சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Spain’s air traffic controllers targeted for escalating state repression

ஸ்பெயினின் அதிகரிக்கும் அரசு ஒடுக்குமுறைக்கு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் குறிவைக்கப்படுகின்றனர்

Paul Mitchell and Chris Marsden
11 December 2010

Use this version to print | Send feedback

சென்ற வார இறுதியில் ஒரு வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்த நூற்றுக்கணக்கான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு எட்டு வருடங்கள் வரை சிறைத் தண்டனை அளிக்கக் கோரி வாதிடுகிறார் ஸ்பேனிய சோசலிசத் தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்கத்தின் தலைமை சட்ட அலுவலரான அட்டர்னி ஜெனரல் Cándido Conde-Pumpido. இந்த ஊழியர்கள் விமானப் போக்குவரத்துக்கான குற்றவியல் சட்ட நடைமுறையின் கீழ் தேசத் துரோக குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க இருக்கிறார்கள்.

இந்த ஊழியர்கள் கிளர்ச்சியாளர்கள் என்று கண்டிக்கப்பட்டு அரசின் முழு சக்திக்கும் முகம்கொடுக்க இருக்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம்சட்டத்திற்கு எதிரான பகிரங்கமான கிளர்ச்சிஎன்றும்அரசியல்சட்ட ஒழுங்கிற்கான அவமரியாதைஎன்றும் பிரதமர் ஜோஸ் லூயிஸ் சப்பாத்தேரோ வருணித்தார்.

வார இறுதியில் நாம் கண்டது போன்ற நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சட்டத்தின் அனைத்து சாதனங்களையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்காது என்பதோடு எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்என்று சப்பாத்தேரோ அறிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நிலைமைகளைப் பாதுகாத்தும், அரசு நடத்தும் AENA (Aeropuertos Españoles y Navegación Aérea)வின் 49 சதவீதத்தை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்த்தும் ஒட்டுமொத்தமாய் மருத்துவ விடுப்பு எடுத்தது தான் இந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் செய்தகுற்றம்”. இவர்களில் 90 சதவீதம் பேர் ஒரு வருடத்திற்கு சட்டப்பூர்வமாய் வேலை செய்ய வேண்டிய அளவான 1,670 மணி நேரம் என்பதை ஏற்கனவே செய்துமுடித்து விட்டிருந்தனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கம், இந்த ஊழியர்களின் வேலை மணித்தியாலங்களை 1,200லிருந்து அதிகரித்தது. ஓவர்டைமை அதிகப்பட்சமாய் ஒரு வருடத்திற்கு 80 மணித்தியலாங்கள் என வெட்டியிருந்தது. அத்துடன் ஊதியங்களையும் பாதியாகக் குறைத்திருந்தது.

வேலை நடவடிக்கைக்கு பதிலிறுப்பாக PSOE  அரசாங்கம் 15 நாள் அரச உஷார் நிலையை அறிவித்தது. 1975ல் பிராங்கோவின் பாசிச சர்வாதிகாரம் வீழ்ந்த பிறகு இத்தகைய ஒன்று அறிவிக்கப்படுவது இது முதன்முறை ஆகும். இந்த ஊழியர்கள் அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்த விடுதியில் இருந்து துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை இராணுவக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கின் கீழாய் வைக்கும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட பலவந்தம் செய்யப்பட்டனர். அப்போது முதல் அவர்கள் தொடர்ந்த போலிஸ் கண்காணிப்பின் கீழ் தான் வேலைசெய்து வருகிறார்கள். 190க்கும் அதிகமான விமானப் படை அதிகாரிகள் ஸ்பெயினின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரங்களை கண்காணித்து வருகின்றனர். 2,000க்கும் அதிகமான போலிசார் விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் இந்த தொழிற்துறை போராட்ட நடவடிக்கையை தடுப்பதான சாக்கில் சப்பாத்தேரோ இப்போது அவசரநிலை அதிகாரங்களை நீட்டிப்பதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார். வேலைநீக்கம் செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் வேலையில் இராணுவ வீரர்கள் பயிற்சியளிக்கப்படுவதற்கும் இக்காலம் அனுமதிக்கும். இத்தகையதொரு வேலைநிறுத்த போராட்டம்இனியொரு முறைநடவாமல் தடுப்பதற்கான உயர்மட்ட இரகசிய அவசரகால திட்டம் ஒன்றை அரசாங்கம் விவாதித்து வருவதாக துணைப் பிரதமர் அல்பிரடோ பெரெஸ் ருபால்கபா தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் ஊழியர்கள்நீதிமன்ற வழக்குகளையும் நிர்வாக தண்டனைகளையும் அடுத்தடுத்து எதிர்கொள்ள நேரிடும்என்றும் அவர் எச்சரித்தார்.

விசாரணையை எதிர்கொள்ளும் ஊழியர்களில் முதல் 100 பேர் கொண்ட குழு மாட்ரிட்டில் வியாழனன்று அரசு வழக்கறிஞர் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு இராணுவம் தான் பொறுப்பு என்பதால் அவர்கள் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறி பலர் சாட்சியமளிக்க மறுத்தனர். கட்டுப்பாட்டு ஊழியர்கள் 442 பேருக்கு எதிராக AENAவும் ஒழுங்கு நடவடிக்கைக்கு துவக்கமளித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயணிகள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் அரசு விசாரணை அமைப்பினர் ஆகியோரும் ஊழியர்களை ஆண்டியாக்குவதற்குரிய வழக்குகளைத் தயாரித்து வருவதாக El Mundo தெரிவிக்கிறது.

ஸ்பெயினில் இப்போது கோரப்படுகிற சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த தான் எதனையும் செய்ய தயாராய் இருப்பதாக சர்வதேச முதலீட்டாளர்களுக்குக் காட்டும் பொருட்டு PSOE அரசாங்கம் இத்தகைய நச்சுத்தன்மையான வகையில் செயல்பட்டிருக்கிறது. சப்பாத்தேரோவுக்கு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு போற்றிப் பாடும் அறிக்கை மூலம் பரிசளித்தளித்துள்ளது. “அரசாங்கத்தின் கடுமையான பதிலடி ஸ்பெயின் பிரதமரின் கவுரவத்தை உயர்த்தியிருப்பதோடு நிறைவேறும் சீர்திருத்தங்களில் அவருக்கு கூடுதலான ஆதரவையும் கொண்டுவரக் கூடும்.”

சப்பாத்தேரோவின் நடவடிக்கைகள்உழைப்பு, ஓய்வூதியச் செலவுகள் மற்றும் வங்கித் துறை ஆகியவற்றில் கடுமையான சீர்திருத்தங்களைக் கோருகிற கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம்புகழ் பெற்றிருப்பதாக அமெரிக்க பெருவணிக்கத்தின் அந்த பத்திரிகை தெரிவித்தது. வலதுசாரி எதிர்க்கட்சியான மக்கள் கட்சியின் (Popular Party) தலைவரான மரியானோ ரஜோயுடன் தொடர்ந்து விவாதித்து அவருக்கும் விடயங்களின் விவரங்கள் தெரியுமாறுசபடேரோ பார்த்துக் கொண்டார்.  

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் மூலமாக PSOE பெற்றிருக்கக் கூடிய ஆதரவு எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அமெரிக்க பெரு வணிகத்தின் முக்கியமான கருவியான இந்த பத்திரிகை தெளிவுபட எடுத்துரைக்கிறது. “ஸ்பெயினின் நொடிந்திருக்கும் வங்கித் துறையை உறுதிப்படுத்துவதற்கும்” “முழு நேர ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஆதாயங்களை இறுக்கமாய் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளர் சந்தையைஎதிர்கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்செலுத்துவதற்கு.

ஒப்பீட்டளவில் உயர்ந்த ஊதியம் பெறும் இந்த ஊழியர்களுக்கு எதிராக சில தொழிலாளர்கள் மத்தியில் விசிறி விடப்பட்டிருக்கும் குழப்பமான மனோநிலையை PSOE சுரண்ட முடிகிறது என்றால் அந்த புண்ணியம் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் போலி இடது குழுக்கள் வழங்கும் செயலூக்கத்துடனான ஆதரவுக்குத் தான் போய்ச் சேர வேண்டும். இந்த அமைப்புகளின் பரப்புரை ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

PSOE உடன் இணைந்த UGT (பொதுவான தொழிலாளர் சங்கம்) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் CC.OO (தொழிலாளர்ஆணையங்கள்) ஆகிய இரண்டு முக்கிய தொழிற்சங்க அமைப்புகளுமே விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் மீது தான் தாக்குதல் தொடுக்கின்றன. இந்த ஊழியர்களின் நடவடிக்கைஎந்த வகையிலும் நியாயமற்றதுஎன்றது UGT. CC.OO இன்னும் கூடுதலாய் நஞ்சைக் கக்கியது. இந்த வேலைநிறுத்தம்சகிக்க முடியாததுஎன்றும் வழக்கமான தொழிற்சங்கநடைமுறைகளுக்கு அந்நியமானதுஎன்றும் அதனால் நாம்மிகவும் சக்திவாய்ந்த வகையிலும் தீவிரமாகவும் நிராகரிப்பதற்குத் தகுதியானதுஎன்றும் அது கூறியது. அந்த ஊழியர்கள்நிறுவனமும் அரசாங்கமும் செல்லம் கொடுத்து கெடுத்திருந்த ஒரு பெருநிறுவனக் குழுஎன்று தாக்குதல் தொடுத்த CC.OO அவர்கள்தொழிலாளர் சட்டத்தை மதிக்க வேண்டும்என்று கோரியது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் சங்கமான USCA (Unión Sindical de Controladores Aéreos)  தனது பங்கிற்கு வேலைநிறுத்தத்திற்காக துரிதமாய் மன்னிப்பு கேட்டதோடு அந்த வேலைநிறுத்தம் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒன்று அல்ல என்றும் வலியுறுத்தியது.

ஸ்ராலினிஸ்டுகள் தலைமையில் பல்வேறு குட்டி முதலாளித்துவ குழுக்களும் கூட்டாய் நிற்கிற ஐக்கிய இடது கட்சி (Izquierda Unida-IU) அரசு உஷார் நிலை அறிவித்த தினத்தன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. “விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் கோரிக்கைகளிலோ அல்லது அவற்றைப் பெறுவதற்கான அவர்களின் வழிமுறைகளிலோதங்களுக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை என்று அந்த அறிக்கை பெருவணிகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் மறுஉறுதியை அளிப்பதாய் இருந்தது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் இந்த மனோநிலையை ஐயப்பாட்டிற்கு இடமின்றி ஐக்கிய இடது கட்சி கண்டனம் செய்கிறது....ஏனென்றால் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அல்ல, தொழிலாளர் மற்றும் சமூக உரிமைகளையும், வேலைநிறுத்தத்திற்கான உரிமையையும் கூட பாதுகாக்க முடியாமல் பலவீனமடைந்து இருக்கிறோம்என்று அக்கட்சியின் நாடாளுமன்ற சபாநாயகரான Gaspar Llamazares டெபுடிஸ்களுக்கான காங்கிரசில் தெரிவித்தார்.

இது உண்மைநிலையை புரட்டிப் போட்டு காட்டுவதாய் இருக்கிறது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களை ஐக்கிய இடது பாதுகாக்க மறுத்ததும், அரசு ஒடுக்குமுறையின் வரிசையில் அது நின்று கொண்டதும் தான் அரசாங்கத்தை வலுப்படுத்தியிருந்தது. இந்த வெறுப்பூட்டுகிற காட்டிக் கொடுப்பால் உருவாக்கப்பட்ட இந்த முன்னுதாரணம், அதாவது தொழிலக நடவடிக்கைக்கான பதிலிறுப்பாக இராணுவ ஆட்சியைத் திணிக்கும் நடவடிக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படக் கூடும், பயன்படுத்தப்படும். அடுத்தடுத்த அந்த சந்தர்ப்பங்களிலும் இதுபோன்றேஅடிப்படை சேவையில்இருக்கும் தொழிலாளர்கள்நாட்டையே பணயக்கைதியாய் பிடித்துக் கொண்டிருப்பதாககூறுவதும் கைகோர்த்து வரும்.  

தொழிற்சங்க எந்திரமும் அதனைச் சுற்றிச் சுழலும் போலி-இடது குழுக்களும் ஒவ்வொரு நாட்டிலும் இதே பாத்திரத்தையே ஆற்றி வருகின்றன. ஐரோப்பா முழுவதிலுமே, பத்து மில்லியன்கணக்கான மக்களை வேலைவாய்ப்பற்ற நிலைமைக்குள் தள்ளவும் கூடுதலாய் இன்னும் பத்து மில்லியன்கணக்கான மக்களை வறுமையில் தள்ளவும் அச்சுறுத்துகிற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அபிவிருத்தியுறும் எந்த மற்றும் எல்லா போராட்டங்களையும் தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுக்கின்றன.

இந்த துரோகத்தால் துணிச்சல் பெற்று, ஒவ்வொரு நிறத்திலும் இருக்கும் அரசாங்கங்களும் (ஸ்பெயின் மற்றும் கிரீஸில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் கன்சர்வேடிவ் அரசாங்கங்கள்) வேலைநிறுத்தங்களை உடைப்பதற்கும் மாணவர்கள் மற்றும் மற்றவர்களின் ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்துவதற்கும் போலிஸ் அராஜகத்தை பயன்படுத்துகின்றன.

இதனை நிறுத்தக் கூறுவதற்கான நேரம் வந்து விட்டது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு எதிரான சட்டபூர்வ தாக்குதலைக் கண்டிக்கவும், அரசு உஷார் நிலையை உடனடியாக நிறுத்துவதற்கு கோரவும் மற்றும் அனைத்து குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் திரும்ப பெறுவதற்குக் கோரவும் ஸ்பெயினிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை உலக சோசலிச வலைத் தளம் வலியுறுத்துகிறது. பெரு வணிகங்கள் மற்றும் அரசின் சார்பான ஐந்தாவது தூணாய் செயல்படும் தொழிற்சங்கங்களின் இற்றுப் போன அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிரான ஒரு அரசியல் கிளர்ச்சிக்கான ஆரம்பப் புள்ளியாக இது இருக்க வேண்டும்.