சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

US and China in a diplomatic standoff over North Korea

வடகொரியா விடயத்தில் அமெரிக்காவும் சீனாவும் இராஜதந்திரரீதியான  முறுகல்நிலை

By John Chan
3 December 2010

Use this version to print | Send feedback

சென்ற வாரத்தில் இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் நிகழ்ந்த பீரங்கித் தாக்குதலினால் கொரிய தீபகற்பத்தில் தோன்றியிருக்கும் பதட்டங்களை ஒபாமா நிர்வாகம் சீனா மீதான அமெரிக்க அழுத்தத்தை தீவிரப்படுத்துவதற்கு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கான இன்னுமொரு அறிகுறியாய் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான இராஜதந்திரரீதியான முறுகல் நிலை தொடர்கிறது.

நவம்பர் 23 அன்று இயோன்பியோங் தீவில் வடகொரியாவின் பீரங்கித் தாக்குதலில் இரண்டு கடற்படையினரும், இரண்டு அப்பாவிகளும் உயிரிழந்தனர். இது ஆத்திரமூட்டும் செயலல்ல என்று வடகொரியா கூறினாலும் தென் கொரியா கூறுவதையே அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முழுமையாக வழிமொழிந்திருக்கின்றன. மஞ்சள் கடலில் நடந்த தென் கொரிய இராணுவப் பயிற்சிகளின் போது வட கொரியப் பிராந்தியத்திற்குள் குண்டுகள் வந்துவிழுந்ததற்குப் பதிலடி நடவடிக்கையாக தான் தாக்குதல் நடத்தியதாக வடகொரியா வலியுறுத்தியிருக்கிறது. சீனா இரண்டையுமே முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இந்த சம்பவ விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டியிருப்பதாய் கூறியிருக்கிறது. சென்ற வார இறுதியில் வடகொரியாவுக்கு பயணம் சென்ற அரசு செயலாளர் டாய் பிங்குவோ தென் கொரியாவின் குண்டுவீச்சால் வட கொரியாவுக்கு கணிசமான சேதம் உருவாகியுள்ளதாக கூறினார்.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், வடகொரியாவை அடக்கி வைக்க சீனா தலையிட வேண்டும் என்று தொடர்ந்து கோரும் அதே சமயத்தில்,  கொரிய மோதலை அமைதிப்படுத்த சீனா மேற்கொள்ளும் இராஜதந்திர முயற்சிகளைக் கண்டிக்கின்றன. வடகொரியா சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு வலிமையான செய்தியை (அரசுத் துறையின் வார்த்தைகளில்) அனுப்ப சீனாவை வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஹிலாரி கிளின்டன் சென்ற ஞாயிறன்று சீன அரசு செயலர் டாய் உடன் தொலைபேசியில் பேசினார்.

வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த பதட்டங்களைத் தணிக்க ஆரம்பத்தில் சீன ஆதரவுடன் தொடக்கப்பட்ட ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் ஆரம்பிக்க ஒரு அவசரகால கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சீனா விடுத்த கோரிக்கைகளை அமெரிக்காவும் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அதன் கூட்டாளிகளும் நிராகரித்து விட்டன. செவ்வாயன்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான ராபர்ட் கிப்ஸ் அமெரிக்காவிற்கும் மற்றும் இன்னும் பலருக்கும் இந்த பிராந்தியத்தில் தொடர்ச்சியான மக்கள்தொடர்பு நடவடிக்கைகளின் மூலம் ஸ்திரப்படுத்தும் ஆர்வம் இருக்கவில்லை. என அறிவித்தார். அதற்குப் பதிலாக அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்த வாரத்தில் வாஷிங்டனில் தங்களது சொந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.

அமெரிக்க கூட்டுப் படைத் தலைமையின் தலைவரான அட்மிரல் மைக்கேல் முல்லன் புதனன்று கூறினார்: “சீனாவின் பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பு நடவடிக்கைக்கான பதிலீடாக முடியாது. வட கொரியாவின் ஆத்திரமூட்டும், ஸ்திரத்தன்மையை குலைக்கின்ற நடத்தைக்கு பேரம்பேசுவதன் மூலமாக அல்லது புதிய ஊக்குவிப்புகளின் மூலமாக தொடர்ந்து நாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.” இத்தகைய கருத்துகள் கொரிய தீபகற்பத்தில் போரின் அபாயத்தை தீவிரப்படுத்துகின்றன.

வலிமையான அமெரிக்க ஆதரவின் பின்புலத்திலும் தனது சொந்த வலதுசாரி மகா தேசியக் கட்சியின் (GNP) அழுத்தத்திற்கு இடையிலும் தென்கொரிய ஜனாதிபதியான லீ மியுங்-பேக் திங்களன்று அளித்த தொலைக்காட்சி உரையில்இனிமேலும் கோபத்தைத் தூண்டினால் வட கொரியா அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தினார்.

வடகொரிய தாக்குதலுக்கு போதுமான தீவிரத்துடன் எதிர்வினையாற்றவில்லை என்கிற விமர்சனத்தை அடுத்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான கிம் டே-யங் சென்ற வாரத்தில் இராஜினாமா செய்தார். வட கொரிய பீரங்கி தளங்கள் மீது விமானப் படை குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்த அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தனர். கிம்மின் நீக்கம் லீயின் அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை அடையாளப்படுத்தியது. இயோன்பியோங் தீவில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள 3,000 துருப்புகளுக்கு கூடுதலாக அங்கு இன்னும் கனரக பீரங்கிகளும், கூடுதல் துருப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன.

தென் கொரியா சண்டைக்கான தனது இராணுவ விதிகளையும் மாற்றியிருக்கிறது. ஒரு சம்பவம் அதிக பதட்டநிலைக்கு இட்டுச் செல்வதை தடுக்கும் பொருட்டு சற்று தணிந்து பதிலடி கொடுக்கும் வகையில் (வட கொரியா பீரங்கி வீசினால் தெற்கு பீரங்கி நெருப்பால் பதிலளிக்கும்) முந்தைய விதிகள் இருந்தன. இப்போது தென்கொரிய இராணுவம் கூடுதலான விசையுடன் பதிலளிக்க அனுமதிக்கப்பட்டு ஒரு பரந்த மோதலைத் தூண்டுவதற்கு அச்சுறுத்துகிறது. மஞ்சள் கடலில் இப்போது தான் அமெரிக்க தென் கொரிய கடற்படை ஒத்திகைகள் புதனன்று முடிந்திருக்கும் நிலையில் இந்த மாதத்தில் இன்னுமொரு பெரும் இராணுவ ஒத்திகைக்கு தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அடுத்த திங்களன்று, தென்கொரியா தனது சொந்த கடற்படை ஒத்திகைகளை தீபகற்பப் பகுதியில் நடத்த இருக்கிறது வடகொரியாவுடன் மோதல் இருந்து வரும் நீர் எல்லைப் பகுதிகளிலும் இந்த ஒத்திகைகள் நடக்க இருக்கின்றன.

இயோன்பியோங் தீவில் அமெரிக்க போர்க் கப்பல்கள் இருக்கும் நிலையில் இத்தகையதொரு ஒத்திகைஒரு முற்றுமுழுதான போருக்கு இட்டுச் செல்லலாம் என்று வடகொரியா எச்சரித்ததை அடுத்து புதனன்று திட்டமிடப்பட்டிருந்த அதேபோன்ற ஒன்று சில மணி நேரங்களுக்கு முன்னதாய் கைவிடப்பட்டது.

மந்தமடையும் பொருளாதாரம் மற்றும் பெருகும் சமூக அமைதியின்மை ஆகியவற்றுக்கு இடையே லீக்கு வடகொரிய நெருக்கடியானது ஒரு வசதியான அரசியல் திசைதிருப்பலை வழங்கியிருக்கிறது. இந்த பீரங்கிக் குண்டு வந்து விழுந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத் தான், கலகத் தடுப்பு போலிசார் உல்சானில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் ஆலை உள்ளிருப்பு போராட்டத்தில் தாக்குதல் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 தற்காலிகத் தொழிலாளர்களை கைது செய்தனர். சென்ற வார இறுதியில் ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மற்ற ஆலைகளின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். தென் கொரியாவின் 5.3 மில்லியன் குறைவூதிய தற்காலிக தொழிலாளர்களிடையே அதிருப்தி பெருகி வருவதன் ஒரு அறிகுறியே இந்த போராட்டங்கள் ஆகும்.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் ஸ்திரமின்மை குறித்து ஆழமான கவலை கொண்டுள்ள சீனா பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சரான யாங் ஜியெச்சி புதனன்று அறிவித்தார்: “அதிகாரத்தையும் மோதலையும் காட்டுவது பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதோடு அவை சம்பந்தப்பட்ட தரப்புகளின் நலன்களுக்கு உகந்ததும் அல்ல”. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு ஒருவரின் இழப்பில் ஒருவர் பூச்சிய கூட்டுத்தொகை விளையாட்டு அல்ல (அதாவது ஒரு நாட்டின் இழப்பில் ஒரு நாடு பயனடையும் மோதல்) என்பதை அமெரிக்கா கருதிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்த வாரத்தில் வடகொரியாவின் பீரங்கிக் குண்டுவீச்சை கண்டனம் செய்து தென்கொரியா மற்றும் ஜப்பானின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க சீனா மறுத்து விட்டது. தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த மறைமுகமாய் அச்சுறுத்தும்முகமாக, வட கொரியா விடயத்தில்கண்டனம்” “மீறல் போன்ற வார்த்தைகளை சேர்ப்பதை சீனா எதிர்த்ததாய் கூறப்பட்டது.

சென்ற வாரம் மோசமான நிலைமைகளில் செய்ய வேண்டியது குறித்து கருத்து தெரிவிக்க அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் அழைத்திருந்த ஐந்து ஆய்வாளர்களின் கருத்துகள் சீனாவின் ஆளும் வட்டங்களில் நடக்கும் விவாதத்தை அடையாளம் காட்டின. தென்கொரியாவின் பெரும் மக்கள் வாழ் இடங்கள் மீது வட கொரியா தாக்குதலைத் தொடக்குமானால், அமெரிக்காவும் தென் கொரியாவும் வட கொரிய ஆட்சியைத் துக்கியெறிவதற்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்று சாங்காய் கிழக்காசிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த சாங் சுகியான் எச்சரித்தார். அவ்வாறு அந்த ஆட்சி வீழ்ச்சியடையும் பட்சத்தில் சீனாவுக்குள் அகதிகள் வெள்ளமெனப் புகுந்து விடாமல் தடுக்க 20 முதல் 30 கிலோமீட்டர் வரை அகன்ற இடை மண்டலத்தைக் கைப்பற்றும் வகையில் வட கொரியாவுக்குள் செல்ல சீன இராணுவம் தயாரித்துக் கொள்ளவும் அவர் வலியுறுத்தினார்.

இரண்டு கொரியாக்களுக்கும் இடையில் இரண்டாம் முறையாக பதிலடித் தாக்குதல் நிகழுமானால் அது ஒரு மோசமான சூழ்நிலையைக் கொணரும், அது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவையும் ஈடுபடத் தூண்டும் என்று தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹேன் சுடாங் தெரிவித்தார். அமெரிக்கா மின்னல் வேகத்தில் கொரிய தீபகற்பத்தில் தலையீடு செய்யும் என்று அவர் கூறினார். அத்தகையதொரு சூழ்நிலையில், பிராந்தியத்தின் இன்னொரு சக்தியான ரஷ்யா, வட கிழக்கு ஆசியாவின் பாதுகாப்பு நிலைமை மோசமடைவதையும் அமெரிக்கா இத்தீபகற்பத்தின் கட்டுப்பாட்டை கைக்குள் கொண்டு செல்வதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றார் அவர்.

அமெரிக்காவின் படைவலிமையைக் காட்டும் இன்னொரு நிகழ்வாக, இன்று ஆரம்பமாகும் பாரிய அமெரிக்க-ஜப்பான் ஒத்திகை பயிற்சிகளில் அணுச்சக்தி கொண்ட விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வாஷிங்டன் முன்னணியில் நிற்கும். இப்போது தான் இது மஞ்சள் கடலின் சீனக்கரையில் அமெரிக்க தென்கொரிய ஒத்திகைகளில் கலந்து கொண்டு விட்டு வந்திருந்தது. இந்த வாரத்தின் ஒத்திகைகளின் பெரும்பகுதி ஜப்பானுக்குக் கிழக்கே நடக்கும். ஆனாலும் சில ஒகினாவா (தெற்கின் இப்பகுதி தான் கிழக்கு சீனக் கடலில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு காரணமாய் அமைந்த சர்ச்சைக்குரிய சென்காகு/டயோயு தீவுகளை நிர்வகித்து வருவதாகும்) அருகே நடக்கும்.

டிசம்பர் 3 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜப்பான் போர் ஒத்திகைகள் 1986 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் மிகப் பெரிய ஒன்றாகும். இதில் 44000 துருப்புகளும், 60 போர்க் கப்பல்களும் 400 விமானங்களும் பங்கேற்கின்றன. இந்த மாதத்தின் பயிற்சிகளில் தீவுப் பாதுகாப்பும் இருக்கும். சென்காகு/டியோயு சர்ச்சை கிளர்ந்துள்ள வேளையில் இந்த அம்சம் குறிப்பாக பதட்டத்தை உருவாக்கத்தக்கதாகும். இந்த உள்ளடக்கத்தில் அமெரிக்க ஜப்பான் போர் ஒத்திகைகள் ஹிலாரி கிளின்டனின் இரண்டு சமீபத்திய அறிவிப்புகளுக்கு கூடுதல் பொருள் சேர்க்கின்றன. சென்காகு தீவுகள் விடயத்தில் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் சண்டை மூளுமானால் அமெரிக்க ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பானுக்கு இராணுவ ரீதியாய் உதவ அமெரிக்கா கடமை கொண்டிருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

தென்கொரியாவுடனும் ஜப்பானுடனும் இணைந்து நடத்தும் இந்த போர் ஒத்திகைகள் பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. எப்படியிருந்தபோதிலும், கொரிய தீபகற்பத்தில் உயர்ந்த பதட்டங்கள் நிலவி வரும் ஒரு நேரத்தில் அவற்றை தாமதிக்கவோ அல்லது இரத்து செய்யவோ சிந்திக்காமல் அமெரிக்காவும் ஜப்பானும் போர் ஒத்திகைகளைத் தொடர்கின்றன என்றால், அது ஆசியாவில் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை கீழறுக்க கடந்த வருடத்தில் அமெரிக்கா முன்னெடுத்த பரந்த தீவிரமான நடவடிக்கைகளின் ஒரு பாகம் ஆகும்.