சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Back to Vichy

விஷி காலத்திற்கு மீண்டும் திருப்பல்

Alex Lantier
25 August 2010

Use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி செயல்படுத்தும் குடியேறுபவர்கள்-விரோத மற்றும் சட்டம்-ஒழுங்கு பற்றிய நடவடிக்கைகளில் பாசிசத்தின் ஒருவகை துர்நாற்றம்தான் வெளிப்பட்டுள்ளது. 1930கள், 1940 களில் கைவிடப்பட்டுவிட்டன என்று மக்கள் நம்பிய கொள்கைகளும், வழிவகைகளும் ஐரோப்பிய முதலாளித்துவத்தால் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொள்ளவதற்காகப் புதுப்பிக்கப்படுகின்றன.

நாஜிக்களால் முன்பு இலக்கு வைக்கப்பட்ட ரோமா மக்களை ஏராளமாக நாட்டை விட்டு வெளியேற்றி வருவதைவிடத் தெளிவான உதாரணம் இதற்கு ஏதும் இல்லை. நாஜிக்களும் அவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் 250,000ல் இருந்து 500,000 ரோமாக்கள் வரை கொன்றனர். பிரெஞ்சு ஒத்துழைப்பாளரான Vichy அதிகாரிகள் ரோமா சமூகங்கள் மீது திடீர் சோதனை நடத்தி அங்கே வாழ்பவர்களை ஓர்லீயன்ஸிற்கு அருகே இருந்த Jargeau போன்ற ஒருமுகப்படுத்தப்பட்ட சித்திரவதை முகாம்களில் வைத்திருந்தனர்.

ஐரோப்பிய அரசாங்கங்கள் யூத எதிர்ப்பிற்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் மக்கள் ஹோலோகோஸ்ட் (யூதப் படுகொலை) குறித்து அறிந்துள்ளதுதான். ஆனால் அவை ரோமா-எதிர்ப்பு வெறுப்பிற்கு ஊக்கம் கொடுத்துச் சுரண்டுகின்றன.

நாசிசத்தின் சட்ட களஞ்சியத்திலிருந்து நேரடியாக இரவல் வாங்கப்பட்டது கூட சார்கோசியால் மற்றய நடவடிக்கைகளாக பிரேரிக்கப்பட்டுள்ளது. பர்க்கா மீதான தடை நடவடிக்கை, குடியுரிமை அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் யாராவது பொலிசுடன் மோதலில் ஈடுபட்டால் அவருடைய பிரெஞ்சு குடியுரிமை அரசாங்கத்தால் பறிக்கப்படுதல். நீதி முறையினால் அவர்களின் மேல் தடைக்குட்பட்டிருக்கும் விடயங்களை அவர்களுடைய குழந்தைகள் மீறினால் இளம் குற்றவாளிகளின் பெற்றோர்களும் சிறைக் காலத்தை அனுபவிக்க வேண்டுமென்று பயமுறுத்தப்படுகிறார்கள்.

கொலைக் குற்றம் இல்லாத பிறவற்றிற்கு குடிமக்களின் தேசியக் குடியுரிமையை பிரான்ஸ் கடைசியாக அகற்றியது விஷி ஆட்சியின்போதுதான். அப்பொழுது அது 7,000 யூதர்களின் குடியுரிமைகளை அகற்றியது. குடும்ப உறுப்பினர்களின் செயல்களுக்கு குடும்பங்கள் தான் குற்றம் சார்ந்த வகையில் பொறுப்பு என்று கூறியது, அப்படிக் கூறியது நாஜிக்களின் Slippenhaft கொள்கை, மூன்றாம் ரைய்ஹ் சரிவிற்குப் பின்னர் காட்டுமிராண்டித்தனமானது என்று கண்டிக்கப்பட்டுள்ளது.

ரோமா மக்கள் மற்றும் பர்க்கா அணியும் பெண்கள் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு முதல் இலக்காக இருக்கும்போது, அதன் இறுதி இலக்கு சிக்கன நடவடிக்கை போர் இவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முழுத் தொழிலாளர் வர்க்கமும் தான்.

நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கான அரசாங்கம் பொருளாதாரத்தை சூறையாடியுள்ளது. வங்கிகளுக்கு 360 பில்லியன் யூரோக்களைப் பிணை எடுப்பிற்கு கொடுக்க ஈடுபட்ட பின்னர், வரி ஏய்ப்பவர்களான லிலியான் பெத்தென்கூர் போன்ற பில்லியனர்களிடம் இருந்து தேர்தல் பிரச்சார நன்கொடைகளைப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், சார்க்கோசி ஓய்வூதிய, வரவு-செலவுத் திட்டக் குறைப்பு நடவடிக்கைகளையும் தொடர்கிறார். செய்தி ஊடகமும், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் பரந்த போர்கள் வரக்கூடிய நிலையில் பிரான்ஸ் அதன் இராணுவச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

சார்க்கோசியின் நடவடிக்கைகள், இக்கொள்கைகளுக்கான சமூக எதிர்ப்பை வன்முறையான அடக்குமுறை மூலம் கையாள்வதற்கான தயாரிப்புக்கள்தான். இது முழு அரசியல் ஸ்தாபனத்தினாலும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ “இடதின்” குறைகூறல்கள் பெரும்பாலும் வலதில் இருந்துதான் உள்ளது. சோசலிஸ்ட் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் சார்க்கோசியையும் விட திறமையான நிர்வாகிகள் என்று காட்டிக் கொள்கின்றன.

சார்க்கோசி திட்டமிட்டுள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகள் அவர் வறிய புறநகர்ப்பகுதிகளில் உள்ள இளைஞர்களுடன் மோதலை எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் குடியேறிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள். ஏராளமானவர்களை சிறையில் அடைத்தல், நாட்டை விட்டு வெளியேற்றுவது ஆகிய செயற்பாடுகளை முன்வைக்க அரசாங்கம் தயாரிப்பு நடத்துகிறது. அத்தகைய கலகங்கள் 2005ல் நடந்தபோது, அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் ஒரு மூன்று மாத கால அரச அவசரகால நிலையை அமூல்படுத்தினார். உள்நாட்டு மந்திரி என்னும் முறையில் சார்க்கோசி கலகங்களில் பங்கு பெற்ற வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

உலகெங்கிலும் நிலைமை பரந்த அளவில் இதேபோன்றுதான் உள்ளது. ஐரோப்பிய அரசாங்கங்கள் பரந்த அளவில் முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வைத் தூண்டியுள்ளன. பல நேரமும் இது பெண்கள் உரிமைகளைக் காத்தல் என்ற மறைப்பில் வெளிப்படுகிறது. தேசிய பர்க்கா தடைகளானது பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மற்றும் ஸ்பெயினில் உள்ளூர் அதிகாரத்தினால் இயற்றப்பட்டுவிட்டன, அல்லது தயாரிப்பில் உள்ளன. பிரான்சில் தற்போதைய வலதுசாரிப் பிரச்சாரத்திற்கு வழிவகுத்த இத்தகைய நடவடிக்கைகளின் தொலைநோக்குடைய பிற்போக்குத்தன உட்குறிப்புக்கள் இப்பொழுது மீண்டும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ரோமா மக்களை நாடுகடத்தும் இத்தாலியிலும், உள்துறை மந்திரி ரோபர்டோ மரோனி சார்க்கோசியின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்களை வெளியேற்றும் திட்டத்தை வலியுறுத்திப் பேசினார். இக்கொள்கை முன்பு ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission) ஏற்கப்படவில்லை. ஆனால் இப்பொழுது ஐரோப்பிய ஆணையம் சார்க்கோசியின் தீவிர வலதுசாரி நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கிறது. ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ நியூமன் ஆணையம் பிரெஞ்சு அரசாங்கம் ரோமா மக்களை பெருமளவு வெளியேற்றுவது “வெகுஜன வெளியேற்றம்” என்னும் அளவுகோலிற்குள் உட்படுத்தவில்லை என்று கருதுவதாகக் கூறினார்.

அமெரிக்காவில் தான் ஒரு “சட்டவிரோத” குடியேறியிருப்பவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்களைக் காட்டாத எவரையும் பொலிஸ் கைது செய்வதற்கு அரிஜோனா மாநிலச் சட்டம் பற்றி நீதிமன்ற வழக்கு ஒன்று நடக்கிறது. சட்டபூர்வ குடியேறியிருப்போர் உட்பட, ஏராளமானவர்களை வெளியேற்ற வகை செய்யும் இச்சட்டம், பல தசாப்தங்களாக சோவினிசம், வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு ஆகியவற்றைத் தூண்டியுள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருக்கும் சக்திகளுடைய செயல்களின் விளைவு ஆகும்.

இப்பொழுது 9/11 தாக்குதல்களின் போது உலக வர்த்தக மையக் கட்டிடங்களின் அருகே இருந்து அழிக்கப்பட்ட இஸ்லாமியச் சமூக மையத்தை கட்டமைக்கும் திட்டம் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பாசிசப் பிரச்சாரம் போல் ஆகிவிட்டது.

பொலிஸ்-அரச ஆட்சியின் பால் முதலாளித்துவம் நகரும் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கை ஆகும். ஜனநாயக உரிமைகள், பாதுகாப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரப் பாதுகாப்புக்கள், தொழிலாளர் அதிகாரங்கள் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக திரட்டுவதின் மூலம்தான் இயலும்.

இவ்விதத்தில் பிரான்சின் 2002 ஜனாதிபதித் தேர்தல்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலையீடு முக்கியமான அனுபவம் ஆகும். ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவிற்கு ஏற்ப தன்னுடைய கொள்கைகளை தகவமைத்துக் கொண்டிருந்த பப்லோவாத Ligue Communiste Revolutionnaire (LCR) போலன்றி, ICFI தன் நிலைப்பாடு முற்றிலும் உறுதிபடுத்தப்பட்டதைத்தான் கண்டுள்ளது

பிரான்சின் 2002 தேர்தல் சிராக்கிற்கும் நவ பாசிச முன்னணித் தேசிய வேட்பாளர் Jean Marie Le Pen க்கும் இடையே ஒரு இரண்டாம் சுற்றுப் போட்டியை ஏற்படுத்தியது. பிரான்ஸ் முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில், ICFI தொழிலாள வர்க்கம் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுடனும் முறிந்துக் கொண்டு ஒரு தொழிலாள வர்க்க சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு சிறந்த வழி என்று அழைப்பு விடுத்தது. மாறாக LCR திறமையுடன் சிராக்கிற்கு ஆதரவு கொடுத்து, “லு பென்னிற்கு எதிராக” வாக்களித்தல் தான் பாசிச சரிவைத் தடுக்கும் ஒரே வழி என்றது.

நவ பாசிசத்திற்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் இன்னொரு பிரிவுடன் கூட்டு என்னும் முன்னோக்கு முற்றிலும் வங்குரோத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. LCR கொடுத்த ஆதரவு சிராக்கின் கோலிசக் கட்சிக்கு ஒரு முற்போக்கு முகப்பைக் கொடுத்து சிராக்கிற்கும், பின்னர் சார்க்கோசிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” உடைய உட்குறிப்பான ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தொடர்ந்த சமூக நலச் செலவு வெட்டுக்களை சுமத்த வழிவகுத்தது. இப்பொழுது சார்க்கோசி தன்னுடைய தாக்குதல்களை தீவிரப்படுத்த முயல்கையில், அவர் லு பென் வாதிட்ட அதே கொள்கைகளைத் தான் ஏற்றுள்ளார். அவற்றைத்தான் LCR ஆனது கோலிசத்திற்கான வாக்குகள் லு பென் ஐ தடுக்கும் என்று கூறியிருந்தது.