சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Scotland and Wales reveal unprecedented budget cuts

ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவை முன்னோடியில்லாத வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களை வெளிப்படுத்துகின்றன

By Stephen Alexander
3 December 2010

Use this version to print | Send feedback

நவம்பர் மாதம், அதிகாரம் ஓப்படைக்கப்பட்டுள்ள ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நிர்வாகங்கள் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் அரசாங்கம்  கோடிட்டுக் காட்டியுள்ள 83 பில்லியன் பவுண்டுகள் செலவுக் குறைப்புக்களில் தங்கள் பங்கைச் செயல்படுத்துவதற்கான விரிவான வரவு செலவுத் திட்டங்களை அறிவித்தன. வடக்கு அயர்லாந்தின் வரவு செலவுத் திட்டம் இன்னும் இசைவிற்கு உட்படவில்லை.

பிராந்திய நிர்வாகங்களின் ஆண்டு வரவு செலவுத் திட்டங்கள் பார்னெட் சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இதுதான் இங்கிலாந்திற்கு வெளியே அதிகப்பட்ச தலா நபர் பொதுச் செலவுகள் குறிப்பைக் கொடுக்கிறது. இது இப்பொழுது £30 பில்லியன் ஸ்காட்லாந்திற்கும், £15 பில்லியன் வேல்ஸிற்கும், £9 பில்லியனை வடக்கு அயர்லாந்திற்கும் என உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டங்கள் இப்பொழுது 2014-15க்குள் முறையே 6.8%, 7.5% மற்றும் 6.9% என்று குறைக்கப்பட்டுள்ளன, அதாவது உண்மைக் கணக்கீட்டில் 10 முதல் 11 சதவிகிதம் என்று ஆகும். தொழிற்கட்சி அரசாங்கம் இப்பகுதிகளுக்கு அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்த ஒரு தசாப்தத்தில் இது ஒரு முன்னோடியில்லாத குறைப்பு ஆகும்.

இப்பகுதிகளில் வாக்காளர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால், கூட்டணி அரசாங்கம் மிக அதிகமாக பிராந்திய அரசியல் உயரடுக்குகளைத்தான் இங்கிலாந்து முழுவதும் உள்ளநிதிய ஒருங்கிணைப்பிற்கு தேவையான சிக்கன நடவடிக்கைகளுக்கான உந்துதலுக்குப் பெரிதும் நம்பியுள்ளது

SNP எனப்படும் ஸ்காட்லாந்துத் தேசியக் கட்சி 2011-12 க்கு 1.3 பில்லியன் பவுண்டுகள் குறைக்கிறது, இது 3.9% க்கு சமம் ஆகும்; இதில் 332 மில்லியன் பவுண்டுகள் வெட்டுக்கள் மே மாதத் தேர்தல்கள் முடியும் வரை அரசியலில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய, பகிரங்கமாகத் தூற்றப்படும் குறைப்புக்களை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு 2010-11ல் இருந்து ஒத்திவைக்கப்பட்டவை. ஸ்காட்லாந்தின் நிதியமைச்சர் ஜோன் ஸ்வின்னி வழக்கமான மூன்றாண்டுத் திட்டத்திற்கு பதிலாக ஓர் ஓராண்டுத் திட்டத்தைத்தான் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பெரும்பாலான குறைப்புக்கள் பொதுத்துறை திறமைச் சேமிப்புக்கள் என்று 800 மில்லியன் பவுண்டுகள், கிட்டத்தட்ட திட்டமிட்டுள்ள குறைப்புக்களில் மூன்றில் இரு பங்கு மதிப்பில் மறைக்கப்பட்டுள்ளன; இவை இன்னும் அதிக  கீழ்நோக்கிய அழுத்தத்தை வேலைகள், ஊதியங்கள் மற்றும் பணிநிலைமைகள் மீது  கொடுக்கும்.

21,000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிக்கும் பொதுத்துறை தொழிலாளர்களின் ஊதியங்கள்,  250,000 தொழிலாளர்களுக்கு முடக்கிவைக்கப்படும்; அதே நேரத்தில் இந்த எண்ணிக்கைக்கு குறைவாகச் சம்பாதிப்பவர்கள் £250 என்னும் சிறு தொகையையே ஆண்டு அதிகரிப்பாகப் பெறுவர்-உண்மையான மதிப்புக் கணக்கில் பெரும்பாலான ஸ்காட்லாந்தின் அரை மில்லியன் பொதுத்துறை ஊழியர்களுக்கு இது ஊதியக் குறைப்பு ஆகும். இதை எளிதாக்கும் வகையில் மிகக் குறைந்த வருமானம் பெறும் 6,000 அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணிக்கு £7.15 என அதிகரித்து நிர்ணயிக்கப்படும்.

வரவு செலவுத் திட்டம் உள்ளூர் அதிகாரங்களுக்கு இறுதி அறிவிப்பைக் கொடுக்கிறது; அடுத் ஆண்டு 2.8% எனத் திட்டமிடப்பட்ட குறைப்பையும் விடக் குறைவாகக்  கொடுத்து அதற்கு ஈடாக SNP இன் தேர்தல் உறுதிமொழிகள் பாதுகாக்கப்படும், அதில் நகரவை வரி முடக்கும், எண்ணிக்கைக் கண்காணிப்பு, தற்போதைய மாணவர்-ஆசிரியர் விகிதம் தக்க வைக்கப்படுதல் அடங்கும்; அல்லது 6.4 சதவிகித வெட்டு என்ற மாற்றம் வரும். பிந்தைய விருப்புரிமை நகரவை வரிவிதிப்புக்களில் 20% அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதிக பெரும்பான்மையில் இருக்கும் பொதுத்துறை ஊழியர்கள்  பிரிவை கொண்ட உள்ளூர் அதிகாரங்கள் தொழிலாளர் பிரிவில் 5% முதல் 7% க்குள் திட்டமிட்ட குறைப்புக்களை அடுத்த ஆண்டிலேயே ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

கட்டாயப் பணிநீக்கங்கள் நடக்காது என்ற நிலைக்குத் தேசியவாதிகள் உறுதி கொடுக்கத் தயார்; ஆனால் உடன்பாடுகள்வளைந்து கொடுக்கும் பணியிட நிலைமைகள் மற்றும் செலவுக்குறைப்புகள் சாதிக்கப்பட வேண்டிய விதத்தில் உடன்பாடுகள் தேவை என்ற முன்னிபந்தனை ஏற்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் எண்ணிக்கைகள், பணிகளும் தக்க வைக்கப்பட வேண்டும்.” தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புடன் SNP ஊதியங்களைக் குறைத்தல், பொதுத்துறைப் பணியாளர்களின் நிலைமையை குறைத்தல் ஆகியவற்றிற்கான உந்துதலைத் திட்டமிட்டுள்ளனர்; இவை மறுக்கப்பட்டால் ஏராளமான வேலையின்மை ஏற்படும் என்ற அச்சுறுத்தலும் கொடுக்கப்பட்டுள்ளது.

GMB தொழிற்சங்கம் அடுத்த ஆண்டு 20,000 பொதுத்துறைப் பணிகள் அகற்றப்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது. அரசாங்கம் கடந்த கோடைக் கடைசியில் நியமித்துள்ள ஒரு சுயாதீன வரவு-செலவுத் திட்ட பரிசீலனைக்குழு 2014-15 க்குள் 50,000 பணிகள் அகற்றப்பட்டுவிடும் என்று மதிப்பிட்டுள்ளது.

£1.8 பில்லியன் என்று கூடுதல், உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் £200 மில்லியன் வெட்டைக் காணும். இதில் பல்கலைக்கழக நிதியங்களில் 6.4% அல்லது £63.1 மில்லியனும் அடங்கும். இடனால் முழு நிதியம் அளிக்கப்படும் பட்டப்படிப்புக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்து போகும்.

மூலதனச் செலவுகள் கால் பகுதி குறைக்கப்படும்; இதில் வீடுகள் மற்றும் புதுப்பித்தலுக்கான வரவு-செலவுத் திட்டம் £448 ல் இருந்து £390 மில்லியனாகக் குறைக்கப்படுவதும் அடங்கும். நல்ல பாதுகாப்பு இருக்கும் தேசிய சுகாதாரப் பணிக்கான வரவு-செலவுத் திட்டம் கூட உண்மைக் கணக்கில் வெட்டுக்களைக் காணும். பணவீக்கத்தின் அதிகரிப்பின் கீழ் விகிதாசாரரீதியில் 11.7 பில்லியன் பவுண்டுகளில் இருந்து 11.8 பில்லியன் பவுண்டுகள் எனக் குறையும்.

மற்ற வெட்டுக்களில் சாலைப் பராமரிப்பு செலவுகளில் பாதிப் பணம் அகற்றப்பட்டுவிடும்; சுற்றுச் சூழல் நலன்களுக்கு ஒதுக்கப்படும் நிதியத்தில்  பத்தில் ஒரு பங்கு குறைக்கப்படும்.  கலாச்சார மற்றும்  Gaelic மொழி அமைப்புக்களுக்கான செலவுகள் £20 மில்லியன் குறைக்கப்படும்; ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகங்களுக்கான மானியம் 4 சதவிகிதம் குறையும்; சட்ட உதவிக்கான நிதியம் 7.8 சதவிகிதம் குறைக்கப்படும்.

பல ஒதுக்கீடுகள் தொடப்படவில்லை; காரணம் வரவு-செலவுத் திட்டத்தின் குறுகியக் காலத் தன்மைதான். 2014-15 க்குள் தேவையான செலவுக் குறைப்புக்களை செய்யும்பொருட்டு, அனைவருக்கும் பொருந்தும் நலன்கள் குறைப்பில் நடவடிக்கைகள், பயிற்சிக் கட்டணம் மற்றும்/அல்லது பட்டதாரி வரிவிதிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்படுதல், NHS நிதியத்தில் இருந்து பாதுகாப்பு முறை அகற்றப்படல், நகரவை வரிவிதிப்பு முடக்கம் நீக்கப் பெறுதல், இவை அனைத்தும் எந்தக் கட்சி வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த வெட்டுக்களின் முழு அளவை அடுத்த பாராளுமன்றம் செய்யவேண்டியும் அது தேர்தல் முடிந்தபின்தான் வெளியிடப்படும். SNP முன்னாள் ஸ்காட்டிஷ் தொழிற்சங்கக் கூட்டின் தலைமைச் செயலாளர் காம்ப்பெல் கிறிஸ்டி Future Delivery of Public Services எனப்படும் வருங்காலப் பொதுப்பணிகள் வழங்குதல் குழுவின் தலைவராக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இக்குழு பொதுத்துறை சீரமைக்கப்படுதல், எஞ்சியிருக்கும் பொதுநலச் செலவுகளை அகற்றுதல் ஆகியவை குறித்து ஆலோசகளை தெரிவிக்கும்.

இதற்கிடையில், SNP அடுத்த  மே மாதத் தேர்தலில் தான்  ஸ்காட்லாந்திற்கு கூடுதல் நிதியத் தன்னாட்சி அல்லது முழுச் சுதந்திரம் என்ற வழிவகைமூலம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறுவதில் மூலம் வெற்றி பெறலாம் என்று நம்புகிறது. அத்தகைய  நடவடிக்கைகள் ஸ்காட்லாந்தின் மூலதன நலன்களை அதிகரிக்கத்தான் பயன்படும், மக்களுடைய வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதற்கு அல்ல. அதே நேரத்தில் எதிர்ப்பை பிராந்திய, தேசிய வழிவகைகளில் திருப்ப உதவும்; பொதுப் பணம் கொள்ளையடிக்கப்படுவதற்கு வெஸ்ட்மின்ஸ்டரை முற்றிலும் குறை கூறும்.

வேல்ஸில் Plaid Cymn உம் தொழிற்கட்சியும், வடக்கு அயர்லாந்தின்  Sinn Fein, Democratic Unionist Party ஆகிய அதிகாரத்துவங்கள்  ஒரே மாதிரியான பங்கைத்தான் கொண்டுள்ளன. இதற்கு உடந்தையாக வட்டாரத் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உள்ளன.

வேல்ஸின் வரவு செலவுத் திட்ட வரைவு 2011-12 க்கு £860 மில்லியன் மற்றும் 2014-15 க்கு £1.8 பில்லியின் குறைப்புக்களை கோடிட்டுக் காட்டியுள்ளது. மற்ற பகுதிகளைப் போல் சுகாதாரத் துறைச் செலவுகள் பாதுகாப்பிற்கு உட்படவில்லை; அவை 2013-14ல் 7.6% குறைக்கப்பட உள்ளன; இது இந்த ஆண்டு முன்னதாக நடத்தப்பட்ட வெட்டான £435 மில்லியனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

வேல்ஸின் உள்ளாராட்சி சங்கத்தின் நிதியமும் இதே காலக்கட்டத்தில் 7 சதவிகிதம் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களுக்கான நிதிய ஒதுக்கீடு 9.3 சதவிகிதம் குறைக்கப்படும்.

மொத்த மூலதனச் செலவுகள்  40 சதவிகிதம் குறைக்கப்படும். சமூக வீடுகள் மானியம் 2011-12ல் 30 சதவிகிதம், £69 மில்லியன் குறைக்கப்பட்டுவிடும்; அதற்கு அடுத்த ஆண்டு 15 சதவிகிதமும் அதற்கும் அடுத்த ஆண்டு 20 சதவிகிதமும் குறைக்கப்படும்.

இத்தகைய பேரழிவு தரக்கூடிய, பரந்த குறைப்புக்களின் இடையே, TUC வேல்ஸின் நிர்வாகத்தைக் காப்பதற்கு இறங்கியுள்ளது. ஒரு TUC செய்தித் தொடர்பாளர், “செலவுக் குறைப்புக்கள் பற்றி முடிவுகள் எங்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன. வேல்ஸ் அரசாங்கம் இங்கிலாந்து வெட்டுக்களின் மோசமான விளைவகளைக் குறைக்க முயல்கிறது, தொழிற்சங்க இயக்கமும் தங்கள் பங்கை இதில் செய்யும்என்றார்.

வடக்கு அயர்லாந்தின் வரவு-செலவுத் திட்டம் Stormont சட்டமன்றத்தில் பின்தங்கியது. ஏனெனில் அதில் உள்ள இரு முக்கிய கட்சிகளான தேசியவாத Sinn Fein, விசுவாசமான Democratic Unioninst Party (DUP) இரண்டும் இத்தகைய பெரும் வெட்டுக்களை எப்படி மக்களுக்கு தொகுத்து அளிப்பது என்பது பற்றிய உடன்பாட்டைக் காணமுடியவில்லை.

Sinn Fein வெட்டுக்களுக்கு எதிராக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், Belfast Telegraph  வந்துள்ள ஒரு சமீபத்திய தலையங்கம் உண்மையான உடன்பாடு ஏதும் இல்லை என்பதைத்தான் தெளிவுபடுத்தியுள்ளது. “இப்பொழுது கட்சிகள் வாதிட்டுக் கொண்டிருப்பது எந்த அளவிற்குச் சிக்கன நடவடிக்கைகள் உறுதியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான்உள்ளூராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்து ஆண்டுத் தொடக்கத்தில் வரவிருக்கையில், குறைப்புக்கள் விரைவில் தலையங்கங்களில் வந்தால், அதுவும் கடுமையான வகையில் என்று, வாக்காளர் எதிர்விளைவு பற்றி நரம்புத் தளர்ச்சியைக் கொண்டுள்ளன.

இரு கட்சிகளும் தங்கள் நடவடிக்கைகளை செயல்படுத்தியே தீர வேண்டும் என்றும் தலையங்கம் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது: “முடக்கமில்லாத வரிகள், இலவச உதவிகள் அளிப்பதை நிறுத்துதல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பொது வாகனங்களில் இலவசப் பயணச் சலுகையை நிறுத்துதல், நீர் வழங்குவதற்கு வரிவிதித்தல், போன்றவை.” கிட்டத்தட்ட 30,000 அல்லது கிட்டத்தட்ட 9 சதவிகிதப் பொதுத்துறை வேலைகள் அடுத்து நான்கு ஆண்டுகளில் குறைக்கப்படக்கூடும்.

DUP தலைவர் பீட்டர் ரோபின்சன் சமீபத்தில் அயர்லாந்துக் குடியரசு அறிவித்த ஐரோப்பிய ஒன்றிய -சர்வதேச நாணய நிதிய (EU-IMF) £83 பில்லியனில் பிணையெடுப்பின் ஒரு பகுதியான பல பில்லியன் யூரோக் குறைப்புக்கள், வடக்கு அயர்லாந்துப் பொருளாதாரத்தில்மும்மடங்கு விளைவைகொடுக்கும் என்றும், இது வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள செலவுக் குறைப்புக்கள் இன்னும் ஆழமடையலாம் என்று எச்சரித்துள்ளார்.