சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The threat of dictatorship in Spain

ஸ்பெயினில் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல்

Robert Stevens
6 December 2010

Use this version to print | Send feedback

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தை தோற்கடிக்க விமானநிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரங்களை கைப்பற்ற இராணுவத்தைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசாங்கம் முடிவெடுத்தது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்குமான ஒரு எச்சரிக்கை ஆகும்.

ஸ்பானிய சோசலிசத் தொழிலாளர் கட்சியைச் (PSOE) சேர்ந்த பிரதமர் José Luis Zapateroவின் அரசாங்கமானது அரச உஷார் நிலையை பிரகடனப்படுத்தி இராணுவத்திடம் பரந்த அதிகாரங்களை ஒப்படைத்துள்ளது. இதன்மூலம் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாது செய்துள்ளது. இந்த நடவடிக்கையானதுசோசலிஸ்ட்அரசாங்கத்தின் முழுமையான வலதுசாரி குணத்தை அம்பலப்படுத்துகிறது. நிதிப் பிரபுத்துவத்தின் விருப்பத்தை திணிக்கும் தனது உறுதியில், 1975ன் ஜெனரல் பிராங்கோவின் பாசிச ஆட்சியின் முடிவுக்குப் பின் இதுவரை கண்டிராத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் எடுத்து வருகிறது.  

ஒரு போலிஸ் அரசின் துர்நாற்றம் மீண்டும் ஸ்பெயின் மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. 2200 வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களும் வெள்ளி மற்றும் சனியன்று துப்பாக்கி முனையில் வேலைக்குத் திரும்புமாறு செய்யப்பட்டுள்ளனர். விமானநிலைய கோபுரங்களின் கீழ் ஆயுதமேந்திய படைவீரர்கள் நிற்கிறார்கள். வேலையை நிறுத்தினால் உடனடியாகக் கைது செய்யப்படும் அச்சுறுத்தலின் கீழ் ஊழியர்கள் வான் போக்குவரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் முயற்சியாக, ஊழியர்கள் தங்களதுஏற்கவியலாத சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டையே பிணைக்கைதியாக்கி இருந்ததாகதுணைப் பிரதமர் Alfredo Pérez Rubalcaba கூறினார். அவர் மேலும் கூறினார்: “உடனடி விளைவாய் இப்போது அந்த ஊழியர்கள் வேலைக்குத் திரும்பும் உத்தரவின் கீழ் இருக்கிறார்கள், அத்துடன் வேலைக்குத் திரும்ப மறுத்தால் அவர்கள் மீது இராணுவ சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட முடியும். இந்த உஷார் நிலை ஆரம்பத்தில் 15 நாட்களுக்கு நீடிக்கும்.”

ருபால்கபாவின் கருத்து உண்மையை திருப்பிப் போடுவதாக இருக்கிறது. சிறப்புரிமைகளைப் பாதுகாக்க நாட்டையே பிணைக்கைதியாகப் பிடித்து வைப்பது விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் அல்ல, மாறாக ருபால்கபா யாருக்காகப் பேசுகிறாரோ அந்த ஆளும் வர்க்கம் தான். இந்த ஊழியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அதே வழிமுறைகள் தான் ஊதிய வெட்டையும் சிக்கனத்தையும் எதிர்க்கிற தொழிலாள வர்க்கத்தின் எந்த பிரிவுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்படும். உஷார் நிலை அறிவிக்கப்படும் ஒரு சில நாட்களுக்கு முன் புதன்கிழமை அன்று, ஸ்பெயின் புதிய சுற்று சமூக வெட்டுகளை நிறைவேற்றியது.

உஷார் நிலை காலத்தில் இந்த ஊழியர்கள் இராணுவ ஊழியர்களாக வகைப்படுத்தப் பெறுகின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உத்தரவுகளின் கீழ் அவர்கள் வேலைக்குச் செல்லத் தவறினால் இராணுவச் சட்டத்தின் 102வது பிரிவின் கீழ் உத்தரவுக்குக் கீழ்ப்படியாக் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள். இதற்கு அவர்கள் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வரை பெற முடியும்.

வெள்ளியன்று இந்த ஊழியர்கள் மருத்துவக் காரணங்களில் ஒட்டுமொத்தமாய் விடுப்பு எடுத்ததைத் தொடர்ந்து நடந்த ஒரு அவசரகால அமர்வில் PSOE அரசாங்கம் இந்த உஷார் நிலைக்கு உத்தரவிட்டது. ஐரோப்பா முழுவதும் உடனடியாக விமானப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலைக்கு இட்டுச் சென்ற தொழிலாளர்களது இந்த நடவடிக்கைக்கு காரணம் அமைச்சர்களது குழு ஒன்று வெள்ளியன்று நிறைவேற்றிய ஒரு தீர்மானம் தான். இந்த தீர்மானம் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் வேலை நிலைமைகளை மோசமாக்கியதோடு, அவர்களது வேலை நேரத்தையும் கணிசமாய் அதிகரித்தது. அதே நாளில் விமான நிலையங்களை இயக்கும் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனமான AENA ஐ தனியார்மயமாக்குவதை துவக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதலளித்தது.  

ஊடகங்களிடம் பேச இயன்ற தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான மிருகத்தனமான நிலைமைகளை விவரித்தனர். சண்டே டெலிகிராப் கூறுகையில், தொழிலாளர்களில் ஒருவர் இச்செய்தித்தாளிடம் பேசும்போதுபாதிக் குரலில் பேசினார், அவரது குரல் அலைபேசியில் நடுங்கியதுஎன்றது. மாட்ரிடின் பரஜாஸ் விமான நிலையத்தில் பணிபுரியும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர், “இப்போது உங்களிடம் நான் சரியாகப் பேச முடியாது. துப்பாக்கிகளுடன் காவல் படையினர் நிற்கின்றனர். நாங்கள் இப்போது வேலையைத் தொடங்கா விட்டால் கைது செய்யப்படுவோம்என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு கட்டுப்பாட்டு ஊழியரும் விமானப் போக்குவரத்துக்கு எதிராய் குற்றம்புரிந்திருப்பதான சாத்தியத்தை விசாரிக்க மாட்ரிட்டில் இருக்கும் அரசாங்க வழக்கறிஞர்கள் அலுவலகம் நீதிமன்ற நடைமுறைகளைத் தொடக்கியிருக்கிறது. தொழிலாளர்கள் எட்டு வருடம் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ளலாம் என்று இந்த அலுவலகம் கூறியது. 442 கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு எதிராக, அதாவது இந்த ஊழியர்களில் ஏறக்குறைய நான்கில் ஒருவருக்கு எதிராக, தனித்தனியான ஒழுங்கு நடவடிக்கைகளை AENA துவக்கியிருக்கிறது. இந்த நிகழ்வுகள் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களை முதுகில் குத்திய தொழிற்சங்கங்களின் பிற்போக்குப் பாத்திரத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன. வேலைநிறுத்தம் உத்தியோகபூர்வமற்றது என்றும் தன்னிச்சையானது என்றும் கூறி அதனை முதலில் கண்டித்த அவை, இப்போது ஒரு முணுமுணுப்பு கூட இன்றி அரச உஷார் நிலையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களில் 97 சதவீதம் பேரைக் கொண்டிருக்கும் The Unión Sindical de Controladores Aéreos (USCA) தனது உறுப்பினர்களுக்கு எதிராக இராணுவம் திரட்டப்படுவது குறித்து தனது வலைத் தளத்தில் ஒரு அறிக்கையைக் கூட கொண்டிருக்கவில்லை. இதேபோல் UGT (பொதுத் தொழிலாளர் சங்கம்) மற்றும் CCOO (தொழிலாளர்கள்வாரியம்) ஆகிய இரண்டு பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் எந்த அறிக்கையும் விடவில்லை.

இந்த ஊழியர்கள் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டபோது, USCA தலைவரான கமிலோ செலா சனிக்கிழமையன்று தொழிலாளர்கள் அமைதிகாக்க அழைப்பு விடுத்தார். “நிறுவனத் தாக்குதலின் இந்த அனைத்து மாதங்களிலும் நாம் காட்டியிருக்கக் கூடிய தொழில்முறை பண்புக்கு நான் விண்ணப்பிக்கிறேன்என்று அவர் அறிவித்தார்.

இத்தாக்குதலுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் முன்நிறுத்த மறுப்பதில் ஐக்கிய இடது கட்சி (Izquierda Unida) தொழிற்சங்கங்களுக்கு ஆதரவளிக்கிறது. இது ஸ்பெயினில் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான பிரதான போலி-இடது கூட்டணியாகும். சனியன்று ஐக்கிய இடதின் சார்பாக José Antonio García Rubio விடுத்த ஒரு அறிக்கையில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. “விமானப் கட்டுப்பாட்டு ஊழியர்களின் கோரிக்கைகளுடனோ அல்லது அவற்றை உருவாக்குவதற்கான வழிமுறைகளுடனோ ஐக்கிய இடது எந்த உடன்பாட்டையும் கொண்டிருக்கவில்லைஎன்று அந்த அறிக்கை அறிவித்தது.

ஐரோப்பா முழுவதிலும் ஊதியங்கள், வேலைகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களில் நிகழும் பெரும் வெட்டுகளுக்கு வெகுஜன மக்கள் காட்டும் எதிர்ப்பை நொறுக்க அரசாங்கங்கள் மேற்கொள்ளும் பெருகிய அடக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு வரிசையில் இராணுவ நடவடிக்கை என்பது சமீபத்திய வரவாகும்.  வேலைநிறுத்தங்களை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நொறுக்குவதற்கு முனையும் அரசியல் கட்சிகள், அவை ஓரளவுஇடதாகஇருந்தாலும் சரி அல்லதுவலதாகஇருந்தாலும் சரி, வெகுகாலமாய் இருந்து வரும் ஜனநாயக நிர்ணயங்களை புரட்டிப் போடுகின்றன. கிரீஸில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பார ஊர்தி வேலைநிறுத்தம் இராணுவத்தால் உடைக்கப்பட்டது; கலாச்சார அமைச்சக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது அவர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலிசார் பயன்படுத்தப்பட்டனர். பிரான்சில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலிசார் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பிரிட்டனில், போலிஸ் படைகள் தேசமெங்கும் மாணவர் ஆர்ப்பாட்டங்களுடன் மோதலில் இறங்கியதோடு பெரும் எண்ணிக்கையிலான கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

இந்த அரசாங்கங்கள் எல்லாம் முன்னெப்போதையும் விட அதிகமான மூர்க்கத்தனத்துடன் செயல்படும் வங்கிகளின் உத்தரவுகளை முன்னெடுத்துச் செயல்படுகின்றன.

ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுவது என்னவென்றால் அமலாக்கப்படும் இத்தகைய பெரும் சமூக வெட்டுகள் (உழைக்கும் மக்களை அவர்கள் காரணமாய் இராத ஒரு நெருக்கடிக்கு பணம் செலுத்தச் செய்வதற்காக) ஜனநாயக ஆட்சி அடிப்படையில் திணிக்கப்பட முடியாது என்பதைத் தான்.   

அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டுவது தான் ஸ்பெயினிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் இன்று மிக அவசரமான பணியாக இருக்கிறது. இந்த அடிப்படையில் மட்டுமே, நிதிப் பிரபுத்துவத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச தாக்குதலை எதிர்த்து அதனைத் தோற்கடிக்க உழைக்கும் மக்கள் ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த முடியும்.

சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது ஒரு தேசியப் பிரச்சினை அல்ல. நிதிய உயர்டுக்கிற்கு எதிரான ஒரு எதிர்த்தாக்குதலில் உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் ஐக்கியம் இதற்கு அவசியமாகிறது. இந்த தாக்குதல்களைத் தொடுக்கும் அரசாங்கங்களைக் கீழிறக்கி விட்டு சோசலிசக் கொள்கைகளுக்கு உறுதியெடுத்துக் கொண்ட ஜனநாயக தொழிலாளர்அரசாங்கங்களைக் கொண்டு அவற்றை இடம்பெயர்ப்பதை இந்த போராட்டங்கள் நோக்கமாய்க் கொண்டு அமைய வேண்டும்.