சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The persecution of WikiLeaks’ Julian Assange

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசேன்ஜ் மீது வழக்கு

Joseph Kishore
3 December 2010

Use this version to print | Send feedback

அமெரிக்க அரசும், பெரும் ஊடகத்தில் பேசி வரும் அதன் செய்தி தொடர்பாளர்களும், மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் கூட்டாளிகளும் விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேன்ஜிற்கு எதிராக வழக்கு தொடுப்பதிலும், அவர் மீது அவதூறு பரப்புவதிலும் ஒரு சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர் எந்த குற்றமும் செய்திருக்கவில்லை என்ற போதினும், இந்த பிரச்சாரம் அவர் செய்த எந்தவொரு ஒரு குற்றத்தோடும் தொடர்புபட்டதல்ல. உலகெங்கிலும் உள்ள ஏகாதிபத்திய சக்திகள்—எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவின் பொய்கள் மற்றும் கிரிமினல் செயல்பாடுகளின் மேற்தோலை உரித்துக்காட்டுவதில் அவர் பாத்திரம் வகித்தார் என்பதற்கான ஒரு சர்வதேச மனிதவேட்டைக்கு அவர் இலக்காக்கப்பட்டுள்ளார்.    

அதேபோன்ற மாஃபியா-வகையிலான குற்றச்சாட்டுக்கள் விக்கிலீக்ஸிற்கு எதிராகவும், சில ஆவணங்களைக் கசியவிட்டதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரைவேட் பிராட்லி மேன்னிங்கிற்கு எதிராகவும் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில், இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளும், அசேன்ஜ் கைது செய்யப்படுவதைப் பார்க்க அவர்களின் தீர்மானத்தில் ஒன்றுபட்டுள்ளனர். தற்போது ஒரு சட்டபூர்வமான காரணம் இல்லையென்றாலும் கூட, ஒரு போலியான காரணத்தின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக வழக்கை ஜோடித்து "இடைவெளியை மூடி வைக்குமாறு" அமெரிக்க நீதியரசர் ஆணையிட்டதைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் கசிவு செய்தவர்களையும், அத்துடன் விக்கிலீக்ஸையும் "கிரிமினல்கள்" என்று முத்திரை குத்தியிருக்கிறது.  

விக்கிலீக்ஸை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரைக் குத்த வேண்டும் என்று சராஹ் பலின் வலியுறுத்தி இருக்கின்ற நிலைமையில், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மைக் ஹக்கபீ மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேன்னிங்கிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்

வெளிநாட்டில் இருக்கும் வாஷிங்டனின் சிறிய கூட்டாளிகளும் அவர்களின் தாக்குதல்களோடு சமஅளவில் விடாப்பிடியாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அசேன்ஜ் "படுகொலை" செய்யப்பட வேண்டும்; இதற்காக ஒபாமா "ஓர் ஒப்பந்தத்தை அல்லது ஓர் ஆளில்லா விமானம் அல்லது ஏதோவொன்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கனேடிய பிரதம மந்திரியின் ஒரு முன்னாள் ஆலோசகரான டாம் பிளானாகன் அறிவித்தார். அமெரிக்காவின் மாயவேட்டைச் சேவையில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தையும் அந்நாட்டின் பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அசேன்ஜ் ஆஸ்திரேலிய குடிமகன் என்ற உண்மையும் கூட, அசேன்ஜின் நடவடிக்கைகள் "சட்டவிரோதமானவை" என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறுவதிலிருந்து அவரை தடுத்துவிடவில்லை.

ஸ்வீடனில் முரசொலிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், உடனடியாக கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலை அசேன்ஜ் முகங்கொடுக்கிறார். எப்போதும், தவறாகவும், பெரும் ஊடகங்களால் "கற்பழிப்பு" என்று கூறப்படும்—சட்டவிரோத பாலியல் நடத்தைமீறல் குற்றச்சாட்டுகளின் மீது, வியாழனன்று, ஸ்வீடன் அதிகாரிகளால் ஒரு புதிய கைது ஆணை பெறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களைக் கைவிடும்படி அரசுதரப்பு வழக்கறிஞர் உத்தரவிடும் அளவிற்கு, அவர்களாலேயே முதலில் இவை மிகவும் போலித்தனமாக கருதப்பட்டன. எவ்வாறிருப்பினும், இந்த தீர்மானம் மாற்றப்பட்டு, வியாழனன்று சர்வதேச பொலிஸிற்கு ஒரு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அசேன்ஜ் தங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் இடமான பிரிட்டனிலும் பொலிஸ் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது; இது இன்று நடந்தாலும் நடக்கலாம்.

ஸ்வீடனில் அசேன்ஜிற்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள், அவரை கைது செய்வதற்கு வசதியாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு போலிக்காரணம் மட்டும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

உண்மையில், அமெரிக்க தூதரிடம் இருந்து ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்ட ஓர் ஆவணமும் இதுவரை விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட பெரும் ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதில், அமெரிக்க இராணுவத்துடனான ஸ்வீடனின் நெருங்கிய உறவுகள், அதன் "உத்தியோகப்பூர்வ இராணுவக் கொள்கையின்படி பொய்யாக இருக்கிறது" என்று அந்த அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார். அமெரிக்க வெளியுறவுத்துறையிலிருந்து வெளியாகி இருக்கும் கசிவுகளில் ஒரு கருவுருவாக உருவாகத் தொடங்கி இருப்பது என்னவென்றால், இது "அரசாங்கத்தை உள்நாட்டு விமர்சனத்திற்கு உள்ளாக்கும்" என்பதால், இந்த உறவுகள் குறித்து வெளியிடக்கூடாது என்று அந்த தூதர் எச்சரிக்கிறார்.

விக்கிலீக்ஸால் கைப்பற்றப்பட்டிருக்கும் ஆவணங்கள்—இதிலிருந்து மிகக் குறைந்த அளவிற்கு மட்டும் இதுவரை வெளியிடப்பட்டிருக்கின்றன—உலக மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஒரு நிரந்தர சதியாக இருப்பது எது என்பதை வெளிப்படுத்த உதவும்: அதாவது, யெமனில் உள்நாட்டு குடிமக்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதை மூடிமறைப்பதில் இருந்து, சித்திரவதைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட CIA அதிகாரிகளின் குற்றவழக்கைத் தடுக்க திரைமறைவில் செய்த வேலைகள், சர்வதேச உடன்படிக்கைகளை மீறி ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை உளவு பார்த்தது ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.    

விக்கிலீக்ஸிற்கு எதிராக பிராச்சாரத்தை யார் முன்னெடுத்துச் செல்கிறார்களோ அவர்கள் தான் கொடூரமான மக்கள்விரோதப்போக்கிற்கு பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். 'விக்கிலீக்ஸ் வாழ்க்கையை ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது' என்ற அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் குற்றச்சாட்டுக்களுக்கு, அசேன்ஜ் Time இதழில் அளித்த ஒரு பேட்டியில் பொருத்தமான பிரதிபலிப்பை அளித்திருந்தார். “விக்கிலீக்ஸ் எந்தவொரு தனிநபருக்கும் ஒருபோதும் பாதிப்பை அளித்துவிடவில்லை. யாருடைய உடலைக் காயப்படுத்தும் வகையிலோ அல்லது யாரையும் தவறாக கைது செய்வது மற்றும் இதுபோன்று வேறு எதையும் முன் கொண்டு வரவில்லை. அது அமைப்புகளின் செயல்பாடுகளைக் காட்டும் ஆவணம், நூறு ஆயிரக்கணக்கானவர்களின் அல்லது இன்னும் சொல்லப்போனால் பல ஆண்டுகளின் அடிப்படையில், மில்லியன் கணக்கானவர்களின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பவர்களை வெளிப்படுத்திக் காட்ட நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்

அதே குற்றங்கள் தற்போது ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தொடர்கின்றன. விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ஆவணங்களில், ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ஓர் ஆவணம் குறிப்பாக மிகவும் இரகசியமாக இருக்கிறது. புஷ் நிர்வாகத்தால் நடத்தப்பட்ட சித்திரவதைகளைப் பற்றிய ஒரு புலனாய்வைக் கைவிடுவதற்கு ஸ்பானிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க, 2009 வசந்தகாலத்தில் குடியரசு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து ஒபாமா நிர்வாகம், குறுக்கீடு செய்தது.

வழக்குகள் அமெரிக்காவில் விசாரிக்கப்படாது அல்லது ஏற்றுக்கொள்ளப்படாது; மேலும் அது அமெரிக்க-ஸ்பானிய உறவுகளில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கும்" என்று வலியுறுத்த, ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்க தூதரகத்தின் ஒரு பிரதிநிதி, குடியரசு கட்சியின் முன்னாள் தலைவர் மெல் மார்டினெஜூடன் சேர்ந்து, அப்போது பதவியில் இருந்த ஸ்பானிய வெளியுறவு மந்திரியைச் சந்தித்தார். உடனே அந்த வழக்குகள் உடனடியாக முடக்கப்பட்டன.   

அந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்க அரசாங்கத்தின் பொய்களை வெளிப்படுத்த விக்கிலீக்ஸின் நடவடிக்கைகள் உதவி இருந்தால், அவையும் இந்த முக்கிய பொய் பிரச்சாரகர்களின்—அதாவது அமெரிக்க ஊடகங்களின்—பாத்திரமும் கூட வெளிப்பட்டிருக்கக் கூடும். விஷயத்தின் தன்மைக்கேற்ப அதை எங்கே சுய-தணிக்கை செய்ய வேண்டும்; மற்றும், இந்த அல்லது அந்த இராணுவ அமைப்புடன் அல்லது ஏனைய அரசு அமைப்புடன் "பின்புலத்தில் சேர்ந்து கொண்டு" எங்கே எதை அறிவிப்பதில் மறைக்க வேண்டும் என்ற இடத்திற்கு ஊடகங்களைக் கொண்டு வர, பல தசாப்தங்களாக அமெரிக்க அரசாங்கம் அவற்றை உழுது சாகுபடி செய்திருக்கிறது

அரசியல்ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செய்திகளைத் தாமதப்படுத்துவதில், வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகனுடன் சேர்ந்து வழக்கமாக முக்கிய கட்டுரைகளை முன்னனி நாளிதழ்கள்  செதுக்கிவிடும். ஆனால் தற்போது, ஊடகங்களின் ஒரு முக்கிய கடமையாக இருக்கக்கூடியது எதுவோ —அதாவது, அரசாங்க இரகசியங்களை வெளியிடுவதும், பொதுமக்களுக்குச் செய்திகளை அளிப்பதும்— அவற்றை அவை ஒரு கிரிமினல் நிறுவனங்களைப் போன்றிருந்து கையாளுகின்றன.    

உத்தியோகபூர்வ சேனல் மூலமாக வடிகட்டாமல், தகவல்களை அப்படியே பொதுமக்கள் அணுகுவதற்கு உதவும் இணையத்தின் சக்தியைக் குறித்து, குறிப்பாக முக்கிய ஊடகங்கள் மிக நீண்டகாலமாக கவலை கொண்டிருக்கின்றன. விக்கிலீக்ஸின் வெளியீடுகளைப் பயன்படுத்தி, இணைய வலைத் தளங்களின் மீது பெரும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இனிமேல் அமெரிக்க அரசாங்கத்தால் கூடுதல் பிரச்சாரம் திணிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.     

சேவை தடைபாடு மற்றும் சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது போன்றவற்றிற்காக விக்கிலீக்ஸின் வலத் தளம் ஏற்கனவே இலக்காக்கப்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் அதன் இணைய பின்புலத்தைப் பெறுவதற்கான முயற்சியில், Amazon இடமிருந்து சர்வர்களை வாடகைக்கு எடுத்தது. அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினராக இருந்து பின்னர் சுயாதீனமான செனட்டராக மாறியவரும், ஹோம்லாந்து செக்யூரிட்டி குழுவின் தலைவருமான ஜோசப் லெபர்மேனும் அளித்த வெளிப்படையான அழுத்தத்தின்கீழ், Amazon விக்கிலீக்ஸால் அதன் சர்வர்கள் பயன்படுத்தப்படுவதை புதனன்று முடக்கியது

அசேன்ஜ் மீதான அரசு வழக்கானது—பெரும் ஊடகங்களால் உற்சாகத்தோடு ஆதரிக்கப்படும் ஒன்று—அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் ஜனநாயக சீரழிவு எட்டமுடியாத நிலைக்கு போய்விட்டதன் ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. அமெரிக்க தலைமையின்கீழ் இருக்கும் உலக அரசாங்கங்கள்—நிதி அமைப்புகளுக்கான பல ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பிணையெடுப்புகள், சமூக வெட்டுக்கள் மீதான இரக்கமற்ற முறையீடுகள், யுத்த விரிவாக்கம் மற்றும் உலகளாவிய சூறையாடல் போன்றவற்றை நடத்தி வரும் அரசாங்கங்கள்—கடுமையான அதிருப்தி கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இரகசியத்தின் தேவை குறித்த (அரசாங்க ஆவணங்களைப் வெளியிட்டதன் மூலமாக இதைத் தான் விக்கிலீக்ஸ் மீறியிருக்கிறது) தொடர்ச்சியான வலியுறுத்தல்கள், அடிப்படையில் இந்த அரசாங்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமூக நலன்களுக்கும், பெரும்பான்மை மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கும் இடையிலான ஒன்றுக்கொன்று பொருந்தாத முரண்பாட்டிலிருந்து எழுகின்றன.  

இந்த வெளிப்பாட்டை சத்தமில்லாமல் செய்வதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் அசேன்ஜ் மீதான வழக்கு, வெறுமனே ஒரு தனிநபர் மீதான ஓர் அச்சுறுத்தல் அல்ல. விக்கிலீக்ஸிற்கு எதிராக செயல்படுத்தப்பட்டிருக்கும் முறைகள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதி அதிகாரத்துவங்களின் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் எதிராக பயன்படுத்தப்படும்.

விக்கிலீக்ஸிற்கு எதிராகவும், ஜூலியன் அசேன்ஜிற்கு எதிராகவும் நிறுத்தப்பட்டு வரும் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்; விக்கிலீக்ஸ் வைத்திருக்கும் அனைத்து ஆவணங்களையும் உலகின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் கோருகிறது

பகுப்பாய்வின் இறுதியில், அசேன்ஜிற்கு எதிராகவும் விக்கிலீக்ஸிற்கு எதிராகவும் பெரும் அச்சத்தால் நடத்தப்படும் மாயவேட்டையானது, அமெரிக்க ஆளும் மேற்தட்டின் மற்றும் அதன் அரசின் தரப்பில் இருக்கும் வலிமையின் அறிகுறியாக இல்லை. மாறாக, அது அச்சம் மற்றும் பலவீனத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன. நெருக்கடி மற்றும் அரசியல்-பொருளாதார அமைப்புமுறையின் ஸ்திரமின்மையில் துல்லியமாக நனவுபூர்வமாக இருக்கும் அவர்கள், அரசு குற்றங்கள் வெளியிடப்பட்டால் அமெரிக்காவிலும் உலகமெங்கிலும் அவர்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக எழும் பெருந்திரளான தொழிலாள வர்க்கத்தின் தவிர்க்கமுடியாத எழுச்சிக்கு எண்ணெய் ஊற்றும் என்று அஞ்சுகிறார்கள். ஒரு சர்வதேச அளவில் சமூக போராட்டங்களின் மீது எழும்பும் இந்த போராட்டத்தால் மட்டும் தான் அசேன்ஜிற்கும், விக்கிலீக்ஸிற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் சதிகளையும், குற்றங்களையும் வெளிச்சத்திற்கு இழுத்து வர விரும்பும் அனைவருக்கும் ஒரு சமரசமற்ற பாதுகாப்பை அளிக்க முடியும்.