சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

Korean tensions ease—temporarily

தற்காலிகமாக கொரிய அழுத்தங்கள் குறைகின்றன

By John Chan
21 December 2010

Use this version to print | Send feedback

வட மற்றும் தென் கொரியாக்களுக்கு இடையே அழுத்தங்களைக் குறைப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் சீனா, ஷ்யாவின் நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தடுத்தபின் கொரியத் தீபகற்பம் நேற்று இராணுவ மோதலின் விளிம்பில் ஆபத்தாக நின்றது. பெய்ஜிங் மற்றும் மாஸ்கோ ஆகியவை கொடுத்த எச்சரிக்கைகளை புறக்கணித்து சியோல் உண்மையான தோட்டாக்கள் சுடும் பயிற்சிகளை இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள கடற்பகுதி எல்லைகளுக்கு அருகே நடத்தியது. பியாங்யோங் பதிலடி கொடுப்போம் என்று அச்சுறுத்தியும் கூட இது நடந்தது.

இறுதியில் வட கொரியா, சீனா, ரஷ்யா ஆகியவை திரைமறைவில் இருந்து கொடுத்த வலுவான அழுத்தங்களின் கீழ் விடையிறுப்புக் கொடுக்கவில்லை. உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில், பியோங்யாங்தெற்கேயுள்ள கைப்பாவைப் போர் வெறியர்களின் ஒவ்வொரு இழிந்த இராணுவத் தூண்டுதலுக்கு எதிராகவும் பதிலடி கொடுக்க வேண்டிய தேவை இல்லைஎன்று அறிவித்துவிட்டது. “அமைதிக்கு உண்மையாகப் பாடுபடுபவர்கள் யார், போரைத் தூண்டுபவர் யார் என்பதை உலகம் தக்க முறையில் அறியவேண்டும்என்றும் அதில் கூறப்பட்டது.

அமெரிக்கா, மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் வட கொரியாவின் அறிக்கையை வெறும் பிரச்சாரம் என்று விரைவில் உதறித் தள்ளின. ஆனால் ஓபாமா நிர்வாகம் இந்த நெருக்கடியை  ஆசியாவில் சீனாவின் பெருகும் செல்வாக்கு, மூலோபாய நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதின் ஒரு பகுதியாக நடத்தியுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த  .நா. பாதுகாப்புக் குழுவின் அவசரக்காலக் கூட்டம் முழுவதும், அமெரிக்கா யிவோன்ப்யோங் தீவில் குவிப்புக் காட்டிய நவம்பர் 23ம் தேதி வட கொரியா பீரங்கித் தாக்குதல் தென் கொரியா மீது நடத்தப்பட்டதை முதலில் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. சீனாவும் ரஷ்யாவும் அத்தகைய விதி புகுத்தப்படுவதை எதிர்த்தன; ஏனெனில் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், எதிர்-குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றிற்கும் நடுவே இது அழுத்தங்களை அதிகரிக்கும் என்பதை அறிந்து அவ்வாறு கூறின.

.நா.வின் ரஷ்ய தூதரான வடலி சுர்க்கின், “சில மணி நேரத்திற்குள் அழுத்தம் பெருகக்கூடும், சொல்லப்போனால் ஒரு தீவிர மோதல் நேரிடலாம்”  என்று எச்சரித்தார். சீனாவின் பிரதிநிதி வாங் மின் நிலைமைபெரும் ஆபத்தானதுஎன்று கூறி, “கொரியத் தீபகற்பத்தில் குருதி கொட்டும் மோதல்கள் ஏற்பட்டால், அது தீபகற்பத்தின் இரு பக்கமும் உள்ள மக்களை முதலில் தாக்கும், சகோதரர்களுக்கு இடையேயான தேசியப் பெரும் சோகத்தைக் கொண்டுவரும், வட மற்றும் தென் கொரிய சக நாட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்என்று தொடர்ந்தார்.

ஆனால் அமெரிக்கா அசைந்து கொடுக்கவில்லை. அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ் வட கொரியாவைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி, தென் கொரியாவிற்கு இராணுவப் பயிற்சி நடத்துவதற்குமுழு இறைமை உரிமைஉள்ளது என்று அறிவித்தார். வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் போர்ப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை குறைக்க முயன்று, அவை வாடிக்கையானது என்று கூறின. பயிற்சிகள் தொடரும் என்று வலியுறுத்திய ரைஸ் அவைவடகொரியாவிற்கு ஆபத்தைக் காட்டவில்லை, வட கொரிய மக்கள் எவரையும் அச்சுறுத்தவும் இல்லைஎன்றார்.

நடந்து கொண்டிருப்பது சிறிதும் வாடிக்கையாக நடப்பது அல்ல என்பதை அனைவருமே அறிந்திருந்தனர். 21 அமெரிக்கப் பயிற்சியாளர்களும், பார்வையாளர்களும் உள்ள நிலையில், தென் கொரிய இராணுவம் 90 நிமிடப் பயிற்சியை நடத்தி 1,500 சுற்றுக்கள் பீரங்கி குண்டுகளையும் வெடித்தது. இது யிவோன்ப்யோங் தீவு உள்ளூர் நேரத்தில் பிற்பகல் 2.30 க்கு நடைபெற்றது. உள்ளூர்வாசிகள் நிலவறைக்குள் பதுங்கிக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருந்தனர்.

தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள், வட கொரியா ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுக்கத் தயாராக இருந்தன. தென் கொரிய போர் விமானங்கள் வானில் பெரும் எச்சரிக்கை நிலையில் பறந்து கொண்டிருந்தன. இரு தென் கொரிய தகர்க்கும் கப்பல்கள் மோதலுக்கு உட்பட்ட வடக்கு வரம்புக் கோட்டிற்குச் சற்றே தென்புறத்தில் மஞ்சள் கடலில் ரோந்து சுற்றினஇந்த எல்லை ஒருதலைப்பட்சமாக 1953 கொரியப் போருக்குப் பின்னர் அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டது. 28,000 அமெரிக்கத் துருப்புக்கள்,டாங்குகள், போர் விமானங்கள் என்று தென் கொரியாவிலுள்ள பின்னணியில், பென்டகன் மிகத் தெளிவாக எந்த நிலைமைக்கும் தயாரான திட்டங்களை விரிவாகக் கொண்டிருந்தது.

தென் கொரியாவின் பாதுகாப்பு மந்திரி கிம் க்வான்-ஜின் நேற்று இராணுவத்திடம், “வட கொரியா அளிக்கக்கூடிய தூண்டுதல்கள் அனைத்தையும் சமாளிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஜனாதிபதி லீ ம்யுங்-காங் அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் நெருக்கடி நிலையில் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டார். இம்மாதம் முன்னதாக கின் தென் கொரியப் பகுதிகள் மீண்டும் தாக்கப்பட்டால், வட கொரிய பீரங்கிப் படையின் மீது விமானப் போர்த் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். தென் கொரிய, அமெரிக்கப் படைகள் நேற்றைய பயிற்சிக்குப் பின்னர் உயர்ந்த கட்ட எச்சரிக்கையை தொடர்ந்தன.

முதலில் வட கொரியா மீது அழுத்தம் கொடுப்பதற்கு அதிக அளவிற்கு ஒபாமா நிர்வாகம் நிலைமையைப் பயன்படுத்தியது. உண்மையான தோட்டாக்கள் சுடும் பயிற்சி நடக்கையில், புதிய மெக்சிகோ கவர்னர் பில் ரிச்சர்ட்ஸன் பியோங்யாங்கில்ஒரு சொந்தப் பயணத்தை மேற்கொண்டு வட கொரிய ஆட்சியுடன் பேச்சுக்களை நடத்தினார். நேற்று பியோங்யாங் ஐ.நா. ஆய்வாளர்கள் அதன் ப்யோங்ப்யோன் அணுசக்தி வளாகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதித்து அதன் 12,000 அணு எரிபொருள்களையும் (nuclear fuel rods)  மூன்றாவது நாடு ஒன்றிற்கு விற்க உடன்பட்டது. இதைத்தவிர, அது ஒரு கூட்டு இராணுவக்குழு, தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் அவசரத் தொலைத் தொடர்பு  ஆகியவற்றையும் வருங்கால மோதலைத் தவிர்க்க ஏற்பாடு செய்வதாகக் கூறியது.

ஒபாமா நிர்வாகம் இந்த ஏற்பாட்டை விரைவில் நிராகரித்தது. அமெரிக்க அரச அலுவலக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.கிரௌலி அறிவித்தார்: “பற்பல ஆண்டுகளாக வட கொரியா உறுதிமொழிகளை மீறிய தொடர்நிகழ்வுகளைத்தான் நாங்கள் கண்டுள்ளோம். வட கொரியா சில சூழ்நிலைகளில்  என்ன கூறுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், என்ன செய்கிறது என்பது பற்றித்தான் நாங்கள் வழிகாட்டுவதற்கு எடுத்துக் கொள்வோம்.” இந்த எதிர்கொள்ளல் ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் அமெரிக்க சமரசத்திற்கு இணங்காததுடன் ஒத்துள்ளது, அதேபோல் வட கொரியாவின் அணுசக்தி த் திட்டம் பற்றிய அழுத்தங்களை முடிக்கும் வடிவமைப்பு கொண்ட அறுவர் பேச்சுக்களைத் தொடராமல் இருப்பதுடனும் ஒத்துள்ளது.

வாஷிங்டனின் பொறுப்பற்ற தூண்டுவிடும் தன்மை சிறிய, வறுமையில் ஆழ்ந்துள்ள வட கொரியா மீது அல்ல. சீனாவின் எழுச்சி பெறும் பொருளாதாரச் சக்தியின் மீதுதான். 2009ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்தே, ஒபாமா நிர்வாகம் ஆசியா முழுவதும் ஆக்கிரோஷமாகத் தலையிட்டுள்ளதுநடைமுறையிலுள்ள இராணுவக் கூட்டுக்களை வலுப்படுத்துதல், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் பங்காளித்தனத்தை மேற்கொள்ளுதல், வியட்நாம், கம்போடியா, பர்மா நாடுகளுடன் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் எனஅப்பகுதியில் சீனச் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்துடன்.

ஜனவரி மாதம் வாஷிங்டன் ஒரு 6.4 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆயுதங்களை தைவானுக்கு விற்பதற்கு ஒப்புதல் கொடுத்தது. பின்னர் ஜனாதிபதி ஒபாமா நாடுகடத்தப்பட்டுள்ள தலாய் லாமாவைச் சந்தித்தார்இவை கடுமையான சீன எதிர்ப்புக்களுக்கு இடையே நடைபெற்றன. மார்ச் மாதம் சியோலின் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டான பியோங்யாங் ஒரு தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பலை குண்டுவீசித் தாக்கியது என்பதற்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்தது. பின்னர் சீனாவின் எதிர்ப்புக்களை புறக்கணித்து, கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தியதுமுதலில் ஜப்பான் கடலில் ஜூலை மாதமும், பின்னர் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மஞ்சள் கடலிலும். ஜூலை மாதம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் ASEAN எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் உச்சிமாநாட்டில், அமெரிக்காவிற்கு தென் சீனக் கடல் பகுதியில்கடல் பயணத்திற்கான சுதந்திரத்தைதக்க வைத்துக்கொள்ளும்தேசிய நலன்உண்டு என்று அறிவித்து ASEAN உறுப்பு நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே நிலப்பகுதி மோதல்களிலும் தலையீடும் என்று கூறியது.

செப்டம்பர் மாதத்தில் ஒபாமா நிர்வாகம் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே, ஜப்பான் மோதலுக்குட்பட்ட சென்காகு/டயோயு தீவுக் கூட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் பகுதியில், ஒரு மீன்பிடிக்கும் படகின் மாலுமியைக் கைது செய்ததை ஒட்டி பிரச்சினையை ஒரு பெரிய மோதலாக்கியது. இரு முறை அமெரிக்கா, ஜப்பானுடன் கொண்டுள்ள பாதுகாப்பு உடன்பாட்டின்படி தீவுகள் பற்றி சீனாவுடன் போர் ஏற்பட்டால் ஜப்பானுக்கு இராணுவ ஆதரவு கொடுக்கும் என்று அறிவித்தார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, “கடல் பயண உரிமைஎன்பது அமெரிக்க போர்க் கப்பல்களை விரும்பியபடி சீன கடலோரப் பகுதிக்கு கூருணர்ச்சியுள்ள பகுதிகளுக்கு அருகே, முக்கிய சீன நகரங்கள், இராணுவத் தளங்களுக்கு அருகே அனுப்புதல் என்ற பொருள் ஆகும். கடந்த ஆண்டில் பெரும் அணுசக்தி விமான தாங்கிக் கப்பலான USS George Washington மற்றும் அதன் இணைப் போர்க் கப்பல்கள் பிரிவு, தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு, பிலிப்பைன்ஸ் உட்பட பல துறைமுகங்களுக்கு சென்று உயர்மட்ட வியட்நாம் அதிகாரிகளையும் கப்பல் மேல் தளத்திற்கு தென் சீனக் கடலுக்கு அருகே வரவேற்றது. சீனா அதன்உரிமையானபோர்க் கப்பலை கலிபோர்னியா கடலோரப் பகுதிகளை ஒட்டி அனுப்பியது என்றால், அது அமெரிக்கச் செய்தி ஊடகத்திலும் அரசியல் ஸ்தாபனத்திலும் பெரும் கண்டனங்களைச் சந்தித்திருக்கும்.

சீனப் பொருளாதார ஏற்றம் என்ற சவாலை எதிர்கொள்கையில், அமெரிக்கா இன்னும் கணிசமான தன் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அதன் போட்டி நாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. சீன பெருநிலப்பகுதிக்கு வெகு அருகே கடலில் அமெரிக்கா பயிற்சிகளை நடத்துவது ஒன்றும் நிரபராதச் செயல் அல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே, பென்டகன் மூலோபாயம் இயற்றுபவர்கள் அமெரிக்க மேற்கு பசிபிக்கில் கடற்படை மேலாதிக்கத்தைக் கொள்ள வேண்டும் என்றும் தேவை ஏற்பட்டால் போட்டி சக்திகளின் முக்கிய கப்பல் பாதைகளை மூடும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளனர்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்கும் வகையில் சீனாவும் இதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. எனவே ரஷ்யாவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யாவும் சீனாவும் முக்கியக் கூட்டு இராணுவப் பயிற்சிகளை, “அமைதிப்பணி 2011” என்ற பெயரில் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் ஜப்பான் கடல் மற்றும் ரஷ்ய-சீன எல்லைப் பகுதிகளில் கொரியத் தீபகற்பத்திற்கு அருகே நடத்தவுள்ளன.

வடகிழக்கு ஆசியாவில் அழுத்தங்கள் தீவிரமாகையில், சமீபத்திய தென்கொரிய உண்மையான தோட்டக்கள் சுடும் பயிற்சியை சூழ்ந்துள்ள நெருக்கடி எப்படி ஒரு சிறு நிகழ்வு விரைவில் ஒரு பரந்த போராக விரிவாகலாம் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்காவும் தென் கொரியா உட்பட அதன் நட்பு நாடுகளும் அனைத்து சமரசங்களையும் நிராகரித்து ஒரு இராணவப் பயிற்சி தொடர் வேண்டும் என்பதற்காக கொரிய தீபகற்பத்தில் ஒரு போர் ஆபத்திற்கும் தயாராக இருந்தன. வட கொரியா இப்பொழுது பின்வாங்கிவிட்டாலும், மோதல்களுக்கான பல தூண்டிவிடும் திறன்கள் நிறையவேயுள்ளன.

உதாரணமாக, சனிக்கிழமையன்று, ஒரு தென் கொரிய ரோந்துக் கப்பல் ஒன்று ஒரு சீன மீன்படிக்கும் படகின்மீது மோதியதுஇது கொரிய கடல் பகுதியில் நடந்தது என்று கூறப்படுகிறது. எட்டு மீன்பிடிப்போர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் இறந்து விட்டார், மற்றொருவரைக் காணவில்லை. ஜப்பானுடன் அதன் முந்தைய மோதல் போல் இல்லாமல், சீனா இந்நிகழ்விற்கு விடையிறுப்பு எதையும் காட்டவில்லை. ஆனால் இனி வரும் நிகழ்வுகளிலோ, தூண்டுதல்களிலோ பரந்த மோதல்கள் ஏற்பட வழிவகுக்காது என்று உத்தரவாதம் ஏதும் இல்லை.