World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Socialism and the Greek debt crisis

சோசலிசமும் கிரேக்கக் கடன் நெருக்கடியும்

Peter Schwarz
18 February 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பா முழுவதும் மக்களின் பரந்த பிரிவினரின் வாழ்க்கைத் தரங்களின் மீது கடுமையான தாக்குதலுக்கு கிரேக்கம் ஒரு பரிசோதனைக் களமாகியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கி மீட்பு பொதியில் இருந்த பெரும் ஓட்டைகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வரவு-செலவுத் திட்டங்களை தகர்த்து, அவை இப்பொழுது தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் இட்டுநிரப்பப்படும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

பெப்ருவரி 15ம் தேதி கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கிரேக்க அரசாங்கத்தை கிட்டத்தட்ட செயலற்றதாக்கி நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிசீலனையில் கொண்டுவந்தனர். ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் ஒரு அங்கத்துவ நாட்டிற்கு இத்தகைய இழிவு இதற்கு முன்னர் வந்ததில்லை. ஏதென்ஸ் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரஸ்ஸல்ஸில் மிகக்கூர்மையாக ஆராயப்படும். தேசிய பாராளுமன்றத்தில் ஒவ்வொரு வாக்கெடுப்பும் நெருக்கமாக கண்காணிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படாத பிரஸ்ஸல்ஸ் ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் அதிகாரிகள் ஒரு நாட்டின் கட்டுப்பாடு முழுவதையும் எடுத்துக் கொண்டு தங்கள் நிபந்தனைகளை அதன் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் ஆணையிடுகின்றனர்.

நான்கே வாரங்களில் கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) க்கும் தன் கடும் சிக்கன நடவடிக்கைகளின் வெற்றி பற்றி முதல் அறிக்கையை வழங்கவேண்டும். அவை போதாது எனத் தீர்மானிக்கப்பட்டால், யூரோப்பகுதியில் உள்ள மற்ற 15 நாடுகளும் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கம் எடுக்குமாறு நிபந்தனை கொண்ட பெரும்பான்மையுடன் வாக்களிக்கும். ஏனைய நடவடிக்கைகளுடன் பிற்போக்குத்தன மதிப்புக் கூட்டு வரி (VAT) மற்றும் கூடுதல் செலவுக் குறைப்புக்கள் அதிகரித்தல் என்பவற்றை செயல்படுத்துவது பற்றி விவாதங்கள் நடக்கின்றன.

இந்த வெட்டுக்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்த நிதிய அமைப்புக்களின் நலன்களால் உந்துதல் பெற்றுள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கிரேக்க அரசாங்கத்திற்கு அது ஏற்கனவே ஏற்றுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த அவகாசம் கொடுக்க நினைக்கும்போது, ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை உடனடியாக செலவுக் குறைப்புக்கள் கடினமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றன. ஜேர்மனிய நிதியமைச்சரகத்தில் அரசாங்க செயலரான Jörg Asmussen லாட்வியா, அயர்லாந்து ஆகியவற்றை மேற்கோளிட்டுள்ளார். அங்கு பொதுத் துறை ஊழியர்கள் ஊதியம் முறையே 20, 15 சதவிகிதங்கள் குறைப்பட்டுவிட்டன.

இந்த நடவடிக்கைகள் மக்களின் பரந்த அடுக்குகள் வாழ்க்கைத் தரங்களை கடுமையாகக் குறைக்கும் நோக்கமுடையவை. ஜேர்மனிய Ifo Institute தலைவர் Hans-Werner Sinn கருத்துப்படி, "கிரேக்கர்கள் சுக வாழ்விற்கு பழக்கப்பட்டுவிட்டனர். கிரேக்கர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும் சிக்கனம் தேவை என்று உணர்த்தப்பட வேண்டும், அவர்கள் உண்மை ஊதிய விகிதங்களை குறைக்க வேண்டும்." கிரேக்கத்தின் தேசிய சராசரி ஊதியம் ஜேர்மனியுடையதில் பாதிதான், விலைவாசிகள் அங்கு இதேபோல்தான் என்று உள்ளபோதிலும், இப்படிக் கூறப்பட்டுள்ளது.

ஏதேன்ஸுக்கு ஆணையிடப்பட்டுள்ள கடும் சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளில் அடிப்படை மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. பல காலமாகவே ஜேர்மனி ஐரோப்பாவிற்கு "ஊதியம் அளிக்கும் நாடு" என்று கருதப்பட்டு வந்துள்ளது. ஏனெனில் இது பிராந்திய வித்தியாசங்களை ஈடுசெய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திற்கு ஒப்புமையில் அதிக நிதி கொடுத்து வந்தது. அதையொட்டி ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக்கப்பட்டு, வலுவடைந்தது. இதற்கு ஈடாக ஜேர்மன் பொருளாதாரமும் அதிக நலன்களை பெற்றது. தொழிலாள வர்க்கத்தின் மீது மிருகத்தனமான தாக்குதல்களை சுமத்த போலிக்காரணமாக காட்டப்படும் கிரேக்க உயரடுக்கின் ஊழல், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினால் மறைமுகமாக மன்னிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை கிரேக்க சந்தையை எடுத்துக்கொள்ள அனுமதித்தது.

இப்பொழுது பேர்லின் இனி "ஊதியம் அளிக்கும் நாடு" என்ற பங்கை கொள்ள விரும்பவில்லை. மேர்க்கெல் அரசாங்கம் கிரேக்க அரசாங்கத்திற்கு நிதியுதவி செய்யும் எந்த திட்டத்தையும் எதிர்க்கிறது. ஜேர்மனிய செய்தி ஊடகம் கிரேக்க நெருக்கடி "உள்நாட்டுத் தயாரிப்பு, கிரேக்கர்கள் "தங்கள் வருமானத்திற்கு மீறிய வாழ்க்கை வசதிகளை கொண்டுள்ளனர்" என்ற பிரச்சாரத்தை முழுமையாக நடத்துகின்றன. ஜேர்மனிய முதலாளித்துவத்திற்கு பிரச்சினை கிரேக்கக் கடன் என்பது இல்லை, ஆனால் நெருக்கடிக்கு விலை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான். இது கிரேக்கத்திற்கு மட்டும் இல்லாமல ஐரோப்பா முழுவதும், ஜேர்மனிக்கும் பொருந்தும். ஜேர்மனியிலும் மேர்க்கெல் அரசாங்கம் இரக்கமின்றி கடும் சிக்கனத் திட்டத்தை தயாரித்து வருகிறது.

ஜேர்மனியின் ஆக்கிரோஷ நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மோதல்களை அதிகரிப்பதுடன் ஐரோப்பிய அமைப்புகளையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளன.

மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களை தாக்குவதில், ஐரோப்பிய ஒன்றியம் சமூக ஜனநாயகவாதிகளை நம்பலாம். ஸ்பெயினிலும், போர்த்துக்கலிலும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள் மாபெரும் குறைப்புக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. கிரேக்கத்தில் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதற்குக் காரணமே கோஸ்டாஸ் கரமன்லிஸ் உடைய பழைமைவாத அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த பெரும் அதிருப்தியும், இக்கட்சி கொடுத்த ஜனரஞ்சக உறுதிமொழிகளும்தான். ஆனால் பதவிக்கு வந்த பின்னர், பாப்பாண்ட்ரூ தன்னுடைய தேர்தல் உறுதிமொழிகளைக் கைவிட்டு, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களில் பெரும் வெட்டுக்கள் அடங்கிய கடும் சிக்கன திட்டங்களை அளித்துள்ளார். அவற்றில் வேலை நீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள், ஓய்வூதியத்திற்கான வயது அதிகரிப்பு மற்றும் அதேபோன்ற பல நடவடிக்கைகள் உள்ளன.

பாப்பாண்ட்ரூவும் அவருடைய நிதி மந்திரி ஜோர்ஜ் பாப்பாக்கான்ஸ்டான்டிநெளவும் ஐரோப்பா முழுவதும் பயணித்து வங்கியாளர்களையும் அரசாங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து தாங்கள் அனைத்து எதிர்ப்பையும் மீறி சிக்கனத் திட்டத்தை செயல்படுத்துவதாக நம்ப வைத்துள்ளனர். ஆயினும்கூட, ஐரோப்பிய ஆணையர் ஒலி ரென் இற்கு இது போதவில்லை. "மார்ச் நடுப்பகுதிக்குள் கிரேக்கம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும்; இந்த ஆண்டு இலக்குகள் அப்பொழுதுதான் சாதிக்கப்பட முடியும்" என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் பாப்பாண்ட்ரூவை நம்பியுள்ள நிலையில், அவரோ தொழிற்சங்கங்களை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை செயல்படுத்த நம்பியுள்ளார். கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பெப்ருவரி 9, 10 தேதிகளில் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், பெப்ருவரி 24 அன்று மற்றொரு ஒரு நாள் வேலைநிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள் தங்களை எதிர்ப்புக்களை ஒருங்கிணைக்கப்படாத நடவடிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ளுகின்றன. தொழிலாளர்கள் சீற்றத்தை பாதிப்பு இல்லாமல் வெளிப்படுத்தவும், அவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதுவுமே தமது கடமை என எண்ணுகின்றனர். அவ்வாறான நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு தீவிர பிரச்சினை ஏதும் வரக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.

இவர்களுக்கு பல "இடது" என்று கூறிக்கொள்ளும் அமைப்புகளான KKE (கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி), SYRIZA கூட்டு முதல் பல சிறிய குழுக்கள் வரை ஆதரவு உள்ளது. இந்தக் கட்சிகளை எல்லாம் இணைப்பது அவற்றின் முற்றிலும் சந்தர்ப்பவாத, தேசியவாத நிலைப்பாடுதான். அவை PASOK வைச் சுற்றி வருகின்றன அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்க முற்படுகின்றன.

ஆனால் கிரேக்க நெருக்கடிக்கு தேசியத் தீர்வு ஏதும் கிடையாது. ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டிற்கு தீவிரமான இறுதி எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது, அதாவது யூரோவை வைத்துக் கொண்டு பிரஸ்ஸல்ஸ் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை ஏற்க வேண்டும், அல்லது யூரோப்பகுதியை விட்டு நீங்க வேண்டும். இதையொட்டி கிரேக்க நாணயம் உடனடியாகச் சரிந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட கடும் சிக்கன நடவடிக்கைகள் ஐரோப்பா முழுவதும் கடுமையான வர்க்க மோதலை நிகழ்ச்சிநிரலில் நிறுத்துகின்றன. மிகமிகக்குறைவான மக்கள்தான் கடுமையான குறைப்புக்களை ஏற்கத் தயார். அதே நேரத்தில் நிதிய உயரடுக்கு கட்டுப்பாடு இல்லாமல் தன்னை செல்வக் கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொள்ளுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் தேவை. கிரேக்கத் தொழிலாளர்கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பவேண்டும். ஐரோப்பிய தொழிலாளர்கள் ஏதென்ஸ், பிரஸ்ஸல்ஸ் அவர்கள் மீது சுமத்தும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான கிரேக்க தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்குதல்கள் தேசிய எதிர்ப்புக்கள், தேசிய அரசாங்கங்கள் மீது அழுத்தம் ஆகியவற்றால் நிறுத்தப்பட முடியாதவை. அவற்றிற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தாக்குதல் தேவை. அது சமூகத்தை சோசலிச மறுசீரமைப்பு என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். பிரஸ்ஸல்ஸின் கொள்கைகளை நிர்ணயிக்கும் நிதிய, தொழில்துறை பெருநிறுவனங்களின் இலாபங்கள் அல்லாது, பொருளாதார வாழ்வின் அடிப்படையை சமூகத்தின் சமூகத் தேவைகள்தான் நிர்ணியக்க வேண்டும். வங்கிகள், பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.