சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Half of India’s population lives below the poverty line

இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கிறார்கள்

By Arun Kumar
2 August 2010

Use this version to print | Send feedback

இந்தியாவின் மக்கள் தொகையான 1.1 பில்லியனில் 55 சதவீதம் பேர்- அதாவது 645 மில்லியன் மக்கள் வறுமையிலேயே வாழ்வதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்தியபோது, ஏறத்தாழ உலகின் ஏழை மக்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவில் வசிப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

வறுமை மட்டங்களை மிகவும் துல்லியமாகவும் முழுமையாகாவும் மதிப்பிடுவதற்காக பரந்த அளவிலான பன்முக அளவீடு வறுமைக் குறியீட்டை (Multidimensional Poverty Index -MPI) ஆக்ஸ்போர்டு வறுமை- மனிதவள மேம்பாட்டு முன்முயற்சி திட்டம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் (United Nations Development Program -UNDP) ஆகியவை உருவாக்கியுள்ளன. UNDP யின் ஆண்டு மனிதவள மேம்பாட்டு அறிக்கையை தயாரிக்க கடந்த 1997 முதல் பயன்படுத்தும் மனிதவள வறுமை குறியீட்டுக்கு பதிலாக புதிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

MPI மதிப்பீடு செய்யப்படும்போது வருவாய், சொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அல்லது `இழப்புகள்' கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன. குழந்தை இறப்பு, ஊட்டச்சத்து, தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரம், சமையல் எரிபொருள், மின்சாரம், குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் மற்றும் படிக்கும் ஆண்டுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். ‘‘இவ்வாறு அளவிடப்படும் குறியீடுகளில் 30 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் ஒருவர்தான் ஏழையாக கருதப்படுவார்’’ என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

புதிய குறியீட்டு எண்ணைக் கொண்டு மதிப்பிடும்போது, உலகின் ஏழை மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (844 மில்லியன் அல்லது 51 சதவிகிதம்) தெற்காசியாவிலும், நான்கில் ஒரு பகுதியினர் ஆபிரிக்காவிலும் (458 மில்லியன் அல்லது 28 சதவிகிதம்) உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. ஆபிரிக்காவின் வறுமை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டாலும், பல ஆபிரிக்க நாடுகளைவிட இந்தியாவில்தான் ஏழ்மை அதிகம் என ஆக்ஸ்போர்டு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆபிரிக்காவிலுள்ள 26 ஏழை நாடுகளைவிட பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் வறுமை அதிகம்.

இந்தியாவின் 28 மாநிலங்களின் வறுமை நிலையை இந்த ஆய்வு பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டது. வேறு எந்த மாநிலத்தையும் விட பீகாரில் அதிகபட்சமாக 81 சதவீத மக்கள் பல்வேறு அளவீடுகளிலும் ஏழ்மையானவர்கள். பீகார், ஜார்க்கண்டில் வறுமை மிகவும் அதிகளவில் உள்ளது, MPI குறியீட்டு அளவுகோலின்படி 60 சதவீத எடை அளவின்றி ஏழை மக்கள் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் 21 சதவிகிதம் ஏழை மக்கள் வசிக்கும் மிகப் பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசமாகும். மேற்கு வங்கம் மூன்றாம் வறுமை மாநிலமாக திகழ்கிறது.

கடைசியாகக் குறிப்பிட்ட மாநில புள்ளிவிவரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் கடந்த 1977 முதல் இம்மாநிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- மார்க்சிஸ்ட் (சிபிஎம்) தலைமையிலான இடதுமுன்னணி கூட்டணி அரசாங்கம் தான் ஆட்சி செய்து வருகிறது. `சோசலிசம்`, அல்லது `மார்க்சிசம்’ என்றிருப்பதற்கு மாறாக, வெளிப்படையாக முதலாளித்துவக் கட்சிகளால் பிற மாநிலங்களிலும், தேசிய அளவிலும் செயல்படுத்தப்படும் சந்தைக்கு ஆதரவான பொருளாதார சீரமைப்புகளை அமலாக்கம் செய்வதற்கு சி.பி.எம். கட்சியும் பொறுப்பாகும். இதன் விளைவாக பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் பின்தங்கியதுடன், ஏழை-பணக்காரன் இடையேயான வித்தியாசமும் அதிகரித்தது.

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடி மக்களிடையேதான் வறுமை தாண்டவமாடுவதாக ஆக்ஸ்போர்டு பல்கலை கழக ஆய்வு மேலும் வெளிப்படுத்தியுள்ளது. பழங்குடி மக்கள் என்றழைக்கப்படுவோரில் 81.4 சதவிகிதம் பேர் ஏழைகளாவர். ``குறியீட்டு அளவுகோலின்படி 59.2 சதவிகிதம் பின்தங்கியிருந்தாலும், வறுமையின் அடர்த்தி பழங்குடி மக்களிடையே அதிகம் காணப்படுகிறது'' என அந்த ஆய்வு கூறுகிறது. MPI குறியீட்டெண் தாழ்த்தப்பட்டோரிடம் 65.8 சதவிகிதமாகவும், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே (ஓபிசி) 58.3 சதவிகிதமாகவும் உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் கூறிக்கொள்ளும் ``உள்ளடக்கிய’’ பொருளாதார வளர்ச்சியை இப்புள்ளி விவரங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அழிவில் பெருவர்த்தகத்தினரின் லாபத்தையும் மற்றும் ஒரு சிறிய தட்டினர் சொத்துக்களை குவிக்கவும் அடுத்தடுத்து வந்த காங்கிரஸ், இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்களின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

பரந்த அளவிலான காரணிகளை நோக்கினால், இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையோருக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பது தொடர்வதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. தேசிய மற்றும் மாநில அளவிலான அரசாங்கங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உதவிகளைக்கூட செய்து கொடுக்கத் தவறிவிட்டன. மேலும், தற்போது இருந்துவரும் பொதுமக்கள் சேவைகளும் கூட தனியார்மயமாக்கல், மறுசீரமைப்பு கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

2008 கணக்கின்படி மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் 31 சதவிகிதம் இந்திய மக்களை மட்டுமே சென்றடைந்துள்ளது. உடல்நலப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறையால் இந்தியாவில் உள்ள 61 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதாகவும், இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் யுனிசெப்-இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வாறு குழந்தைகள் மோசமான உடல்நலப் பாதிப்புக்குள்ளாவதற்கு சத்துள்ள உணவு கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும், தாய்மார்கள் பிரசவத்தின்போது இரத்தசோகை, ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றால் பாதிக்கப்படுவது முக்கிய காரணம் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

உணவுப் பொருட்களின் விலைவாசி, 2008-இலிருந்து சராசரியாக 83 சதவிகிதம் அதிகரித்தது உள்பட நாட்டின் ஏழை மக்களுக்கு அழிவுகரமானதாக இருந்து வருகிறது. இந்திய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த எரிபொருள் விலை உயர்வு அவர்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் - அதாவது மக்கள் தொகையில் 35 சதவிகிதத்தினர் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், உடல்திறன் தேவைக்கு 80 சதவிகிதம் குறைவாக உண்பதாகவும் ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (UNWFP) சமீபத்தில் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் 1.5 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையாலும், 5 வயதுக்குட்பட்ட 43 சதவிகிதத்தினர் எடைக்குறைவாலும் பாதிப்படைந்துள்ளதாக யு.என்.டபிள்யூ.எப்.பி. அறிக்கை சமீபத்தில் தெரிவித்துள்ளது. 11 மாநிலங்களில் 80 சதவிகிதம் குழந்தைகள் இரத்தசோகையுடன் இருப்பதுடன், இரத்தசோகை குழந்தைகள் விகிதம் 6 சதவிகிதம் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

நாளொன்றுக்கு ஒரு வீட்டின் வருவாய் 2 அமெரிக்க டாலர்கள் என கணக்கிலெடுத்துக் கொண்டால் சகாரா பகுதியிலுள்ள ஆபிரிக்க நாடுகளைவிட அதிக ஏழை மக்கள் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதோடு அதிகமட்டத்திலும் உள்ளனர் என இன்னொரு ஆய்வு கூறுகிறது. சகாரா பகுதியில் உள்ள ஆபிரிக்க நாடுகளில் 72.5 சதவீதம் அல்லது 551 மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் 75.6 சதவிகிதத்தினரோ அல்லது 828 மில்லியன் மக்களோ வறுமைக் கோட்டின் கீழே உள்ளனர்.

அளவு கோலின் மற்றொரு புறத்தில், இந்தியாவின் சில பணக்காரர்களோ மேலும் மேலும் சொத்துக்களைக் குவித்துள்ளனர். பூகோள அளவிலான நிதிச் சிக்கலின் தாக்கம் ஏற்பட்டபோது, போர்ப்ஸ் பணக்காரர்கள் அட்டவணையில் இந்தியாவிலுள்ள அமெரிக்க டாலர் கோடீஸ்வரர்கள் முந்தைய ஆண்டு 24 பேராக வீழ்ந்து 2010ல் 49 பேராக மீண்டும் அதிகரித்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2008ல் மிக உயர்வாக பதிவாக செய்யப்பட்ட 53-ஐ விட சற்றே குறைவாகும்

அந்த வருடம் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டதாவது; ‘’அமெரிக்க வணிக ஏடான போர்ப்ஸ் கணக்கின்படி 340.9 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு இந்திய கோடீஸ்வரர்கள் சொத்துக்களைக் குவித்துள்ளனர்- இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமாராக 31 விழுக்காடாகும். பொருளாதார ரீதியாக அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர்களைவிட மூன்றுமடங்கும், சீனாவில் இருப்பவர்களைவிட பத்துமடங்கு இந்தியக் கோடீஸ்வரர்கள் வலிமையானவர்கள். ஒட்டுமொத்த உற்பத்தியில் பூகோள சராசரியைவிட நான்கு மடங்கு இந்தியக் கோடீஸ்வரர்களின் பங்கு அதிகமாகும்.’’

இந்த ஆண்டும் இதே நிலைமை நீடிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நடத்த திண்டாடிக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலான இந்தியர்களின் கற்பனைக்கெட்டாத சொத்து மதிப்புடன் 49 தனிநபர்கள் முன்னணி வகிக்கின்றனர். இந்திய நிதி தலைநகரமான மும்பையில் வசிக்கும் மக்கள் தொகையில் பாதிப்பேர் அதாவது 6 மில்லியன் ஏழை மக்கள் சேரிகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மும்பையில் வானளாவ உயர்ந்த கட்டடங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் சின்னமாக விளங்குகின்றன அவை தற்காலிக குடிசைகளுக்கு பக்கத்தில் இருக்கின்றன.

உலக முழுவதுமுள்ள அவர்களது சக தொழிலதிபர்களைப் போலவே, இந்தியாவில் உள்ளவர்களும் தங்கள் தனிப்பட்ட முன்முயற்சி, திறமை, செயல்பாடு ஆகியவற்றால் சமுதாயத்தில் உயர்நிலையை எட்டியதாக நியாயப்படுத்துகின்றனர். உண்மை என்னவெனில், நாட்டில் பெருமளவில் கிடைக்கும் மலிவான உழைப்பு, மீதமுள்ள மக்களின் வறுமை ஆகியவற்றை சுரண்டுவதன் விளைவாகத் தான் அவர்களுக்கு செல்வம் கொழித்தது. இந்த மோசமடைந்து வரும் சமூகப் பிளவு தவிர்க்க முடியாதபடி ஒரு கிளர்ச்சியை லாப முறையினால் உருவாக்கப்படும் திகைக்க வைக்கும் நிலைமைகள் மற்றும் அதனை ஆதரித்து பயனடையும் ஆளும் மேல்த்தட்டினருக்கு எதிராக தோற்றுவிக்கும்.