சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : கொரியா

South Korean military exercise raises danger of war

தென் கொரிய இராணுவப் பயிற்சிகள் போர் ஆபத்தை அதிகரிக்கின்றன

By John Chan
20 December 2010

Use this version to print | Send feedback

வட கொரியாவிற்கு எதிராக திட்டமிட்டு பொறுப்பற்ற வகையில் தூண்டுதலை முதலில் இயக்கியுள்ள ஒபாமா நிர்வாகம் தென் கொரியாவை உயிர்த்த குண்டுகள் மற்ற தளவாடங்கள் நிறைந்த பயிற்சியை யிவோன்பியோங் தீவிற்கு அருகே நடத்துவதற்கு ஊக்கம் கொடுத்துள்ளது. இந்தப் பெரும் நய உணர்வுள்ள தீவுதான் நவம்பர் 23ம் தேதி வடக்கு, தென் கொரியாக்களுக்கு இடையே பீரங்கித் தாக்குதல்கள் பறிமாற்றம் நடந்த இடம் ஆகும்.

சீனா மற்றும் ரஷ்யா அமைதியாகவும், நிதானப்போக்குடனும் இருக்க வேண்டும் என்று விடுத்த அழைப்புக்களை வட கொரியாவின் பதிலடி அச்சுறுத்தல்கள் புறக்கணித்துள்ளது. உண்மையான ஆயுதங்களுடனான பயிற்சி என்பது இரு கொரியாக்களுக்கும் இடையே இராணுவ மோதலை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்பது மட்டுமின்றி முக்கிய சக்திகள் ஈடுபட்டுவிடக்கூடிய பரந்த மோதலின் ஆபத்தையும் கொண்டது.

தென் கொரிய பயிற்சிக்கு அமெரிக்கா வட கொரியாமீது அழுத்தம் கொடுக்க  ஒரு வகை என்று மட்டும் இல்லாமல் சீனா மீதும் அழுத்தம் கொடுக்க ஒரு வழிவகையாக காண்கிறது. சமீபத்திய மாதங்களில் ஒபாமா நிர்வாகம் இப்பகுதி முழுவதும் ஒரு ஆக்கிரோஷமான பிரச்சாரத்தை நடத்தியது, சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். வாஷிங்டன் பலமுறையும் சீனா வடகொரியாவை “கட்டுப்படுத்த” போதுமானவற்றைச் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது; கொரியத் தீவில் அழுத்தங்களை குறைப்பதற்கான பெய்ஜிங்கின் ஒவ்வொரு முயற்சியையும் அது தகர்த்துள்ளது.

இன்று பீரங்கிப் படைப் பயிற்சி  தொடரும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது. சீனாவின் ஆதரவுடன் ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடந்த ஒரு அவசர ஐ.நா. பாதுகாப்புக்குழு கூட்டம், ஒரு சில மணிநேரங்களிலேயே முறிவுற்று முடிந்துவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ராய்ட்டர்ஸ் தகவல் ஒன்றின்படி, ரஷ்யா பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு “மிக அதிக தடுப்பு நிதானம்” தேவை என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனுக்கு சியோல் மற்றும் பியோங்யாங் ஆகியவற்றிற்கு நெருக்கடி கட்டுப்பாட்டை விட்டு நீங்காமல் இருப்பதற்கு ஒரு தூதரை அனுப்புமாறு வலியுறுத்தியும் வரைவு அறிக்கை ஒன்றைக் கொடுத்தது.

அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா ஆகியவை தீர்மானத்தை தடைக்கு உட்படுத்தி, பிரிட்டிஷ் வரைவுத் திட்டம்  ஒன்று முற்றிலும் வட கொரியாதான் நெருக்கடிக்குக் காரணம் என்று குற்றம் சாட்டி அதை கடந்த மாதம் குண்டுத்தாக்குதல் நிகழ்ச்சிக்காக கண்டனப்படுத்தியும், செய்துள்ளதற்கு ஆதரவையும் தெரிவித்துள்ளன. ஐ.நா.வின் அமெரிக்கத் தூதரான சூசன் ரைஸ் சமரசம் எதற்கும் இடமில்லை என்று கூறி “ஒரு சில விஷயங்களில் தெளிவற்றுள்ள ஒரு அறிக்கையினால் பயன் ஏதும் இராது” என்றும் அறிவித்தார்.

யிவோன்பியோங் தீவு மஞ்சள் கடலில் வட-தென்கொரிய  நாடுகளின் கடற்பகுதி எல்லையையில் பூசலுக்கு உட்பட்ட இடத்தினருகே உள்ளது. இந்த எல்லை 1953ல் ஒருதலைப்பட்சமாக போருக்குப் பின் அமெரிக்கா அறிவித்திருந்தது, பியோங்யாங்கினால் ஒப்புதல் கொடுக்கப்படவில்லை. சியோலும் வாஷிங்டனும் இந்த வாரப் பயிற்சிகள் நீரில்தான் குண்டுகளைச் செலுத்தும், வட கொரியக் கடலோரப் பகுதியை நோக்கி அல்ல என்று வலியுறுத்தினாலும், பியோங்யாங் இதே பகுதியில் கடந்த மாதம் பெரிய அளவில் நடத்தப்பட்ட தென் கொரிய இராணுவப் பயிற்சிகளில் அதன் இறைமையை சேர்ந்த நீர்ப்பகுதிகளில் குண்டுகள் போடப்பட்டன என்று கூறியுள்ளது. தான் பின்னர் தீவின் மீது தாக்கியது—இரு சிவிலியன்கள் உட்பட நான்கு பேர் அதில் இருந்தனர்—ஒரு பதிலடிதான் என்றும் கூறியது. தென் கொரியப் பீரங்கிப் பிரிவு பின்னர் வடக்குப்பகுதி மீது குண்டுகளைப் பொழிந்தது.

வெள்ளை மாளிகை வேண்டுமென்ற அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில், தென் கொரியப் பயிற்சிக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுத்துள்ளது. கடந்த வெள்ளியன்று, அமெரிக்க வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் பிலிப் ஜே. கிரௌலி “ஒரு இறைமை நாடு என்ற முறையில் தென் கொரியாவிற்கு அதன் இராணுவத்தை தனக்கு உரிய வகையில் பயிற்சிக்கு உட்படுத்தும் உரிமை உள்ளது” என்று அறிவித்தார். மொத்தம் 21 அமெரிக்க பயிற்சியாளர்களும் பார்வையாளர்களும் இப்பயிற்சிகளில் கலந்துகொள்வர்.

கடந்த வியாழனன்று அமெரிக்க மரைன் பிரிவின் தளபதி ஜேம்ஸ் இ.கார்ட்ரைட், இராணுவத் தலைவர்களின் கூட்டுத் தலைவர், போர் விளையாட்டுக்கள் “வாடிக்கையானவை” என்று அறிவித்தார். ஆனால், “வட கொரியா இதை எதிர்மறையாக எதிர்கொண்டு பதிலுக்கு குண்டுகளைச் செலுத்தினால்,…. தீவுகளில் சுடும் இடங்களின்மீது, அது சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தாக்குதல்கள், எதிர்த்தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு வகை செய்யும்” என்பதையும் ஒப்புக் கொண்டார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இப்பயிற்சி ஒரு போரைத் தூண்டக்கூடும் என்பதை நன்கு அறியும். ஒரு  பெயரிடப்படாத அமெரிக்க இராணுவ அதிகாரி கடந்த வெள்ளியன்று CNN  இடம் ஒபாமா நிர்வாகமும்  தென் கொரிய அரசாங்கமும் “அவசரக்கால தொடர்பு திட்டங்களை” வட கொரியப் பதிலடி ஏற்பட்டால் சமாளிக்க நிறுவியுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கா சியோலுடன் “நடவடிக்கைப் போக்குகள்” பற்றி விசாரிக்கத் தயார் என்றும் இதில் “நடவடிக்கையின் மிக ஆபத்தான போக்குகளும்” அடங்கும் என்றும் கூறினார்.

தீவின் கூர் உணர்வுத்தன்மை இது மஞ்சள் கடலின் கிழக்குப்புறத்தில் உள்ளதால் உயர்த்திக் காட்டப்படுகிறது; இது சீனாவைப் பொறுத்தவரை மூலோபாய வகையில் கூருணர்வு உடையது ஆகும். இந்த ஆண்டு  முன்னதாக பெய்ஜிங் வாஷிங்டனை இப்பகுதியில் கடற்படைப் பயிற்சிகளை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஏனெனில் அதைத் தொடர்ந்து தென் கொரியா ஒரு உயிர்த்த தோட்டங்கள் கொண்ட பயிற்சிகளை நடத்தினால், ஒரு முக்கிய அமெரிக்க-தென் கொரிய கூட்டுப் போர் விளையாட்டு மஞ்சள் கடலில் நடப்பது என்பது சீனா மற்றும் வட கொரியா மீது தூண்டுதல் நடவடிக்கை என்றுதான் காணப்படும்.

கடந்த வாரம் சீனா, தென் கொரிய தூதரை அழைத்தது; ரஷ்யா தென் கொரியா, அமெரிக்க தூதர்களை அழைத்தது; இவர்கள் பயிற்சிகளை இரத்து செய்யுமாறு சியோலை வலியுறுத்தின. சனிக்கிழமை சீன வெளிநாட்டு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யு தீவில் குருதி கொட்டுதல் என்பது “அப்பகுதியில் சீர்குலைப்பை ஏற்படுத்தும், அண்டை நாடுகளிலும் ஆபத்தை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார். ஐ.நா.வில் ரஷ்ய தூதரான விடலி சுர்க்கின் நிலைமை “ரஷ்ய கூட்டமைப்பின் தேசியப் பாதுகாப்பு நலன்களை நேரடியாகப் பாதிக்கிறது” என்று அறிவித்தார்.

ஆனால் ஒபாமா நிர்வாகம் சீனாவும் ரஷ்யாவும் வட கொரியா அதன் “அடாவடி” நடத்தை என்று கருதப்படுவதற்கு முற்றுப்புள்ள வைக்க அழுத்தம் கொடுக்கச் செயல்படுமாறு தொடர்ந்து கோரியது. வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் கிரௌலி கடந்த வெள்ளியன்று அறிவித்தார்: “நாம், சீனா, ரஷ்யா மற்றவை உட்பட பிற நாடுகள் வட கொரியா அதன் தூண்டுதல்களை நிறுத்த வேண்டும் என்ற தெளிவான தகவலை அனுப்ப வேண்டும் என விரும்புகிறோம்.”

உண்மையில், தூண்டுதல்கள் தென் கொரியா, அமெரிக்கா ஆகியவற்றிடம் இருந்துதான்  வந்துள்ளன. தென் கொரிய ஜனாதிபதி லீ ம்யூங்பாக்க்கின் பெரும் தேசியக் கட்சியின் அரசாங்கம் பெருகிய முறையில் ஒரு கடின நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நவம்பர் 23 தாக்குதலுக்கு பின்னர், சியோல்  இராணுவப் போர் முறையை மாற்றி, துருப்புக்கள் இன்னும் கூடுதலான ஆற்றலை வட கொரிய பதிலடிக்குக் கொடுக்கலாம் என்று அனுமதித்தார்; இது இன்னும் பெரிய இராணுவ மோதல்களுக்குத்தான் வழிவகுத்தது. கடந்த வாரம் GNP அரசாங்கம் அதன் மிகப் பெரிய அவசரக் கால பயிற்சிகளை நடத்தியது; இதில் சங்குகள் நாடு முழுவதும் முழங்கின, போர் விமானங்கள் சியோலில் தலைக்கு மேல் வட்டமடித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பிடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர், அல்லது அலுவலகங்களில் நிலவறை, நிலத்தடி இரயில் நிலையங்கள் ஆகியவற்றிற்கு செல்லுமாறு கூறப்பட்டனர்.

அமெரிக்கத் வெளிவிவகார துணை செயலர் ஜேம்ஸ் ஸ்டீன்பேர்க், கடந்த வெள்ளியன்று ஒரு மூன்று நாள் பயணமாக பெய்ஜிங்கிற்கு சென்று, சீனா, ரஷ்யா, ஜப்பான், இரு கொரியாக்கள் ஆகியவை தொடர்புடைய அறுவர் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டும் என்னும் சீனாவின் அழைப்பை அமெரிக்க நிராகரித்துள்ளதை வலியுறுத்தியிருந்தார். ஸ்டீன்பேர்க் கூறிய பலவும் பகிரங்கமாக்கப்படவில்லை என்றாலும், South China Morning Post  “வட கொரியா முதலில் நடவடிக்கைகளை எடுத்து மோதலை நிறுத்தி அணுவாயுதக் களைவு பற்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என்று கோருவதை அமெரிக்கா மாற்றிக் கொண்டுள்ளது என்பதற்கான அடையாளங்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது. சீன அரசாங்க ஆலோசகர் டை பின்குவோ ஸ்டீன்பேர்க்கிடம், “அழுத்தங்களைப் பேச்சுவார்த்தைகள் மூலம் குறைக்க வேண்டுமே ஒழிய மோதலின் மூலம் அல்ல” என்று கூறியதாகத் தவகல்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களை நடத்தும் விருப்பம் என்பதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகியவை டிசம்பர் 5 அன்று தனியே கூடிப்பேசின. ஜப்பானின் கடந்த வியாழன் Asahi Shimbun பதிப்புத் தகவல்படி, மூன்று சக்திகளும் பியோங்யாங் எப்பேச்சுவார்த்தைகளுக்கு முன்பும் ஐந்து குறிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவை மாஸ்கோவிடமும் சீனாவிடமும் கூறப்பட்டுள்ளன. அனைவரும் அறிந்த மூன்று நடவடிக்கைகள், பிஓங்யாங் அதன் 2005 உறுதிமொழியான அணுவாயுத திட்டத்தைக் கைவிட வேண்டும், யுரேனிய அடர்த்தித்தட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் ஐ.நா.சர்வதேச அணுசக்தி அமைப்பில் இருந்து ஆய்வாளர்களை ஏற்க வேண்டும் ஆகியவையாகும். ஆனால், புஷ், ஒபாமா நிர்வாகம் இரண்டுமே 2005 அறுவர் உடன்பாட்டில் ஒப்புக் கொண்டதை அளிக்க மறுக்கின்றன; அதாவது வட கொரியாவுடன் அமெரிக்க விரோதப் போக்கை நிறுத்துதல், நாட்டுடன் சுமுகமான உறவுகளைக் கொள்ளுதல் மற்றும் பல தசாப்தங்களாக நீடித்துள்ள பொருளாதாரத் தடைகளை அகற்றுதல் என்பவையே அவை.

ஒபாமா நிர்வாகம் தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொரிய தீபகற்பத்தை போரில் ஆழ்த்தும் பொறுப்பற்ற நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும், அது முக்கிய சக்திகளுக்கு இடையே பரந்த மோதலை ஏற்படுத்தும் திறன் உடையது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன.