுத்தம் வன்முறையாக வெடித்தது

Ohio strike
ஒஹியோ வேலை நிறுத்தம்

1910 இந்த வாரம், ஒஹியோ மாநிலத்தின் தலைநகரில் மூன்று மாதம் கடந்திருந்த தெருவண்டி சாரதிகளின் வேலை நிறுத்தமானது, பொது வேலைநிறுத்தத்தின் பண்பை எடுத்தது. தொழிற்சங்க அங்கீகாரம், உயர்ந்த சம்பளம் மற்றும் வேலை விதிகளுக்கான போராட்டம், அமெரிக்காவில் நடைமுறைக்கு எதிராக முன்னெப்போதும் முன்னெடுக்கப்பட்டிருக்காத மிகவும் மூர்க்கமான போராட்டமாகும்.

முழு நகர தொழிலாளர்களும் கம்பனியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் கருங்காலிகளுக்கு எதிராக போராடினார்கள். வீதி மற்றும் மின்சார ரயில்வே ஊழியர்களின் ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பினை ஆதரித்த தொழிலாளர்கள், டசின் கணக்கான தெரு வண்டிகளை உடைத்து, தண்டவாளங்களை தடுத்து, பிடுங்கியெடுத்ததோடு வேலை நிறுத்தத்தை குழப்ப வந்த பெருந்தொகையானவர்களை காயப்படுத்தி, அவர்களை வண்டிகளில் இருந்து இழுத்துச் சென்று தாக்கியதால், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

வன்முறை இரு வழிகளில் நடந்தது. வேலை நிறுத்தத்தை குழப்புவதற்காக இறக்குமதி செய்யப்பட்டவர்களின் எஜமான் ஜோன் பிராடி, வேலை நிறுத்த ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பத்து வயது சிறுமியை கடுமையாக காயப்படுத்திவிட்டார். மற்றும் ஒரு தெரு வண்டி காவலர் வழி தவறி சுட்டதால், தனது வீட்டில் இருந்த ஒரு நடிகையின் தலையில் சுடுபட்டு கடும் காயமடைந்தார்.

வேலை நிறுத்தத்துக்கு கிடைத்த வெகுஜன ஆதரவால் பொலிஸ் தினைக்களம் நகரின் மீதான தனது கட்டுப்பாட்டை இழந்தது. ஆகஸ்ட் 12 அன்று, மேயர் ஜோர்ஜ் மார்ஷல் "வன்முறையாளர்களை" சுடுவதற்கு 300 பொலிசாருக்கு கட்டளையிட்ட போது, படையில் பெரும்பகுதியினர் போராட்டத்துக்கு தமது அனுதாபத்தை அறிவித்ததோடு கட்டளையை சாதாரணமாக மறுத்தனர். பின்னர் அதே தினம், அலுவலர்களில் பெரும்பகுதியினர் மார்ஷலின் கட்டளையை அமுல்படுத்த மறுத்தனர். ஒரு தகவலின் படி, மேயர் "தன் கண்களில் கண்ணீருடன், தன்னுடன் உடன்படுமாறு படையினரை கெஞ்சி வேண்டிக்கொண்டார்," ஆனால் நன்மைக்காக அல்ல. ஒரு சில விசுவாசமான பொலிசருடன் இணைந்துகொள்ளுமாறு 2,000 தொண்டர்களுக்கு மேயர் வேண்டுகோள் விடுத்த போதிலும் "எந்தவொரு பிரதிபலிப்பும் கிடைக்கவில்லை."

அடுத்து வந்த மாதங்களில் சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே ஊழியர்கள், ஆடை தொழிலாளர்கள் பெரும் நடவடிக்கையில் இறங்கிய நிலையில், 1910ல் அமெரிக்காவில் வேலை நிறுத்தங்களின் எண்ணிக்கையும் உக்கிரமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.