World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Sovereign debt fears signal new stage of global crisis

அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட கடன் அமைப்புக்கள் பற்றிய அச்சங்கள் உலக நெருக்கடியில் புதிய கட்டத்தை அடையாளம் காட்டுகின்றன

By Barry Grey
6 February 2010

Use this version to print | Send feedback

இரண்டாம் நாளாக கிட்டத்தட்ட பலவீனமான ஐரோப்பிய பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் கடன்நெருக்கடி பற்றிய அச்சங்கள் உலகப் பொருளாதாரத்தை ஒரு "இரட்டைச் சரிவு" மந்த நிலைக்கு தள்ளி விடுமோ என்ற பீதியினால் உந்தப்பெற்று வெள்ளியன்று ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பங்குச் சந்தைகள் தீவிரமாக சரிந்தன.

பாவனைப்பொருட்களின் விலைகளும், குறிப்பாக எண்ணெய், தங்கத்தினதும் தீவிரமாக சரிந்தன.

அமெரிக்காவில் Dow Jones Industrial Averageல் மூன்று இலக்க நஷ்டங்கள் இறுதி நேரத்தில் மீட்கப்பட்டு, அதனால் Dow க்கும் மற்ற முக்கிய குறியீடுகளும் வியாழன் தீவிரவிற்பனைக்கு பின் உறுதியற்ற வணிகத்தில் சிறு ஆதாயங்கள் கிடைத்தன.

வியாழன் அன்று 268 புள்ளிகள் சரிவைத் தொடர்ந்து, அன்றைய தினம் 10 புள்ளி ஆதாயத்தில் Dow முடிந்தது. நாள் முழுவதும் அநேகமாக 10,000 புள்ளிக்கு மிகக் குறைவாக இருந்த குறியீடு கடந்த இரு வாரங்களில் 6.5 சதவிகித இழப்பைக் கண்டுள்ளது.

முக்கிய ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. பிரான்சில் CAC-40 மிகவும் அதிகமாக 3.4 சதவிகிதம் சரிவுற்றது. இது நவம்பர் 26க்குப் பின்னர் ஒரு நாளில் மிக அதிக சரிவு ஆகும். Pan-European Dow Jones Stoxx 600 Index நவம்பர் 3க்கு பின் அதன் மிக்ககுறைந்தளவான 2.2 சதவிகிதம் குறைந்தது.

ஜப்பானின் Nikkei 2.89 சதவிகிதம் குறைந்தது, ஷாங்காய் Composite 1.87 சதவிகிதம் இழந்தது.

கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவற்றில் பங்குச் சந்தைகள் இரண்டாம் நாளாக குறைந்தன. மூன்று அதிக கடன்கள் கொண்ட யூரோப் பகுதி நாடுகளான இவற்றில் முக்கிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளுக்கும், பத்திரக்காரர்களுக்கும் பணம் கொடுக்கும் திறன் பெருகிய முறையில் சந்தேகத்திற்கு உட்பட்டுள்ளது. மூன்று நாடுகளின் பத்திரங்களுடைய விலைகளும் தொடர்ந்து சரிந்து இதனால் வட்டி விகிதங்கள் உயர்ந்தன. காரணம் உலக முதலீட்டாளர்கள் மூன்று அரசாங்கங்கள் மீதும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அந்த நாட்டு மக்களின் மீது சுமத்தப்படவேண்டும் என்று பெருகிய முறையில் அழுத்தம் கொடுப்பதுதான்.

இந்த மூன்று நாடுகளும் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்கள் மீதான கடன் உத்தரவாதத்திற்கான கட்டணம் (credit default swap-CDS) இன்னும் வியக்கத்தக்களவில் உயர்ந்தது. இப்பொழுது பல டிரில்லியன் டாலர் மதிப்புடைய CDSகள் கட்டுப்பாடற்ற பத்திரங்களை கொண்ட ஒரு வடிவமைப்பு ஆகும்; இதில் CDS விற்பனையாளர்கள் அதை வாங்குபவர்களுக்கு பத்திரங்களின் பெறுமதிக்கு உறுதியளிக்கின்றனர். உயரும் CDS விலைகள் அந்த ஒப்பந்தங்களை விற்பவர்கள் செய்துள்ள காப்பீடுகளை ஒட்டி பெருநிறுவனம் அல்லது அரசாங்கப் பத்திரங்கள்மீது நம்பிக்கை குறைவதை காட்டுகின்றன.

CDS சந்தை அதிகளவு ஊகவாணிபத்தை கொண்டுள்ளது. ஏனெனில் வங்கிகள், தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட முதலீட்டாளர்கள் இவ்வாறான பத்திரங்களை வைத்திருக்காதபோதிலும் CDS ஒப்பந்தங்கள் விலை பற்றி பந்தயம் கட்டலாம். அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட கடன்கள் பற்றிய அச்சம், குறிப்பாக கிரேக்கம், ஆனால் போர்த்துகல், ஸ்பெயின் நாடுகள் பற்றியும் உள்ளது, ஊகக்காரர்களுக்கு நாட்டின் பத்திரங்களை காப்பீடு செய்ய உந்துதல் கொடுத்து, தாமதம் ஏற்பட்டால் ஊக வணிகம் செய்ய உதவுகிறது. இதனால் நாட்டின் கடன்கள் மீது நம்பிக்கை குறைவதுடன், அந்நிலை ஏற்பட்டுவிடும் என்ற வாய்ப்பும் அதிகமாகிறது.

மூன்று நாடுகளும் பொதுத் துறை வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நலச் செலவுகளில் பெரும் குறைப்பை ஏற்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளன. இதைத்தவிர புதிய நுகர்வு வரிகளைச் சுமத்துவதாகவும் கூறியுள்ளன. இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையான அவை வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளை தீவிரமாகக் குறைக்க வேண்டும் என்பதுடன் இயைந்து உள்ளன. பற்றாக்குறைகள் இப்பொழுது அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளன.

கடந்த ஆண்டு முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளை மாற்றுவதாக கூறிய உறுதிமொழி அடிப்படையில் வெற்றி பெற்ற சமூக ஜனநாயக PASOK கட்சியைச் சேர்ந்த கிரேக்க ஜனாதிபதி ஜோர்ஜ் பாபாண்ட்ரு இந்த வாரம் பொதுத் துறை ஊதியங்கள் அதே நிலையில் முடக்கப்படும், படிகள் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இவை கிட்டத்தட்ட ஊதிய வெட்டு 4 சதவிகிதம் என்று போகும். ஓய்வூதிய "சீர்திருத்தத்திற்கும்" இவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஓய்வூதிய வயது உயர்த்தப்படும், மற்றும் எரிபொருளுக்கான அதிக வரிகளும் இருக்கும்.

போர்த்துகல், ஸ்பெயினில் உள்ள சமூக-ஜனநாயகக் கட்சி அரசாங்கங்களும் இதேபோன்ற கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதாக உறுதி கொடுத்துள்ளன.

இந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் பெருகும் எதிர்ப்பின் அடையாளங்கள் உலக நிதியச் சந்தைகளை தாக்கும் அதிர்ச்சிகளில் பெரும் பங்கைக் கொண்டுள்ளன. அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன இயக்குனர் கூட்டங்களில் தொழிலாள வர்க்கத்துடன் பெரும் மோதல் வரவுள்ளது என்ற பெருகிய உணர்வு உள்ளது. அது புரட்சிகர தாக்கங்களைக்கூட கொண்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

அரசாங்கத் தலைவர்களும் பாராளுமன்றங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்றுத் தன்மை கொண்ட தாக்குதல்களை நடாத்துவதற்கு "அரசியல் உறுதி", "அரசியல் ஒருமித்த உணர்வை" காட்ட வேண்டும் என்று வங்கிகளும் செய்தி ஊடகங்களும் கோருகின்றன. இந்த சொற்றொடர்கள் இரக்கமற்ற தன்மை வேண்டும், அரசாங்க அடக்குமுறையை பிரயோகிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களின் மாற்றுச் சொற்கள் ஆகும். ஆனால் நிதியச் சந்தைகள் மீண்டும் தேவையான நடவடிக்கைகளை அரசியல் தலைவர்கள் எடுக்க மாட்டார்கள் என்பது பற்றியும் அத்தகைய மோதலின் விளைவுகள் பற்றியும் நம்பிக்கையற்று உள்ளனர்.

வியாழனன்று கிரேக்கத் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய எதிர்ப்பில் தொடர்ந்த வேலைநிறுத்தங்களில் முதல் செயலை தொடங்கினர். சுங்கத்துறை, வரித்துறை அதிகாரிகள் ஒரு 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இதனால் துறைமுகங்கள், எல்லை வழிப்போக்குவரத்து ஆகியவை நாடு முழுவதும் மூடப்பட்டன. மற்ற பொதுத்துறை, தனியார் துறை ஊழியர்கள் அடுத்த வாரம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்துள்ளனர்.

கிரேக்க விவசாயிகள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்துகின்றனர்.

வியாழனன்று பெரும் விற்பனையை உலகச் சந்தைகளில் தோற்றுவித்ததற்கு முக்கியகாரணம் கிரேக்க தொழிற்சங்கங்கள் பெப்ருவரி 24ம் தேதி ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தை அறிவித்ததுதான். ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் PASOK அரசாங்கம் அதன் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த உதவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அழுத்தத்தினால் வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடும் கட்டாயத்தில் உள்ளன.

தொழிற்சங்க தலைவர்கள் ஒருபகுதி தொழிலாளர் அணிதிரளலை பயன்படுத்தி மக்கள் சீற்றத்தை குறைத்து அதை தேசியவாத கோஷங்களின் பின் திருப்பலாம் என நம்புகின்றன. அதே நேரத்தில் அவை வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கும் விதத்தில் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்திற்கும் முயல்கின்றன. ஆனால் ஆளும் வட்டங்களுக்குள் ஏற்கனவே பெரும் வெகுஜன வேலையின்மை, குறைந்துள்ள வாழ்க்கத்தரங்களை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் சீற்றத்தை தொழிற்சங்கங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று அச்சமுள்ளது.

போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாட்டு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை நடத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளன.

பங்குகள் விற்பனையை விரைவில் கொண்டு வந்ததற்கு மற்ற காரணங்களுள், போர்த்துகல் அரசாங்கம் புதனன்று அளித்த அரசாங்கப் பத்திரங்களுக்கு முழு விலையில் வாங்குவதற்கு ஒருவரும் கிடைக்காமல் போனதும் ஒன்று ஆகும். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதன் சிக்கன நடவடிக்கைகள் தொகுப்பையும் தோற்கடித்துவிட்டன.

16 நாடுகள் அடங்கிய யூரோப்பகுதியில் கிரேக்கம், போர்த்துகல், ஸ்பெயின் தவிர ஆனால் அயர்லாந்து, இத்தாலி உட்பட வலுவற்ற நாடுகளில் உள்ள கடன்நெருக்கடி யூரோவின் நிலைப்பாடு பற்றியே வினாக்களை எழுப்புகிறது. 11 ஆண்டுகால நாணயம் பொருளாதார, நிதிய நெருக்கடியின் அழுத்தத்தினால் சரியக்கூடும் என்ற பொது ஊகம் உள்ளது.

சமீபத்திய வாரங்களில் யூரோ, அமெரிக்க டாலர், யென்னிற்கு எதிராக பெரும் சரிவைக் கண்டது. வெள்ளியன்று இது $1.3620 என்று குறைந்தது. டிசம்பர் மாதத்தில் இருந்து டாலருக்கு எதிராக இது 9 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.

இது ஒன்றும் அமெரிக்க நாணயத்தின் இயல்பான வலிமையை பிரதிபலிக்கவில்லை. மாறாக ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கும் மேலாக உலகின் மிகப் பெரிய கடனாளி நாடான அமெரிக்காவில் பெரும் நெருக்கடி பற்றிய கவலை அதிகமாக உள்ளது. ஜனாதிபதி ஒபாமாவின் கடந்த வார வரவு-செலவுத் திட்ட அறிவிப்பிற்கு பின்னர் ஐரோப்பிய நெருக்கடி வெடித்துள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. அமெரிக்க வரவு-செலவுத் திட்டம் அதன் தற்போதைய பற்றாக்குறை 1.6 டிரில்லியன் டாலர்என்று புலப்படுத்தியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவிகிதம் ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகக்கூடிய சதவிகிதம் ஆகும்.

இது கிரேக்கப் பற்றாக்குறையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவிகிதத்தை நெருங்குகிறது. இது ஸ்பெயின் நாட்டுடையதை விட அதிகம் மட்டுமல்லாது யூரோப் பகுதி சராசரியைவிட இருமடங்கும் அதிகமாகும். மேலும் அமெரிக்க வரவு-செலவுத் திட்டம் பல ஆண்டுகளுக்கு டிரில்லியன் டாலர் பற்றாக்குறைகளைத்தான் கணித்துள்ளது.

எல்லாத் தொழில்துறை முன்னேற்றம் அடைந்து நாடுகளைப் போலவே, அமெரிக்க அரசாங்கமும் 2008 நிதிய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், அதன் வங்கிகளுடைய கடன்களை எடுத்துக் கொண்டு, அடிப்படையில் அதன் கருவூலத்தை திவால் செய்து நிதிய உயரடுக்கின் செல்வத்தைப் பாதுகாத்தது. ஐரோப்பிய அரசாங்கங்களை போலவே ஒபாமா நிர்வாகமும் நுகர்வுக் குறைவு, அடிப்படை சமூகநலத் திட்டங்களில் பெரும் குறைப்பு என்ற விதத்தில் பொது மக்கள் சுமையை ஏற்க வேண்டும் என்று விரும்புகிறது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் நிரந்தர, பாரிய சரிவு வேண்டும் என விரும்புகின்றது.

1990 களின் ஆசிய கடன் நெருக்கடி போன்ற முந்தைய சர்வதேச நிதிய நெருக்கடிகளில் இருந்ததைப் போல் இல்லாமல், இறுதியில் அமெரிக்கா எப்படியும் கடன் கொடுக்கும் என்ற பங்கை இப்பொழுது வகிக்கமுடியாது. உலகப் பொருளாதார மேலாதிக்க சக்தி என்ற அதனை முந்தைய பங்கை அமெரிக்கா மீண்டும் பெறும் நிலைமையை இழந்துவிட்டது. இச்சரிவுதான் உலகின் இருப்பு, வணிக நாணயம் (reserve and trading currency) என்ற டாலரின் பங்கிற்கு பெருகிய சவால் வந்துள்ளதின் மூலம் பிரதிபலிப்பாகிறது.

கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார அரங்கில், பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி தன்னுடைய முக்கிய உரையில் எதிர்வரவிருக்கும் 20 நாடுகள் குழுவில் வகிக்கவுள்ள அவருடைய தலைமையைப் பயன்படுத்தி டாலர் முக்கிய இருப்பு நாணயமாக இராத வகையில் ஒரு சர்வதேச புதிய நாணய முறைக்கு வகை செய்ய இருப்பதாகக் கூறினார். புதனன்று Mood's Investors Service அமெரிக்கா அதன் AAA கடன் அமைப்பு மதிப்புத் தரக் குறைப்பை, ஒபாமா கூட்டாட்சி பற்றாக்குறையை குறைக்கும் விதத்தில் இதுவரை அறிவித்துள்ளதைவிட இன்னும் கடுமையான செலவுக் குறைப்புக்களை செய்தால் ஒழிய, எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்க பொருளாதார பலம் மற்றும் செலுத்துமதிதகமை ஆகியவை அரிப்புக்குள்ளானதுதான் கிரேக்கம், போர்த்துகல், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் அரச உறுதியளித்துள்ள கடன் நெருக்கடியின் ஒரு வெடிப்புத்தன்மை, ஒரேமாதிரியான தன்மை ஆகியவற்றிற்கு வழி செய்துள்ளது.

டாலரின் மதிப்பு சமீபத்தில் உயர்வு, உலகச் சொத்துக் குமிழ்களில் சரிவு இருக்கும் என அஞ்சும் முதலீட்டாளர்கள் "பாதுகாப்பை நாடுவதின்" விளைவு ஆகும். மேலும் அவர்கள் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மற்றும் ஜேர்மனிய அரசாங்கத்தின் கடன்கள் ஆகியவை தற்காலிகப் புகலிடம் என்றும் நினைக்கின்றனர். பல முக்கிய விதங்களில், டாலர் சரிவில் குறுகியகால திருப்பம் உலக நிதியச் சந்தைகள் நெருக்கடி ஆழ்ந்துபோவதின் வெளிப்பாடு ஆகும்.

பல பொருளாதார வல்லுனர்கள் கடந்த ஆண்டு எச்சரித்தது போலவே, நிதியச் சந்தைகளை குறைந்த கடன் கொடுத்தல் மூலம், கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதத்தை கொடுத்ததில், டிரில்லியன் டாலர்களை மின்னணு முறைமூலம் அச்சடித்தது போன்ற விதத்தில், அமெரிக்க கொள்கை நிரப்பியது. அமெரிக்க பெரும் வங்கிகளுக்கு முட்டுக் கொடுத்து அவை இரட்டை இலக்க வேலையின்மை இருந்தும் மகத்தான இலாபங்களை ஈட்ட வகை செய்த முறையில், ஆபத்து நிறைந்த, பங்குகள், பத்திரங்கள், பொருள்கள், நாணயங்கள் ஆகியவற்றின் மீது அலையென ஊக நடவடிக்கைகளுக்கு எரியூட்டியது. இப்பொருளாதார வல்லுனர்கள் டாலரின் மதிப்பில் பெரும் ஏற்றம் இந்த ஊகவியாபாரத்தை கவிழ்த்துவிடும் என்று கூறினர். டாலர் தொடர்ந்து சரியும் என்ற கருத்தை அது அடித்தளமாக கொண்டிருந்தது. இது மற்றும் மிகைமதிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களை விரைவாகவும் உறுதிகுலைக்கும் விதத்தில் விற்கும் நிலைக்கு இட்டுச்செல்லும்.

சொத்துக் குமிழ்களில் இச் சரிவு தொடங்கிவிட்டதாக இப்பொழுது தோன்றுகிறது.