World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Perspective and tasks of the Socialist Equality Party in 2010

2010 ல் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கும் பணிகளும்

By David North and Joseph Kishore
1 February 2010

Use this version to print | Send feedback

ஜனவரி 9, 2010ல் மிச்சிகன் ஆன் ஆர்பரில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய ஆண்டுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையின் திருத்தப்பதிப்பை கீழே காணலாம். டேவிட் நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். ஜோசப் கிஷோர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார்.

1. உலக முதலாளித்துவம், 21ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் ஆழ்ந்த பொருளாதார, பூகோளஅரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பிரவேசிக்கிறது. செப்டம்பர் 2008ல் ஆரம்ப பொருளாதார முறிவிற்குப் பின், ஜனவரி 2009ல் சோசலிச சமத்துவக் கட்சி, பொருளாதார நெருக்கடி அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள நிலையின் நீடித்த வீழ்ச்சிக்காலம் ஒரு திருப்புமுனையை அடையாளம் காட்டுகிறது என்று விளக்கியிருந்தது. ஒரு முதலாளித்துவ அடிப்படையில் பொருளாதாரம் மறு உறுதிப்படுவது "தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் பேரழிவான முறையில் குறைக்கப்படுவதன் மூலம்தான்... சாதிக்கப்பட முடியும்" என்றும் சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்திருந்தது. நெருக்கடிக்கு "சமூகரீதியான நடுநிலையான" தீர்வு ஏதும் இல்லை என்றும், "அமெரிக்க ஆளும் வர்க்கம் இடைக்கால நடவடிக்கைகள் மூலம் பொருளாதார கடும் கொந்தளிப்பை எதிர்கொள்வது எந்தத் தீர்வையும் கொடுக்காது" என்றும் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். பராக் ஒபாமா பதவியேற்பதற்கு முன்னதாக, அவர் "முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் நலன்களுக்கு ஊறு விளைவிக்காத வகையில்தான் நெருக்கடிக்கு தீர்வு காண" முற்படுவார் என்றும் சோசலிச சமத்துவக் கட்சி மதிப்பிட்டிருந்தது.

2. இந்த மதிப்பீடு சரியென நிரூபணமாகியுள்ளது. நெருக்கடியின் அடிப்படைக் காரணங்கள் ஏதும் ஆராயப்பட்டிருக்கப்படவில்லை. செப்டம்பர் 2008ல் தாக்கிய அழிவின் அளவிற்கும், அதற்கு ஒபாமா நிர்வாகத்தின் வெற்றுத்தன எதிர்கொள்ளலும் இதைவிட வியக்கத்தக்க மாறுபட்ட முறையில் இருக்க முடியாது. அமெரிக்காவில் மில்லியன் கணக்கானவர்கள், சர்வதேச அளவில் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை பேரழிவு தரும் வகையில் சிதைத்த குற்றம்சார்ந்த பொறுப்பற்றவகை ஊகச்செயல்கள் (Speculation) இருந்தாலும், ஒபாமா வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களையும் அதன் செல்வம் ஆகியவற்றை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்த்துவிட்டார். ஒபாமா நிர்வாகத்தின் முதல் முன்னுரிமை நிதிய உயரடுக்கிற்கு அவர்களின் செல்வம் பாதுகாக்கப்படும், "புதிய உடன்பாடு" [New Deal] வகையிலான தடைகள் வோல் ஸ்ட்ரீட் சூதாட்டத்தின் மீது மறுபடியும் சுமத்தப்படாது என்பதை உறுதி செய்வதாக இருந்தது. உண்மையில் முற்றிலும் மாறானதுதான் நடந்தது. உலகின் நிதிய முறைக்கு பாரியளவிலான நிதியை உட்செலுத்தியமை எதிர்பார்த்தபடி ஒரு புதிய சுற்று பொறுப்பற்ற ஊக நடவடிக்கையை வோல் ஸ்ட்ரீட்டில் தூண்டியது. பங்கு விலைகள் பெரிதும் உயர்ந்துவிட்டன, பணம் படைத்த ஊகக்காரர்களுக்கு செல்வக்கொழிப்பு ஏற்பட்டது, ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுடைய ஆழ்ந்த துன்பங்களை போக்க அரசாங்கம் ஏதும் செய்யவில்லை.

3. உலகத் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் மிக மோசமாக உள்ளன. உலகின் கணிசமான மக்கள் தொகையினர் வறிய நிலையில் வாழ்கின்றனர். 200,000 மக்களை கொன்ற ஜனவரி 12 ஹைய்ட்டி நிலநடுக்கம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் திடீரென வந்த பேரழிவு ஹைய்ட்டிய மக்கள் துன்பத்தின் ஒரு பிரத்தியேகத் தன்மை ஆகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஊட்டமின்மை, நோய்கள் மற்றும் உலக வறுமையின் பல விளைவுகளால் மடிகின்றனர். மேலும் ஹைய்ட்டிய பெரும் சோகத்தின் பாரிய அளவு நூறாண்டிற்கும் மேலாக அமெரிக்க பெருநிறுவனங்கள் தோற்றுவித்த மிருகத்தன சுரண்டல் ஏற்படுத்திய பொருளாதார, அரசியல் நிலைமையில் வேர்களை கொண்டவை. இப்பொழுது அமெரிக்க அரசாங்கம் பேரழிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இராணுவத்தை அங்கு அனுப்பி ஹைய்ட்டிய பொருளாதாரத்தை இன்னும் நேரடியாக அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கு உதவும் வகையில் மறுகட்டமைக்க முயல்கிறது. அதிகம் தேவைப்படும் உதவிகளைத் தடை செய்வதுடன் அகதிகள் அமெரிக்காவிற்கு ஓடிவந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றும் தடுத்துள்ளது. இதன் விளைவாக இன்னும் பல்லாயிரக்கணக்கான ஹைய்ட்டிய மக்கள் உயிரிழந்துள்ளனர். 2005ல் கத்ரீனா புயல், 2004ல் ஆசிய சுனாமி ஆகியவற்றைப் போல் ஹைய்ட்டி நிலநடுக்கமும் முதலாளித்துவத்தின் கோர முகத்தைத்தான் வெளிப்படுத்தியுள்ளது.

4. அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் இரட்டை இலக்க வேலையின்மை விகிதத்தையும், வேலைகள், ஊதியங்கள், சமூக நலத்திட்டங்கள் மீது தாக்குதலையும் எதிர்கொள்கிறது. உலகப் பொருளாதாரத்தில் அடிப்படை சமசீரற்ற தன்மைகளான வணிக, நிதிய பற்றாக்குறைகள், நாணய மோதல்கள், வணிகப் போர் அச்சுறுத்தல்கள் ஆகியவை கடந்த ஆண்டில் தீவிரமாகியுள்ளது. முக்கிய சக்திகளுக்கு இடையே பெருகிய முறையில் அழுத்தங்களை அதிகரித்துள்ளது. சந்தைகளிலும் மற்றய பொருளாதாரக் குறியீடுகளிலும் எவ்வித குறுகியகால ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், செப்டம்பர் 15, 2008 நிதிய முறிவிற்கு முன்பு இருந்த நிலை மீண்டும் திரும்பாது. இந்த நெருக்கடி அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார தலைமையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வெளிப்பட்ட உலக முதலாளித்துவத்தின் பூகோள கட்டமைப்பின் உடைவைக் காட்டுகிறது.

5. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1910ல் உலக முதலாளித்துவ அமைப்புமுறை வரலாற்றில் பேரழிவு தரக்கூடிய பெரும் நெருக்கடியின் விளிம்பில் இருந்தது. அக்காலத்தில் இருந்த பெரும் தொலைநோக்குடைய மார்க்சிச தத்துவாசிரியர்களான லெனின், ட்ரொட்ஸ்கி, லுக்சம்பேர்க்கை தவிர புதிய இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தம் எத்தகைய போர், புரட்சி ஆகிய எழுச்சிகளைக் காணக்கூடும் என்பது பற்றி எந்த அரசியல் சிந்தனையாளரும் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. ஆயினும்கூட உலக முதலாளித்துவமும் மற்றும் ஏகாதிபத்திய முறையும் குவிந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் பேரழிவை நோக்கி அழைத்துச் சென்றன. பிரிட்டிஷ் பேரரசு முக்கிய நிலையைக் கொண்டிருந்த உலக அரசியல் அமைப்பு ஐரோப்பாவில் ஜேர்மனி, ஆசியாவில் ஜப்பான், வட அமெரிக்க கண்டத்தில் அமெரிக்கா என்ற விதத்தில் சக்திவாய்ந்த முதலாளித்துவ தேசிய அரசுகள் வெளிப்பட்டதால் வீழ்ச்சிக்கு உட்பட்டது. பெருகிய பூகோள-அரசியல் அழுத்தங்கள் உலகப் பொருளாதார அமைப்பு முறையில் அதிகரித்த தீவிர முரண்பாடுகளில் இருந்து எழுந்தது. 1907ல் வெடித்தெழுந்த நிதிய நெருக்கடிகள் போன்றவை நீண்டகால முதலாளித்துவ விரிவாக்க காலத்தின் முடிவு என்பதை அடையாளம் காட்டின. எல்லாவற்றிற்கும் மேலாக உலகம் முழுவதும் வர்க்க அழுத்தங்கள் எழுந்திருந்தன. 1911ல் இருந்து 1913க்கு இடையே தொடர்ச்சியான போர் அச்சுறுத்தல்கள் மற்றும் குருதிகொட்டிய பிராந்திய மோதல்கள் (குறிப்பாக பால்க்கன் பகுதிகளில்), உலக முதலாளித்துவ முறையின் உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்தின. இறுதியில் ஜூலை-ஆகஸ்ட் 1914ல் முதலாம் உலகப் போர் தோன்றியது. அதற்கு மூன்றே ஆண்டுகளுக்குள் மார்ச் 1917ல் ரஷ்ய புரட்சி தொடங்கியது. இது அந்த ஆண்டு அக்டோபர் மாதம் போல்ஷுவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அரங்கு அமைத்தது. இந்த வரலாற்று நிகழ்வுகள் ஒரு நீண்டகால பொருளாதார, அரசியல் முறிவிற்கான ஆரம்ப கட்டங்களைக் குறித்தது. இவை 1945 இரண்டாம் உலகப் போர் முடியும் வரை தொடர்ந்திருந்தன.

6. சில முக்கியமான விடயங்களில், 2010ல் உள்ள உலகம் முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றிற்கு முன் இருந்த நிலைமைகளை ஒத்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பூகோள-அரசியல் அழுத்தங்கள், சமூக உறுதியற்ற தன்மை ஆகியவை இன்று 1945க்குப் பின்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளன. இன்றைய நிலைமைக்கு ஒரு வேறுபாடான வரலாற்று ரீதியான முன்னோடியில்லாத தன்மையை கொடுப்பது என்னவெனில்: உலகத்தின் முன்னைய உறுதியற்ற காலங்களில் இருந்ததைவிட அமெரிக்காவின் அடிப்படை நிலைமை முற்றாக வேறுபட்டுள்ளது. முந்தைய நெருக்கடி காலங்களில் அமெரிக்கா ஒரு ஏற்றம் பெற்ற பொருளாதார சக்தியாக இருந்தது. முதல் உலகப் போருக்கு பின்னர் அது ஐரோப்பாவை உலக முதலாளித்துவத்தின் மையம் என்பதை மாற்றி அந்நிலையை தான் எடுத்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் மேலாதிக்கம் அதன் முதலாளித்துவ போட்டி நாடுகள் சவால்விட முடியாத நிலையில் இருந்தது. அதன் பரந்த வளங்கள் [vast resources] உலக முதலாளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், அதற்கான ஒரு புதிய அடித்தளத்தை நிறுவுவதற்கும் முக்கியமாயிற்று.

7. அமெரிக்க பொருளாதார ஆதிக்க சகாப்தம் முடிந்துவிட்டது. அதனிடம் பாரிய இராணுவ வலிமை இருந்தாலும், உலகப் பொருளாதார வடிவமைப்பிற்குள் அமெரிக்கா விரைவாக சரிந்து கொண்டிருக்கும் ஒரு சக்தியாகும். அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் நிலையில் இந்த ஆழமான மாற்றம் தொலை விளைவுகளுடைய தாக்கங்களை அதற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிற்கும் கொண்டுள்ளது. தன் உலக மேலாதிக்கத்திற்கு வரும் சவால்களை அகற்றுவதற்காக அமெரிக்காவின் ஆக்கிரோஷ முயற்சிகள், பொருளாதார சரிவின் விளைவுகளை அதன் போட்டியாளர்கள் முதுகில் ஏற்றுவது ஆகியவைகள் சர்வதேச பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் தடையை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.

8. 2007-08 சரிவு உலகப் புவிசார் அரசியல், பொருளாதார, சமூக உறவுகளில் மகத்தான மறு கட்டமைப்பை தொடக்கியுள்ளன. இந்த அதிர்வுதரும் வழிவகையில் இருந்து விளையும் நெருக்கடி இரண்டில் ஒரு விதத்தில் தீர்க்கப்படும். முதலாளித்துவ தீர்வாக அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் அதிகம் குறைக்கப்படுவதுடன், உள்நாட்டு அடக்குமுறை, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுதல், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் காணப்படாத அளவிற்கு இராணுவ வன்முறைக் கட்டவிழ்ப்பு ஆகியவை இருக்கும். இந்த முதலாளித்துவ தீர்வுக்கு ஒரே மாற்றீடு சோசலிசத் தீர்வுதான்: அதாவது, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதும், தொழில்துறை, நிதிய, இயற்கை மூலவளங்கள் மீது பரந்த ஜனநாயக கட்டுப்பாட்டை கொண்டுவருதல் மற்றும் இலாபம், தனியார் சொத்துக்களை அடையும் அழிவுதரும் நோக்கத்திற்கில்லாமல் சமூகம் முழுவதினதும் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக ஒரு விஞ்ஞானரீதியான திட்டமிட்ட உலகப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதுமாகும்.

தசாப்தம் பற்றிய பரிசீலனை

9. 2000ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு முன்பு, உலகெங்கிலும் பில்லியன் கணக்கான மக்கள் புதிய நூற்றாண்டு ஒரு மேம்பட்ட உலகு பிறப்பதைக் காண உள்ளோம் என்று நம்பியதுடன், 20ம் நூற்றாண்டில் அனுபவித்ததைவிட குறைந்த வன்முறை, வறுமை, இடர்பாடுகள் என்றுதான் இருக்கும் என்று நம்பினர். புத்தாயிரமாண்டை வரவேற்று நடந்த சர்வதேச கொண்டாட்டங்களுக்கான நம்பிக்கை உண்மையாகவும் ஆழ்ந்தும் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அத்தகைய போலியான நம்பிக்கைகளில் ஒன்றும் மிஞ்சவில்லை. பெரும்பாலான மக்களுடைய வாழ்க்கை நிலை மோசமாகிவிட்டது என்ற பொது உணர்வு இருப்பது மட்டுமில்லாமல், சமூகமே பின்னோக்கி செல்கின்றது என்ற உணர்வும் உள்ளது.

10. ஆளும் உயரடுக்குகள் மற்றும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளால் புதிய நூற்றாண்டு முற்றிலும் வேறுவிதமான குறிக்கோள்கள் தன்மைகளுடன் வரவேற்கப்பட்டது. 20ம் நூற்றாண்டில் ஏற்பட்ட முதலாளித்துவம் தப்பிப் பிழைப்பதையே அச்சுறுத்திய நெருக்கடிகள் மற்றும் புரட்சி எழுச்சிகள் கடந்த காலத்திற்குரியதெனவும், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் மனித குல முன்னேற்றம் என்ற அந்த வரலாறு முடிவிற்கு வந்துவிட்டது என்றும் நம்பினர். சோசலிசத்தின் ஆவிகளினால், சமத்துவதற்கான மக்களின் விளைவுகள் இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டன என்று நினைத்தனர். அமெரிக்காவில் கட்டுக்கடங்காத அதிகாரம் தடையற்று இருந்ததால் விளைந்த திமிர்த்தனம் போல் வேறு எங்கும் இருந்ததில்லை. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் சரிந்தமை, சோவியத் ஒன்றியக் கலைப்பு ஆகியவற்றை அடுத்து அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் கொள்ளை முறை தடையற்ற சந்தை முதலாளித்துவம் வெற்றிகரமாக நிரூபணம் ஆகிவிட்டது, உலகில் அமெரிக்காவின் மேலாதிக்கம், உலகின் "ஒரே பெரும் சக்தி என்பது" சவாலுக்கு உட்படுத்த முடியாதது மற்றும் பங்குச் சந்தைகளின் ஏற்றம் இன்னும் கூடுதலான தனியார் சொத்துக் குவிப்பிற்கு உறுதி செய்யும் என்று தன்னையே நம்ப வைத்துக் கொண்டது. இன்னும் துணிவுற்ற பொருளாதார வல்லுனர்கள் 21ம் நூற்றாண்டில் வணிக ஏற்றத்தாழ்வு கூட ஏற்படாது என்று கணித்துக் கூறினார்கள்!

11. ஆனால் அவர்கள் கற்பனை செய்ததையும், அச்சமுற்றதையும்விட மிக விரைவிலேயே யதார்த்தம் தலையீடு செய்தது. கடந்த தசாப்தம், ஆளும் வர்க்கம் தன்னையே பெருமைப்படுத்திக்கொண்ட தன்னம்பிக்கைக்கு பெரிய தாக்குதல்களைக் கொடுத்தது. எழுச்சியுணர்வு என்பதில் இருந்து சோர்வுற்றதன்மைக்கான மாற்றம் செய்தித்தாள்களில் வெளிவரும் மனத்தளர்ச்சியான வர்ணனைகளில் பிரதிபலிக்கின்றது. "நரகத்தில் இருந்து ஒரு தசாப்தம்" என்ற முக்கிய கட்டுரையில் டைம் இதழ் கூறியது " 9/11 என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டு இறுதியில் ஒரு நிதியத் தகர்ப்பு என்று ஏற்பட்ட இந்த நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகள், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில் அமெரிக்கர்கள் பெரும் ஊக்கமற்று நம்பிக்கையற்றிருந்த காலத்தை ஒத்ததுபோலிருக்கும் என்று கூறப்படும்." ஜேர்மனிய இதழான Der Spiegel எழுதுகிறது: "9/11 நெருக்கடி, காலநிலை நெருக்கடி, நிதிய நெருக்கடி மற்றும் ஜனநாயகத்தின் நெருக்கடி என நெருக்கடி ஆண்டுகள் நிறைந்த தசாப்தமாக இது இருந்தது. மொத்தத்தில் இவை மேற்கின் பொது நெருக்கடி ஒன்றை பிரதிபலித்தன''. பிரிட்டிஷ் பைனான்ஸியல் டைம்ஸ், "இந்த தசாப்தத்தில் இதைவிட மோசமாக அனைத்துச் செயல்களும் நிகழ்ந்திருக்கமுடியாது. 21ம் நூற்றாண்டில் ஆரம்பித்த அமெரிக்காவுடன், இன்றைய அமெரிக்காவை ஒப்பிட்டால், ஒரு நாடு தன்னையும் உலகத்துடன் தன் உறவுகளையும் முற்றிலும் சில வகைகளில் தீவிரமான தன்மையில் மாற்றிக் கொண்டதைத்தான் காண்போம். சுருக்கமாகக் கூறினால், அமெரிக்க ஆன்மாவிற்குள் வீழ்ச்சியின் துருப்பிடித்தல் ஊடுருவி விட்டது."

12. 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் அமெரிக்க முதலாளித்துவம் உள்நாட்டிலும் அமெரிக்காவிற்கு வெளியிலும் அதன் செயற்பாடுகளின் அனைத்து துறையிலும், குற்றம் சார்ந்த வீழ்ச்சிக்கு இறங்கிவிட்டது என்பதைக் காட்டியது. வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்க ஆளும் வர்க்கம் செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகளை வாய்ப்பாக பயன்படுத்தி (அதன் நிழல்படிந்த தன்மைகள் பலவும் போதுமான முறையில் விசாரிக்கப்படவும் இல்லை, விளக்கப்படவும் இல்லை) அரசாங்கம், இராணுவம், உளவுத்துறை அமைப்புக்களின் மிக உயர்ந்த மட்டங்களுக்குள் ஆழ்ந்த விவாதத்தில் நீண்ட காலமாக இருந்த உலக இலக்குகளை தொடர்ந்தது. செய்தி ஊடகத்தினால் உதவப் பெற்ற அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் மீதான அதன் படையெடுப்புக்களை நியாயப்படுத்த பொய்களை கூறியது. சர்வதேச சட்டத்தை மீறிய வகையில், "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது இழிந்த முறையில் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு இன்னும் சமீபத்தில் ஆபிரிக்க கொம்பு ஆகிய இடங்களில் பெருகிய முறையில் நிறுத்தப்படும் இராணுவச் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் வகையில் உதவும் சொற்றொடர் ஆயிற்று. அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் உலக நிலையைக் காக்கும் விதத்தில் உலகின் முக்கிய புவிசார் மூலோபாய பகுதிகள்மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த முனைந்துள்ளது. இந்த இராணுவ ஆக்கிரோஷ தன்மை 2009ல் ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகத்தின் "விரிவாக்கத்தில்" தொடர்ந்துள்ளது; அதேபோல் ஒரு புதிய நாடு அதாவது யேமனும் மற்றும் சாத்தியமான இலக்குக்குரிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

13. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் லெனின் எழுதியதைப் போல், "ஏகாதிபத்தியம் அனைத்து நிலையிலும் பிற்போக்கானது". "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்பது மனித உரிமைகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒரு போர் ஆகும். மனித குலத்தின் "பிரிக்க முடியாத உரிமைகள்" பற்றிய பிரகடனத்துடன் தோன்றிய நாடானது வன்முறை, வெகுஜன அச்சுறுத்தல், தனிநபர்களுக்கு எதிரான மிருகத்தனம் ஆகியவற்றை இரக்கமின்றி இயக்கும் நாடாகப் போய்விட்டது. கடந்த தசாப்தத்தில் அமெரிக்க அரசாங்கமும் அதன் உடந்தைகளும் பொதுப் புழக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ள சொற்களும், சொற்றொடர்களும் அரசாங்க ஆதரவில் நடக்கும் மனிதப் பண்பற்ற செயல்களுக்கும், பிறர் துன்பத்தில் இன்பங்காணும் விஷயங்களுமாக ஆகிவிட்டன: அதாவது குவாண்டநாமோ, அபு கிரைப், பிளாக்வாட்டர், எதிரிப் போராளி, விரிவாக்கப்பட்ட விசாரணை முறை, நீரில் அமுக்குதல், கடத்தல், புஷ், ஷென்னி, ரம்ஸ்பெல்ட் ஆகியவையும் அப்படித்தான்.

14. பொருளாதாரத்தில் சட்டரீதியான வணிகத்திற்கும் ஊக வணிகம், அப்பட்டமான மோசடி இவற்றிற்கும் இடையே உள்ள எல்லைகள் அழிக்கப்பட்டுவிட்டன. டாட் கொம் (dot.com) பங்குச் சந்தை குமிழி 2000 த்தில் வெடித்ததில் ஆரம்பித்த தசாப்தம் பின்னர் 2001ல் என்ரோன் (Enron) திவாலைக் கண்டு இறுதியில் அடைமான ஆதரவு கொண்ட பத்திரங்கள் சரிவு, உலகம் முழுவதும் நிதிய பீதி மற்றும் வங்கிகளை பிணை எடுக்க கொடுக்கப்பட்ட பல டிரில்லியன் டாலர்கள் என்ற முறையில் முடிவுற்றது. ஒரு சிலரின் கைகளில் மகத்தான அளவு செல்வக்குவிப்பு இருந்ததற்கு இடையே, அமெரிக்காவில் சமூக சமத்துவமற்ற நிலையின் தன்மை இழிந்த பரிமாணங்களை அடைந்தது. முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களால் சில காலமாக சமத்துவமின்மையின் பெரும் வளர்ச்சி ஒரு தற்காலிக நிகழ்வு, தொழில்துறையில் இருந்து "தகவல்-துறைக்கு" மாறுதல், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது என்று வாதிடப்பட்டது. கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் இலாப அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் உயர்மட்டத்திலான சமத்துவமின்மை பின்னோக்கி செல்லாது மட்டுமல்ல இது இன்னும் மோசமாகக் கூடும் என்பதையும் தெளிவுபடுத்தி காட்டுகின்றன. அமெரிக்க சமூகம் ஒரு தன்னலக்குழு ஆட்சியாக இழிந்து நிதிய, பெருநிறுவன ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவற்றின் நலன்களும் விருப்பங்களும் அரசியல் அளவில் பிற்போக்குத்தனமானவையும் பொருளாதாரரீதியாக பகுத்தறிவற்றவை, கலாச்சாரரீதியாக பின்தங்கியவையும் மற்றும் சமூகத்தின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் ஒவ்வொரு விதத்திலும் தீமை பயப்பவையாகும்.

15. அமெரிக்காவிற்குள் ஜனநாயக அமைப்புக்களின் நிலைமையானது தடையற்ற இராணுவம், நிதிய ஒட்டுண்ணித்தனம் மற்றும் சமூக சமத்துவமின்மையின் அழுத்தங்களை பிரதிபலிக்கிறது. கடந்த தசாப்தம் 2000ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் திருடப்பட்டதுடன் ஆரம்பமாகியது. 5-4 என்ற விகிதத்தில் உயர்நீதிமன்றம் புளோரிடாவில் வாக்குகள் மறுபடியும் எண்ணப்படுவதை நிறுத்தி, எதிர்வேட்பாளரை விட அரை மில்லியன் வாக்குகள் குறைவாக தேர்தலில் தெளிவாகத் தோற்றுவிட்ட வேட்பாளரை பதவியில் இருத்தியது. பின்னைய தேர்தல்களில் அமெரிக்க மக்கள் தங்கள் அரசாங்கத்தின் போர்க் கொள்கைகள் பற்றிய எதிர்ப்பை வெளிப்படுத்த முற்பட்டனர்; ஆனால் ஒவ்வொரு முறையும் வெகுஜன உணர்வு அடக்கப்பட்டது, திசைதிருப்பப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது. இந்த நிகழ்வுப்போக்கில் ஜனநாயகக் கட்சியானது அதனுடைய பல தாராளவாத மற்றும் மத்தியதரவர்க்க ஆதரவாளர்களுடன் முக்கிய பங்கை வகித்தது.

16. அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதிபதி என்று பெயரெடுத்த புஷ்ஷின் எட்டு ஆண்டு கால ஆட்சிக்கு பின்னர், அமெரிக்க மக்கள் பராக் ஒபாமாவை தேர்ந்தெடுத்தனர். பரந்த அதிருப்திக்கு அழைப்புவிட்டு, தன்னை "நம்பிக்கை" மற்றும் "மாற்றம்" ஆகியவற்றிற்கான வேட்பாளாராக காட்டிக் கொண்டவிதத்தில், ஒபாமா முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியானார். ஆனால் அவருடைய முதல் ஆண்டு பதவிக்காலத்தில் உண்மையில் முக்கியமானது எதுவும் மாற்றமடையாது என்பது தெளிவானதுடன், ஆகக்குறைந்த எதுவும் நன்மையானதாக அமையப்போவதில்லை. அவருடைய இனப் பின்னணியை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் சாதாரண மக்களின் அக்கறைகளுக்கு கூடுதல் உணர்வைக் காட்டுவார் என பரவலாக நம்பப்பட்டபோதும், அதற்கு மாறாக செல்வந்தர்களுக்கு இயைந்து நிற்கும் இரக்கமற்ற ஒரு ஜனாதிபதியைத்தான் தொழிலாளர்கள் கண்டுள்ளனர். ஒவ்வொரு கொள்கையிலும் வெளிப்படையாக புஷ் நிர்வாகத்துடன் தொடர்ந்து நிற்றலானது மக்கள் கருத்திலிருந்து அந்நியப்படுத்திவிட்டது. அதனால் சமீபத்தில் மாசாச்சுசட்ஸ் செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சி தரும் தோல்வி ஏற்பட்டது. "மாற்றத்திற்கான வேட்பாளர்" தற்போதுள்ள அரசியல் அமைப்புகள் மூலம் மாற்றம் சாத்தியமில்லை என்பதை மில்லியன் கணக்கான மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ''மக்கள் நம்பக்கூடிய'' ஒரே மாற்றம் சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர அரசியல் போராட்டத்தினூடாகவே எழ முடியும்.

2010 ல் உலக நிலைமை

17. உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் வேர்களைக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திமுறைக்கும் உற்பத்திச்சாதனங்கள் தனியார் சொத்துடமையாக இருப்பதற்கும் இடையிலான முரண்பாடும், பூகோளமயமான பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்குமிடையிலான முரண்பாட்டினதும் வெளிப்படாகும். இன்று இவைகள் அமெரிக்காவில் அவற்றின் மிகக் கூர்மைப்படுத்தப்பட்ட வெளிப்பாடுகளை காண்கிறது. இதுவோ தன்னுடைய நலன்களை வெளிநாடுகளில் போர், உள்நாட்டில் தீவிர சுரண்டல் என்ற விதத்தில் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள உயரடுக்கினால் ஆளப்படுகிறது. டிசம்பர் மாதம் தன்னுடைய நோபல் பரிசு ஏற்புரையில், ஒபாமா அமெரிக்காவின் மூர்க்கமிக்க ஏகாதிபத்திய விரிவாக்கம் குறைவின்றி தொடரும் என்பதை தெளிவாக்கியுள்ளார். ஆப்கானிய போர் விரிவாக்கத்திற்கு ஒரு வாரம் கழித்து வந்த இந்த உரையில் ஒபாமா, அமெரிக்கா போர்களை தொடுக்க "தேவைப்பட்டால் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கும்", அவற்றின் நோக்கம் "தற்காப்பு அல்லது ஒரு நாடு ஆக்கிரமிப்பு நாட்டிற்கு எதிரான பாதுகாப்பு என்பதற்கு அப்பாலும் இருக்கும்" என்றார். வேறுவிதமாகக் கூறினால், "உலகின் ஒரே இராணுவ வல்லரசுச் சக்தி" என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ள அமெரிக்கா எந்தக் காரணத்தை காட்டியும், எந்த நாட்டின்மீதும் படையெடுக்கலாம் என்ற உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளது.

18. ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கைகள் எவையாயினும், பொருளாதாரச் சரிவை இராணுவ சக்தி மூலம் எதிர்கொள்ளலாம் என்னும் அதன் நம்பிக்கை ஒரு பிற்போக்குத்தனமான ஏமாற்றுதல் ஆகும். தொழிலாள வர்க்கத்தின் உணர்மையுடன் கூடிய அரசியல் தலையீட்டினால் இது தடுத்து நிறுத்தப்படாமல் போனால், பேரழிவிற்குத்தான் இட்டுச்செல்லும். ஒரு காலத்தில் நவீன சமுதாயமாக இருந்ததை அழித்து ஈராக்கில் ஒரு மில்லியன் மக்களை படுகொலை செய்த பின், உள்நாட்டுப் போர் எப்பொழுது ஏற்படுமோ என்ற தொடர்ந்து அச்சுறுத்தும் போட்டியிடும் குறுங்குழுவாத நலன்களை சமப்படுத்த முயற்சித்துக்கொண்டு அமெரிக்கா உறுதியற்ற கைப்பாவை அரசாங்கம் ஒன்றை நிறுவுவதில் வெற்றி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான போர் அமெரிக்காவிற்கு இதே போல் உறுதியற்ற ஆட்சியைத்தான் தோற்றுவித்துள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைமை பெருகிய முறையில் வியட்நாமில் இருந்ததைப் போல் ஆகிவிட்டது.

19. இப்போர்களுக்கும் அப்பால், அமெரிக்கா அதன் நிலையை அச்சுறுத்தும் எழுச்சிபெறும் ஏராளமான பிராந்திய, உலக சக்திகளான ஈரான், இந்தியா, பிரேசில், எல்லாவற்றிற்கும் மேலாக சீனா ஆகியவற்றை எதிர்கொள்கிறது. அதைத் தவிர பழைய சக்திகளான ஐரோப்பாவும் ரஷ்யாவும் உள்ளன. சிறு சக்திகள் மீது ஆதிக்கம் செலுத்த முற்படும் அமெரிக்காவின் முயற்சிகள் பெருகிய முறையில் பரந்த மோதல்களை தூண்டும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன. ஒரு புதிய உலகப் போர் வெடிப்பிற்கு காரணமாகக்கூடும் ஒன்று அல்லது இரண்டு டஜன் காட்சிகளைப் பற்றிய விவரக் குறிப்பு எழுதுவது கடினம் அல்ல.

20. சீனாவுடன் அமெரிக்க உறவு என்பது இன்றைய உலகின் பூகோளஅரசியல் நிலைமையில் மிகக் கொந்தளிப்பு உடைய கூறுபாடுகளில் ஒன்றாகும். சீனா ஒரு பிராந்திய வர்த்தக அமைப்பை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிழக்கு ஆசியாவில் மட்டும் அமெரிக்காவிற்கு சவால் விடும் நாடு அல்ல. ஆனால் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்காவிலும் கூட அது சவால் விடுகிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி மிகப்பெரிய விதத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து வருகிறது. இப்பொழுது அது உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமாக இருப்பதுடன், மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடு என்ற ஜேர்மனியின் நிலையையும் கடந்து விட்டது. மிகப்பெரிய கடன் கொடுக்கும் நாடு என்பதில் இருந்து பெரும் கடனாளியாக அமெரிக்கா மாறியுள்ள போது, அமெரிக்கக் கடன்கள் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலரை வைத்துள்ள சீனா உலகின் மிகப்பெரிய செலுத்துமதி உபரியை கொண்டுள்ள நாடாக இருக்கிறது.

21. நெருக்கடிச் சூழலில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பொருளாதாரத்தில் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் நிலைமை அழுத்தம் நிறைந்துள்ளது. டிசம்பர் மாதம் கோபன்ஹேகன் காலநிலை உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிளவு நிறைந்த உறவை எடுத்துக்காட்டியதுடன், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள பிளவையும் காட்டியது. புத்தாண்டுத் தொடக்கத்தில் சீனா தைவானுக்கு அமெரிக்கா புதிய ஆயுதங்கள் விற்பனை செய்ய இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளதுடன், தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதற்கான தயாரிப்புக்களையும் எதிர்க்கிறது. சீனா அதன் நாணயத்தின் மதிப்பை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து கோருகிறது. ஆனால் சீனா அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பின் எளிய நிதிக் கொள்கை (Easy money policy-குறித்த காலத்திற்கு குறைவான வட்டிவிகிதம் மூலம் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்தல்) டாலரை குறைமதிப்பிற்கு உட்படுத்தி முழு உலக நிதியச் சந்தையையும் உறுதி இழக்கச் செய்யும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது என்றும் எச்சரித்துள்ளது. ஒரு நாணய அல்லது வணிகப் போருக்கான உண்மை வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே எஃகு, டயர்கள் உட்பட பல சீனாவின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது காப்புவரிகளை சுமத்தியுள்ளது. நியூயோர்க் டைம்ஸின் தாராளவாத கட்டுரையாளர் போல் க்ருக்மன் சீனாவிற்கு எதிரான ஒரு கட்டுரையுடன் ஆண்டை முடித்துள்ளார் ("Chinese New Year," December 31). சீனாவின் பொருளாதார, வர்த்தகக் கொள்கை, "ஒரு கொள்ளை முறை" என்று குற்றம் சாட்டியுள்ள க்ருக்மன், "சீன வணிகமுறை வளரும் பிரச்சினையாக உள்ளது; வணிகமுறையின் பாதிப்பிற்குள்ளானவர் ஒரு வணிக மோதலில் அதிகம் இழப்பதற்கில்லை. எனவே நான் சீன அரசாங்கத்தை அதன் பிடிவாதத்தை மறு பரிசீலிக்குமாறு வலியுறுத்துவேன். இல்லாவிடில் தற்பொழுது அது குறைகூறிக் கொண்டிருக்கும் மிகக்குறைந்த மட்டத்திலான காப்புவரிகள் இன்னும் பெரிய விடயத்திற்கான ஆரம்பக்கட்டமாகிவிடும்" என்று எச்சரித்துள்ளார். ஒரு முந்தைய கட்டுரையில் பைனான்ஸியல் டைம்ஸின் கட்டுரையாளர் மார்ட்டின் வொல்ப் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவிடம் ஒபாமா என்ன பேச வேண்டும் என்று தான் நினைப்பதாக கூறுகையில், "ஜனநாயகங்கள் கைகுலுக்குவதில் இருந்து குத்துவதற்கு கைகளை மடக்கி கொள்ளும் அணுகுமுறைக்கு எவ்வளவு விரைவில் மாற முடியும் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை" என்று கூறவேண்டும் என்றார்.

22. சீனா, இந்தியா, பிரேசில் இன்னும் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சமூதாயங்களின் முதுகுகளில் பெரும் வறுமை, அதிர்ச்சி தரும் வகையில் உள்ள சமத்துவமின்மை ஆகியவற்றை சுமத்தும் தன்மையை உடையது. அவற்றின் அரசியல் கட்டமைப்புகள் மக்கள் அதிருப்தியால் பெரிதும் பாதிக்கப்பட நேரிடும். நாணயத்தின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்னும் அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு இணங்க மறுக்கும் சீனாவின் முக்கிய காரணங்களில் ஒன்று அதையொட்டி வரும் ஏற்றமதிக் குறைப்புக்கள் வேலையின்மையை நாட்டில் அதிகரித்து, ஆட்சிக்கு உறுதியற்ற தன்மையை ஏற்படுத்திவிடும் என்பதுதான்.

23. பூகோளஅரசியல் மோதலில் மற்றைய முக்கிய விடயங்களும் உள்ளன. சோவியத் ஒன்றியத்தின் முடிவு மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் காகசஸ் என்ற மரபார்ந்த முறையில் ரஷ்யாவின் கொல்லைப் புறம் எனக் கருதப்படும் பகுதிகளில் நுழைவதற்கான வாய்ப்பாக அமெரிக்காவால் கருதப்பட்டது. தன்னுடைய நலனுக்கு இன்னும் உகந்த முறையில் நடக்கும் ஆட்சிகளை நிறுவும் நோக்கத்தில், குறிப்பாக ஜோர்ஜியா, உக்ரைனில் பல தொடர்ந்த "வண்ணப் புரட்சிகளுக்கு" அமெரிக்கா ஆதரவு கொடுத்தது. அமெரிக்க ஆதரவு பெற்ற ஜோர்ஜியா ரஷ்ய சார்பு தன்னாட்சி குடியரசாகிய தெற்கு ஓசேஷியாவை 2008 கோடையில் படையெடுத்தபோது அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அழுத்தங்கள் வெளிப்படையாகும் அபாயம் ஏற்பட்டது.

24. ஐரோப்பாவுடனான அமெரிக்க உறவுகளைப் பொறுத்த வரையில், ஈராக் போருக்கு முன் வெளிப்படுத்தப்பட்டவை இன்னும் தொடர்கின்றன. பனிப்போர்க் காலத்தில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பாவுடன் ஒரு கூட்டு இருப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தது. ஐரோப்பாவை மறுகட்டமைத்தல், சர்வதேச அமைப்புக்களை வளர்த்தல் ஆகியவை சோவியத் ஒன்றியத்தைக் கட்டுப்படுத்தி ஐரோப்பாவிற்குள்ளும் சோசலிச புரட்சியை தடுக்கும் விதத்தில் அமெரிக்க ஆளும்வர்க்கம் கொண்ட முயற்சியின் ஒரு பகுதி ஆகும். இப்பொழுது அமெரிக்க ஐரோப்பிய உறவுகளில், ஐரோப்பாவின் இழப்பில் அமெரிக்க அதிகாரத்தை பலப்படுத்தும் அடிப்படைப்போக்கு மீண்டும் உறுதிபடுத்தப்படுகிறது. ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது "பன்முகப்படுத்தப்பட்ட தன்மைக்கு" திரும்பும் என்னும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே இருந்த நம்பிக்கை சிதைந்துவிட்டது.

அமெரிக்காவில் சமூக நெருக்கடி

25. பல தசாப்தங்களுக்கு முன்பு அமெரிக்காவை உலகிலேயே மிகவும் அச்சமுற்றுள்ள நாடு என்று லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கினார். இந்த விந்தையான கண்ணோட்டம் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய தொழில்துறை நாடாக இருந்தபோது எழுதியது இப்பொழுதும் ஏற்கத்தக்கதாக உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் பேராபத்துக்களை எதிர்பார்க்கிறது. ஆயினும்கூட, அதன் மேலாதிக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவிற்குள் பெருகிவரும் சமூக அழுத்தங்கள்தான். அமெரிக்க மக்களின் மிகச் சிறிய சதவிகிதத்தினரிடையே மகத்தான செல்வக்குவிப்பு இருப்பது சமூக ஸ்திரப்பாட்டோடு இயைந்திருக்கும் தன்மையை பெற்றிராது. இன்னும் வெளிப்படையான உண்மை அமெரிக்க சமூகத்தின் பெரும் சமத்துவமின்மை என்ற அடிப்படை பரந்த தொழிலாள வர்க்கத்திடையே சமூக உணர்வுகளில் நீடித்த, ஆழ்ந்த மாற்றங்களுக்கு வகை செய்கிறது. சுரண்டுதல், அநீதி இவற்றிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பிற்போக்கான தொழிற்சங்கங்கள் அடக்கும் திறன் அதன் முழு வரம்புகளை அடைந்துவிட்டது. சமூகப் போராட்டங்களில் ஒரு புதிய வெடிப்புத்தன்மை நிறைந்த சகாப்தம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

26. அமெரிக்காவில் மக்களில் பரந்த பிரிவினரின் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கிட்டத்தட்ட 40 மில்லியன் மக்கள் இப்பொழுது வறுமையில் உள்ளனர். 6மில்லியன் மக்கள் (அல்லது மொத்தத்தில் 2 சதவிகிதத்தினர்) வருமானம் ஏதும் இன்றி, உணவு உதவிகளை மட்டும் நம்பி வாழ்கின்றனர். தசாப்தத்தின் இறுதிக்காலத்தில், உத்தியோகபூர்வ வேலையின்மை அமெரிக்காவில் 10 சதவிகிதத்தை அடைந்து விட்டது. 2009ல் மட்டும் 4.2 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஜனவரி 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் அமெரிக்கா டிசம்பர் மாதம் இன்னும் 85,000 வேலைகளை இழந்துவிட்டதாக கூறுகின்றன. உத்தியோகபூர்வ வேலையின்மை நிரந்தரமாக இருப்பதற்குக் காரணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை தேடிப்பயனில்லை என்று வேலைதேடுவதை நிறுத்தியுள்ளதுதான். உத்தியோகபூர்வ தொழிலாளர் பிரிவு (வேலை நாடுபவர்கள் என்று அரசாங்கம் கருதுவது) உண்மையில் அம்மாதத்தில் 661,000 ஆக சுருங்கியது. இதையொட்டி வேலையின்மை விகிதம் பரந்த முறையில் 17.3 சதவிகிதம் என்று ஆகிறது. இதில் கட்டாயமாக பகுதிநேரம் மட்டுமே வேலைசெய்யும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடங்கியுள்ளனர்.

27. சில மாநிலங்களிலும் நகரங்களிலும் நெருக்கடி ஏற்கனவே பெருமந்த நிலைக்கு ஒப்பான சூழலுக்கு வந்துவிட்டது. மிச்சிகனில் வேலையின்மை விகிதம் உத்தியோகபூர்வமாக 14.7% ஆகும். மாநிலத்தில் மிகப்பெரிய நகரமான டெட்ரோயிட்டில் உண்மை வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் ஆகும். நாட்டில் அதிக மக்கள் தொகையுடைய கலிபோர்னியா மாநிலத்தில் உத்தியோகபூர்வ வேலையின்மை 12.3 சதவிகிதம் ஆகும். நீண்டகால வேலையின்மை என்பது அமெரிக்க வாழ்வில் வாடிக்கையான கூறுபாடு ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 40 சதவிகித வேலையற்றவர்கள் 27 வாரங்கள் அல்லது அதற்கும் கூடுதலாக வேலையின்றி உள்ளனர். 2007ல் தொடங்கிய வீடுகள் விலைச் சரிவு ஏராளமான வீடுகளின் ஏலவிற்பனைக்கு வகை செய்தது. இது மிக அதிகபட்சமாக 2009 நான்காம் காலண்டில் 1 மில்லியன் என்று ஆயிற்று. மற்றொரு 3 மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை இந்த ஆண்டு இழப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

28. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த தசாப்தம் மோசமானவற்றுள் ஒன்று ஆகும். சமீபத்தில் வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது. "டிசம்பர் 1999ல் இருந்து வேலைகள் தோற்றுவிக்கப்படல் என்பது நிகர பூஜ்ய தரம்தான். 1940களுக்கு பின்னர் எந்த பத்தாண்டுகளிலும் வேலை வளர்ச்சி 20 சதவிகிதத்தை அடையவில்லை. பொருளாதார உற்பத்தி 1930கள் உட்பட வேறு எந்த தசாப்தத்திலும் இல்லாத அளவு குறைந்த விகிதத்தில்தான் இருந்தது."

29. அமெரிக்கத் தொழிலாளர்களின் வருமானங்கள் சரிந்துவிட்டன. அமெரிக்க குடும்பங்களின் நிகர மதிப்பும் குறைந்துவிட்டது. உண்மை நிலையில், உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளபோதிலும் 2009ல் வாராந்த ஊதியங்கள் 1 சதவிகிதம் குறைந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் வந்துள்ள ஒரு கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: "வோல் ஸ்ட்ரீட் மற்றும் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவரும் வெற்றிகர வனப்புரைகள் ஒருபுறம் இருந்தாலும் பொருளாதாரரீதியாக இது அமெரிக்க குடும்பங்களுக்கு பேரழிவு கொடுத்த தசாப்தம். வணிக, தொழிலாளர் அமைச்சகத்தின் கருத்துப்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் தடவையாக ஒரு சராசரி அமெரிக்கரின் நிகர மதிப்பு உண்மையில் மிக அதிகமாக 13சதவிகிதத்தால் வீழ்ச்சியடைந்துவிட்டது." இது 1990களில் நிகர மதிப்பு 44 சதவிகிதம் வளர்ச்சி, 1980 களில் 35சதவிகித வளர்ச்சி, 1970 களில் 12சதவிகித வளர்ச்சி, 1960 களில் 25 சதவிகித வளர்ச்சி, 1950களில் 26சதவிகித வளர்ச்சி ஆகியவற்றிற்கு எதிர்மாறானதாக இருக்கின்றது.

ஒபாமா நிர்வாகம்

30. அவரைப் பதவியில் இருத்த வாக்களித்த மில்லியன்கணக்கான மக்களுக்கு பாரக் ஒபாமா ஒரு பாரிய ஏமாற்றம் என்பதை நிரூபித்துவிட்டார். அவருடைய பிரச்சார உறுதிமொழிகள் வெற்றுத்தனம், நேர்மையற்றவை என்பதை அவர்கள் உணர்கின்றனர். கொள்கையின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் ஒபாமா நிர்வாகம் பெரும் செல்வந்தர்களுக்கு தன் விசுவாசத்தை உறுதிபடுத்தியுள்ளது. உள்நாட்டுக் கொள்கையில் நிர்வாகத்தின் ஒரே இலக்கு நிதிய பிரபுத்துவத்தை மீட்டு, தொழிலாள வர்க்கத்தின் மீது முழுச் சுமையையும் ஏற்றுவது என்பதாகும். உலகெங்கும் பெரும் அழிவின் தாக்கல்களை ஏற்படுத்திய நிதியக் கரைப்பிற்கு ஓராண்டிற்குள்ளேயே அமெரிக்க நிதியப் பிரபுத்துவம் முன்னைக்காட்டிலும் சிறப்பான நிலையில் உள்ளது. இதற்குக் காரணம் ஒபாமா அளித்த டிரில்லியன் கணக்கான டாலர்கள் உதவிதான். நிர்வாகிகள் ஊதியத்தில் தீவிரத் கட்டுப்பாடுகளை எதையும் முன்வைக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக சில மிகப் பெரிய வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் 2009 இறுதியில் மிக அதிக அளவு ஊதியங்களையும் மேலதிக கொடுப்பனவுகளையும் கொடுத்துள்ளது. இப்பொழுது நுகர்வைக் குறைக்கும் பிரச்சாரத்தில் ஒபாமா முன்னணியில் உள்ளார், ஆனால் இது தொழிலாள வர்க்கத்திற்குத்தான் பொருந்தும். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் கட்டாயப்படுத்தப்பட்டு திவாலாக்கப்பட்டபோது முன்னர் நிர்வாகம் தேசிய அளவில் ஊதியக் குறைப்பு பிரச்சாரத்திற்கு சைகைகாட்டியமை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டு, தொழிற்சங்கத் தலைமையின் ஆதரவுடன் கார்த் தொழிலாளர்கள் மீது ஒரு புதிய சுற்று மோசமான இழப்புக்கள் சுமத்தப்பட்டது.

31. கடந்த தசாப்தங்களில் தொழிலாளர்கள் மத்திய அரசாங்கத்தை சமூகச் சீர்திருத்தங்களை செயல்படுத்தவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தவும் ஒரு கருவியாக எதிர்நோக்கினர். 1930 களில் பெருமந்த நிலைக்கும் பெருகிய வர்க்க அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் விதத்தில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் புதிய உடன்பாடு சீர்திருத்தங்களை (New Deal reforms) முன்வைத்து நடைமுறைப்படுத்தினார். அதில் சமூகப் பாதுகாப்பு, டெனஸ் பள்ளத்தாக்கு அமைப்பு நிறுவப்பட்டு மின்சார உற்பத்தி, புதிய வங்கிக் கட்டுப்பாடுகள் ஆகியவை இருந்தன. பின்னர் 1960 களில் கூட்டாட்சி அரசாங்கம் குடியியல் உரிமைகள் சட்டத்தை மேற்பார்வையிட்டு மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி (Medicare, Medicaid) ஆகியவற்றைத் தோற்றுவித்தது. இரு சூழ்நிலைகளிலும் சமூக நெருக்கடிக்கும், வர்க்க மோதலின் எழுச்சிக்கும் முதலாளித்துவத்தின் பிரதிபலிப்பு முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாக்க கொண்டுவந்த சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும். இச்சீர்திருத்தங்களை செய்வதற்கான அடித்தளத்தை அமெரிக்காவின் பொருளாதார பலம் வழங்கியது. அது இப்பொழுது பழைய வரலாறு ஆகிவிட்டது. நான்கு தசாப்தங்களாக கூட்டாட்சி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் பாரிய தாக்குதல்களுக்கு தலைமை தாங்குகிறது. இது 1970 களில் ரிச்சார்ட் நிக்சனின் அரசாங்கம் முதலில் ஊதியக் கட்டுப்பாட்டுகளை கொண்டுவர முயன்றதில் இருந்து ஆரப்பித்தது.

32. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் கட்டமைப்பையே கேள்விக்குரியதாக்கியது. மத்திய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைப்புகளுமான காங்கிரஸ், சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை நிதிய பிரபுத்துவத்தின் இடுக்கிப்படியில் உள்ளது. வாஷிங்டன் இராணுவச் செலவுகள், வங்கி பிணை எடுப்புக்களுக்கு இன்னும் அதிக இருப்புக்களை செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒபாமா நிர்வாகம் மாநிலங்களின் உதவிக்குச் செல்ல மறுத்துவிட்டது. அவை புதிய சுற்று வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளை இந்த ஆண்டு எதிர்நோக்கியுள்ளன. நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கின் இளைய பங்காளிகள் மாநில அரசாங்கங்களில் உள்ளவை இதை எதிர்கொள்ளும் விதத்தில் சுகாதார பாதுகாப்பு, கல்வி, பிற சமூக நலப்பணிகள் மீதான செலவு ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர். "உயரே செல்லும் போட்டி" ("Race to the Top") என்ற கல்வித்திட்டத்திற்கு ஒரு பகுதியாக ஒதுக்கப்பட்ட அற்ப நிதிகள் கூட வலதுசாரி கல்வி கொள்கை செயல்படுத்தப்படவேண்டும் என்பதின் ஒரு பகுதியாகத்தான் கொடுக்கப்படுகின்றன. இது வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் ஏற்ற வேண்டும் என்ற நிர்வாகத்தின் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த தாக்குதலுக்கு எதிராக பல மாநிலங்களிலும் பகுதிகளிலும் எதிர்ப்பு உருவாகும். நாடு முழுவதும் பொதுப் போராட்டத்திற்காக தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த ஒரு புரட்சிகர சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியால் உருவாக்கப்படும் தலைமையிலான புதிய வகை அரசியல் அமைப்புக்கள் தேவைப்படும்.

33. ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய "சீர்திருத்தமான" மொத்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை மாற்றியமைப்பது என்பது சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகளை குறைக்கும் நிதிய உயரடுக்கின் உறுதியைக் காட்டுகிறது. அடிப்படையில் பிற்போக்குத்தனம் நிறைந்த இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் உரிமையுடன் பெற வேண்டிய திட்டங்களின் மீதான செலவை குறிப்பாக Medicare குறைத்தலாகும். வயது முதிர்ந்துள்ள மக்கள், உயரும் ஆயுட்கால எதிர்பார்ப்பு, அதைத்தவிர புதிய பரிசோதனைகள், வழிமுறைகள் என்று நோயைக் குணப்படுத்தும் தன்மை ஆகியவற்றிற்கு ஆளும் வர்க்கம் காட்டும் விடையிறுப்பு கிட்டத்தட்ட வர்க்க அடிப்படையில் உள்ள சுகாதாரப் பாதுகாப்புமுறையை செயல்படுத்துவதாக உள்ளது. மிக அதிக அளவில் வங்கிகள் பிணை எடுப்பினால் பெருகிவிட்ட அமெரிக்க நிதியப் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்க சுகாதார நலச் செலவுகளை குறைப்பதில் குவிப்புக்காட்டுவதுதான் திறவு கோல் என்று ஒபாமா கருதுகிறார். செப்டம்பர் மாதம் ஆற்றிய உரை ஒன்றில் அவர் கூறினார்: "எமது சுகாதார பாதுகாப்பு பிரச்சினைதான் நம்முடைய பற்றாக்குறை பிரச்சினை. அதனுடன் நெருக்கமாக வேறு எதுவும் வரவில்லை." மாசச்சுசட்ஸில் தோல்வி ஜனநாயகக் கட்சிக்கு ஏற்பட்டதை அடுத்து ஒபாமா நிர்வாகம் இன்னும் வலதிற்கு மாறிக் கொண்டிருக்கிறது, சீர்திருத்தம், "அனைவருக்கும் பாதுகாப்பு என்ற சுகாதார பாதுகாப்புச் சீர்திருத்தத்தின் முந்தைய கருத்தைக்களை கைவிட்டு விட்டது.

34 தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு கெளரவமான சுகாதார பாதுகாப்பு, கல்வி, சமூக சேவைகள் என்பது பாரிய சுரண்டல் நிலைமையை நிதியப் பிரபுத்துவம் சுமத்த உறுதியாக இருக்கும் நிலைமைகளுடன் சிறிதும் இயைந்ததல்ல. Foreign Affairs இதழில் ஜனநாயகக் கட்சியின் மூலோபாயம் இயற்றுபவர்கள் நடத்தும் ஒரு சிந்தனைக் குழுவான Peterson Institute ன் தலைவர் C. Fred Bergsten ஆளும் வர்க்கத்திற்கு சில திட்டங்களை முன்வைக்கிறார். மத்திய அரசின் பற்றாக்குறைகளை குறைப்பதற்கு பெர்க்ஸ்டென் மிக முக்கியமான நடவடிக்கை, "மிக முக்கியமானது நீண்டகால மருத்துவச் செலவினங்களை கட்டுப்படுத்துவது ஆகும்; இது மொத்த சுகாதார பாதுகாப்பு சீர்திருத்தத்தின் ஒருமித்த பகுதியாக நீண்ட காலமாக உள்ளது. இதில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில சதவிகிதப் புள்ளிகள் சேமிக்கப்படலாம்.." பெர்க்ஸ்டென் ஆதரிக்கும் மற்றைய திட்டங்களில் "விரிவான சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தம்- அதில் படிப்படியாக ஓய்வூதிய வயது அதிகரிக்கப்படுதல், உதவித்தொகையை மதிப்பிடுவது மாற்றியமைக்கப்படவேண்டும் -அவை விலையேற்றத்தை பிரதிபலிக்குமே அன்றி ஊதியங்களை அல்ல" என்பதும், நுகர்வின் மீது வரிகளை அதிகரிப்பது- இது அதிகம் தேவைப்படும் அரச வருமானத்தை தோற்றுவிக்கும், மேலும் தனியார் சேமிப்புக்களுக்கு ஊக்கமும் கொடுக்கும்." ஆகியவை அடங்கியுள்ளன.

வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

35. உலக முதலாளித்துவ முறை இப்பொழுது ஒரு பெரும் புரட்சிகர கொந்தளிப்புக் காலத்தில் நுழைந்து கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான இருப்பு என்பது தொழிலாள வர்க்கத்திற்கு வறிய நிலைக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் இல்லாமல் மனித நாகரிகத்தின் வருங்காலத்தையே அச்சுறுத்தும் உலக ஏகாதிபத்திய போருக்கும் வகை செய்யும். எவ்வாறிருந்தபோதிலும் இந்த நெருக்கடிக்கு ஒரு தீர்வும் உண்டு. தொழில்நுட்ப ரீதியாகவும் மனித சமுதாயத்தின் வளர்ச்சி என்ற இரு விதங்களிலும் ஒரு சோசலிசப் புரட்சிக்கான புறநிலைச் சூழல் முன் எப்பொழுதையும்விட இப்போது அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் சமூக பலம் கடந்த நூற்றாண்டில் மகத்தான முறையில் பெருகிவிட்டது. அதே நேரத்தில் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உலகளாவிய ஒருஙக்கிணைந்த நடவடிக்கைக்கான சூழலைத் தோற்றுவித்துள்ளன.

36. நெருக்கடி தீவிரமாகையில், அரசியல் கட்டமைப்புகளின் உள்ளகமான செயலற்ற தன்மை இன்னும் தெளிவாக தெரிகிறது. மரபார்ந்த அரசியல் கட்சிகள் மற்றும் ஸ்தாபனங்கள் முதலாளித்துவ தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எந்த வழிவகையையும் அளிக்கவில்லை. அமெரிக்காவிற்குள் ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் ஒரே வர்க்கத்தின் நலன்களைத்தான் பிரதிபலிக்கின்றன. அவை கூட்டாக அரசியல், சமூக பிற்போக்குத்தனத்தின் "இரு கட்சி முறையாக அமைந்துள்ளன. பழைய அரசியல் முத்திரைகளான "தொழிற்கட்சி", "சோசலிஸ்ட்", "கம்யூனிஸ்ட்" என்று ஐரோப்பா, ஆசியா, இலத்தின் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இன்னும் கட்சிகள் தங்களை கூறிக் கொள்ளுவதெல்லாம் உண்மையாக முதலாளித்துவ எதிர்ப்பின் எந்த வடிவத்தையும் குறிக்காததுடன், மேலும் முக்கிய முதலாளித்துவ லவதுசாரிக் கட்சிகளிடம் இருந்து கணிசமான வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை.

37. தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 20 ஆண்டுகளுக்கு முன்வைத்த ஆய்வான வேலைகள், ஊதியங்கள்மீது பெருநிறுவனத் தாக்குதல்களை தொழிலாளர்கள் தடுக்க வேண்டும் என்றால், அவர்கள் இந்த அமைப்புக்களின் கட்டுக்களில் இருந்து முதலில் முற்றிலும் சுதந்திரம் அடைய வேண்டும் என்பது முற்றிலும் சரியாகிவிட்டது. அமெரிக்காவில் AFL-CIO மற்றும் வெற்றிக்கான மாற்ற கூட்டு (Change to Win) "தொழிலாள வர்க்க அமைப்புக்கள்" அல்ல. மாறாக அவை அரசாங்கத்தின் துணைக் கருவிகளாக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு இரண்டாம் நிலைக் கருவிகளாகி, மேல்மத்தியதர வர்க்க நிர்வாகிகளின் தலைமைக்கு உட்பட்டவையாகும். அவர்களுக்கு "தொழிலாளர் இயக்கம்" என்பது ஒரு வியாபாரம், தங்கள் சொந்த செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு வழிவகையாகும். இந்த அமைப்புக்களில் ஒன்று கூட ஒரு தலைமுறைக்கும் மேலாக முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் போராட்டம் எதையும் தொடக்கவில்லை, எதிலும் ஈடுபடவில்லை. தங்கள் முக்கிய பொறுப்பு தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுப்புகளை நிர்ப்பந்திப்பது, பல நேரமும் அதற்கு ஈடாக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பெரும் நிதியத்தை பெற்றுக்கொள்ளல் என்பதாகும். அதுதான் UAW, VEBA உடைய வேலைத்திட்டமாகும்.

38. வெகுஜன எதிர்ப்பு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் வெளிப்பாடாமல் உள்ள நிலைமை, அரசியல் ஸ்திரப்பாடு உள்ளது என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேற்பரப்பின்கீழ், மக்கள் அதிருப்தி உறுதியாக வளர்வதுடன் ஒரு வெளிப்பாட்டை நாடுகிறது. இழிசரிவிற்கு உட்பட்டுவிட்ட உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வின் வடிவமைப்பிற்கு வெளியே இந்த எதிர்ப்பு வெடித்தெழும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள், ஒபாமா நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ முறை ஆகிய அனைத்திற்கும் எதிராக நேரடி மோதலுடன் வளர்ச்சியடையும். சோசலிச சமத்துவக் கட்சி புதிய, சுயாதீன மக்கள் போராட்ட அமைப்புக்களை தோற்றுவிப்பதற்கும், அவர்களின் வேலைத்திட்டங்கள் தந்திரோபாயங்களின் வளர்ச்சிக்கும் தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்யும். ஆழ்ந்த சமூக நெருக்கடி பரந்த எதிர்ப்பில் கணக்கிலடங்கா போராட்டங்களையும் வடிவங்களையும் உருவாக்கும். ஆனால் முக்கியமான பிரச்சினை ஒரு புரட்சிகரத் தலைமை என்ற பிரச்சினையாகத்தான் உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச இயக்கத்தை அமைக்கும் பணி, ஒரு புதிய தலைமுறை தொழிலாளர்கள் இளைஞர்களை மார்க்சிச முன்னோக்கு, வரலாறு ஆகியவற்றில் பயிற்றுவிக்கும் கடமை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள அதன் தோழமைக் கட்சிகள் மீது வந்துள்ளது.