சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

SEP 2010 Australian election campaign wins powerful response

சோசலிச சமத்துவக் கட்சியின் 2010 ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் சக்திவாய்ந்த விடையிறுப்பைப் பெறுகிறது

By Linda Levin
24 August 2010

Use this version to print | Send feedback

2010 ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) முன்வைத்த சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டம் நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கணிசமான தட்டினரிடையே சக்திவாய்ந்த விடையிறுப்பால் வெற்றியடைந்துள்ளது. மின்னஞ்சல்கள், விசாரிப்புக்கள், ஆதரவு வெளிப்பாடுகள் மற்றும் கட்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் என்று நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா என SEP வேட்பாளர்களை நிறுத்தியிருந்த மூன்று மாநிலங்களில் மட்டும் அல்லாமல் ஏனைய மாநிலங்களில் இருந்தும் வந்து கொண்டிருக்கின்றன.

இத்தேர்தல் முன்னோடியில்லாத வகையில் முக்கிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற முறை முழுவதும் மீதே கூட பெரும் இகழ்வுணர்வை வெளிப்படுத்தியுள்ளது. பிரச்சாரம் முழுவதும் தொழிலாளர்கள் கெவின் ருட்டிற்கு எதிரான தொழிற் கட்சியின் சதி குறித்தும் ஆப்கானிய போருக்கு அவர்களின் எதிர்ப்பையும் அதிர்ச்சியையும் கடும் சீற்றத்தையும் SEP வேட்பாளர்களுடன் பகிர்ந்து தமது உணர்வை வெளிப்படுத்திக் காட்டினர். கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடு என்று இரு முக்கிய கட்சிகளும் சுகாதாரம், கல்வி, சிறார் மற்றும் முதியோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாற்றம் இவை தங்களுடைய தேவைகள், நலன்கள் மற்றும் அக்கறைகளுடன் பொருந்தாதுள்ள நிலை பற்றியும் பேசினர். இவ்விதத்தில் நன்கு உணரக்கூடிய மக்களின் முழு நனவின் மாற்றம் SEP போட்டியிட்டிருந்த 10 பிரதிநிதிகள் தொகுதிகள் மற்றும் நாம் போட்டியிட்ட நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா செனட் தொகுதிகளிலும் வெளிப்பாட்டைக் கண்டன.

2007 தேர்தலில் SEP பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் SEP யின் 2010 முடிவுகள் கணிசமான ஆதரவைப் பிரதிபலிக்கின்றன —ஹோவர்ட் அரசாங்கத்தின் 11 ஆண்டுகள் கன்சர்வேடிவ் கூட்டணி ஆட்சியை ருட்டின் தொழிற் கட்சி தோற்கடித்து, தொழிற் கட்சி “குறைந்த தீமையாக” லிபரலை விட இருக்கும் என்ற பரந்த நம்பிக்கை அப்பொழுது இருந்தது. இதுவரை எண்ணப்பட்டுள்ள 75 சதவிகிதமான வாக்குகள் என்றுள்ள நிலையில் SEP பெற்றுள்ள 10 பிரதிநிதிகள் மன்றத் தொகுதிகள் வாக்குகள் அது 2007ல் 9 தொகுதிகளில் பெற்ற 3,451 உடன் ஒப்பிடுகையில் 8,907 என்று உள்ளன. இதேபோல் பாராளுமன்றத்தின் மேல் பிரிவான செனட்டில் கட்சி நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் பெற்ற மொத்த வாக்குகள் 9,594 ஆகும்; 2007ல் இது 3,231 ஆக இருந்தது.

தொழிற் கட்சிக்கு எதிரான மாற்றம் அதிகம் இருந்த சிட்னியின் தொழிலாள வர்க்க மேற்கு புறநகரங்களில், மைக் ஹெட் பௌலரில் 2,148 வாக்குகள் அல்லது 3.34 சதவிகித வாக்குகளைப் பெற்றார்; ரிச்சர்ட் பிலிப்ஸ் ப்ளாக்ஸலாந்தில் 1,647 அல்லது 2.66 சதவிகித வாக்குகளைப் பெற்றார்; கிறைஸ் கோர்டன் பர்ரமட்டாவில் 1.43 அல்லது 923 வாக்குகளைப் பெற்றார். இந்த மூன்று இடங்களிலும் SEP வேட்பாளர்கள் வாக்குச் சீட்டில் முதலில் இருந்தனர், ஓரளவிற்கு “கழை வாக்குகளில்” இருந்து (வாக்காளர்கள் வேட்பாளர்கள் எண்ணை மேலிருந்து கீழ்வரை குறிப்பர்), பயனுற்றனர். ஆனால் இத்தொகுதிகளில் முறைசாரா வாக்குகளைப் பதிவு செய்ய விரும்பிய பெரும்பாலான வாக்காளர்கள் வெற்று வாக்குச் சீட்டைக் கொடுத்தனர்; அல்லது முக்கிய கட்சிகளுக்கு இகழ்வுரைகளை எழுதிய வாக்குகளைக் கொடுத்தனர்.

பல குடியேறியவர்களும், அகதிகளும் உள்ள தொழிலாள வர்க்கத் தொகுதியான ரெய்டில் முதல் தடவையாக நின்ற SEP வேட்பாளரும் பல்கலைக்கழக கணக்கு விரிவுரையாளருமான கரோலின் கென்னட் வாக்குச் சீட்டில் கடைசி வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர் 719 வாக்குகள் அல்லது 1.07 சதவிகித வாக்கைப் பெற்றார். சிட்னியின் உள் மேற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் பேட்டி காணப்பட்டு, தொழிற் கட்சி, பசுமைவாதிகள் மற்றய சிறு கட்சிகள் பங்கு பெற்றியதும் நிறையப் பேர் கலந்துகொண்ட கூட்ட விவாதத்தில் தோன்றிய ஜேம்ஸ் கோகன் 842 வாக்குகளை அதாவது 1.22 சதவிகிதம் பெற்றார்; 22 வயது பல்கலைக்கழக மாணவர் ஜாக் ஹாம்பைட்ஸ் கிங்ஸ்போர்ட்-ஸ்மித்தில் 478 வாக்குகள் பெற்றார். அதிக தொழிலாளர் வர்க்க மக்கள் உள்ள நியூ காசிலில், 2007லும் இவர் அங்கு நின்றிருந்தார், ஓய்வுபெற்ற டெல்ஸ்ட்ரா தொழிலாளி நோயல் ஹோல்ட் 2007ல் அவர் பெற்ற 269 உடன் ஒப்பிடுகையில் 545 வாக்குளைப் பெற்றார்.

வடக்கு மெல்போர்ன் தொழிலாள வர்க்கத் தொகுதியான கால்வெல்லில், பிறவற்றுடன் ப்ராட்மெடோஸ் மற்றும் கிரைகிபர்ன் புறநகரங்களை உள்ளடக்கியது, நாட்டில் எஞ்சியுள்ள ஒரு சில கார் ஆலைகளில் ஒன்றைக் கொண்டது, கட்டிடக் கலைஞர் பீட்டர் பைம் 926 வாக்குகளைப் பெற்றார்—இது 2007ல் SEP பெற்தை விட அதிகமான 211 வாக்குகள் ஆகும். கார் உதிரிபாகங்கள் தயாரிப்புத் தொழிலாளர்கள் SEP கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தனர்; அவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை வினியோகித்து, தேர்தல் தினத்தன்றும் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்திருந்தனர்.

மெல்போர்ன் மேற்கில் SEP யின் கெல்லிபிராண்டின் வேட்பாளர் டானியா பாப்டிஸ்ட் 369 வாக்குகளைப் பெற்றார். பல தசாப்தங்களில் முதல்தடவையாக கட்சி இத்தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருந்தது.

செனட்டில் SEP தேசிய செயலாளரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான நிக் பீம்ஸ் UNSW பட்டப்படிப்பு மாணவர் காப்ரியலா ஜாபலாவுடன் SEP யின் NSW தொகுதியில் இணைந்து நின்று 2,708 வாக்குகள் பெற்றார்; 2007ல் SEP இத்தொகுதியில் 1,677 வாக்குகளைப் பெற்றிருந்தது. விக்டோரியாவில் SEP யின் செனட் வேட்பாளர்கள் பாட்ரிக் ஓ’கானரும், கியோ வாங்விக்சேயும் 2007ல் பெறப்பட்ட 1,554 உடன் ஒப்பிடுகையில் 6,886 வாக்குகளைப் பெற்றனர். விக்டோரியா செனட் வாக்கு ஓரளவிற்கு SEP முதல் குழு என்று வாக்குச் சீட்டில் பட்டியலிடப்பட்டாதல் (29 பேர் இருந்தனர்) ஏற்றம் பெற்றது. ஆனால் முக்கிய வானொலி நிகழ்வில் பேட்டி காணப்பட்ட ஒரே SEP வேட்பாளர் ஓ’கானர் என்ற உண்மையையும் இது பிரதிபலித்தது.

முந்தைய தேர்தல்களைப் போலவே, பெருநிறுவனச் செய்தி ஊடகம் முழுவதும்—அன்றாட நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி—SEP பிரச்சாரத்தை முழுமையாக இருட்டடிப்புச் செய்தது. பல பேச்சு நிகழ்வுகளில், வேட்பாளர் குறிப்புக்களில், பேட்டிகளில் மற்ற முக்கிய, சிறு கட்சிகள் உறுப்பினர்கள் போல் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால், அதையொட்டி எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் இளைஞர்களுக்கு இதன் சுயாதீன, புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் பற்றி அறிந்திருக்க முடியும், இது பெற்ற வாக்குகள் ஐயத்திற்கு இடமின்றி உயர்ந்திருக்கும். ஆனால் அது நிகழக் கூடாது என்பதுதான் துல்லியமாக இருட்டடிப்பிற்குக் காரணமாகும்.

ஐந்து வாரப் பிரச்சாரத்தின் போது, நூற்றுக்கணக்கான SEP உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட கால் மில்லியன் SEP தேர்தல் பிரகடனத்தை 10 தொகுதிகள் மற்றும் வியாபார மையங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் ஆலைகளில் வழங்கினர். SEP வேட்பாளர்களுக்கு வாக்களித்திருந்த பல தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்கள் தொழிலாள வர்க்கம் ஒரு புதிய சர்வதேச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டிருந்த SEP தேர்தல் அறிக்கையைப் படித்திருந்தனர். அதில், இதற்கு முழு நனவுடன் தேசிய அரசியல் நடத்தும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலாளித்துவ முறையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட தொழிலாள வர்க்க புதிய சுயாதீன அரசியல் இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும், உலகெங்கிலும் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும் என்றும் பகுத்தறிவார்ந்த, திட்டமிடப்பட்ட உலகப் பொருளாதாரம் தேவை என்றும் விளக்கப்பட்டிருந்தது.

SEP ஆனது விருப்பு வாக்கு மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடாது என்பதையும் கட்சி அறிக்கை தெளிவுபடுத்தியிருந்தது; அதேபோல் தேர்தல் பேரம் பேசுதல் மேல் பிரிவிலோ, கீழ்பிரிவிலோ கூடாது என்றும் கூறியிருந்தது; பொதுவாக போலி இடதுகள், பசுமைவாதிகள் உட்பட ஒவ்வொரு அரசியல் போக்கும் ஈடுபடும் செயல்தன்மை ஆகும்.

2010ல் SEP யின் வாக்கு முக்கியம் என்றாலும், கட்சிப் பிரச்சாரத்தின் முக்கிய கவனக் குவிப்பு நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்களின் மிகப் பரந்த தட்டுக்களுக்கு அதன் ஆய்வுகள், வேலைத்திட்டம் மற்றும் கருத்துக்களை அளிப்பது என்று இருந்தது. இதையொட்டி அவர்கள் வரவிருக்கும் அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புக்களுக்கு தயாராக முடியும். WSWS மற்றும் SEP தேர்தல் வலைத் தளத்தில் 70 கட்டுரைகளுக்கும் மேலாகப் பிரசுரிக்கப்பட்டன; இவை 2010 தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு முக்கியக் கூறுபாடு பற்றியும் மதிப்பீடு கொடுத்து, SEP வேட்பாளர்களின் அரசியல் தலையீடு பற்றியும் விளக்கின. பிரச்சார முடிவில் SEP வலைத் தளம் நாளொன்றுக்கு 2,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது. இது 2007 எண்ணிக்கையைப் போல் இருமடங்கு ஆகும்.

பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் வகையில், நூற்றுக்கணக்கான மக்கள் SEP யின் பொதுக்கூட்டங்களுக்கு கட்சி போட்டியிட்ட10 தொகுதிகளிலும்—பல இடங்களில் முதல் தடவையாக—வந்திருந்தனர். இதுவரை கட்சியின் தேர்தல் நிதியாக இருந்த $40,000 இல் $32,000 நிதி வசூலிக்கப்பட்டது; பலர் கட்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். SEP வலைத் தளத்தின் மூலம் விண்ணப்பம் கொடுத்திருந்த ஒரு வாக்காளர் மற்றவர்களுடைய கருத்தையும் பிரதிபலிக்கும் வகையில் எழுதினார்: “கெவின் ருட் வீழ்த்தப்பட்டபின், உலகை முதலாளித்துவம் அழித்துவரும் கொடூரமான வழிக்கு எங்கேனும் மாற்றீடு கிடைக்குமா எனப் பலவிதங்களிலும் தேடினேன். உங்கள் வலைத் தளத்தைப் படித்த பின்னர் தான், நான் அதில் படித்தது அனைத்துடனும் உடன்பட்டேன். நான் சேர விரும்புகிறேன்.”