World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The real state of the union in 2010

2010 இல் நாட்டின் உண்மையான நிலைமை

Barry Grey
30 January 2010

Use this version to print | Send feedback

புதனன்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்க சமூகத்தின் உண்மையானநிலை பற்றி சரியான எடுத்துக்காட்டலை தவிர்த்தார். பாரிய பொருளாதார நெருக்கடியும், பல மில்லியன் அமெரிக்க மக்கள் மீது அதனது பேரழிவான பாதிப்பும் இருக்கும்போது, ஒபாமா அவற்றை தவிர்த்தலும், வெற்று வார்த்தைப்பிரயோகங்களும் ஆச்சரியமானது.

நெருக்கடியை பற்றி ஒபாமா பொதுவான தெளிவற்ற முறையில் பேசினார். ஆனால் எந்த உண்மயையும் மேற்கோளிடவில்லை. சாதாரண அமெரிக்கர்கள் நிலை பற்றி பரிவுணர்வுகாட்டும் வகையில் பல அலங்காரச் சொற்களை பயன்படுத்தினார். ஆனால் அவருடைய உரை பரந்த நாட்டு மக்களுக்கும் அவருக்கு மட்டுமல்லாமல், முழு அரசியல் ஆளும்பிரிவினருக்கும் இடையேயுள்ள பெரும் பிளவான தனிமைப்படுத்தலையும், பொருட்படுத்தாத தன்மையையும் வெளிப்படுத்தியது.

தான் நிதிய முறையை மீட்பதற்கு எடுத்த "ஆக்கிரோஷமான" நடவடிக்கைகளை பாதுகாத்து தன் உரையை தொடக்கினார். "ஓராண்டிற்கு பின்னர் புயலின் மோசமான பகுதி கடக்கப்பட்டுவிட்டது" என்றும் கூறினார். உண்மையில் அப்படியா? எவருக்கு புயல் கடக்கப்பட்டுவிட்டது?

இதன் விடை வெளிப்படையானது. பொருளாதார பேரழிவைக் கொண்டுவந்த ஊக வகை நிதிய ஒட்டுண்ணிகளுக்குத்தான் புயல் கடக்கப்பட்டுவின்னது. தொழிலாள வர்க்கத்தின் நிலைமை மிக மோசமாகிவிட்டது. வீடுகள் ஏலத்தில் விற்கப்படுதல், பட்டினி ஆகியவை மிக உயர்ந்த அளவில் உள்ளதுடன், வறுமை விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஓராண்டிற்கு முன் ஒபாமா பதவி ஏற்றபோது உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 7.6 சதவிகிதமாக இருந்தது. இப்பொழுது அது 10 சதவிகிதமாகி உள்ளது.

இந்த வியத்தகு கருத்தை அடுத்து தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி பற்றிய வாடிக்கையான குறிப்பை ஒபாமா கொடுத்தார்: "அமெரிக்கர்களில் பத்தில் ஒருவர் வேலையின்றி உள்ளார். பல வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. வீடுகளின் மதிப்புக்கள் சரிந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் சிறு நகரங்களும் சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன."

பெருமந்த நிலைக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை விளக்க அவரால் கூறமுடிந்தது இவ்வளவுதான்.

பெருகி வரும் அதிருப்தியின் அடையாளங்கள் பற்றி, உண்மையான நிலை, சூழ்நிலையோடு தொடர்புடையவை என்று இல்லாமல், ஏதோ அவை மக்களின் தவறான கருத்துக்களால் விளைந்தது போல் பேசினார். "வோல் ஸ்ட்ரீட்டின் மோசமான நடடிக்கை எனத் தோன்றுவதற்கு வெகுமதி கிடைக்கிறது, சாதாரண மக்களின் உழைப்பிற்கு வெகுமதி இல்லை, அல்லது வாஷிங்டன் நம் பிரச்சினைகளை ஏன் தீர்க்க இயலவில்லை அல்லது விருப்பம் காட்டவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை."

ஒபாமா நிர்வாகம் அதன் கொள்கைகளை நிதிய அடுக்கின் செல்வத்தை காப்பதில்தான் குவிப்பு காட்டுவதை போலவும், அரசியல் முறை மக்கள் நலன்களையும் விருப்பங்களையும் புறக்கணிக்கிறது போலவும் "தோன்றுகிறது".

மற்றொரு கட்டத்தில் ஒபாமா தான் 2 மில்லியன் வேலைகளை "காப்பாற்றியதாகவும்", "பொருளாதரம் மீண்டும் வளர்ச்சி பெறுகிறது" என்றும் கூறினார். அதிக விளக்கமற்ற மக்களுக்கு தோன்றுவது போல் இருப்பு மோசமில்லை போலும்.

இதே போல் அவருடைய சுகாதார பாதுகாப்புத் திட்டத்திற்கு மக்களின் எதிர்ப்பு தவறாகப்புரிந்து கொண்டதால் என்று அவர் கூறினார். "அமெரிக்க மக்களுக்கு இன்னும் இதனை தெளிவாக விளங்கப்படுத்தாதற்கு என்னுடைய பங்கையும் நான் கொண்டுள்ளேன்" என்றார் அவர். அரசாங்கத்தின் பிரச்சாரத்தில் இருப்பதை அதிக மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டு, உண்மையில் திட்டம் என்ன என்பதை அறிந்துள்ளனர். அதாவது நலன்கள் குறைக்கப்பட்டுள்ளன, சுகாதாரப்பாதுகாப்பு மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பகிர்ந்துதான் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்துள்ளனர்.

அமெரிக்க மக்களுக்காக போலித்தன பாராட்டுப் பாடல் ஒன்றைக் கூறிய விதத்தில், ஒபாமா "மக்களுடைய கெளரவ நடத்தையினாலும் பெரும் வலிமையினாலும் ...எமது ஒற்றுமை வலுவாக உள்ளது" என்று அறிவித்தார்.

திங்களன்று உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்கா மற்றும் சர்வதேச அரசியல் நிலைமை பற்றி இந்த மாதம் முன்னதாக சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேசியக் கூட்டத்தில் கொடுத்த அறிக்கையை வெளியிடும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த் மற்றும் தேசிய செயலாளர் ஜோ கிஷோர் இருவரும் இணைந்து தயாரித்த இந்த அறிக்கை அமெரிக்க, மற்றும் உலக முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடியை அதன் வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஒரு புதிய புரட்சிகர வர்க்கப் போராட்ட காலத்திற்கு இட்டுச் செல்லும் முக்கிய உந்துதல் சக்திகளை ஆராய்கிறது.

இந்த அறிக்கை அமெரிக்க சமூகம், அரசியல் ஆகியவற்றின் நிலை பற்றி ஒரு புறநிலைரீதியான பகுப்பாய்வை அளிக்கிறது. "நாட்டின் நிலை" பற்றிய எமது மதிப்பீட்டின் முன்பார்வையாக, அறிக்கையில் இருந்து சில சுருக்கங்களை கீழே கொடுக்கிறோம்.

ஒபாமா நிர்வாகத்தின் முன்னுரிமைகள் பற்றி அறிக்கை கூறுகிறது:

ஒபாமா நிர்வாகத்தின் முதன் முன்னுரிமை நிதிய உயரடுக்கிற்கு அதன் செல்வம் பாதுகாக்கப்படும் என்றும் "புதிய உடன்பாட்டு" வகையில் வோல் ஸ்ட்ரீட்டின் சூதாட்டத்திற்கு தடைகள் ஏதும் மறுபடி சுமத்தப்படாது என்று உறுதியளிப்பது ஆகும். உண்மையில் முற்றிலும் மாறானதுதான் நடந்துள்ளது. உலக நிதிய முறையில் பாரிய நிதி உட்செலுத்தப்பட்டது எதிர்பார்த்த வகையில் ஒரு புதிய சுற்று பொறுப்பற்ற ஊகவாணிபத்தை வோல் ஸ்ட்ரீட் நடத்தத்தான் வகை செய்தது. பங்குகளின் மதிப்புக்கள் பெரிதும் உயர்ந்துவிட்டன, ஊக வணிகர்களை இன்னும் செழிப்பு உடையவர்களாக மாற்றியது, அதே நேரத்தில் பெரும்பாலான தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த துன்பங்களை துடைக்க ஏதும் செய்யவில்லை.

21ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தம் ஆரம்பிக்கையில், ஒபாமா நிர்வாகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க நேரத்தில் உள்ள சமூக நிலைமைகள் பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது:

அமெரிக்க மக்களின் பரந்த பிரிவுகளின் நிலைமைகள் தொடர்ந்து சரிகின்றன. கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இப்பொழுது வறுமையில் வாழ்கின்றனர். 6 மில்லியன் மக்கள் (மக்கள் தொகையில் 2 சதவிகிதம்) வருமானமின்றி, உணவு உதவியை நம்பி வாழ்கின்றனர். தசாப்தத்தின் இறுதியில், உத்தியோகபூர்வ வேலையின்மை அமெரிக்காவில் 10 சதவிகிதத்தை எட்டி விட்டது. 2009ல் 4.2 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டு விட்டன....வேலை தேடுவதாக அரசாங்கம் நினைக்கும் உத்தியோகபூர்வ தொழிலாளர் பிரிவு உண்மையில் ஜனவரி மாதம் 661,000 என்று குறைந்துவிட்டது. இது பரந்த அளவில் வேலையின்மை விகிதத்தை 17.3 ஆக உயர்த்தியுள்ளது. சுயவிருப்பமற்று பகுதிநேர வேலை மட்டும் பார்க்கும் மில்லியன் கணக்கான மக்களை அது உள்ளடக்கியுள்ளது.

சில மாநிலங்களிலும் நகரங்களிலும், நெருக்கடி பெருமந்த நிலைகள் போல் அடைந்துள்ளது. மிச்சிகனில் வேலையின்மை விகிதம் 14.7 சதவிகிதம் ஆகும். மாநிலத்தில் மிகப் பெரிய நகரமான டெட்ரோயிட்டில், உண்மை லேயின்மை விகிதம் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ஆகும். நாட்டில் மிக அதிக மக்கள் இருக்கும் கலிபோர்னியாவில் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 12.3 சதவிகிதம் ஆகும். நீண்டகால வேலையின்மை அமெரிக்க வாழ்வில் வாடிக்கைக் கூறாகிவிட்டது. கிட்டத்தட்ட 40 சதவிகித வேலையில்லாதவர்கள் 27 வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமாக வேலையின்றி உள்ளனர். 2007ல் தொடங்கிய வீட்டு விலைச் சரிவுகள் வீடுகள் ஏலத்தில் விற்பனை எழுச்சிக்கு வகை செய்தன. மிக அதிகமாக வகையில் 2009 நான்காம் கால்பகுதியில் இது இருந்தது. மற்றும் ஒரு 3 மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை இழப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தசாப்தம் அமெரிக்க வரலாற்றில் வேலைகளை பொறுத்த வரை மிக மோசமானது ஆகும். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட், "டிசம்பர் 1999ல் இருந்து நிகர வேலை தோற்றுவிப்பு என்பது பூஜ்யமாகத்தான் உள்ளது. 1940கள் வரை எந்த முந்தைய தசாப்தத்திலும் வேலைவளர்ச்சி 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்ததில்லை. பொருளாதார உற்பத்தி 1930களில் இருந்து எந்த தசாப்தத்திலும் இல்லாத அளவிற்கு குறைந்து போயிற்று."

அமெரிக்க தொழிலாளர்களின் வருமானங்கள் சரிந்துவிட்டன. அமெரிக்க வீடுகளின் நிகர மதிப்பும் குறைந்துவிட்டது. உண்மை நிலையில், உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளபோதிலும் 2009ல் வாராந்திர ஊதியங்கள் 1 சதவிகிதம் குறைந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் வந்துள்ள ஒரு கட்டுரை கூறுகிறது: "வோல் ஸ்ட்ரீட் மற்றும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவரும் வெற்றிகர வனப்புரைகள் ஒருபுறம் இருந்தாலும்--பொருளாதார தரத்தில் பேசும்போது, அது அமெரிக்க குடும்பங்களுக்கு பேரழிவு கொடுத்த தசாப்தம் என்று வணிக, தொழிலாளர் துறை கூறுகிறது. ஒரு சராசரி அமெரிக்கரின் சொத்துக்களின் நிகர மதிப்பு உண்மையில் மிகஅதிக 13 சதவிகிதம் சரிந்துவிட்டது."

2010ல் நாட்டின் உண்மை நிலை இதுதான்.