சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WSWS team visits villages in the Vanni

Sri Lankan detainees “resettled” in appalling conditions

WSWS குழு வன்னியில் உள்ள கிராமங்களுக்கு சென்றது

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பயங்கரமான நிலைமையில்மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்


By Subash Somachandran
2 December 2010

Use this version to print | Send feedback

கடந்த ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி கண்டதை அடுத்து, வடக்கில் வன்னி பிராந்தியத்தில் இருந்து சுமார் 280,000 தமிழ் பொது மக்களை இலங்கை அரசாங்கம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பிரமாண்டமான முகாங்களில் அடைத்து வைத்தது. அவர்களது சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறி பல மாதங்களாக அவர்களை அடைத்து வைத்திருந்த பின்னர், அவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர் அல்லது இடைத்தங்கல் முகாங்களுக்குள் இடம்மாற்றப்பட்டுள்ளார்கள். அரசாங்கத் தகவலின்படி, கிட்டத்தட்ட 20,000 பேர் இன்னமும் இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களில் வாழ்கின்றார்கள்.

நவம்பர் 3 அன்று, பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான பெஸில் இராஜபக்ஷ, ஒரு குறுகிய காலத்துக்குள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியேற்றுவதன் மூலம் இலங்கை ஒரு தனிச்சிறப்பான சாதனையை செய்துள்ளது என மோசடியாகக் கூறிக்கொண்டார்.  மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது, என அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறெனினும், அங்குள்ள நிலைமை பயங்கரமானது. தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் உட்பட பொருத்தமான வசதிகள் இன்றி விடப்பட்டுள்ளார்கள். இத்தகைய நிலைமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதன் பேரில், ஊடகவியலாளர்கள் இந்தப் பிரதேசங்களுக்குச் செல்லாமல் அரசாங்கம் கட்டுப்பாடுளை விதித்துள்ளது. உலக சோசலிச வலைத் தள குழு, அண்மையில் இந்தப் பிராந்தியத்துக்கு சென்று பின்வரும் அறிக்கையை வரைந்துள்ளது.

****

வட்டக்கச்சி வட இலங்கையில் உள்ள கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மிகப்பெரும் கிராமப்புற பிரதேசமாகும். அது, 30 ஆண்டுகால இனவாத யுத்தத்தின் அழிவுகளைத் தாங்கிய வன்னிப் பிராந்தியத்தின் ஒரு வட்டாரமாகும். இந்த யுத்தம் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தால் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. வன்னிப் பிராந்தியத்தில் ஏனைய பகுதிகளுடன் சேர்ந்து வட்டக்கச்சியும், 2008 டிசம்பரில் அப்பிரதேசத்தை நெருங்கிய இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களின் இறுதிக் கட்டத்தின் போது அழிக்கப்பட்டது.

இங்கு சுமார் 7,000 பேர் வாழ்ந்தார்கள். முன்னேறிவந்த இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கானவர்களுடன் அவர்களும் சேர்ந்துகொண்டார்கள். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் இடம்பெற்ற முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை அடையும் வரை, அவர்கள் இடத்துக்கிடம், பிரதானமான கால்நடையாக, மாறிக்கொண்டே இருந்தனர். இராணுவம் குண்டுபொழிந்த போது, தமது அன்புக்குரியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையும் முடமாக்கப்பட்டதையும் கண்ட சிலரை நாம் சந்தித்தோம்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான பிரமாண்டமான முகாங்களில் பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், மக்களில் சிலர் வட்டக்கச்சி பிரதேசத்தில் உள்ள கிராமங்களில்மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்”. மீண்டும் கிராமத்துக்குத் திரும்பாத ஏனைய பலருக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. பல குடியிருப்பாளர்கள் இப்போது விதவைகளாக அல்லது மனைவியை இழந்தவர்களாக உள்ளனர். சில இளைஞர்கள் புலிசந்தேகநபர்களாக இரகசிய தடுப்பு முகாங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

நாம் வட்டக்கச்சிக்கு சென்ற வழியில், திருவையாறு கனகபுரம் என்றழைக்கப்படும இடத்துக்கு அருகில், யுத்தத்தால் சேதமான வாகனங்களின் பாகங்களை இடம்பெயர்ந்த பொது மக்கள் விட்டுச் சென்றிருப்பதை கண்டோம். அது நன்ணீர் மீன்பிடிக்கு பேர்போன ஒரு பிரமாண்டமான செயற்கை நீர்த்தேக்கமான இரணைமடு குளத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டர்களில் உள்ளது. விவசாயத்துக்கும் தண்ணீர் வழங்கும் இந்த குளத்தை இப்போது இராணுவம் காவல்காக்கின்றது.

தமது ஜீவனோபாயத்துக்காக ஒரு காலம் மீன்பிடியில் தங்கியிருந்த பல தமிழ் குடும்பங்களுக்கு மீன்படிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல் திணைக்கள ஊழியர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. பூஜை நேரங்களில் மட்டுமே மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இராணுவ ஆக்கிரமிப்பு நிரந்தரமாக இருக்கும் என்பதற்கு அறிகுறியாக ஒரு பௌத்த விகாரையும் அங்கு கட்டப்பட்டுள்ளது.

நாம் ஒரு குடும்பத்தின் குடிசையில் தங்கினோம். அது வெறும் 10 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருந்தது. மண் மற்றும் குச்சிகளால் அமைக்கப்பட்டிருந்த சுவர்களுக்கு மேல் தென்னை ஓலைகளால் கூரை வேயப்பட்டிருந்தது. தரைக்கும் மண் பூசப்பட்டிருந்தது. அங்கு சமைப்பதற்குப் பயன்படும் ஒரு கூடாரமும் இருந்தது. முழு வட்டாரத்திலும் தார் துணிகளால் அல்லது ஓலைகளால் கரை அமைக்கப்பட்டிருந்த குடிசைகளையே நாம் கண்டோம். மழை பெய்யும் போது குடிசைகள் சேறாகிவிடுகின்றன. உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கும் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்துவிடுவதோடு பலமான காற்று வீசும்போது கூரைகள் தூக்கிவீசப்படுகின்றன. குடிசைகள் மிகவும் சிறியதாக இருப்பதால் சிலர் சமையல் கூடாரங்களில் தூங்குகின்றனர். இப்பவும் அப்பவும், அரைவாசி சேதமான அல்லது அரைவாசி திருத்தப்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்வதை நாம் கண்டுள்ளோம்.

பிரதேசத்தில் மின்சாரம் கிடையாது. ஒரு செல்பேசியை பயன்படுத்துவதற்குக் கூட, அங்கிருப்பவர்கள் தனியார் ஜெனரேட்டர் உரிமையாளருக்கு 20 ரூபாய்கள் (17 அமெரிக்க சதங்கள்) கொடுக்க வேண்டும். அந்தக் கிராமங்களுக்கு தொலைக்காட்சிக்கோ அல்லது செய்திப் பத்திரிகைகளுக்குக் கூட வழி கிடையாது.



ஒரு கூட்டுறவுக் கடையின் வாசலில்

ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த மக்களை இங்கு கொண்டுவந்திருந்த போதிலும், அதிலிருந்து இன்னமும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. மீளக் குடியேறியுள்ளவர்களில் ஒரு சிலரே ஏதாவதொரு வருமானத்தை தேடுகின்றனர். சிலர் குறைந்த-செலவில் வீடுகட்டும் இடங்களில் வேலை செய்வதோடு அவர்களது தொழில் நிச்சயமானது அல்ல.

ஒரு வேலையற்றவர் எம்மிடம் தெரிவித்ததாவது: “முள்ளிவாய்க்காலில் எனது மனைவியின் வயிற்றில் காயமேற்பட்டது. நான் அவரை சிகிச்சைக்காக அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு கொண்டுவர முயற்சித்த போதிலும், புலிகள் எங்களை நிறுத்திவிட்டனர். பின்னர் நான் ஏனையவர்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்தேன். எனது மனைவிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி எனது மனைவியை இராணுவம் எடுத்துச் சென்றது. நான் எனது ஒரு வயது மகனுடன் ஒரு முகாமிற்குள் தடுத்து வைக்கப்பட்டேன். எனது மனைவியை தேடுவதற்காக என்னை வெளியில் செல்ல அனுமதிக்குமாறு நான் இராணுவத்துக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்த போதிலும், என்னை அனுமதிக்கவில்லை. நாங்கள் விடுதலையான பின்னர் நான் அவரைத் தேடத் தொடங்கினேன். இன்னமும் அவளை தேடிக்கொண்டிருக்கின்றேன்.”

ஒரே ஒரு அரசாங்க மருந்தகம் மட்டுமே வாரத்தில் இரண்டு நாட்கள் மூன்று மணித்தியாலங்கள் இந்தப் பிரதேசத்தில் திறந்திருக்கின்றது. இந்த ஆஸ்பத்திரி வட்டக்கச்சிக்கு மேலதிகமாக சிலசமயம் இராமநாதபுரம் மற்றும் கல்மடு உட்பட கிட்டத்தட்ட 7,000 பேருக்கு சேவை செய்கின்ற போதிலும், முற்றிலும் வசதியற்றது.

ஒரு நோயாளியை கிளிநொச்சிக்கு கொண்டு செல்வது பயங்கரமானதாகும். அங்கு செல்லும் பாதை குன்றும் குழியுமாக இருப்பதோடு ஒரு மணித்தியாலத்துக்கு 5 கிலோமீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே வாகனம் செல்ல முடியும். மணித்தியாலத்துக்கு ஒரு முறை ஒரு பஸ் கிளிநொச்சிக்கும் வட்டக்கச்சிக்கும் ஓடினாலும் கூட, மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

பருப்பு அல்லது தேங்காய் சம்பலுடன் சோறு சாப்பிடுவதே கிராமத்தவர்களின் பிரதான ஆகாரமாகும். ஐ.நா. உலக உணவுத் திட்டத்தில் இருந்து ஒரு சிறுதொகை உலர் உணவுகளைப் பெறுகின்றார்கள். ஆனால் மக்கள் மலிவான உணவுகளை வாங்க அல்லது ஏனைய தேவைகளுக்கு பணம் சேகரிக்க அந்த பங்கீடுகளை அடிக்கடி விற்றுவிடுகின்றார்கள். சிலர் நெல் அறுவடைசெய்யத் தொடங்கியிருந்தாலும், அவர்களுக்கு போதிய உபகரணங்கள், உரம் மற்றும் விதைகள் கிடைக்காததால் அதனையும் சிரமத்துடனேயே மேற்கொள்கின்றனர்.

நாம் வட்டக்கச்சிப் பிரதேசத்தின் தெற்கு எல்லையில், மாயவனூர் தெற்குக் கிராமத்துக்கு சென்றோம். கிராமத்தவர்கள் தண்ணீர் தேடி 500 மீட்டர்கள் நடக்க வேண்டும். அங்கு மலசல கூடங்கள் கிடையாது. அங்குள்ளவர்கள் கிளிநொச்சிக்கு போக்குவரத்தைப் பிடிக்க 3 கிலோமீட்டர்கள் நடந்து செல்ல வேண்டும். முன்னர் கிராமத்தவர்கள் சைக்கிள் வைத்திருந்தார்கள். ஆனால் யுத்தத்தின் போது அவற்றை இழந்துவிட்டார்கள்.



ஒரு பாலர் பாடசாலையினுள்

தரம் ஒன்றில் இருந்து ஐந்து வரையுள்ள மாயவனூர் தெற்கு கிராம பாடசாலையில், பல நூறு மாணவர்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதன் கூரை தென்னை ஓலைகளால் வேயப்பட்டுள்ளது. வகுப்பறைகள் தகரங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு எந்தவொரு தகவலையும் கொடுக்கக்கூடாது படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது என கல்வித் திணைக்களம் ஆசிரியர்களுக்கு கட்டளையிட்டிருப்பதாக எங்களுக்கு தெரிய வந்தது.

ஆயினும், ஒரு தொண்டர் ஆசிரியர், அவரது கதையை எம்மிடம் கூறினார். நாங்கள் முல்லைத்தீவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தோம். எனது கனவர் அதே இடத்திலேயே இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாங்கள் அவரை அங்கேயே புதைத்துவிட்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றோம். நான் பல ஆண்டுகளாக கற்பித்து வருகின்றேன். முன்னர் எனக்கு 3,000 ரூபா கொடுப்பணவு வழங்கப்பட்ட போதிலும், இப்போது எனக்கு கொடுப்பனவு கிடைப்பதில்லை. நிரந்தர நியமனத்தை பெறும் எதிர்பார்ப்புடன் நான் ஊதியமின்றி தொடர்ந்து வேலை செய்கின்றேன்.

நாம் முன்னர் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பாலர் பாடசாலையை கடந்தோம். இரு ஆசிரியர்கள் அங்கு உள்ள போதிலும் யாரும் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. ஒரு ஆசிரியர் இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு யுத்த விதவையாவார். இலங்கை இராணுவம் வீசிய ஷெல்லில் அவரது கணவர் கொல்லப்பட்டுள்ளார். 70 குழந்தைகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் 40 பிள்ளைகளே அங்கிருந்தனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் பிள்ளைகளின் பெற்றோர்கள் இல்லை. சில சிறுவர்கள் உணவே இல்லாமல் கூட அங்கு வருகின்றார்கள். இந்த சிறுவர்களுக்கு குடி தண்ணீர், மலசலகூட வசதிகள், மேசைகள், நாற்காலிகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் கிடையாது.

அநேகமாக வன்னி பூராவும் உள்ள கிராமங்களின் நிலைமை இதுவே. இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவு, மற்றும் அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகள், அதே போல் முன்னர் புலிகளின் ஊதுகுழலாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகளின் வகிபாகம் குறித்தும் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஒரு கிராமத்தவர் எங்களிடம் கூறியதாவது: புலிகள் ஒடுக்குமுறையான வழிமுறைகளில் எங்களை கட்டுப்படுத்தினர். இப்போது இராணுவம் இருப்பதனால் மக்கள் பேசுவதற்கு பயப்படுகின்றனர். யுத்தம் முடிவடைந்தாலும் எங்களுடைய பிரச்சினைகள் அதே மாதிரியே இருக்கின்றன. எங்களைப் பற்றி அக்கறையெடுப்பதாக பாசாங்கு செய்ய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்தார்கள். ஆனால் அவர்களால் எங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை.

புலிகள் தோல்வியடைந்ததில் இருந்து, தமிழ் கூட்டமைப்பு இராஜபக்ஷ அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வதற்கான தனது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை பார்க்கச் சென்ற போது, அரசாங்கத்துடன் பேசி நிலைமையை மாற்ற முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். தமிழ் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான ஒரு அரசியல் தீர்வுக்கு உடன்பட வைப்பதற்காக கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு, இந்திய அரசாங்கத்தினதும் தமிழ் நாட்டு ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் உதவியை பெற முயற்சிக்கின்றது.

அரசியல் தீர்வின் மூலம், தமிழ் ஆளும் தட்டுக்கு தனிச்சலுகை பெறுவதற்காக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதையே தமிழ் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் அர்த்தப்படுத்துகின்றன. வன்னியில் உள்ள தமிழர்களின் தலைவிதி பற்றி தமிழ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்ட போதிலும், அதன் உண்மையான நோக்கம் அரசாங்கத்துடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்குச் செல்வதே ஆகும்.