சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British student left with brain injury after police attacks on fees protest

கல்விப் பயிற்சிக் கட்டண அதிகரிப்பு எதிர்ப்பில் பொலிஸ் தாக்குதல்களில் பிரிட்டிஷ் மாணவரின் மூளை காயத்தினால் பாதிப்பு

By Chris Marsden
11 December 2010

Use this version to print | Send feedback

டிசம்பர் 9ம் திகதி லண்டனில் கல்விப் பயிற்சிக் கட்டண எதிர்ப்புக்களின்போது பொலிஸின் தடியால் தாக்கப்பட்டு மிடில்செக்ஸ் பல்கலைக்கழக 20 வயது மாணவர் ஆல்பி மெடோஸ் மூளையில் இரத்தக் கசிவு காயமடைந்தார்.

ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் பொலிசாரின்சுற்றிவளைத்தலில்இருந்து Westminster Abbey யை விட்டு வெளியேற முயற்சி செய்தபோது மெடோஸ் தலையில் தாக்கப்பட்டார். சுற்றிவளைத்தல் என்பது பொலிஸ் தந்திரோபாயமாக எதிர்ப்பாளர்களைச் சிறு பகுதிகளில் உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் பெறமுடியாமல் பல மணி நேரங்களாகச் சுற்றிவளைத்து அடைக்கும் தந்திரோபாயம் ஆகும். இது முறையான சட்டவழியில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டாயமாகச் சிறை வைப்பதற்கு ஒப்பாகும்.

தன்னுடைய நண்பர்கள் மற்றும் இரு விரிவுரையாளர்களான அவருடைய தாயாரின் சக ஊழியர் நீனாபவர் மற்றும் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தத்துவ விரிவிரையாளர் பீட்டர் ஹால்வர்ட் ஆகியோருடன் எதிர்ப்பில் கலந்து கொண்டார் என்று BBC தெரிவிக்கிறது.

தன்னுடைய தாயார் சூசன், ஓர் ஆங்கில விரிவுரையாளராக ரோஹம்ப்படன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், ஆர்ப்பாட்டத்தில் மகனிடமிருந்து பிரிக்கப்பட்ட அவரிடம் காயமடைந்தது தெரிவிக்கப்பட்டது. அவர்களை சந்தித்தபோது மெடோஸ் தன்னுடைய காயம்வாழ்க்கையிலேயே தான் உணர்ந்த மிகப் பெரிய அடிஎன்று விவரித்தார்.

 “மேல்புற காயம் பெரிதாக இல்லை, ஆனால் அடிபட்ட மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அவருடைய மூளையிலிருந்து இரத்தம் கசிந்ததுஎன்று தாயார் BBC இடம் கூறினார். “அடிப்படையில் நேற்று இரவு அவருக்கு ஒரு முடக்கம் ஏற்பட்டது. அவரால் பேசமுடியவில்லை, கையையும் அசைக்க முடியவில்லை.”

சாரிங் க்ராஸ் மருத்துவமனையில் மெடோஸுக்கு மூன்று மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்று, அவர் இப்பொழுது உடல்நலம் தேறி வருகிறார், “நன்கு பேச, செயல்பட முடிகிறதுஎன்று அவருடைய தாயார் விளக்கினார். “இது நடப்பதற்கு முன் ஆல்பி என்னிடம் எவரோ கொல்லப்படப்போகிறார்என்றார்பொலிசார் அவருக்கு மருந்துவ ஊர்தி அளிக்க முன்வந்தார், ஆனால் அதிர்ச்சியில் இருந்த அவர் எந்த அளவிற்கு காயம் தீவிரம் என்று உணரவில்லை.”

நேற்று பிரிட்டனின் செய்தி ஊடகம் எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்களுக்கு எதிராக ஒரு கூட்டுச் சீற்ற ஒலியை முற்றிலும் எதிர்பார்த்த வகையில் வெளியிட்டன. இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவருடைய மனைவி காமிலா இருவரும் பயணத்திருந்த ஒரு காரின் சன்னலை உடைத்து, காரின்மீது வண்ணத்தை எறிந்த அரை டஜன் எதிர்ப்பாளர்கள் பங்கு கொண்ட நிகழ்வு பற்றி செய்தித்தாள்கள் தங்கள் சீற்றக் குவிப்பைக் கொண்டிருந்தன.

Daily Mirror  “பொலிசுடன் கடும் சண்டைகளிட்ட குண்டர்கள்பற்றி எழுதியது. The Telegraph 30,000 மாணவர்கள்பாராளுமன்றச் சதுக்கத்தைமுற்றுகையிட்டது குறித்து எழுதியது. ஆர்ப்பாட்டத்தினர் செய்திருந்த வன்முறைச் செயல்கள் பற்றி ஒரு புகைப்படக் குவியலையும் வெளியிட்டு வாசகர்களை, “மாணவக் கலகக்காரர்களை உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி வையுங்கள்என்று கோரியுள்ளது.

Herald  ஆராயாத வகையில் ஸ்காட்லாந்த் யார்ட் செய்தித் தொடர்பாளர்இதற்கும் அமைதியான எதிர்ப்பு என்பதற்கும் தொடர்பே இல்லைஎன்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. மெட்ரோபோலிடன் பொலிஸ் ஆணையர் சர் பால் ஸ்டீபன்சன் எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்துவதில் வன்முறையைக் கையாண்டதால் போலிசார் எதிர்ப்புக்களை அதிகரித்துவிட்டனர்என்ற கூற்றுக்களை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட பெரும் சோகம் ததும்பிய நிகழ்ச்சியாகியிருக்க வேண்டிய ஆல்பி மெடோஸ் பற்றியது போன்றவற்றை, டிசம்பர் 9 ஆர்ப்பாட்டத்தில் வன்முறைக்கு முக்கிய ஆதாரம் பொலிஸ்தான் என்பதை, இத்தகைய ஒருதலைப்பட்சத் தகவல்கள் உண்மையை மறைக்கின்றன.

கிட்டத்தட்ட 2,800 பொலிசார் பல மணி நேரம் முடிவின்றி அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றிவளைப்பதில் ஈடுபடுத்தப்பட்டனர். எத்தகைய அமைதியான கீழ்ப்படிய மறுத்தலின் வெளிப்பாட்டிற்கும் பொலிசார் நச்சுத்தன்மையை விடையிறுப்பாகக் காட்டினர்அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதைத்  தடிகளாலும், கேடயங்களாலும் தாக்க முடிந்தவர்களை தாக்கும் விதத்தில் தேவையற்றுத் தலையிட்டனர்.

பொலிஸ் உத்திகளைச் சற்று மிருதுவாகவேனும் வினாவிற்கு உட்படுத்திய முக்கியச் செய்தி அமைப்புக்களில்  கார்டியனும்  ஒன்றாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் இரவு 11.30 வரை சுற்றிவளைக்கப்பட்டு, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் பல மணி நேரங்கள் கடும் குளிர் நேரத்திலும் மறுக்கப்பட்ட நிலையில் என்று அது குறிப்பிட்டுள்ளது. “பிற்பகலில் சூழ்நிலை பெரிதும் அமைதியாகவும், கிட்டத்தட்ட  மகிழ்ச்சியாகவும் கூட இருந்தது. ஆனால் மாலை 5.40க்கு கல்விக் கட்டண உயர்விற்கு ஆதரவாக வாக்களிப்பு நிகழ்ந்துவிட்டது என்ற செய்தி வரும் வரைஎன்று அது மேலும் கூறியது. இப்படிக் கூறியிருந்தபோதிலும்,  கார்டியன்  மற்ற ஏடுகளுடன் சேர்ந்து மாணவர்களின் கோபம்தான் மோதலுக்கு ஆதாரம் என்று  தெரிவித்துள்ளது.

ஏராளமான சாட்சியங்களும் வீடியோக் காட்சி ஆதாரங்களும் பொலிசார் அமைதியான எதிர்ப்பாளர்கள் மீது பாய்ந்து குதிரைப்படை வீரர்களைக் கொண்டு தாக்குதலை நடத்தியதற்கு உள்ளன. ஒரு மாணவர் மைக் எப்பதி அவர்ஒரு பொலிஸ் வாகனத்தின் மீது சாய்ந்து நிற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு பல முறை முகத்தில் அடிக்கப்பட்டேன்என்பது பற்றி விளக்கியதை BBC மேற்கோளிட்டுள்ளது. “நாங்கள் பொலிசாரின் எதிர்வரிசைக்குள் வளைக்கப்பட்டோம், அவர்கள் சதுக்கத்திலிருந்து வெளியேறாமல் எங்களைத் தடுத்தனர். ஒரு சிறிய இடத்திற்குள் நூற்றுக்கணக்கான பேரை அடைத்துவைத்தனர், இறுக்கமாக, இன்னும் இறுக்கமாக. அது பெரும் வேதைனையைத் தந்தது.”

முந்தைய செய்தி ஊடக ஆதரவில் நடைபெற்ற பொலிஸ் தூண்டுதல்கள்போலவே, இதன் நோக்கம் எதிர்ப்பைக் குற்றத்தன்மையுடையதாக ஆக்குவது ஆகும்மாணவர்கள் என்று மட்டுமின்றி, இப்பொழுது சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் எவற்றையும் எதிர்க்க முற்படுபவர்களை.

பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு பற்றி எதிர்ப்பாளர்கள் கொண்டிருந்த கோபம் முற்றிலும் நியாயமானதேயாகும். இறுதியில்  கட்டணங்கள் மும்மடங்குகள் அதிகரிப்பதற்கு 21 லிபரல் டெமக்ராட்டுக்கள்வேண்டாம்வாக்கு அளித்தனர் (மூன்று பேர் வெளிநாடு சென்றிருந்தனர்).  ஆறு கன்சர்வேடிவ்களும்வேண்டாம்வாக்களித்தனர், இருவர் வாக்களிக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் எனக் கருதப்படுவோர் போதுமான எண்ணிக்கையில் அரசாங்கத்துடன் சட்டத்தை இயற்றுவதற்கு ஆதரவு கொடுத்து, தங்கள் தேர்தலுக்கு முந்தைய உறுதிமொழியான கட்டண உயர்வு எதிர்க்கப்படும் என்பதை முறித்தனர்.

அக்டோபர் மாதம் மனச்சாட்சி உறுத்திய லிபரல் டெமக்ராட்டுக்களும் ஒரு சில டோரிஎதிர்ப்பாளர்களும்” 83 பில்லியன் பவுண்டுகள் வெட்டுக்களுக்குச்  சிறிதும் பொருட்படுத்தாமல்  கையெழுத்திட்டனர் என்பது வெளிப்படை. இவற்றில் கல்விச் செலவுகளில் இங்கிலாந்தின் 130 உயர்கல்வி நிறுவனங்களில் 49 மூடப்படக்கூடும், 40,000 ஆசிரியர் பதவிகள் இழப்பு இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டதும் அடங்கும். மேலும் உயர்கல்விக் கற்பித்தலுக்கான நிதியில் 80 சதவிகிதக் குறைப்பும் அடங்கியிருந்தது.

கூட்டாக இந்த வெட்டுக்கள் இப்பொழுது ஒப்புக்கொள்ளப்பட்ட வகையில் கட்டண உயர்வை அதிகரிப்பதின் மூலம் ஈடு செய்யப்படவுள்ளன. ஆயினும்கூட கட்டணங்களை எதிர்க்க வேண்டும் என்று கூறியவர்கள்கூட வெட்டுக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறவில்லைஅவர்களுடைய நிலைப்பாடு தங்கள் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என்ற முயற்சியாகத்தான் இருந்தது.

அரசியல் இழிந்த தன்மையில் மற்றொரு உதாரணமாக, ITN செய்தி அமைப்பு தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்டை அரசாங்கத்திற்கு வந்தால் அவர் கட்டண உயர்வை இரத்து செய்வாரா என வினவியபோது, “லிபரல் டெமக்ராட்டுக்கள் செய்த அதே தவறைத் தான் செய்ய மாட்டேன்” , கட்டணக் குறைப்பு இல்லை என உறுதியளிக்கமாட்டேன் என்றார்.

லிபரல் டெமக்ராட்டுக்களின்பிளவுற்றவர்கள்”, தொழிற் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும், கட்டண உயர்விற்கு எதிர்ப்பைப் பாசாங்குத்தனமாகத்தான் காட்டுகின்றனர். ஏனெனில் தொழிலாளர்கள் போல் இல்லாமல் மாணவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் சுமத்திய இரும்புப் பிடியை மீறி முறித்துக் கொண்டு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய தங்கள் சீற்றத்தைத் தெளிவாக்கியுள்ளனர். தேசிய மாணவர் சங்கத்திற்கு எதிரான எழுச்சி என்ற வகையில் நடைபெற்ற மாணவர்கள் எதிர்ப்பைத் தவிர, வேறு எந்த தேசிய எதிர்ப்பும் அரசாங்கத்திற்கு எதிராக அமைக்கப்படவில்லை. வணிகர் தொழிற்சங்க அமைப்பு அத்தகைய நடவடிக்கைகள் எடுக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் ஒரு சில வேலைநிறுத்தங்கள் நடைபெற்றனலண்டன் சுரங்கப்பாதை இரயில் போக்குவரத்து, தீயணைக்கும் படையினருடையது போன்றவை. ஆனால் இவை மிக விரைவிலேயே காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டன. மார்ச் மாதம் ஒரு TUC ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எந்தக் கட்டத்திலும் அது திரும்பப் பெறப்படலாம். TUC யே அதைச் செய்யும் அல்லது போலிஸ் நிறுத்திவிடும்.

அதன் தொழில்துறைப் பொலிசார் மாணவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என்று நினைத்து அரச அடக்குமுறையைப் பெருகிய மிருகத்தன வகையைக் கையாண்ட வகையில் ஆளும் வர்க்கம் அதை எதிர்கொண்டது. தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கொடுக்கக் கூடிய ஒரே அரசியல் விடையிறுப்பு சோசலிசக் கொள்கைகளில் உறுதிப்பாடு கொண்ட ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவும் நோக்கத்துடன் டோரி/லிபரல் டெமக்ராட் அரசாங்கத்தை வீழ்த்தி, தொழிற்சங்கக் கருவிகளிலிருந்து சுயாதீனமாக ஒன்றுபட்ட அரசியல் இயக்கம் ஒன்றை வளர்ப்பதுதான்.