World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Sovereign debt fears trigger plunge in global markets

அரசாங்கத்தால் உறுதிவழங்கப்பட்ட கடன் அமைப்புகள் பற்றிய அச்சம் உலகச் சந்தைகளில் சரிவைக் கொடுக்கின்றது

By Patrick O'Connor
5 February 2010

Use this version to print | Send feedback

அமெரிக்கா, ஐரோப்பா இன்னும் பல பகுதிகளிலும் நேற்று பங்குச் சந்தைகள், பல நாடுகளில் உறுதிவழங்கப்பட்ட கடன்களின் அளவு பற்றிய பெருகும் கவலைகளை எதிர்கொள்ளும் வகையில் சரிந்தன. கிரேக்கம் ஒரு தேசிய திவாலின் விளிம்பில் உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் 2012க்குள் அரசாங்கம் அதன் பற்றாக்குறையை 12.7 சதவிகிதத்தில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு குறைக்கும் வகையில் மிருகத்தனமான ஊதியக் குறைப்புக்கள், சமூகநலச் செலவுகளை செயல்படுத்தும் திறன் பற்றி சந்தேகப்படுகின்றனர். போர்த்துக்கல், ஸ்பெயின் நாடுகளும் இதே போன்ற நிலைமையைத்தான் எதிர்கொள்கின்றன.

யூரோ பகுதியில் உள்ள நெருக்கடியால் அமெரிக்க முதலாளித்துவம் அதன் பெருகிய கடன்களை தீர்த்து, நீண்ட கால அடிப்படையில் செலுத்துமதி தகமையை கொண்டிருக்குமா என்ற கேள்வியும் உள்ளது. புதனன்று Moody's Investors Service அமெரிக்காவின் மூன்று A அரச உறுதியளிக்கப்பட்ட கடன் வழங்கும் நேர்மை மதிப்புத்தரம் விரைவில் எதிர்பார்ப்பதைவிட பொருளாதார வளர்ச்சி அதிகமானால் அல்லது ஒபாமா நிர்வாகம் நிதியப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் புதிய ஆழ்ந்த செலவினக் குறைப்புக்களை ஏற்படுத்தினால் ஒழிய குறைக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. தற்போதைய அமெரிக்கக் கடன் போக்கு "தொடர்ச்சியாக, தெளிவாக, மேல் நோக்கிய வண்ணம் உள்ளது" என்றும் Moody எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்க வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, கிட்டத்தட்ட 1.6 பில்லியன் டாலராகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.6 சதவிகிதத்திற்கு சமம். இது 1945ல் இருந்து மிக அதிகமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விகிதமாக அமெரிக்க பற்றாக்குறை கிரேக்கத்தைவிட அதிக தொலைவில் இல்லை, ஆனால் ஸ்பெயினைக் காட்டிலும் அதிகமாகவும் யூரோப் பகுதி சராசரியைவிட இருமடங்காகவும் உள்ளது. உலகின் நாணயம் டாலர் என்ற அந்தஸ்து ஒன்றுதான் கிரேக்கம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள அழுத்தத்தின் கீழ் அதனை வராமல் தடுக்கிறது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் Jean-Claude Trichet மற்ற யூரோப்பகுதி நாடுகள் மற்றும் கிரேக்கம் "வலுவான சீர்திருதிருத்தங்களை" அவற்றின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளை குறைப்பதற்கு செய்யவேண்டும் என்னும் "அசாதாராண கடும் எச்சரிக்கை" ஒன்று என விடுத்ததை அடுத்து நேற்றைய சந்தைச் சரிவு ஐரோப்பாவில் தொடங்கியது. ஸ்பெயினின் முக்கிய பங்கு குறியீடு 6 சதவிகிதம் சரிந்தது. போர்த்துகல் பங்குகள் 5 சதவிகிதம் இழந்தன. கிரேக்க குறியீடு 3.3 சதவிகிதம் குறைந்தது. லண்டனின் FTSE 100 கடந்த நவம்பருக்கு பின் அதன் மிகக் குறைவான 2.2 சதவிகிதம் குறைந்தது. யூரோ 7 மாதம் இல்லாத அளவிற்கு டாலருக்கு எதிராக மதிப்பை இழந்தது.

வோல் ஸ்ட்ரீட்டில் நேற்றைய விற்பனைகள் வேலை பற்றிய தகவல் எதிர்பார்த்ததைவிட ஓரளவு மோசமாக இருந்தது. கடந்த வாரம் வேலையின்மை நலன்கள் பற்றிய ஆரம்ப கூற்றுக்கள் உயர்ந்து, இன்று சரிப்படுத்தப்பட உள்ள உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதத்தில் முன்னேற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்களை ஊக்கமிழக்கச் செய்தன. Dow Jones குறியீடு குறுகிய நேரத்திற்கு 10,000க்கு கீழ் சென்று இறுதியில் 10,002 புள்ளிகள் என்று 2.6 சதவிகிதம் குறைவாக முடிவுற்றது. ஏப்ரல் 2009க்கு பின்னர் இது அதன் மோசமான ஒரு நாள் குறைவு ஆகும். கடந்த 15 நாட்களில் Dow 6.5 சதவிகிதம் இழந்துள்ளது. மற்ற நியூயோர்க் குறியீடுகளும் நேற்று சரிந்தன; S & P 500, 3.1 சதவிகிதத்தையும் Nasdaq 3 சதவிகிதமும் இழந்தன.

ஆசிய சந்தைகளும் பெரும்பாலும் மந்த நிலையில்தான் இருந்தன. ஜப்பானின் Nikkei குறியீடு 0.5 சதவிகிதம் குறைந்தது; சீனாவின் Shanghai Composite 0.3 சதவிகிதம் இழந்தது.

Barclays Capital இன் செய்தித் தொடர்பாளர் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க அவசரகால உடன்பாட்டு அதிகாரங்களை பயன்படுத்த நேரலாம் என்று கூறினார். "அது கட்டுப்படுத்தப்பட முடியவில்லை என்றால், ஒரு "லெஹ்மன் மாதிரி" சுனாமியை ஐரோப்பாவின் பெரும்பகுதியில் பரப்பிவிடக்கூடும்" என்று Barclays இன் Julian Callow பிரிட்டிஷ் டெலிகிராப்பிடம் கூறினார்.

இந்த அச்சுறுத்தல் 2008 நிதிய நெருக்கடியை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கைகளான முன்னோடியில்லாத வகையில் வங்கிகள் பிணை எடுப்பு, ஒருங்கிணைந்த உலகளாவிய ஊக்கப் செலவு நடவடிக்கைகள், பல நாடுகளில் கிட்டத்தட்ட பூஜ்ய வட்டி விகிதம் போன்றவை நெருக்கடியை ஏற்படுத்திய அடித்தள முரண்பாடுகளை அதிகப்படுத்தின என்ற உண்மையைத்தான் அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. மேலும், சமீபத்திய பங்குச் சந்தைகளின் கழைக்கூத்தாடித்தனங்கள் கடந்த 10 மாதங்களில் நிதியத் துறையின் நிலைமைகளில் மீட்பை ஓரளவிற்கு கொடுத்த ஊக்க வகை நிதிய, நாணயக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் தவிர்க்க முடியாமல் அகற்றப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் மிக விரைவில் அவசரக்கால ஊக்க தொகை செலவினங்களை நிறுத்திவிடுதல் "இரட்டை" மந்த நிலையை தூண்டும் ஆபத்தை கொண்டுள்ளது என்று அரசாங்கங்களை எச்சரித்துள்ளது. "ஆனால் பத்திரச் சந்தைகள் சில நாடுகளில் தொடர்ந்த பொதுச் செலவினங்களும் உயர் பற்றாக்குறைகளும் பொறுக்கமுடியாத கடன் நிலையை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டிருக்கின்றன என்ற முடிவெடுத்தால், அவை தாங்களே நிலைமையை சீர்செய்யலாம்" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்று கூறுகிறது. "புதனன்று கடன் சந்தைகள் தங்கள் அக்கறைகளை புரிந்து கொள்ள மறுக்கும் அரசியல்வாதிகளை மன்னிக்கத் தயாராக இல்லை என்று எச்சரிக்கை கொடுக்கும் சமீபத்திய பெரிய முதலீட்டாளார் Schroders ஆகும். சந்தையில் இருந்து அதிக கடனை கொண்டுள்ள நாடுகளில் இந்த அழுத்தத்தை எதிர்கொள்ளும் கொள்கை இயற்றுபவர்கள் உகந்ததல்லாத தேர்வை எதிர்கொள்ள நேரிடும்: ஒன்று தானே விரும்பி குறைப்புக்கள் செய்ய வேண்டும், மீட்பு சேதமுறலாம் என்ற ஆபத்தை சந்திக்க வேண்டும், அல்லது குறைப்புக்கள் அவர்கள் மீது சந்தை நெருக்கடிக்கு இடையில் வற்புறுத்திக் கொடுத்துவிட வேண்டும். இவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கும் அதிக நாட்கள் அவகாசம் இல்லை."

இது இப்பொழுது உலகின் பெரும் நாடுகளுக்கும் பொருந்தும். "அரச உறுதியளித்த கடன் பிரச்சினை டாவோஸ் உலகப் பொருளாதார அரங்கில் கடந்த வாரம் பல விவாதங்களில் ஆதிக்கம் கொண்டிருந்தது" என்று பைனான்ஸியல் டைம்ஸ் விளக்கியது. "கிரேக்க நிதிய நெருக்கடி பற்றி அதிக குவிப்பு காட்டப்பட்டாலும், கணிசமான கவலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் பார்வை பற்றியும் தெரிவிக்கப்பட்டன.... முதலீட்டாளர்களின் கவலையின் இதயத்தானத்தில் உயரும் கடனைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகள் கடனைக் குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசியல் விருப்பம் கொள்ளுமா, ஒருமித்த உணர்வைப் பெறுமா என்பன உள்ளன."

இன்னும் நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், "முதலீட்டாளர் அக்கறைகள்" தேசிய அரசாங்கங்கள் சமூகநல உதவி, சமூகக் கட்டுமானம், சுகாதாரம், கல்வி, பொதுத் துறை வேலைகள், ஊதியங்கள் ஆகியவை உட்பட பொதுச் செலவுகளில் மக்களுடைய எதிர்ப்புக்களுக்கு இடையே கடுமையான குறைப்புக்களை செய்யுமா என்பதுதான். உலக நிதிய உயரடுக்குகள் இப்பொழுது நிலமையில் ஒரு புதிய கூறுபாடு இருப்பதைக் கவனிக்கும் கட்டாயத்தில் உள்ளன. அதாவது மீண்டும் வர்க்கப் போராட்டம் வெளிப்படுமா, தன்னுடைய நலன்களை பாதுகாக்க தொழிலாள வர்க்கம் தலையீடு செய்ய ஆரம்பிக்குமா என்பதுதான்.

முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் கிரேக்க அரசாங்கத்தின் திட்டமான பற்றாக்குறையை குறைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் கொடுத்ததை வரவேற்றனர். ஆனால் தொழிற்சங்கங்கள் பெப்ருவரி 24 அன்று ஒரு பொது வேலைநிறுத்தம் என்று அறிவித்தவுடன் உடனே நாட்டின் பத்திரங்கள் உடனடியாக விற்கப்பட்டுவிட்டன என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று குறிப்பிட்டுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வர்ணனையாளர் ஒருவரான Paul Hannon செய்தித்தாளின் இணையத்தள பகுதி ஒன்றில் "கிரேக்கம் ஆளும் தன்மை உடையதா" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கிரேக்க மக்களிடையே "கீழ்ப்படிதல், பொது தேவை பற்றிய உணர்வு" இல்லாதது பற்றி புலம்பிய ஹானன் "ஆளும் திறன்" என்பதை பிரதம மந்திரி ஜோர்ஜ் பாபாண்ட்ரு அவருடைய சிக்கன நடவடிகற்கை உந்துதலுக்காக எதிர்ப்பை நசுக்கும் திறனுடன் சமன்படுத்தினார். "கிரேக்கம் ஆளப்பட முடியுமா என்ற பிரச்சினையை எழுப்பியபின், பத்திர முதலீட்டாளர்கள் இப்பொழுது அதே சந்தேகங்களை அதிக வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை கொண்ட வேறு சில நாடுகள் பற்றி எழுப்புகின்றன. இதுதான் போர்த்துகல் அரசாங்கப் பத்திரங்களை காப்பீடு செய்யும் செலவு மிக அதிகமாகி விட்டது, முதலீட்டாளர்கள் ஏன் ஸ்பெயின் அரசாங்க பத்திரங்களையும் விற்கின்றனர் என்பதை விளக்குகிறது" என்று கட்டுரை தொடர்ந்து எழுதியுள்ளது.

இன்று செலவு குறைப்புக்களை எதிர்த்து முதல் எதிர்ப்பை போர்த்துகல் தொழிலாளர்கள் நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் சிறுபான்மை சமூக ஜனநாயக அரசாங்கம் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு பிராந்திய நிதிய சட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றன. பாராளுமன்ற விவகார மந்திரி Jorge Lacao சட்டமன்றத்தின் ஒப்புதல் "ஆளும் திறன் பற்றிய பிரச்சினைகளை கொண்டுவரும்" என்று எச்சரித்து, "இப்பொழுது ஆபத்தில் இருப்பது போர்த்துகலின் நம்பகத் தன்மை ஆகும்; அதுவும் பொதுச் செலவுகளில் கடுமை காட்டுவது முற்றிலும் தவிர்க்க முடியாது என்ற நேரத்தில்." என்றும் கூறியுள்ளார்.

"ஆளக்கூடிய திறன்" பற்றிய பிரச்சினை பெருகிய முறையில் ஒவ்வொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிற்கும் பொருத்தம்தான். இது ஐரோப்பா பகுதியில் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ள பொருளாதாரங்களில் மட்டும் உரித்தானதல்ல. இத்தகைய நாடுகள் PIIGS (PIIGS-போர்த்துகல், அயர்லாந்து, இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின்) என்று குறிப்பிடப்படுகின்றன. இதில் அமெரிக்காவும் சேரும். அங்கு வேலையின்மை தொடர்ந்து கூடுதலாகிறது, ஒபாமா நிர்வாகம் சமூகப் பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி உட்பட பல சமூக நலத் திட்டங்களிலும் மாபெரும் குறைப்பை செய்ய தயாரித்து வருகிறது.