சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish government sends army to break air traffic controllers strike

ஸ்பெயின் அரசாங்கம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தை முறிக்க இராணுவத்தை அனுப்புகிறது

By Alejandro López and Alex Lantier
4 December 2010

Use this version to print | Send feedback

ஸ்பெயினின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியை (PSOE) சேர்ந்த பிரதம மந்திரி ஜோஸ் லூயி ஸபடேரோ பாதுகாப்பு அமைச்சரகம் ஸ்பெயினின் வான்வெளி கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டு அறிவித்த பின் ஸ்பெயினின் இராணுவம் நேற்று இரவு 10 விமான நிலையங்களின்மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. நேற்று மாலை ஸ்பெயினின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தம் ஸ்பெயினிலும் ஐரோப்பா முழுவதும் 330,000 பயணிகளை விமான நிலையங்களில் தங்கிநிற்க செய்துவிட்டது.

வெள்ளிக்கிழமை பிற்பகல் அமைச்சரகம் அவர்களுடைய பணி நிலைமைகளைப் பற்றி ஒரு ஆணையை இயற்றியபின் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த ஆணை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆண்டிற்கு 1,670 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், அதில் பெற்றோர்/தாய்மை விடுப்புக்கள் அல்லது நோய் விடுப்புக்கள் கணக்கில் இராது என்று கூறியுள்ளது. மேலும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்தால் உடனடியாக விமான நிலையங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உண்டு என்றும், நோய் விடுப்பு எடுத்துள்ள ஊழியர்கள் உண்மையிலேயே நோய்வாய்ப்பட்டுள்ளனரா என்று சோதிக்க மருத்துவர்கள் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும்  அது கூறியது.

ஆனால் இது தொழிலாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதலாகும். பெப்ருவரி மாதம் PSOE ஒரு ஆணையை வெளியிட்டு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஊதியங்களை 40% குறைத்து, பணிநேரங்களை அதிகரித்து, ஓய்வு நேரங்களையும் குறைத்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீண்டும் எதிர்ப்பை காட்டக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அரசாங்கம் இந்த ஆணையை இயற்றியிருக்கக்கூடும்

தொழிலாளர்களின் நிலைமைகள் பற்றிய இப்புதிய நடவடிக்கை  அரசாங்கம் நடத்தும் Aeropuertos Espanotes y Navegacion Aerea (AENA) அமைப்பு, ஸப்பாத்தேரோ அரசாங்கம் மற்றும் USCA எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் தொழிற்சங்கம் ஆகியவற்றிற்கு இடையே செப்டம்பர் கடைசியில் ஏற்பட்டிருந்த உடன்பாடு தெளிவாக மீறப்படுவதை தெளிவாக்குகிறது. குறிப்பாக எப்படி பணிநேரம் கணக்கிடப்படும் என்று அது குறிப்பிட்டிருந்த விதிகளை மீறுவது ஆகும்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று பிற்பகல் 5 மணியளில் நோய் விடுப்பு எடுத்துக் கொள்வதைத் தொடங்கினர். கிட்டத்தட்ட 70% பணியாளர்கள் நோய் விடுப்பை எடுத்தனர். இது அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும். பிரெஞ்சு செய்தி இதழான Le Point, “இந்தத் திடீர் இயக்கத்தின் சரியான காரணங்கள் புலப்படவில்லை, AENA உடைய தனியார்மயமாக்கப்படுதலை எதிர்க்கும் ஒரு வேலைநிறுத்தம் ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டிருந்ததுஎன்று கூறியுள்ளது.

இதன் பின் அரசாங்க அதிகாரிகள் தாங்கள் ஸ்பெயினின் வான்வெளியை இராணுவப்படுத்துவதற்கு ஒரு கூட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர். ஆனால் இந்த ஆணை உத்தியோகபூர்வ அரசாங்கப் பதிவிதழில் இரவு 9.30ல் வெளியிடப்படும் வரை காத்திருக்க நேர்ந்தது. அதற்கு முன் ஆணை செயலுக்கு வரமுடியாது. ஆணை செயலுக்க வந்துவுடன், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் ஒரு நெருக்கடிக் கூட்டத்தைக் கூட்டினர். இதில் ஸப்பாத்தேரோ, விமானப் படைத் தலைமைத் தளபதி ஜோஸ் ஜைம்நெஸ் ரூயி ஆகியோரும் இருந்தனர். தொழிலாளர்கள் இரவு 11 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு கட்டாயப்படுத்தும் உத்தரவில் ஸப்பாத்தேரோ கையெழுத்திட்டார்.

இரவு 11.30க்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரகம் பொது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்களில் இருக்க வேண்டும்என்று கோரிய அறிவிப்பை வெளியிட்டனர். இராணுவப் பொலிஸ் மாட்ரிட்டில், மாட்டிரிட்டின் பிரதான  Barajas விமான நிலையத்திற்கு அருகே இருந்த Hotel Auditoium ஐ அடைந்து, அங்கு நடந்து கொண்டிருந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கூட்டத்தை கலைத்து அவர்களைப் பணிக்குக் கட்டாயமாகத் திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு இராணுவத்தினர் Sevilla, Madrid, Barcelona, Canaias ஆகிய இடங்களில் உள்ள ஸ்பெயினின் மத்திய விமானக் கட்டுப்பாட்டு நிலையங்கள்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டனர். அவர்கள் கூடுதல் படைகளைக் கொண்டு Valladolid, Murcia, Salamanca, Toledo, Badajz, Leon, Zaragoza, Albaceteq ஆகிய விமான நிலையங்களின் பொதுஊழியர்கள் மீது கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதுடன், மற்றும் மாட்ரிட்டின் சிறிய Cuatro Vientos, Tonejon de Ardoz விமான நிலையங்கள்மீதும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவும் திட்டமிட்டனர்.

இராணுவப் பிரிவுகள் அவர்களுடைய வீடுகளில் இருந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளைக் கட்டாயமாகக் கைப்பற்றி அவர்களைக் கட்டுப்பாட்டுக் கோபுரங்களுக்குக் கொண்டுவந்து, “இராணுவ அதிகாரத்தின்கீழ்வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்தன. அரசாங்கம் இராணுவம் கொடுக்கும் ஆணைகளை மறுப்பது குற்றம் என்று கருதி, அவற்றை ஆறு மாதங்களில் இருந்து ஆறு ஆண்டுகள் வரை தண்டனை கொடுக்கும் குற்றமாகவும் கருதும்.

ஸ்பெயினின் நாளேடான Ei Pais  “ஒரு ஜனநாயக ஆட்சியின்கீழ் எந்த அரசாங்கத்தின் பிரதிபலிப்பும் இதுவரை இந்த பரிமாணங்களில்  இருந்ததில்லைஎன்று குறிப்பிட்டுள்ளது.

இன்னும் நேரடியாகக் கூற வேண்டும் என்றால், பொருளாதார வாழ்வை இராணுவமயப்படுத்தி வேலைநிறுத்த உரிமையை மிதித்துத் துவைக்கும் ஒரு அரசாங்கம் ஒரு அப்பட்டமான சர்வாதிகாரமாக சரிவதன் இறுதிக் கட்டங்களில்தான் உள்ளது என்று கூறவேண்டும். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும்  நடைபெறுவது போல் ஸ்பெயினிலும் அலையென நடைபெறும் ஊதிய மற்றும் சமூகநலச் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் முற்றிலும் ஜனநாயக ஆட்சிக்குப் பொருந்தியவை அல்ல.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தம் ஸப்பாத்தேரோவின் சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு எதிரான பெரும் வெகுஜன எதிர்ப்பிற்கு இடையே வந்துள்ளது. இதே போன்ற சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களால் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வாரங்கள் பிரிட்டனிலும் இத்தாலியிலும் பெரிய அளவிலான மாணவர் எதிர்ப்புக்கள், போர்த்துக்கலில் ஓர் ஒருநாள் தேசிய வேலைநிறுத்தம், பிரான்ஸில் மிகப் பெரிய அளவிலான எண்ணெய்துறை வேலைநிறுத்தம் தோல்வி அடைந்தது, கிரேக்க துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் அரசாங்கம் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று இட்ட ஆணையின் விளைவாக முறிக்கப்பட்டது ஆகியவற்றைக் கண்டுள்ளன.

ஸ்பெயினில் நாட்டின் தொழிலாளர் பிரிவில்  கிட்டத்தட்ட 70% ஆன 10 மில்லியன் தொழிலாளர்கள் செப்டம்பர் மாதம் தொழிற்சங்கங்கள் விடுத்த ஓர் ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தில் அணிவகுத்து நின்றனர். அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட El Pais கருத்துக் கணிப்பு ஒன்று பொருளாதார நெருக்கடியை ஸப்பாத்தேரோ கையாளும் முறையை 63% மக்கள் எதிர்த்தனர் என்று கூறுகிறது. அவர் ஓய்வூதியம் பெறத் தகுதியான வயதை 2 ஆண்டுகள் உயர்த்தியுள்ளார், அரசாங்கத் தொழிலாளர்களுக்கு ஊதிய வெட்டுக்களைக் கொடுத்துள்ளார் மற்றும் எளிதில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி, நீக்கும் வழிவகைகளைக் கொண்ட சீர்திருத்தங்களையும் செய்துள்ளார்.

புதன்கிழமை அன்று, ஸப்பாத்தேரோ வங்கிகள் மற்றும் நிதியச் சந்தைகளில் இருந்து வரும் அழுத்தத்தை மேற்கோளிட்டார். அவை புதிய சமூகநலச் செலவுக் குறைப்புக்களை நியாயப்படுத்துவதற்காக ஸ்பெயினின் பொதுக் கடனுக்கு எதிராக ஊக வணிகம் நடத்தின. இவற்றில் AENA 49% தனியார்மயமாக்கப்படும் என்று மட்டும் இல்லாமல், அரசாங்க லாட்டரி 30% தனியார்மயமாக்கப்படல், சிறு வணிக வரிகளில் வெட்டு, சிகரெட் வரிகள் அதிகரிப்பு மற்றும் நீண்டகால வேலையின்மையில் உள்ளோருக்கு கொடுக்கப்பட்ட மாதம் ஒன்றிற்கு 425 யூரோக்கள் உதவித்தொகை அகற்றப்பட்டது ஆகியவை அடங்கியிருந்தன. இத்திட்டம் பெப்ருவரி 2011ல் காலாவதியாகிவிடும்.

இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கக் குடும்பங்களை பேரழிவிற்கு உட்படுத்தும். குறிப்பாக நாடு 20% க்கும் மேலான வேலையின்மையை எதிர்கொண்டிருக்கையில். செய்தி ஊடகத் தகவல்கள்படி வேலையற்றோரில் 40% இனர் குடும்பத்தினருடன் வாழ்வதாக  தெரிகிறது.

வெகுஜனங்களை வறுமைப்படுத்தும் அதன் உந்துதலில் பொதுமக்கள் கருத்துக்களை திமிர்த்தனமாக அரசாங்கம் புறக்கணிக்கும் நிலைமையில், தொழிலாள வர்க்கத்திற்கும் ஸப்பாத்தேரோவிற்கும் இடையே எந்தப் போராட்டமும் ஒரு சாத்தியமான புரட்சிகர தன்மையை கொண்டுள்ளது. ஸப்பாத்தேரோவுடன் சமுகநலச் செலவுக் குறைப்புக்கள் பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தும் தொழிற்சங்கங்கள் அத்தகைய மோதல் பற்றி அஞ்சுவதுடன் தாங்கள் வேலைநிறுத்தங்களை எதிர்ப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Union Sindican de Controladores Aeros (USCA) ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தம் ஒன்றை தொழிலாளர் பிரிவில் 98%அதற்கு வாக்களித்திருந்தும்கூடக் கைவிட்டது. USCA தலைவர் ஸீசர் காபோ அப்பொழுது விளக்கினார்: “பொறுப்புணர்வை நிரூபிக்கும் வகையில், ஆகஸ்ட் மாதம் வேலைநிறுத்த உரிமையை பயன்படுத்துவதாக இல்லை என்று நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.”

இப்பொழுது தொழிற்சங்க அதிகாரிகள், செய்தி ஊடகத்திடம் முதலில் உத்தியோகபூர்வமற்ற வேலைநிறுத்தத்தினால் தாங்களும் வியப்பு அடைந்துள்ளதாக கூறியவர்கள், தாங்கள் வேலைநிறுத்தத்தை எதிர்ப்பதாக கூறியுள்ளனர். காபோ நேற்று தன்னுடைய Facebook பக்கத்தில் ஒரு குறிப்பில், “நாம் விமான நிலையங்களில் இயல்பு நிலை வருவதற்குப் பாடுபடுகிறோம், அதையொட்டி எங்கும் அமைதி நிலைவும். தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களை நெருக்கடியை தணிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறதுஎன்று அறிவித்துள்ளார்.

தொழிற்சங்கம்பல முறை அதன் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்துவது இயலாததாகிக் கொண்டு வருகிறது என்று எச்சரித்துள்ளதாகவும், இன்றுஅமைதி, நிதான உணர்வைக் கடைப்பிடித்தல் முக்கியம்என்று கோரியுள்ளது என்ற தகவலை EI Pais பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொழிற்சங்க அதிகாரிகள்வேலைநிறுத்தம் இல்லை என்றும் எதிர்ப்பு முற்றிலும்தன்னியல்பானதுஎன்றும் வலியுறுத்தியதாக EI Pais தெரிவிக்கிறது.