சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Police brutally attack protesters as UK parliament backs university fees hike

இங்கிலாந்துப் பாராளுமன்றம் பல்கலைக்கழக பயிற்சி கட்டணத்தை அதிகரிக்கையில் எதிர்ப்பாளர்களை பொலிஸ் மிருகத்தனமாகத் தாக்குகிறது

By Julie Hyland                  
10 December 2010

Use this version to print | Send feedback

நேற்று பாராளுமன்றம் பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை மும்மடங்காக அதிகரிக்க வாக்களித்தது. அதே நேரத்தில் சுற்றிவளைப்பில் அகப்பட்டுக்கொண்ட மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் மிருகத்தனமாகத் தாக்கினர். குதிரைப் பொலிசார் பல முறையும் பாராளுமன்றத்திற்கு வெளியே குழுமியிருந்த மாணவர்கள்மீது தாக்குதல்களை நடத்தி, ஏராளமானவர்களைக் கைதும் செய்தனர். மாலை வரை எதிர்ப்பாளர்கள் காவலில் வைக்கப்பட்டனர்; மத்திய லண்டன் முழுவதும் பொலிஸ் சுற்றி வளைத்திருந்ததை மீறி மாணவர்கள் தப்பிக்க முயன்றதை அடுத்து பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன.

இது கல்விக்கட்டண உயர்விற்கு எதிராக மாணவர்கள் நடத்திய ஐந்தாம் நாள் நடவடிக்கையாகும். பெரும்பாலான எதிர்ப்புக்கள் பொதுத் தேர்தலுக்கு முன்பு பயிற்சிக் கட்டணத்தையே அகற்றுவதாக ஒரு பொது உறுதி மொழியில்  கையெழுத்திட்டிருந்த லிபரல் டெமக்ராட்டுக்களுக்கு எதிராக இவை இயக்கப்பட்டன. கன்சர்வேடிவ்களுடன் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்தவுடனேயே இந்த உறுதிமொழி கட்சித் தலைவர் நிக் கிளெக்கினால் தூர எறியப்பட்டது. இப்பொழுது லிபரல் டெமக்ராட்டுக்கள் கட்டணங்களை 9,000 பவுண்டுகள் என்று உயர்த்துவதற்கு வாக்களித்துள்ளனர்.

சட்டம் மீதான வாக்களிப்பு 323 இற்கு 302 ஆக பதிவானபோது அரசாங்கத்தின் பெரும்பான்மை 81 அதிகம் என்பதில் இருந்து 21 ஆக  குறைந்துவிட்டது. லிபரல் டெமக்ராட்டுக்களில் 21 பேர் கட்டண உயர்விற்கு எதிராக வாக்களித்தனர், எட்டு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. சட்டத்திற்கு எதிராக வாக்களித்த லிபரல் டெமக்ராட்டுக்களில் தங்கள் மந்திரிப் பதவிகளை எதிர்ப்புக்காட்டும் வகையில் இராஜிநாமா செய்த மைக் க்ரோக்கர்ட், ஜேன்னி வில்லோட், மற்றும் இரு முன்னாள் கட்சித் தலைவர்களான சார்ல்ஸ் கென்னடி மற்றும் சர் மென்சியஸ் காம்ப்பெல் ஆகியோரும் இருந்தனர். இதேபோல் சிறு எண்ணிக்கையிலான டோரி எதிர்ப்பாளர்களில் பிரதம மந்திரி டேவிட் காமரோனுக்கு எதிராக முன்பு தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட டேவிட் டேவிஸும் அடங்குவார்.

சட்டவரைவு இயற்றப்படுவதற்கு ஆபத்து இல்லாமல் எதிர்ப்புக் காட்டினால் அது அவர்களுடைய நலன்களுக்கு உகந்தது என்று அரசாங்கத்திற்குள் கருதியவர்களின் கௌரவத்தைக் காப்பாற்றிய செயற்பாட்டின் தன்மையை இந்த எதிர்ப்பு கொண்டிருந்தது.

வாக்களிப்பிற்கு முந்தைய நாட்களில், இன்றைய பிரிட்டஷ் நிதிநிலைமையில், பொருளாதார அடிப்படையில் கல்விக்கட்டண அதிகரிப்பு தேவையானது என்று கிளெக் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். பில்லியன் கணக்கான நிதி கொடுக்கப்பட்டு வங்கிகள் பிணை எடுக்கப்பட்டுள்ளன; பெரும் செல்வந்தர்களுடைய செல்வத்தில் இருந்து நிதி பெறுவதற்கு ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. மாறாக, பிரிட்டனின் ஆளும் உயரடுக்கு பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி பொதுநலச் செலவுக் குறைப்புக்களில் சிக்கனத் தொகையான 83 பில்லியன் பவுண்டுகளை செயல்படுத்துவதின் மூலம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நிலைமைகள், உரிமைகள்மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது..

கல்விக்கட்டண உயர்வு உயர்கல்விக்கான நிதியத்தில் அரசாங்கம் மிருகத்தன வெட்டுக்களைச் செயல்படுத்துவதை ஒட்டி ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திய  செலவினங்கள் பற்றிய விரிவான பரிசீலனை (Comprehensive Spending Review) உயர் கல்விக்கான செலவில் 40 சதவிகிதத்தைக் குறைத்துவிட்டது. அறிவியல், பொறியியல், கணிதம்  ஆகியவற்றைத் தவிர மற்ற பாடத்திட்டங்களுக்கு கற்பிக்கும் மானியங்களை நிறுத்திவிடுவது என்று அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது. இதனால் முழுத்துறைகளும், கல்வி அமைப்புக்களுமே கூட மூடப்படலாம்.

இக்குறைப்புக்களை ஈடுகட்டும் வகையில் கல்விக்கட்டணத்தை அதிகரித்துள்ளதனூடாக உயர்கல்வியின் செலவு முழுவதும் மாணவர்களால் ஏற்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

வியாழனன்று டெலிகிராப்பில் எழுதிய பல பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இந்த நடவடிக்கை கலைகள், மனிதவியல் பாடங்கள், சமூக அறிவியல் போன்ற பாடத்திட்டங்களை அழித்துவிடும், அதே நேரத்தில் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் உள்ள  “பெரும்பாலான மாணவர்கள்பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும்போது வாங்கிய கடன்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் என 35,000 பவுண்டுகள் முதல் 40,000 பவுண்டுகள் கடனுடன் செல்வர்என்று எச்சரித்தனர்.

வியாழக்கிழமை நடந்த வாக்களிப்பு ஒரு பரந்த செய்தியை கொடுக்கும் நோக்கத்தையும் பெற்றிருந்தது. தொழிலாளர் வர்க்க மக்களின் சமூக நிலைமையின்மீது பேரழிவு கொடுக்கும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்னும் நிதிய உயரடுக்கின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பின்வாங்குதல் ஏதும் இராது என்பதே அது. எனவேதான் கடந்த சில நாட்களாக கிளெக் அரசாங்கத்தில் உள்ள எல்லா லிபரல் டெமக்ராட் மந்திரிகளும் கட்டண உயர்விற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று உறுதி கொடுத்து வந்திருந்தார்.

இச்சட்டம் இயற்றப்பட்டது தேசிய மாணவர் சங்கம் (NUS) சோசலிச தொழிலாளர் கட்சி போன்ற போலி இடது கட்சிகளுடைய ஆதரவுடன் நடத்திய பிரச்சாரத்தின் அரசியல் முட்டுச் சந்தைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது. எதிர்ப்புக்கள் மட்டுமே அரசாங்கத்தைப் பின்வாங்கச் செய்வதற்கு போதும் என்று இவை கூறிவந்தன. அத்தகைய கூற்றங்கள் இப்பொழுது தயாரிக்கப்படும் வர்க்கத் தாக்குதலின் உண்மையான தன்மை பற்றித் தொழிலாளர்களிடமும் இளைஞர்களிடமும் மறைத்துவிடத்தான் உதவும். பின்வாங்குதலுக்கு மாறாக, கூட்டணி அரசாங்கம் ஈராக் போரின்போது டோனி பிளேயர் கூறிந மந்திரத்தைத்தான் எடுத்துள்ளது. அரசாங்கத்திற்கான பரிசோதனை என்பது மக்கள் விருப்பத்தை அது புறக்கணிக்கும் உறுதியைப் பொறுத்துள்ளது என வலியுறுத்தப்படுகிறது.

எதிர்ப்பைச் சமாளிக்கவும் மற்றவர்களை மிரட்டவும், அராசங்கம் ஆயிரக்கணக்கான பொலிசாரை மாணவ ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்க்கத் திரட்டியது. தலைநகரில் முன்பு நடைபெற்ற மாணவர் எதிர்ப்புக்கள் அனைத்துமே பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குதலுக்கு உட்படுத்தியதில்தான் முடிந்தது. இவற்றுள் பலரும் சிறுவயதுப் பள்ளி மாணவர்கள்; அத்தாக்குதல்களில் பல போலிக்காரணங்களால் கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல மணி நேரம்சுற்றிவளைக்கப்பட்டனர்”. இதில் பல நிகழ்வுகள் நள்ளிரவிலோ, செய்தி ஊடகத்தின் பார்வையில் இருந்து ஒதுங்கியோ நடத்தப்பட்டன; அல்லது பல முக்கியச் செய்தி ஊடகங்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன.

நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு, NUS தலைவர் ஆரோன் போர்ட்டர் உட்பட 28 “செயலாற்றுபவர்கள்மற்றும் பிறரால் கையெழுத்திடப்பட்ட ஒரு கடிதம், எதிர்ப்பாளர்களை மீண்டும் தாக்க வேண்டாம் என்று பொலிஸுடன் வாதிட்டது. இக்கடிதம் அசாதாரணமானது, ஏனெனில் பிரிட்டனில் வர்கக உறவுகளின் நிலைப்பாடு பற்றி இது தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பிரிட்டனின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் சீரிய மரபுகளுக்கு ஏற்ப நாங்கள் அணிவகுத்துச் செல்லுவோம். நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் குரல்கள் கேட்கப்பட வேண்டும், பொலிஸாரால் பாதிப்பிற்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதுதான்என்று கடிதம் கூறியது.

பொலிஸ், முந்தையவன்முறை தந்திரோபாயங்களால் பொது ஒழுங்கின்மையைத் தீவிரமாகத் தூண்டியதுஎன்று கடிதம் கூறியுள்ளது; மேலும் அத்தகைய நடவடிக்கைசட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆபத்திற்கு உட்படுத்துகின்றன”. மேலும்அதிகமான வன்முறை நடவடிக்கைகள்உறவுகளைமுற்றிலும் அழித்துவிடக்கூடும்என்றும் கடிதம் எச்சரித்தது.

எங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் குழுமியுள்ள நிலையில், குழந்தைகளையும் பிரிட்டனின் இளைஞர்களையும் பொலிஸ் பாதுகாக்க வேண்டும்என்று கடிதம் கோரி, “எங்கள் நடவடிக்கையை அமைதியான முறையில் எதிர்கொள்ளுமாறும் போலிசைக் கேட்டுக் கொள்ளுகிறோம்என்று முடிவுரையாக எழுதியுள்ளது.

பொலிஸாரும் அவர்களுடைய அரசியல் ஊதியம் கொடுப்பவர்களும் அத்தகைய வேண்டுகோள் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டனர். பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்த காட்சிகள் முன்னொருபோதும் நடந்திராத ஒன்றாகும்.  அப்பட்டமான ஆத்திரமூட்டும் செயலில் ஏராளமான வரிசைகளில் பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாராளுமன்றச் சதுக்கத்தில் பொறியில் சிக்க வைத்துத் தாக்கினர். பட்டப்பகலில், செய்தி ஊடகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் பல முறை குதிரைப்படையினர்களைக் கொண்டு கூட்டத்திற்குள் புகுந்து தாக்கினர். மயக்கமுற்ற நிலையில் இருந்த மாணவர் ஒருவரைப் பொலிசார் தூக்கிச்சென்ற காட்சி ஒன்று வீடியோவில் பதிவாகியுள்ளது; அவர் மோசமாக தலையில் காயமடைந்திருந்தார்.

முந்தைய பொலிஸ் தாக்குதல்களில் எதிர்ப்பாளர்களுடைய வன்முறைக்காகவேநடைபெற்றன எனக்கூறிய விதத்தில் பொலிஸுடன் இணைந்த வகையில் பேசியதால் பல மாணவர்களின் இகழ்வைப் போர்ட்டர் பெற்றதைத் தொடர்ந்து, NUS தனது சிதைந்துவிட்ட நம்பகத் தன்மையை மீட்பதற்கான தாமதமான முயற்சியைத்தான் இக்கடிதம் பிரதிபலிக்கிறதுஆனால் திரைக்குப் பின்னால் NUS அரசாங்கத்துடன் உயர் கல்விக்குமாற்றிட்டு நிதிய நடவடிக்கைகளை முன்வைப்பதற்குத் தொடர்பு கொண்டது என்பது தெரியவந்துள்ளது. அதாவது மிக வறிய மாணவர்கள்மீது  தாக்குவதின் மூலம்.

வணிக மந்திரி வின்ஸ் கேபிள்ஸ் அலுவலகம், போர்ட்டர் மற்றும் NUS அரசியல் அதிகாரி கிரீம் வைஸ் ஆகியோருக்கு இடையே நடந்த மின்னஞ்சல் பறிமாற்றம் கசிந்து வந்துள்ளது, அரசாங்கம் பராமரிப்பு மானியங்களில் 800 மில்லியன் பவுண்டுகள் குறைத்தல், கற்பிப்பதற்கான உயர்கல்வி நிதியத்தில் £2.4 மில்லியன் குறைப்பு மற்றும் பல ஆராய்ச்சித் திட்டங்களில் இருந்து £300 மில்லியனில் இருந்து £700 வரை குறைப்புக்கள் ஆகியவற்றை NUS முன்வைத்த திட்டங்களைக் காட்டுகிறது.

இத்திட்டமிடப்பட்ட பராமரிப்பு மானியங்கள் மற்றும் உயர் கல்வி நிதியங்களில் குறைப்புக்கள் என்பவை முறையே 61%, 48% என இருக்கும்.

கல்விக் வெட்டுக்களில் ஒத்துழைத்தற்காக அகற்றப்பட்டபின், NUS “தற்போதைதைய அளவுகளில் கட்டணங்கள் எவ்வாறு நீடித்து வைக்க முடியும் என்பதை நிரூபிக்குமாறு டாக்டர் கேபிளால் கேட்கப்பட்டதாகவும், அவருடைய வேண்டுகோளின்படி நாங்கள் எப்படிக் குறைப்புக்கள் செய்யப்படலாம் என மாதிரிகளைக் காட்டினோம்என்றும் போர்ட்டர் கூறினார்.

பொலிஸுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பகிரங்கக் கடிதம் ஒரு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் க்ருட்டாஸால் கையெழுத்திடப்பட்டுள்ளது. தொழிற்கட்சி கட்சி அல்லது தொழிற்சங்கக் கூட்டு அமைப்பு (TUC) ஆகியவை எதிர்ப்பு உரிமையைக் பாதுகாத்து ஒரு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. கூட்டணி அரசாங்கத்துடன் கொள்கை அடிப்படையில் அவை எந்த வேறுபாடையும் கொண்டிருக்கவில்லை. கல்விக்கட்டணத்தையே தொழிற்கட்சிதான் அறிமுகப்படுத்தியது; பிரௌன் பிரபுவின்கீழ் உயர்கல்வி நிதியைப் பரிசீலிக்க அது நியமித்த ஆய்வுக்குழு கட்டணத்திற்கு உச்சவரம்பு ஏதும் தேவையில்லை என்ற கருத்தை முன்வைத்தது. இப்பொழுது எதிர்ப்பைக் காட்டுவது போன்ற தோற்றத்தை அவை கொடுப்பது இழிந்த வகையில் அரசியல் நடத்துவதற்கு ஒப்பாகும்.

NHS க்கும் முழு தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அரசியல் ஆதரவாகப் போலி இடது குழுக்கள் செயல்படுகின்றன. போர்ட்டரும் மற்றவர்களும் இரட்டைவேடச் செயல் புரிந்தனர் என்பதற்காக மாணவ எதிர்ப்பாளர்கள் அவர்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறுகையில், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) அத்தகைய கோரிக்கைகளைஐக்கியம்வேண்டும் எனக் காரணம் காட்டி நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க TUC அதிகாரத்துவம் ஆகியவற்றிற்கு எதிரான எத்தகைய அரசியல் போரட்டத்திற்கும் அது இன்னும் அதிக விரோதப்போக்கைத்தான் கொண்டுள்ளது.

உத்தியோகபூர்வக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் லண்டன் பொலிஸ் ஆகியவற்றின் நடவடிக்கைகள் ஒரு பிரத்தியேகபிரிட்டிஷ்நிகழ்வாக இல்லை. ஐரோப்பா முழுவதுமே, கன்சர்வேடிவ், தொழிற் கட்சி அரசாங்கங்கள் வேறுபாடின்றி நிதியத் தன்னலக்குழுவின் சார்பில் கடும் சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தி வருகின்றன. தொழிற்சங்கங்கள் சில பெயரளவு எதிர்ப்புக்கள், வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தன என்றால், அது இச்செயற்பட்டியலை எளிதாக்குவதற்கு சீற்றத்தை திசைதிருப்பும் வழியை ஒட்டித்தான்.

இதற்கிடையில் அரசாங்கம் பெருகும் சமூக எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் சர்வாதிகார விடையிறுப்பைத் தயாரிக்கிறது. கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றில் வேலைநிறுத்தங்கள், மாணவர்கள் எதிர்ப்புக்கள் ஆகியவை பொலிஸ் தாக்குதல்களுக்கு உட்பட்டன. ஸ்பெயினில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் நிலைமைகளைக் காக்க வேலைநிறுத்தம் செய்தபோது இராணுவ எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டு ஆயுதமேந்திய பொலிசால் பணிபுரியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதற்கு எதிராக, தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு உணர்மைமிக்க அரசியல் திருப்பமாக முதலாளித்துவ இலாப முறை, அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கான சுயாதீன அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும்.