சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

WikiLeaks founder granted bail, but remains incarcerated

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு பிணை கொடுக்கப்பட்டது, ஆனால் தொடர்ந்தும் சிறையில் வாடுகிறார்

By Ann Talbot
15 December 2010

Use this version to print | Send feedback

ஒரு லண்டன் மாஜிட்ரேட் நீதிமன்றத்தில் அசாதாரணக் காட்சிகளுக்கு இடையே, விக்கிலீக்ஸின் நிறுவனரான ஜூலியன் அசாங்கேக்கு பிணை கொடுக்கப்பட்டும், அதன் பின் அரசாங்க வக்கீல் முறையீடு செய்தவுடன் சிறைக்கு அனுப்பப்பட்டார். இத்தகைய ஓர்வெலிய நிலைமை சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அசாங்கேக்கு எதிரான நடவடிக்கைகள் அரசியல் உந்துதல் தன்மையுடையவை என்பதை நிரூபிக்கின்றன. அவருக்கு எதிராக அரசியல் பதிலடி நடவடிக்கைகள்தான் நடத்தப்படுகின்றன. ஏனெனில் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடும் தைரியத்தைக் கொண்டிருந்தார்.

அசாங்கே ஒரு மாபெரும் தொகையான 240,000 பவுண்டுகள் பிணைக்கு கடுமையான விதிகளின் பேரில் பிணை கொடுக்கப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன், பொலிசாரால் தெருவின் எதிர்புறம் அடைக்கப்பட்டிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்திலிருந்து பெரும் களிப்பு வெளிப்பட்டது. ஆனால் நிபந்தனைகளில் அவர் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சபோக்கின் நேர விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும், ஒரு மின்னணுத் தடயத்தை அணியவேண்டும் மற்றும் ஒவ்வொரு மாலையும் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும் என்பவையும் இருந்தன.

ஆனால் ஒரு சுதந்திர மனிதராக வெளி வருவதற்குப் பதிலாக அவர் நீதிமன்றத்தின் கீழ்ப்புறம் இருந்த அறைகளில் இருத்தப்பட்டார். ஸ்வீடன் நாட்டு அதிகாரிகளுக்கு பிணை எடுப்பிற்கு எதிராக இரண்டு மணி நேரம் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது என்று நீதிபதி கூறினார். பின் அசாங்கேயின் வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ் நீதிமன்றத்திலிருந்து ஸ்வீடன் நாட்டு அரசாங்க வக்கீல்கள் மேல்முறையீடு செய்துள்ளனர் என்றும் அது உயர்நீதிமன்றத்தில் 48 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அசாங்கே ஒரு சிறை வாகனத்தில் மீண்டும் லண்டன் தென்மேற்குப் பகுதியிலுள்ள வாண்ஸ்வொர்த் கடினமான விக்டோரியாச் சிறைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்குதான் அவர் கடந்த வாரம் முழுவதும் தனிச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் ஸ்டீபன்ஸ் கூறினார்: “திரு அசாங்கேயைச் சிறையில் தொடர்ந்து வைப்பதற்கு அவர்கள் எச்செலவையும் செய்வர். இது உண்மையில் போலி விசாரணையாக மாறிக் கொண்டிருக்கிறது.”

தீர்ப்பிற்கு எதிர்ப்புக் கூறாமல் இருப்பது என்பது இயலாத செயல். எக்குற்றமும் இவரால் செய்யப்பட்டதாக நிரூபிப்பது ஒருபுறம் இருக்க, எக்குற்றமும் சுமத்தப்படாத ஒரு நபர் அவருடைய சுதந்திரத்தை இழந்து நிற்கிறார்.

அசாங்கேயின் வழக்கு, சட்டபூர்வ நடவடிக்கைகளை கேலிக்கூத்தாகத்தான் செய்துள்ளது.

இச்சமீபத்திய நிகழ்வில் ஆட்கொணர்தல் மனு மறுக்கப்பட்டதும் தொடர்புபட்டதாகும். அது ஆங்கில நீதிமன்றங்களில் 17ம் நூற்றாண்டிலிருந்து நிறுவப்பட்டது. அசாங்கே பிரிட்டனில் எக்குற்றமும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதையொட்டி அவர் ஸ்வீடனுக்கு அனுப்பி வைக்கப்படலாம். அங்கு அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இன்னும் முன்வைக்கப்படவில்லை. சந்தேகத்திற்குரிய தன்மையுடய பாலியல் தவறு என்பதான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணையைத்தான் அவர் எதிர்கொள்கிறார்.

ஒரு இணக்கமான பாலியல் செயலின்போதுசட்டவிரோத வற்புறுத்தல்என்ற குற்றச்சாட்டுக்களை அசாங்கே எதிர்கொள்கிறார். மேலும் இக்குற்றச்சாட்டிலும் மற்றொரு இணக்கமான நபருடன் வேறு ஒரு நேரத்தில் ஆணுறையைப் பயன்படுத்தத் தவறியதும் குற்றச்சாட்டுக்கள் ஆகும். தனக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அசாங்கே மறுத்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கு மிக அற்பமானது, ஸ்வீடன் நாட்டு அரசாங்க வக்கீல்கள் முதலில் அதைத் தூர எறிந்து விட்டனர்.

அசாங்கேக்கு எதிரான வழக்கை ஸ்வீடிஷ் அதிகாரிகள் மீண்டும் தொடர்ந்தனர்ஆங்கில நீதிமன்றங்கள் அவருக்கு முதலில் பிணை மறுத்து பின்னர் கொடுத்தபோதும் கூடச் சிறையில் தள்ளினர் என்பது வாஷிங்டனால் திரைக்குப் பின்னால் கொடுக்கப்பட்டுள்ள பாரிய அழுத்தத்தின் விளைவு என்றுதான் விளக்கப்படமுடியும். ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால், அதன் பின் அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார், அங்கு ஏற்கனவே ஒரு நடுவர் மன்றம் இரகசியமாக அமைக்கப்பட்டுள்ளது, நேற்று உலக சோசலிச வலைத் தளம் கூறியுள்ளதுபோல் அதை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் பரந்த முறையில் கணிக்கப்பட்டுள்ளது.

அசாங்கேக்கு கொடுக்கப்பட்டுள்ள வழிவகை உலகெங்கிலும் பொலிஸ்-அரச நடவடிக்கைகள் எடுப்பதற்கு நிலைமை சரிந்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் உறுதிப்படுத்துகிறது.

வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் பிடி ஆணையின்படி, அசாங்கே காவலில் வைக்கப்பட்டது 9/11க்குப் பின்னர்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பயங்கரவாத வழக்குகளில் வெளிநாடுகளில் இருந்து நபர்களைக் கொண்டுவருவதற்குத் தேவை என்று கூறப்பட்டது. ஆனால் பயங்கரவாதத்திற்கும் அசாங்கேக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்தப் பிடி ஆணை ஏகாதிபத்தியக் குற்றங்களை அம்பலப்படுத்திய ஒருவரை மௌனப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படுகிறது. மற்றவர்களை மிரட்டுவதற்கும், பேச்சுரிமையைக் குறைத்து செய்தி ஊடகத்தை வாயடைக்கச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அசாங்கேயின் சட்ட உதவிக் குழுவுக்கு எப்பொழுது முறையீடு கேட்கப்படும் என்றுகூடத் துல்லியமாகத் தெரிவிக்கப்படவில்லை. இது இவ்வழக்கு முழுவதிலுமுள்ள தன்மையான அனைத்தையும் இருளில் வைத்து, குற்றம் சாட்டப்பட்டவர் பாதையில் எவ்வளவு இடையூறுகளை வைக்க முடியுமோ அதைச் செய்வது என்பதைத்தான் காட்டுகிறது.

ஒரு வாரம் சிறையில் வைக்கப்பட்டிருந்தும்கூட, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் ஆங்கிலச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட முடியுமா என்பதே வினாவிற்கு உரியது. எனவே விரிவான விவரங்கள் இல்லாத நிலையில் அவருடைய வக்கீல்கள் வழக்கிற்குச் சவால் விட முடியாது. “எங்களுக்கு இன்னும் தகவல்கள் கொடுக்கப்படவில்லை, சான்றுகள் கொடுக்கப்படவில்லை, அதையொட்டித்தான் திரு அசாங்கே அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியும்என்று ஸ்டீபன்ஸ் கூறினார். நீதிபதி ஹோவர்ட் ரிடில் தேவையான சான்றுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய பின்னரும் நிகழ்ந்துள்ளது.

கடந்த வாரம் அசாங்கேயின் வக்கீல்களுக்கு ஒன்பது மணி நேரம்தான் பிணை எடுப்பை நீதிபதி ரிடில் கொடுப்பதற்கு முன் உத்தரவாதம் அளிப்பவர்களுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது. பிணை எடுப்பு நிபந்தனைகள் இறுதியில் அசாங்கேக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை மிகவும் கடுமையானவை.

போர்ப் பகுதிகளில் சுதந்திரமான புகைப்படக்காரராக பணிபுரிந்திருந்த ஒரு முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி வாகன் ஸ்மித், Frontline Club உடைய நிறுவனர், அசாங்கேக்காக தன்னுடைய சொந்த விலாசத்தை நீதிமன்றத்தில் கொடுத்தார். அது பொலிசால் முன்கூட்டியே ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். அசாங்கேக்கு ஆதரவை வெளிப்படுத்தி அவருக்கு உத்தரவாதம் நிற்பதாகக் கூறிய பல முக்கிய நபர்களில் ஸ்மித்தும் ஒருவராவார். அவர்களுள் நோபல் பரிசு பெற்ற ஸர் ஜோன் சல்ஸ்டனும் உள்ளார். அவர் மனித genome களை ஆராய்ந்து உருக்கொடுத்ததற்குப் பொறுப்பாவார்.

பிணைத் தொகை 240,000 பவுண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இதில் 40,000 பவுண்டுகள் உத்தரவாதப் பணம் ஆகும். மிகுதி 200,000 பவுண்டுகள் ரொக்கமாகக் கொடுக்கப்பட வேண்டும். அசாங்கேயின் ஆதரவாளர்களில் பெரும் செல்வம் படைத்தவர்கள்கூட இப்படி 200,000 பவுண்டுகள் பணத்தை கண நேரத்தில் திரட்டுவது மிகக் கடினம் ஆகும். “நாங்கள் திருவோட்டைத்தான் ஏந்தியுள்ளோம்என்று ஸ்டீபன்ஸ் கூறினார்.

பிணைத் தொகை காசோலை மூலம் செலுத்தப்பட்டால், அது கணக்கில் வரும் வரை ஏழு நாட்கள் அசாங்கே சிறையில் இருக்க வேண்டும்.

ஒரு மாஸ்டர் கார்ட் அல்லது விசாவை அவர் பயன்படுத்த முடியாதது இரங்கத்தக்கதுஎன்று ஸ்டீபன்ஸ் குறிப்பிட்டார். “அதுவரை ஒரு நிரபாராதி வாண்ட்ஸ்வொர்த் சிறையில் டிக்கன்ஸ் நாவல்களில் எழுதப்பட்டுள்ளது போன்ற இழிந்த நிலைமையில் இருக்க வேண்டும்.”

ஓஸ்கார் வயில்ட் இருந்த சிறையிலேயேதான் அசாங்கேயும் வைக்கப்பட்டுள்ளார். சிறை ஆய்வாளர் அலுவலத்தின் சமீபத்திய அறிக்கை வாண்ட்ஸ்வொர்த்தில்அச்சம் என்னும் சூழ்நிலை நிலவுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. சிறையில் தண்டனைப் பிரிவில் அசாங்கே ஏழு நாட்களாக உள்ளார். நாள் ஒன்றிற்கு இருபத்தி மூன்றரை மணி நேரம் பூட்டி வைக்கப்படுகிறார், இடைவிடாத infrared imaging கண்காணிப்பில் உள்ளார். இக்காலம் முழுவதும் அவர் மூன்றுமுறை தொலைபேசி அழைப்புக்களுக்கு அனுமதிக்கப்பட்டார், மூன்று முறை பார்வையாளர்கள் வந்தனர். இணைய தளம் அல்லது செய்தித்தாள்களை அவர் அணுக இயலாது. இந்த ஆண்டின் சிறந்த நபர் என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏட்டின் இதழை டைம் அவருக்கு அனுப்பியது. ஆனால் சிறை தணிக்கையாளர்கள் அதைக் கிழித்து எறிந்துவிட்டனர், அவரிடம் வெற்றுக் கவரைத்தான் கொடுத்தனர்.

இப்பொழுது உடனடியான கேள்வி அசாங்கே தண்டனைக்குரிய நிலைமைகளில் மற்றும் ஒரு 48 மணி நேரம் வைக்கப்பட்டிருப்பாரா என்பதுதான். மேலும் அடிப்படையான பிரச்சினை அவர் ஒரு நீதித்துறையினால் அடைத்து வைக்கப்பட்டுள்ளபோது சொந்த பாதுகாப்பு பற்றியதாகும்.