|
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா &
தென்பசுபிக்
விக்கிலீக்ஸின் ஜூலியன்
அசாங்கேயை குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதில் ஆஸ்திரேலிய அரசாங்கமும் இணைவு
By James
Cogan
1 December 2010
Use
this version to print | Send
feedback
ஒரு
ஆஸ்திரேலியக் குடிமகனும் விக்கிலீக்ஸின் ஆசிரியருமான ஜூலியன் அசாங்கேக்கு எதிரான
குற்றச்சாட்டுக்களை ஒபாமா நிர்வாகம் தயாரிக்கும் முயற்சிகளில் ஆஸ்திரேலிய தொழிற்
கட்சி அரசாங்கமும் இணைந்துள்ளது.
திங்களன்று
அரசாங்கத் தலைமை வக்கீல் ரோபர்ட் மக்கிளெல்லண்ட் செய்தியாளர் கூட்டத்தில்,
“சட்டபூர்வமாக
எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் ஆஸ்திரேலியா ஆதரவு கொடுக்கும்.
அத்துறையில்
அமெரிக்கா முன்னணியிலுள்ள அரசாங்கமாக இருக்கும்,
ஆனால் ஆஸ்திரேலிய
அமைப்புக்களும் உறுதியாக உதவி அளிக்கும்”
என்றார்.
ஆஸ்திரேலியக்
கூட்டாட்சி “எந்த
ஆஸ்திரேலிய சட்டங்களையாவது மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றியும் குறிப்பாகக் கவனம்
செலுத்தும்”
என்று அவர் கூறினார்.
பல
உளவுத்துறை மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இருந்து இணைக்கப்படும் ஒரு செயற்பிரிவு
நிறுவப்படும்.
இது கசிந்துள்ள
தகவல்களை ஆராய்ந்து
அசாங்கே
“தேசியப்
பாதுகாப்பு பற்றிய இரகசிய ஆவணங்களை வெளியிட்டாரா”
என்பதை
உறுதிப்படுத்தும்.”
மக்கிளெல்லண்ட் ஆஸ்திரேலிய அரசாங்கம் வாஷிங்டனிடமிருந்து அசாங்கேயின் கடவுச் சீட்டு
இரத்து செய்யப்பட வேண்டும் என்று குறிப்பாக எந்த வேண்டுகோளையும் பெறவில்லை என்றும்
சுட்டிக்காட்டினார்.
ஏனெனில் அமெரிக்க
மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு பயணிக்க
முற்படுவார்,
அப்பொழுது அவர்
சுவிஸ் அராசங்கம் தயாரித்துள்ள பாலியல் பலாத்கார குற்றங்கள் அல்லது அதேபோல் அரசியல்
உந்துதல் பெற்றுள்ள வேறு எந்த அமெரிக்கக் குற்றச்சாட்டுக்களின் கீழும் கைது
செய்யப்பட்டு விடலாம் என்று நம்புகின்றன.
ஆஸ்திரேலியாவிற்கு அசாங்கே மீண்டும் வந்தால்—அங்குத்தான்
அவர் ஒரு குடிமகன் மற்றும் மற்றய நாடுகளின் அரசியல் விசாரைணகளில் இருந்து
பாதுகாக்கப்பட முடியும் என்ற கருத்து உள்ளது—தொழிற்
கட்சி அரசாங்கம் அவர் நாட்டை விட்டு வெளியற்றப்பட்டு அமெரிக்காவில் குற்ற
விசாரணைக்கு அனுப்பப்படுவதற்கு
“எல்லா உதவியும்”
அளிக்கும் என்பது
பற்றி மக்கிளெல்லண்ட் சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறியுள்ளார்.
ஒரு தனி
அறிக்கையில் மக்கிளெல்லண்ட், ஆஸ்திரேலிய அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றத்தில்
குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுமுன்,
அசாங்கேக்கு எந்த
நாடாவது அடைக்கலம் கொடுத்திருந்தால் அது ஸ்வீடன் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க
வேண்டும் என்று கோரும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
செவ்வாயன்று,
“ஸ்வீடனிலிருந்து
வந்துள்ள குற்றச்சாட்டு அத்தகைய கட்டாயத்தை இன்டர்போல் நடைமுறையில் இருக்கும்
நாடுகள் மீது அசாங்கே அந்நாடுகளுக்கு வந்தால் கைதுசெய்ய வேண்டும் என்பதைக்
கொடுத்துள்ளது”
என்றும் அவர்
அறிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி கெவின் ரூட்,
ஆப்கானியப் போர்
பற்றிய அரங்குகளில் கலந்து கொள்ளுவதற்காக சென்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள்
நாட்டின் செய்தியாளர்களிடம்,
“பெரும்பாலான
அரசாங்கங்களைப் போலவே எங்கள் அரசாங்கத்தின் மனப்பாங்கும்,
அதன் நீதித்துறை
அதிகார வரம்பை முழுமையாக ஆராய்ந்து,
இந்நடவடிக்கைகள்
ஏதேனும் ஆஸ்திரேலிக் குற்றவியல் சட்டங்களையும் மீறுகின்றனவா என்று காண்பதுதான்”
என்றார்.
இப்படி
அசாங்கேயை நடத்தும் முறை ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல்
கட்சிகளுக்குள் ஜனநாயக உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் மீது கொண்டுள்ள
இழிவுணர்வைத்தான் நிரூபிக்கிறது.
தொழிற் கட்சி
அரசாங்கம்,
கன்சர்வேடிவ்
எதிர்க்கட்சி அல்லது பசுமைவாதிகள் ஆகியவற்றில் ஒருவர் கூட முன்னாள் குடியரசுக்
கட்சியைச் சேர்ந்த அமெரிக்கத் துணைத் தலைவர் வேட்பாளரான சாரா பாலின்,
அசாங்கேயிற்கு
எதிராக விடுத்த உட்குறிப்பான கொலை அச்சுறுத்தல்கள் பற்றி கவலையோ,
கண்டனமோ
தெரிவிக்கவில்லை
—அவரோ
“அல் கெய்டா”
போல் அசாங்கே
வேட்டையாடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றார்—
அல்லது
அமெரிக்காவில் வந்துள்ள வெறிபிடித்த கூச்சல்களான விக்கிலீக்ஸ் ஒரு
“பயங்கரவாத அமைப்பு”
என்று அறிவிக்கப்பட
வேண்டும் என்பது பற்றியும் கவலையோ,
கண்டனமோ தெரிவிக்கவில்லை
விக்கிலீக்ஸ் ஒரு செய்தி ஊடக நிறுவனம் ஆகும்.
அமெரிக்காவின்
ஆப்கானிய மற்றும் ஈராக் போர்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்க இராஜதந்திர
நடவடிக்கைகள் பற்றி அதற்குக் கிடைக்கும் ஏராளமான ஆவணங்களை வெளியிடும் சட்டப்பூர்வ
மற்றும் அறிநெறி உரிமைகள் அதற்கு உண்டு.
இவ்வாறு செய்கையில்
அது உலகிற்கு பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மற்றும் ஆப்கானியக் குடிமக்கள்
கொல்லப்பட்ட கொடூரங்களையும்,
அமெரிக்காவானது
ஈராக்கில் எதிர்ப்பை அடக்குவதற்காக கொலை செய்ய படைகளை கொண்டிருப்பது,
சித்திரவதை செய்யும்
குழுக்களைக் கொண்டிருப்பது ஆகியவைகள் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஞாயிறு
முதல் உலகெங்கிலுமுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில் இருந்து
கிட்டத்தட்ட
250,000 தந்தித்
தகவல்களைக் கசியவிட்டுள்ளது,
ஏற்கனவே அமெரிக்க
ஏகாதிபத்தியம் ஈரானில் ஒரு புதிய போரை தொடக்கத் திட்டமிட்டிருப்பதும்,
யேமனில் இரகசியக்
குண்டுவீசும் பணிகளைச் செய்யவிருப்பதும் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கத் தூதர்கள்
ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தால் வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகள்,
ஐக்கிய நாடுகள்
மன்றத்தின் அதிகாரிகள் ஆகியோர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள்,
மற்றும்
DNA மாதிரிகளைக் கூட
ஒழுங்குமுறையாக சேகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இத்தகைய தகவல்கள்
நபர்களைப் பற்றித் தவறான கருத்துக்களைக் கூறவும் இழிந்த முறையில் விரட்டுவதற்கும்
பயன்படுத்தப்பட முடியும் என்பதைக் கருத்திற் கொள்வதற்கு அதிக கற்பனை தேவையில்லை.
ஆனால்,
ஆஸ்திரேலிய அரசாங்க
ஸ்தாபனத்தின் அனைத்துச் சீற்றமும் அசாங்கே,
மற்றும்
விக்கிலீக்ஸுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளன.
தன் குடிமக்கள்
ஒருவர் வேட்டையாடப்பட்டு,
குற்றவிசாரணைக்கு
உட்படுத்தப்பட்டு,
கைது செய்யப்பட்டு,
கொல்லப்படுவதற்குக்
கூட அது தயாரிப்பு செய்கிறது. இவை அனைத்தும் உலக மக்களுக்கு ஆஸ்திரேலியாவின்
முக்கிய நட்பு நாட்டின் குற்றம் சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளை அவர்
அம்பலப்படுத்தியதால் வருகின்றன.
ஆஸ்திரேலிய
ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை,
அமெரிக்க உடன்பாடு,
அதன் வெளியுறவுக்
கொள்கையின் “அடித்தளம்”
என்று கூறப்படுவது
ஆகும்.
தெற்கு பசிபிக்,
தென்கிழக்கு
ஆசியாவில் ஆஸ்திரேலியாவின் பொருளாதார,
மூலோபாயச்
செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்கு—கான்பெர்ராவின்
சொந்த “செல்வாக்கு
மண்டலம்”—
அது வாஷிங்டனின் ஆதரவை
நம்பியுள்ளது.
இத்துடன்
ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குடிமக்களின் உரிமைகள்,
சுதந்திரம் மற்றும்
உயிர்கள் ஒரு பொருட்டல்ல என்று போகிறது.
ஹோவர்டின்
லிபரல்-தேசிய
அரசாங்கம் இரு ஆஸ்திரேலியக் குடிமக்கள்
–Mamdouh Habid
மற்றும் David
Hicks—ஆகியோர்
குவாண்டிநாமோ குடா சிறை முகாமில் எந்தக் குற்றச்சாட்டுக்களும் கூறப்படாமல்
வைக்கப்பட்டதற்கு விருப்பம் தெரிவித்ததற்கும்,
ஆஸ்திரேலிய
அரசாங்கம் இப்பொழுது அசாங்கேயை நடத்துவதற்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.
கான்பெர்ரா இந்த இரு
நபர்கள் நடத்தப்பட்டிருந்த குற்றம்சார்ந்த தன்மையை ஆதரித்து,
அவர்கள்
காப்பாற்றப்படுவதற்கும் அவர்களை விடுவிக்கவும் எந்த உதவியையும் செய்யவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக,
ஆஸ்திரேலிய
அரசாங்கம் விக்கிலீக்ஸின் மீது கொண்டுள்ள விரோதப் போக்கு அமெரிக்காவின் உலகளாவிய
இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஏகாதிபத்தியச் சூழ்ச்சியில் அது இளைய பங்காளி என்று
கொண்டுள்ள பங்கினால் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலிய
மந்திரிகளும் துருப்புக்களும் ஈராக் மற்றும் ஆப்கானிய போர்கள் இரண்டிலும் பங்கு
பெற்றனர். ஆஸ்திரேலிய மந்திரிகளும் தூதர்களும் ஒவ்வொரு சர்வதேச அரங்கிலும் அமெரிக்க
வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவை உரத்துக் கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய உளவுத்துறை
அமைப்புக்கள் அவற்றின் சக அமெரிக்க அமைப்புக்களுடன் விரோதி எனக் கருதப்படுபவர் மீது
உளவு வேலை நடத்த,
குறிப்பாக ஆசிய-பசிபிக்
பகுதியில் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளன.
மேலும் ஆஸ்திரேலிய
அரசாங்கம் Pine
Gap எனப்படும்
அமெரிக்க இணையத் தளத்திலுள்ள முக்கியமான செயற்கைக்கோள் தளங்கள் மற்றும் ஏவுகணை
இலக்கு வசதிகளுக்கு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள சான்றுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள பல அரசியல்வாதிகள்
மற்றும் இராணுவ நபர்கள் மீது போர்க் குற்றங்கள் சுமத்துவதற்கு தளம் அமைக்கக்கூடும்.
தொழிற் கட்சி
அரசாங்கத்திற்குள்ளேயே கான்பெர்ராவிலுள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகம் மெல்பேர்னில்
இருக்கும் அமெரிக்கத் துணைத் தூதரகம் ஆகியவற்றிலிருந்து வெளியான
1,003 தந்தித்
தகவல்களின் பொருளுரை விக்கிலீக்ஸிடம் இருப்பதாகக் கூறுவது பற்றிய கவலைகளும்
இருக்கும்.
குறிப்பாக,
ஜூன்
23-24
அரசியல் சதி,
கெவின் ரூட்டை பிரதம
மந்திரிப் பதவியிலிருந்து அகற்றியதில் அமெரிக்கத் தொடர்பு பற்றி அதிக வெளிப்பாடு
உடைய தகவல்கள் இருக்கலாம். ஒபாமா நிர்வாகத்திற்கும்,
ரூட்டிற்குமிடையே
ஆப்கானிஸ்தான் இன்னும் பல வெளியுறவுக் கொள்கை பற்றிய நிலைப்பாடுகளில் நன்கு
அறியப்பட்ட விரோதப்போக்கு இருந்தவை
தெரிந்ததுதான்.
ரூட்
அகற்றப்பட்டது,
அவருக்குப் பதிலாக
வந்துள்ள பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் ஆப்கானிய போருக்கு காலவரையறையற்ற,
நிபந்தனையற்ற
உறுதிப்பாட்டைக் கொடுத்த அவருடைய அரசாங்கத்தை அமெரிக்க முயற்சிகளான ஆசியாவில் சீனச்
செல்வாக்கு எழுதலுக்கு எதிராக பயன்படுத்த உடன்பட்டுள்ளார். சீனா இப்பொழுது
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வணிகப் பங்காளியாக உள்ளது என்றாலும் இந்நிலைப்பாடு
உள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள
அமெரிக்கத் தூதரக ஆவணங்கள்,
கூட்டு அமெரிக்க-ஆஸ்திரேலியக்
கொள்கை சீன நலன்களுக்கு எதிராக இயக்கப்படுவதைப் பற்றி பெரும் சங்கடம் கொடுக்கும்,
இராஜதந்திர முறையில்
சேதத்தை ஏற்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.
ஆஸ்திரேலியாவிலிருந்து தந்தி தகவல்கள் விக்கிலீக்ஸால் வெளியிடப்படும்போது,
WSWS கூடுதல்
கருத்துக்களைத் தெரிவிக்கும். |