World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Signs of Chinese financial instability provoke market nervousness

சீனாவின் உறுதியற்ற நிதித் தன்மை சந்தையில் கலக்கத்தை தூண்டுகிறது

By John Chan
18 February 2010

Use this version to print | Send feedback

சீனாவின் மத்திய வங்கி இந்த ஆண்டு இரண்டாம் முறையாக கடன் கொடுத்தலை கடினமாக்க போவதாக வந்துள்ள செய்தி பங்கு, பொருட்கள் சந்தைகளில் கலக்கத்தை தூண்டியுள்ளது. இந்த நடவடிக்கை ஒப்புமையில் குறைவாக இருந்தாலும், பெப்ருவரி 25 முதல் வங்கிகள் இருப்புத் தேவையை விகிதத்தில் அரைப்புள்ளி அதிகரிக்க வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் சீனப் பொருளாதாரத்தில் உறுதி குறைவதின் மற்றொரு அடையாளமாகக் காண்கின்றனர்.

சீனா மற்றும் அதன் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்த வளர்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த பிரதிபலிப்பு எடுத்துக்காட்டுகிறது. 2009ல் 8.7 வளர்ச்சி விகிதத்தை தொடர்வதற்கு முக்கிய கூறுபாடாக இருந்தது பாரிய வங்கிக் கடன்கள் கொடுக்கப்பட்டதாகும். ஆனால் கடந்த ஆண்டு வெள்ளெமென எளிய கடன் வசதி கொடுக்கப்பட்டமை (9.6 டிரில்லியன் யூவான்கள்-US$1.4 டிரில்லியன்) சொத்துக்கள் மற்றும் பங்கு ஊக வியாபாரங்களுக்கு எரியூட்டியது. அது நிலைத்து நிற்க முடியாதது ஆகும்.

2010ம் ஆண்டிற்கு குறைந்த கடன்வழங்கும் இலக்காக 7.5 டிரில்லியன் யுவானை பெய்ஜிங் நிர்ணயித்திருந்தாலும், ஜனவரி மாதத்தில் கொடுக்கப்பட்ட கடன்கள் மட்டும் 1.39 டிரில்லியன் யுவான் என்று ஆயின. இது முந்தைய மூன்று மாதங்களில் கொடுக்கப்பட்டதைவிட அதிகமாகும். சொத்துக்கள் மதிப்பு ஜனவரி மாதம் முந்தைய ஆண்டை விட 9.5 சதவிகிதம் அதிகமாயிற்று. இது ஆளும் வட்டங்களில் சீனா 1990 களின் தொடக்கத்தில் ஜப்பானில் சொத்துக் குமிழ் வெடிப்புத் தரத்தைப் போல் காணக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அரசாங்கம் இன்னும் அதிகமாக வங்கிக் கடனை இறுக்குதல் பொருளாதார வளர்ச்சியை தாமதப்படுத்தக்கூடும் என்ற கவலையையும் கொண்டுள்ளது.

அரசாங்கம் அதன் கடன் கொடுத்தலை இறுக்குதல் அறிவிப்பை பெப்ருவரி 12 என்று சீனப் புத்தாண்டு விடுமுறைக்காலத்திற்கு முன் கொடுத்தது. அப்பொழுது சீனா, தைவான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. இருந்த போதிலும், ஜப்பானின் Nikkei குறியீடு 0.4 சதவிகிதம் சரிந்தது. 2009 கடைசிக் காலாண்டில் எதிர்பார்த்ததைவிட அதிக வளர்ச்சி என்ற அறிவிப்பு இருந்தும் இந்த நிலைதான். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் கடந்த வெள்ளியன்று பங்குகள் 0.3 சதவிகிதம் சரிந்தன.

பொதுவாகப் பொருளாதார வர்ணனையாளர்கள் பாதிப்பை அதிகம் பொருட்படுத்தவில்லை. பைனான்ஸியல் டைம்ஸ் கூறியது: "மீண்டும் இதைக் காண்கிறோம்: சீனா நிதிய முறைக்கு ஒரு திருப்பம் கொடுக்கையில் சந்தைகள் அதை எதிர்கொள்ளுகின்றன.... [ஆனால்] வெளிப்படையாக ஏற்றம் நிறைந்த கடனை படிப்படியாகக் குறைத்தல் என்பது சரியான அணுகுமுறை. சீனா உலகெங்கிலும் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்கிறது என்றாலும், இத்தகைய நடவடிக்கை உலகப் பொருளாதார மீட்பை நிலைநிறுத்தும் என்பது மிகவும் எதிர்பார்ப்பதற்கு இல்லை.

ஆனால் செய்தித்தாள், சீனாவின் முடிவு, ஐரோப்பிய கொந்தளிப்பால் துரிதமாயிற்று என்பதை குறிப்பிட்டது. "கிரேக்கத்திற்கு துணை நிற்பது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதிமொழி வெள்ளியன்று சிதைந்த சந்தைக்கு ஒப்புமையில் அமைதியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை சீனா நிதிய இறுக்குதலை செய்துள்ளபோது வணிகர்கள் திடீரென ஆபத்தான நடவடிக்கைகளை குறைத்ததால் தகர்ந்துபோனது" என்று அது எழுதியது.

ஆனால் ஐரோப்பாவும் சீனாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையான ஐரோப்பாவில் அரசாங்கக் கடன் திருப்புதல் நெருக்கடி சீன ஏற்றுமதித் தொழில்களில் பாதிப்பைக் கொடுக்கும். 2009-09 உலக நிதிய நெருக்கடியில் ஏற்பட்ட பெரும் சரிவில் இருந்து சீன ஏற்றுமதிகள் சற்றுத்தான் மீண்டுள்ளன. ஜனவரி மாதம் ஆண்டுக்கணக்கில் புள்ளிவிவரங்கள் உயர்ந்தன. ஏற்றுமதிகள் 20 சதவிகிதமும் இறக்குமதிகள் 81 சதவிகிதமும். ஆனால் வணிக மொத்த அளவில் ஏற்றுமதிகள் ஜனவரியில் 109.5 பில்லியன் டாலர் என்று டிசம்பரின் 130.7 பில்லியன் டாலரில் இருந்து குறைந்துவிட்டன. ஏற்றுமதிகள் டிசம்பர் 112.3 பில்லியன் டாலரில் இருந்து ஜனவரியில் 95.3 பில்லியன் டாலராக குறைந்தன.

பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்யும் சீனாவின் முயற்சிகள் உள்கட்டுமான கட்டமைப்பில் அதிகமாக குவிப்பு காட்டுகின்றன. அதேபோல் ஒருமுறை மட்டும் நுகர்வோருக்கு வீடுகளுக்கு தேவையான பொருட்கள், கார்கள் போன்றவற்றை வாங்க உதவித் தொகைகளிலும் குவிப்பு காட்டப்படுகிறது. முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே தொழிலாளர் செலவினங்களை குறைவாக வைப்பதின் தவிர்க்க முடியாத துணைவிளைவு ஒப்புமையில் சிறிய உள்நாட்டுச் சந்தையின் முக்கிய பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. உற்பத்திக்கான முதலீட்டிற்கு வாய்ப்புக்கள் இல்லாதது பங்குகள், சொத்துக்கள்மீது பெருகிய ஊகத்திற்கு வகை செய்துள்ளது.

சொத்துக்கள் மீதான ஊகத்தின் வியத்தகு உதாரணம் ஹைனன் மாநிலம் ஆகும். இங்கு 500 பில்லியன் யுவான் அல்லது 73 பில்லியன் டாலர் தீவில் ஜனவரி மாதம் கொட்டப்பட்டது. கடந்த ஆண்டு மொத்தம் வீடுகள் விற்பனை 36 பில்லியன் யுவான்தான். 2009 புள்ளிவிவரம் கூட 2008ல் இருந்து 73 சதவிகிதம் கூடுதலானது. சராசரி சொத்து விலைகள் ஜனவரி மாதம் மட்டும் 30 சதவிகிதம் அதிகரித்தன. 1990 களின் தொடக்கத்தில் இருந்த முந்தைய சொத்துக் குமிழ், ஹைனன் ஒரு சிறப்பு பொருளாதார பகுதியானபோது 1993ல் வெடித்தது. முற்றுப்பெறாத கட்டிடங்கள் முடிக்கப்பட 10 ஆண்டுகள் ஆயிற்று. இது வங்கிகளை 30 பில்லியன் யுவான் செலுத்தமுடியாத கடன்களை ஏற்றுக்கொள்ளவைத்தது.

அதேபோல் மீண்டும் ஏற்படக்கூடாது என்று அஞ்சும் ஹைனன் அதிகாரிகள் நில விற்பனைகள் மற்றும் புதிய திட்டங்களை ஜனவரி மாதம் நிறுத்தி வைத்தனர். ஆயினும் அந்த முடிவு சொத்துக்களின் விலைகளை இன்னும் அதிகப்படுத்தியது. Asia Times Online கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டது: "கட்டிட மனைகள், அஸ்திவாரங்கள் ஆரம்பிக்கப்படமலேயே விற்கப்பட்டன. கூட்டம் நிறைந்த விற்பனை அலுவலகங்களில், நிலப்பகுதியில் இருந்து வந்த ஏராளமான முதலீட்டாளர்கள் விலைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஒரு வாடகைக்காரை எடுத்துக் கொண்டு நிலத்தைப் பார்த்தவுடன் புதிய திட்டங்களுக்கு தயாரானோரால் வீடுகள் தேடப்படுவதால் உள்ளூர் விடுதிகள் நிறைந்தன. சில செய்தி ஊடகத் தகவல்கள்படி ஹைனனில் வீட்டை விற்பது காய்கறி வியாபாரத்தைவிட எளிது, இட விற்பனை விளம்பரங்கள் தென்னை மரங்களைவிட அதிகமாகிவிட்டன என்று கூறுகின்றன.

சீனாவின் குழப்பம் நிறைந்த பொருளாதார வளர்ச்சியின் ஒரு சிறு கூறுபாடு ஆகும். சொத்து ஊக வணிகத்தை கட்டுப்படுத்த பெய்ஜிங் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க விரும்பவில்லை. ஏனெனில் கட்டுமானப் பிரிவு, எஃகு, சிமென்ட் போன்ற அடிப்படைத் தொழில்களுக்கு உந்துதல் கொடுக்கும் முக்கிய காரணியாகும்.

Caijing இதழில் கடந்த ஆண்டு எழுதுகையில் பொருளாதார வர்ணனையாளர் Andy Xie சீனாவின் தற்போதைய ஊகக் குமிழ்கள் 1997-98 ல் தெற்குஆசிய நிதியச்சரிவில் இருந்ததை விட அதிக வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய "அற்புதம்'', உற்பத்தியில் இருந்து வணிகத்தை திருப்பி, சொத்து ஊகத்தை நோக்கி கொண்டு சென்ற குமிழில் கட்டமைக்கப்பட்டது" என்று அவர் விளக்கினார். ஊகத்தின் அடித்தளத்தில் குறைந்த வட்டி கடன் இருந்தது. இது பிராந்திய நாணயங்கள் ஒரு வலுவற்ற அமெரிக்க டாலருடன் இணைந்து நிற்க உதவியது.

சீனா இன்று அதேபோன்ற நிலைமையை எதிர்கொள்ளுவதாக Xie எச்சரித்தார். "சீனாவில் உற்பத்தியாளர்களை சந்திக்கும்போது நான் அவர்கள் இலாபங்கள் சொத்து வளர்ச்சி, கடன்கொடுத்தல் அல்லது நேரடி ஊகத்தின் மூலம் வருகிறது என்பதை கண்டறிந்தேன். சொத்துக்கள் மதிப்பு உயர்கையில் இந்த வழிவகைகள் திறமையுடன் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு உதவி புரியும். இச்சொத்து விளையாட்டு குறுகிய காலத்திற்கு சிறப்பாக வேலை செய்யும், அதைத்தான் அமெரிக்க அனுபவம் காட்டியது." ஆனால் சொத்துக்கள் விலைகள் சரியத் தொடங்கியவுடன், பின்னோக்கிச் செல்லும் நிகழ்வுப்போக்கு மிகவிரைவில் பேரழிவு தரக்கூடிய நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

இப்படி சீனாவின் "அற்புதம்" வந்தது உலகப் பொருளாதார போக்குகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டதாகும். கடந்த 30 ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவில் தொழில்துறை விரிவாக்கம் பரந்தது, குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை உலக முதலாளித்துவம் சுரண்டும் தேவையினால் உந்ததுதல் பெற்றது. இது 1970 களில் சரியும் இலாப விகிதங்களை எதிர்கொள்ளும் விதத்தில் வந்தது. சீனாவின் தொழில்துறை விரிவாக்கம் குறைந்த இலாப விகிதத்தையும், அதே போல் தொழிலாளர்களை மிக அதிகம் சுரண்டுவதிலும், மேலைச் சந்தைகளை அடையும் வாய்ப்பையும் நம்பியுள்ளது.

இதனால் மலிவான சீனப் பொருட்கள், வளர்ச்சியுள்ள நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் மகத்தான நிதிய முறை வளர்ச்சிக்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவில் பொருளாதார விரிவாக்கம் ஊகம், திரித்தல் என்று எளிய கடன் முறையைப் பயன்படுத்துதல், மற்றும் ஆபத்தான எஞ்சிய மலிவான நிதிப் பயன்பாடு ஆகியவை உள்ளன. சீனாவில் பெரும் வணிக உபரிகள் அமெரிக்க பத்திரங்களை வாங்க பயன்படுத்தப்பட்டன. இது யுவானின் மதிப்பைக் குறைவாக வைக்கவும் வோல் ஸ்ட்ரீட்டின் ஊக நடவடிக்கைக்கு ஆக்கமும் கொடுத்தது.

2008 ல் அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த நிதிய நெருக்கடி சீனாவில் விரைவான பொருளாதார விரிவாக்கத்தின் தளத்தை அடிப்படையில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருந்து டாலருக்கு எதிராக யுவானின் மதிப்பை உயர்த்த சீனா கணிசமான அழுத்தத்தை பெற்று வருகிறது. சீனப் பொருட்களுக்கு எதிராக அபராதமான முறையில் அமெரிக்க காப்பு வரிகளையும் எதிர்கொள்கிறது. ஆனால் பெய்ஜிங் மறுமதிப்பீடு செய்ய மறுத்துள்ளது. இதையொட்டி அதன் ஏற்றுமதியில் தீவிரச்சரிவு ஏற்படும், அதனால் ஆலைகள் மூடப்பட நேரிடும், வேலையின்மை பெருகும், சமூக அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற ஆபத்து உண்டு என்பதை அது அறியும்.

அதே நேரத்தில் தற்போதைய தரத்தில் யுவானை டாலருடன் பிணைத்துள்ள வகையில், சீன மத்திய வங்கி அமெரிக்க டாலர் சொத்துக்களை ஏராளமாக வாங்க வேண்டியிருப்பதுடன், மிக அதிக அளவு யுவானையும் உள்நாட்டிற்காக அச்சடிக்க வேண்டியுள்ளது. இது ஊகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த வழிவகையை நிறுத்தினாலோ அல்லது வேகத்தை குறைத்தாலோ, அது உடனடியாக அமெரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தும். அது சீன ஏற்றுமதிகளையும் பாதித்து, பொருளாதார அழுத்தங்களையும் அதிகரிக்கும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் வணிக அழுத்தங்களை எதிர்கொள்ளும் வகையில், பெய்ஜிங் எழுச்சி பெறும் சந்தைகள் என அழைக்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதிகளை அதிகரித்துள்ளது. இப்பொழுது இது அதன் மொத்தத்தில் 54 சதவிகிதமாக உள்ளது. ஆனால் இது சீனாவிற்கு எதிராக கூடுதலாக காப்புவரி உணர்வுகளுக்குத்தான் எரியூட்டுகிறது. சீன வணிக அமைச்சகத்தின்படி, கடந்த ஆண்டு வேறு எந்த நாட்டைக்காட்டிலும் இந்தியா சீனாவிற்கு எதிராக அதிக புகார்களை பதிவு செய்தது. சீனாவில் வணிக உபரி இந்தியாவுடன் 2009ம் ஆண்டு 46 சதவிகிதம் அதிகரித்து 16 பில்லியன் டாலரை அடைந்தது.

பெய்ஜிங் இரண்டாம் முடிவாக கடன் வசதியை இறுக்குவது என்பதை தொடர்ந்து சந்தையில் வந்துள்ள கலக்கம் சீனாவில் இப்பொருளாதார நிகழ்போக்குகளின் நிலைத்து நிற்க முடியாத தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அது எந்த வடிவத்தை கொண்டாலும், சீனாவில் ஒரு பொருளாதார அதிர்ச்சி என்பது உலகம் முழுவதும் தவிர்க்க முடியாமல் எதிரொலிக்கும்.