சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New WikiLeaks documents expose US foreign policy conspiracies

அமெரிக்க அயலுறவுக் கொள்கை சதிகளை அம்பலப்படுத்தும் புதிய விக்கிலீக்ஸ் ஆவணங்கள் 

By David Walsh
29 November 2010

Use this version to print | Send feedback

பல்வேறு பத்திரிகைகளுக்கு விக்கிலீக்ஸ் இணைய தளத்தால் வெளியிடப்பட்ட 250,000 தொகுதிகள் அடங்கிய அமெரிக்க இரகசிய ஆவணங்கள், அவற்றில் சில கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டன, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இழிவான நிலையையும், உலகத்தை ஏமாற்றிய அதன் சதித் திட்டங்களையும் அம்பலப்படுத்தியது. 

அடுத்துவர உள்ள கட்டுரையில் அந்த ஆவணங்களை உ.சோ.வ.தளம் இன்னும் அதிகமாக முழுமையாக ஆய்வு செய்ய உள்ளபோதிலும், அந்த ஆவணங்களில் "முக்கியமானவைகள்" த கார்டியன் மற்றும் நியூயோர்க் டைம்ஸ் ஆகியவற்றால் வெளியிடப்பட்டு வருகின்றன.  

அம்பலமான தகவல்கள் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட இரகசிய ஆவணங்களாகும், இவற்றில் சில 2010 தொடக்கத்தில் சமீபமாக அனுப்பப்பட்டவையாகும். இந்த இரகசிய ஆவணங்கள், இவற்றில் பெரும்பாலானவற்றின் தேதி  2007 லிருந்து 2010 வரையிலானவை, வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய கருத்துக்களும், தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை பற்றிய யூகங்களும், அமெரிக்க அயலுறவுக் கொள்கை செயல்பாடுகளை பற்றிய விவரங்களைக் கொண்டதாகவும் இருந்தன.     

அமெரிக்க அரசு துறையும், அமெரிக்க இராஜதந்திரமும் மிகப்பெரிய உளவாளிகள் வலையைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்திய இந்த அம்பலம் யாரையுமே ஆச்சரியப்பட வைத்திருக்காது. 

அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை எவ்வாறு சர்வதேச புலனாய்வு வலையமைப்பின் ஒரு அங்கமாகவே பயன்படுத்தியது என்பதையும், தூதரக அதிகாரிகள் தாங்கள் சந்திப்பவர்களிடமிருந்து தகவல் பெறுவது மட்டுமல்லாது, அடிக்கடி மேற்கொண்ட பயண எண்ணிக்கைகள், கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் மரபணு விவரங்கள் போன்ற அந்தரங்க விவரங்களையும் திரட்டி அனுப்பவும் பணிக்கப்பட்டார்கள் என்பதையும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்துவதாக கார்டியன் பத்திரிகை விளக்கியுள்ளது. 

" ஹிலாரி கிளின்டன் அல்லது அவரது முன்னோடி கொண்டலீசா ரைஸ் பெயரில் பிறப்பிக்கப்பட்ட இரகசிய 'மனித புலனாய்வு உத்தரவுகளில், இராணுவ நிலைகள், ஆயுதங்கள் இருக்கும் அடையாளங்கள், அரசியல் தலைவர்களின் வாகன விவரங்கள், கண்விழிப்படல பதிவுகள், விரல்ரேகைகள் மற்றும் மரபணு ஆகிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது."   

"ஐக்கிய நாடுகளின் தலைவர்கள்தான் வாஷிங்டனின் முக்கியமான சர்ச்சைக்குரிய இலக்காக" இருந்ததாக பிரிட்டிஷ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அம்பலமான ஆவணங்களில் ஒன்றில், உயர்மட்ட ஐ.நா. அதிகாரிகள் மற்றும் அவர்களது பணியாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் அலுவலக தொடர்புக்காக பயன்படுத்தும் தனியார் விஐபி வலையமைப்புகள் பற்றிய விவரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், கடவுச் சொற்கள் - பாஸ்வேர்ட் -, அந்தரங்க இரகசிய தகவல்கள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து அனுப்புமாறு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது." இதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் கருத்து தெரிவித்த ஐ.நா. பேச்சாளர்," இந்த செய்திகள் எங்களுக்கும் தெரியும்"என்றார்.   

வெளியானவற்றில் மற்றவைகள்: அரபு ஆட்சியாளர்களை சேர்ந்த ஏராளமான அதிகாரிகள், ஈரான் மீது குண்டு வீசி அதன் அணுத் திட்டங்களை அழிக்குமாறு அமெரிக்காவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் பைனான்சியல்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி: "ஈரான் மீது தாக்குமாறு அமெரிக்காவை அடிக்கடி தூண்டிய மன்னர் அப்துல்லாவை பற்றி 2008 ஏப்ரல் மாதத்தில் அப்போதைய புதிய மத்திய கட்டளைப் பிரிவு தலைவர் ஜெனரல் டேவிட் பீட்ரஸிடம் வாஷிங்டனுக்கான சவூதி தூதரக அதிகாரி பேசியுள்ளார்."  

அரபு நாடுகளின் நிலையோ "அணு ஆயுதம் ஈரானை இந்த பிராந்தியத்தில், குறிப்பாக தங்களது கூட்டாளியான அமெரிக்காவின் அதிகாரம் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் ஒரு தருணத்தில், நிச்சயம் ஒரு வல்லரசாக ஆக்கிவிடும் என்ற பயத்தைக் கொண்டதாக இருந்தது." 

"ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்தது குறித்த சந்தேகத்தை விக்கிலீக்ஸில் வெளியான ஆவணம் உறுதிபடுத்தும். பாதுகாப்புத் துறை அமைச்சரான எஹத் பரக், ஈரானின் அணு திட்டத்துடனான உடன்பாட்டிற்கு வர உலக நாடுகளுக்கு ஆறு முதல் 18 மாதங்கள் ஆனதாக 2009 ல் எச்சரித்ததாக அந்த ஆவணங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன" என்று தி பைனான்சியல் டைம்ஸ் மேலும் குறிப்பிடுகிறது.  

"சட்டவிரோத அணு உபகரண பயன்பாட்டுக்கு திருப்பிவிடப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்ததால் பாகிஸ்தான் அணு உலை ஆராய்ச்சி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற" 2007ம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா முயற்சித்து வருவதையும் விக்கிலீக்ஸின் புதிய ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன.( நியூயார்க் டைம்ஸ்) பாகிஸ்தான் அரசு தனது பங்கிற்கு, எரிபொருள் அகற்றம் என்ற வார்த்தையை ஊடகங்கள் அறிந்தால், அவை பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை அமெரிக்கா கைப்பற்றிவிட்டதாக சித்தரித்துவிடுமே என்று பயப்பட்டது.  

நியூயார்க் டைம்ஸ் கூறியதைப் போன்றே இது மதிப்புமிக்கதுதான்: "தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர்களை மீள்குடியமர்த்துமாறு மற்ற நாடுகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியபோது, 'நம் ஒரு உடன்பாடு செய்துகொள்ளலாம்' என்ற அமெரிக்க அரசின் பேரத்தில் அவர்கள் விருப்பமில்லாதவர்களாகிவிட்டனர். ஸ்லோவேனியா அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க விரும்பினால் ஒரு கைதியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டிடம் சொல்லப்பட்டது, அதேவேளை தீவு நாடான கிரிபாட்டிக்கு சீன முஸ்லிம் கைதிகளை எடுத்துக்கொள்ள மில்லியன் கணக்கான டாலர்கள் ஊக்குவிப்பு தொகையாக தரப்படும் என்று கூறப்பட்டதாக அந்த ஆவணங்களில் தூதர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, அதிகமான கைதிகளை ஏற்றுக்கொள்வது 'ஐரோப்பாவில் பெல்ஜியம் முக்கியத்துவம் பெறுவதற்கான குறைந்த செலவுடைய வழி' என்று அமெரிக்கர்கள் யோசனைக் கூறியுள்ளனர்."   

ஆப்கான் அரசு ஊழலில் மூழ்கிக்கொண்டிருப்பதையும் அமெரிக்க அதிகாரிகள் முற்றிலும் அறிந்திருந்ததாகவும், அந்த ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. கடந்த ஆண்டில் ஆப்கான் துணை அதிபர் அகமத் ஜியா மசூத் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்குள் நுழைந்தபோது 52 மில்லியன் டாலர்களை ரொக்கமாக கொண்டு சென்றதை அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்ததாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மசூத்" இறுதியில் அந்த பணத்தின் இடம் அல்லது ஆரம்பத்தை தெரிவிக்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டார்" என்று அந்த ஆவணங்களில் ஒன்று தெரிவிக்கிறது. 

தனது அசிங்கமான செயல்களினுள் உலக மக்களின் பார்வைபடுவதினால் அமெரிக்க அரசாங்கம் எரிச்சலுற்றுள்ளது. விக்கிலீக்ஸ் "பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயலை" செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளை மாளிகை முற்றிலும் ஒரு பாசாங்குத்தன அறிக்கையை வெளியிட்டது. விக்கிலீக்ஸ்" மனித உரிமைகளை மாத்திரம் ஆபத்தை ஏற்படுத்தாமல் (ஆவணங்களில் உள்ள பெயர்களுடைய) தனிநபர்களின் உயிர்களுக்கும் வேலைக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்திவிட்டதாக" அந்த பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

புதிய ஆவணங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர், ஆவணங்களை பகிரங்கமாக கிடைக்கச் செய்வது சட்டவிரோதமானது மற்றும் எண்ணிலடங்கா "தனிநபர்களின் உயிர்களை ஆபத்தில் வைத்துவிடும்" என்று விக்கிலீக்ஸூக்கு அமெரிக்க அரசாங்கம் மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. எந்தவித ஆதாரத்தையும் அளிக்காமல் இந்த ஆவணத்தை வெளியிடுவது "தற்போது நடந்துகொண்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளை ஆபத்திற்கு இட்டுசெல்லும்" மற்றும் " நாடுகளுக்கு இடையே தற்போது நடந்துகொண்டிருக்கும் ஒத்துழைப்பைக்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்" என்று நவம்பர் 28 ஆம் தேதியிட்ட அந்த கடிதம் கூறுகிறது.  

ஞாயிற்றுக்கிழமை மதியம், தனது இணைய தளம் அவதூறுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்தது." நாங்கள் தற்போது ஒரு மாபெரும் சேவை மறுப்பு தொந்தரவு தாக்குதலில் உள்ளோம்" என்று விக்கிலீக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது. DDOS தாக்குதல் என்பது வழங்கப்பட்ட இணைய தளத்தை, வழக்கம்போல் செய்வது போன்று தகவலுக்கான கோரிக்கைகளால் நிரப்பி, பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யாமல் இருப்பதற்கான ஒரு முயற்சியாகும். 

அமெரிக்க அரசின் சட்ட ஆலோசகர் Harold Hongju Koh வால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று விக்கிலீக்ஸின் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும், அவரது வழக்கறிஞர் ஜெனீஃபர் ராபின்சன்னுக்கும் அனுப்பப்பட்டது அசாஞ்சேவும், ராபின்சன்னும் பிரிட்டனுக்கான அமெரிக்க தூதரக அதிகாரி லூயிஸ் பி. சுஸ்மனுக்கு எழுதிய கடிதத்தில் தங்களது புதிய ஆவணங்கள் வெளியீட்டால் எந்த தனிநபர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கேட்டதோடு, அந்த ஆவணங்களில் ஓரளவை குறைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். 

அதற்கு Koh எழுதிய பதிலில், " சட்டவிரோதமாக பெற்ற அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை மேலும் வெளியீடுவது அல்லது விநியோகிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம்" என்று தெரிவித்தார். அமெரிக்க அதிகாரியின் அந்த கடிதம், விக்கிலீக்ஸூக்கு ரகசிய ஆவணங்கள் அளிக்கப்பட்டது மற்றும் அந்த அமைப்பு அதனை வைத்திருந்து அவற்றை வெளியிட்டதை உள்ளடக்கிய 'அமெரிக்க சட்டத்தை மீறிய' இரண்டு கோபக் குறிப்புகளை கொண்டிருந்தது. 

இந்த ஒப்புமை தற்போதைய சூழ்நிலையை நியாயப்படுத்தியபோதிலும் Koh வின் இந்த முயற்சி ஒரு கலவரக் கும்பலின் படுகொலையை நேரில் பார்த்து, அந்த கசப்பான சம்பவம் குறித்து சாட்சியமளிக்க வரும் ஒருவர் அல்லது ஒருத்திக்கு கடிதம் எழுதும் ஒரு மாஃபியா அடியாளை ஒத்ததாக இருக்கக்கூடும். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் பெருமளவிலான கொலை மற்றும் குற்றங்களாகும். விக்கிலீக்ஸூக்கு சட்ட உரிமை மட்டுமல்ல, இத்தகைய படுகொலைகளை நிறுத்த தனது அதிகாரத்திற்குட்பட்டு எதையும் செய்யக்கூடிய தார்மீக கடமையும் உள்ளது. இதே அடிப்படையில் தனது தரப்பிலான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாததால் பிரதான ஊடகங்கள் மீதான களங்கம் என்றுமே நிலைத்திருக்கும். 

விக்கிலீக்ஸின் ஆவணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாக வாஷிங்டன், அந்த ஆவணங்கள் தொடர்பான தனது சொந்த கதையை கடந்த வாரத்தின் மத்தியில் வெளியிட்டது. அயலுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளின்டன் உள்பட அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கங்கள் மற்றும் தலைவர்களிடம் உஷார்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் கடந்த சில நாட்களாக அவசர அவசரமாக முயற்சித்து வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமையன்று ரகசிய இடம் ஒன்றிலிருந்து வீடியோ மூலமாக தொடர்புகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அசான்ஜே, " ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அவசியமான ஒவ்வொரு முக்கிய பிரச்னைகளை குறித்தே நாங்கள் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அலசுகின்றன" என்றார். இந்நிலையில் விக்கிலீக்ஸின் நிறுவனர், தனக்கு எதிராக ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாற்றை எதிர்கொண்டுள்ளார். 

வாஷிங்டன் மற்றும் அன்காரா ஆகியவை தங்களது "தீவிரவாத" குழுக்கள் பட்டியலில் வைத்திருந்த இயக்கமான துருக்கியிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) , அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆதரவளித்தது என்ற பகிரங்கமாக வெளியான ஆவணங்கள், கார்டியன் அல்லது டைம்ஸ் பத்திரிகைகளில் இன்னும் வெளியாகவில்லை; அவற்றில் மிகச்சிறிய அளவை மட்டும் அப்பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. 

அமெரிக்க அரசின் கொள்கை " PKK க்கு ஆதரவாக ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப்போவதுமில்லை. இதற்குமாறாக வேறு எந்த அர்த்தம் கொண்டாலும் அது முட்டாள்தனமானது " என்று அன்காராவிலுள்ள அமெரிக்க தூதரக பேச்சாளரான Deborah Guido செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துருக்கி விமர்சகர்கள் அந்த செய்தியை அதிகம் நம்புவதுபோல் இருந்தனர். 

"2003 ல் துருக்கி மண்ணின் வாயிலாக ஈராக்கினுள் நுழைய அமெரிக்காவை துருக்கி அனுமதிக்காததன் காரணமாக அமெரிக்கா PKK க்கு ஆதரவளித்திருக்கலாம்" என்று USAK ஆராய்ச்சி நிறுவனத்தின் அமெரிக்க ஆய்வுகளுக்கான மையத்தின் நிபுணர் Mehmet Yegin கூறியதாக துருக்கியின் ஹூரியத் பத்திரிகையின் ஆங்கில பதிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அமெரிக்கா- பிரிட்டன் இடையேயான உறவு தொடர்பான மேலும் பல முக்கியமான ஆவணங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் டேவிட் கேம்ரானை பற்றிய நையாண்டித்தனமான விமர்சனங்கள் உள்ளிட்டவை அமெரிக்க தூதரக ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது." உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்களிலிருந்து அனுப்பப்பட்ட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்கள் உள்பட, குறிப்பாக பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருப்பதாக கூறப்படும் 'சிறப்பு உறவின்' பின்னணியில் உள்ள உண்மைகளை அம்பலப்படுத்தும் லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

"பிரிட்டன் குறித்து உண்மையில் அமெரிக்கா என்ன நினைத்தது என்பது குறித்த ரகசிய மதிப்பீடுகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிடப்போகிறது என்று எச்சரிப்பதற்காக லண்டனுக்கான அமெரிக்க தூதர் முன்னெப்போதும் இல்லாதவகையில் டவுனிங் தெருவுக்கு ( பிரிட்டன் பிரதமரின் இல்லம்) தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டார்." 

விக்கிலீக்ஸ் ஆவணங்களால் உலகளவில் தூதரகங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, மிக ஆபத்த்தான நிலையில் உள்ள சர்வதேச சூழ்நிலைகள் மற்றும் பல நெருப்பு முனைகளைப்பற்றி பேசுகிறது. இவை இனி பற்றிக்கொள்ள அதிக எண்ணெய் தேவைப்படாது. 

மேலும், ஒரு கணினி வங்கி மற்றும் அமெரிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவில் உள்ள அனுதாபிகளைக் கொண்ட ஒரு சிறிய அமைப்பால் இந்த அளவுக்கு சூறாவளியை ஏற்படுத்த முடியுமென்றால் அது, அமெரிக்காவின் அன்றாட நடவடிக்கைகளை விளக்குவதோடு, அதன் ஏகாதிபத்திய வீழ்ச்சி, குழப்பம் மற்றும் தன்னிலை இழப்புக்கு சான்றாக உள்ளது. அமெரிக்க அயலுறவுக் கொள்கை, திடீரென முன் ஆயத்தமில்லா மற்றும் வன்முறை திட்டத்தோடு அடுத்ததற்கு தாவுவதாகவும், ஆத்திரமாகவும், எதிரிகள் மற்றும் "நண்பர்கள்' மாதிரியானவர்கள் குறித்த அச்சத்துடனும் நிலையற்றதாக உள்ளது.