World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Dutch government collapses over military deployment in Afghanistan

ஆப்கானிஸ்தானில் இராணுவ நிலைநிறுத்தம் தொடர்பாக டச்சு அரசாங்கம் கவிழ்கிறது

By Stefan Steinberg
22 February 2010

Use this version to print | Send feedback

சனிக்கிழமையன்று ஆளும் கூட்டணி அதாவது சமூக ஜனநாயக டச்சு தொழிற் கட்சியின் (PvdA) உறுப்பினர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் ஒரு மேலதிக விரிவாக்க இராணுவ நிலைநிறுத்தத்திற்கு ஆதரவு தரமறுத்த நிலையில் டச்சு அரசாங்கம் கவிழ்ந்தது.

கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் கிறிஸ்தவ ஒன்றியத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்த தொழிற் கட்சியானது கட்சியின் நம்பகத்தன்மை ஆபத்தில் உள்ளது என்று அது எடுத்த முடிவை காரணம் காட்டியது.

சமீபத்திய தேர்தல்களில் தொழிற் கட்சி தன் ஆதரவைக் கணிசமாக இழந்திருந்தது. இதற்குக் காரணம் ஆப்கானிஸ்தானில் டச்சு இராணுவ ஈடுபாட்டிற்கு அது கொடுத்துவந்த தொடர்ச்சியான ஆதரவுதான். தன்னுடைய கட்சி ஒரு புதிய உத்தரவை எதிர்க்கும் முடிவை பற்றி கருத்து தெரிவித்த தொழிற் கட்சி தலைவரும் துணை பிரதம மந்திரியுமான Wouter Bos, தலையீடானது "டச்சு படைகளிற்கு பெரும் சுமையைக் கொடுத்துள்ளது" என்று புகார் கூறினார்.

"இரு ஆண்டுகளுக்கு முன்பு [ஆப்கானிஸ்தானில் டச்சு இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படலாம் என்ற உத்தரவை] நீட்டித்தபோது, நாங்கள் டச்சு மக்களுக்கு இதுதான் கடைசித் தடவை என்று உறுதியளித்தோம். அந்தத் தேதியை நாங்கள் மாற்றினால், எங்களிடம் நம்பகத்தன்மை பெரிதும் குறைந்துவிடும்" என்றார் அவர்.

தற்போது நெதர்லாந்து ஆனது தெற்கு ஆப்கானிய மாநிலமான உருஜ்கானில் 1,400 துருப்புக்களை நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அது நிறுத்தியுள்ள மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000 ஆகும்.

2006-ல் நேட்டோ நடவடிக்கைக்காக அரசாங்கம் முதலில் துருப்புக்களை அனுப்பியதில் இருந்து 21 டச்சு துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கருத்துக் கணிப்புக்கள் பலமுறையும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானிற்கு படை அனுப்பப்பட்டது பற்றி எதிர்ப்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். உடனடியாக டச்சுப் படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்தப் பின்னணியில் டச்சு அரசாங்கம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படைகள் திரும்பப்பெறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் த ஹேகில் உள்ள டச்சு அரசாங்கத்திற்கு அதன் உருஸ்கான் இராணுவ நிலைநிறுத்தத்தை புதுப்பிக்க அழுத்தத்தை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய துருப்புக்கள் கூடுதலாக அதிகரிக்கப்படுவது ஒபாமா நிர்வாகம் முடிவெடுத்துள்ள விரிவாக்க மூலாபாயத்தின் தளம் ஆகும். அது ஆப்கானிஸ்தானிற்கு பல ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்க துருப்புக்களை அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்கா, முதலில் ஐரோப்பாவில் இருந்து கூடுதலாக 10,000 துருப்புக்களை கேட்டிருந்தது. இந்த வேண்டுகோளிற்கு நேட்டோ 7,000 துருப்புக்களுக்கு உத்தரவாதம் கொடுத்தது. ஆனால் அந்த எண்ணிக்கையில் ஏற்கனவே அந்நாட்டில் இருந்த துருப்புக்களும் அடங்கியிருந்தன. பல ஐரோப்பிய அரசாங்கங்களும் உறுதியளித்த முழு எண்ணிக்கையாக துருப்புக்களை அனுப்பத் தவறிவிட்டன.

டச்சு அரசாங்கத்தின் இராணுவக் கொள்கைக்கும் ஆப்கானிஸ்தானில் டச்சுத் துருப்புக்களின் செயற்பாட்டிற்கும் மக்கள் எதிர்ப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் 2003 ஈராக் போர் பற்றிய டச்சு விசாரணைக் குழு அறிக்கை ஒன்று வெளிவந்ததுடன் அதிகமாயிற்று. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூறிய வாதங்களின் மையப்பகுதியே டேவிட்ஸ் குழு நிராகரித்து ஈராக் போர் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது என்ற முடிவிற்கு வந்தது. இந்த அறிக்கை ஈராக் போரில் இப்பொழுது சரிந்துள்ள கூட்டணி அரசின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரி Peter Balkenende தலைமையிலான அரசாங்கத்தின் ஈராக் போர் பற்றிய பங்கையும் குறைகூறியது.

இம்மாதத் தொடக்கத்தில் நேட்டோ தலைமை செயலர் தளபதி Anders Fogh Rasmussen கிறிஸ்துவ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வெளியுறவு மந்திரி Maxime Verhagen உடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், டச்சு நோக்கம் நீடிக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தில் வாதிட்டிருந்தார்.

நேட்டோ தலைமைச் செயலரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதத்தில் டச்சு தொழிற் கட்சி சமாதான கரத்தை நீட்டியது. தொழிற் கட்சி எம்.பி. மார்டின் வான் டாம் தன்னுடைய கட்சி தொடரும் தலையீடு மற்றும் ஆப்கானிய பொறியியல் வல்லுனர்கள் அல்லது மருத்துவர்களுக்கு பயிற்சியை குறைந்த அளவில் தொடர்வதற்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் அத்தகைய பணி செவ்வனே நடக்க டச்சுத் துருப்புக்கள் தேவைப்படும் ஆதலால், வான் டாமின் திட்டம் டச்சு நிலைநிறுத்தம் தொடர்வதற்கு பின்புலமாக கொடுக்கப்படும் ஆதரவு ஆகும்.

ஆனால் கடந்த வாரம் நேட்டோ பேச்சுவார்த்தைகள் டச்சு நிலைநிறுத்தம் பற்றி நடக்கின்றன என்ற செய்தி வெளிவந்தவுடன் பொதுமக்களுடைய சீற்றம் பெருகியது. Bos இப்பேச்சுக்கள் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றார். இந்த மிகச் சந்தேகத்திற்குரிய கூற்று கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளால் ஏற்கப்படவில்லை. அவர்களால் Bos க்கு இதுபற்றி நன்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என்று வலியுறுத்தினார். மக்கள் பரந்த முறையில் இதை நம்பவில்லை.

இந்தப் பின்னணியில்தான் தொழிற் கட்சி தன் கூட்டணிப் பங்காளிகளுடன் முறித்துக் கொண்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்திருந்த 16 மணி நேர கபினெட் கூட்டத்தின் முடிவில் Balkenende தொழிற் கட்சியுடன் தன் கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவித்தார்.

கிறிஸ்துவ ஜனநாயக மற்றும் கிறிஸ்துவ ஒன்றியக் கட்சிகள் ஒரு இடைக்கால நிர்வாக அரசாங்கத்தை அனேகமாக கோடைகால தொடக்கத்தில் பொதுத் தேர்தல்கள் வரும் வரை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் மதிப்பிழந்த நிலையில், தீவிர வலதுசாரி குடியேற்ற எதிர்ப்பு Freedom Party இன் Geert Wilders புதிய சட்டமன்றத் தேர்தல்களில் முதலாவதாக அல்லது இரண்டாவதாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டச்சு அரசாங்கத்தின் சரிவு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிர்வாகத்தின் மூலோபாயத்திற்கு ஒரு தீவிர அடியைப் பிரதிபலிக்கிறது. ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட 100,000 ஆக இருக்கப் போகும் அமெரிக்கப் படைகளோடு ஒப்பிடுகையில் டச்சுத் துருப்புக்கள் குறைவு என்றாலும், அரசியல் பண்டிதர்களும் வெளியுறவுக் கொள்கை வல்லுனர்களும் டச்சு முடிவு மற்றய நாடுகளும் வெளியேறுவதற்கு ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.

ஜேர்மனிய பாராளுமன்றம் ஆப்கானிஸ்தானில் அதன் படைகள் நிலைப்பாடு பற்றிய உத்தரவை நீடிக்க வெள்ளியன்று முடிவெடுக்கும். நெதர்லாந்துடன் இணைந்த வகையில், ஜேர்மன் துருப்புக்கள் அமெரிக்க நேட்டோ பணியில் பங்கெடுத்துக் கொள்ள மகத்தான மக்கள் எதிர்ப்பு உள்ளது.

நெதர்லாந்தின் பிரேடாவில் உள்ள பாதுகாப்புக் கல்விக்கூடத்தின் பாதுகாப்பு மூலோபாயப் பேராசிரியர் Julian Lindley-French கருத்துப்படி, "இதன் உட்குறிப்பானது, டச்சு செல்கிறது, என்றால் மற்றய ஐரோப்பிய நாடுகளும், 'டச்சு போகிறார்கள், நாமும் போகலாம்' என்று கூறுவதற்கு மடையைத் திறந்துவிடும். இதன் விளைவாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகள் அதிக சுமையைத் தாங்கும் என்பதாகும்" என்றார்.

டச்சு அரசாங்கத்தின் சரிவானது, டச்சுத் துருப்புக்கள் திரும்பப்பெறுவதற்கான வாய்ப்பு என்பது ஹெல்மண்ட் மாநிலத்தில் அதன் செயல்களுக்கு எதிராக அமெரிக்க நேட்டோ கூட்டணி தலிபானிடம் இருந்து பெருகிய எதிர்ப்பைப் பெற்றுவரும் நேரத்தில் வருகிறது. அந்த மாநிலம் உருஸ்கன் மாநிலத்திற்கு அண்டை மாநிலமாகும்.

தொழிற் கட்சித் தலைவர் Wouter Bos கூட்டணி அரசாங்கத்திடம் இருந்து தன் கட்சி விலகிய பின்னர் கூறிய கருத்துக்கள் சமூக ஜனநாயகவாதிகளை பொறுத்தவரையில் டச்சுத் துருப்புக்கள் டச்சு நலன்களுக்காக இராணுவத் தலையீடு செய்யப் பயன்படுத்துவது பற்றி வேறுபாடுகள் இல்லை என்று தெளிவாக்குகின்றன. போஸ் நெதர்லாந்தில் பெருகிய முறையில் ஆப்கனில் ஈடுபாடு பற்றிக் கவலை கொண்டுள்ள ஆளும் வர்க்கத்தின் பிரிவைப் பிரதிபலிக்கிறார். அப்பகுதியில் அமெரிக்க நலன்களை தொடர டச்சுத் துருப்புக்கள் பயன்படுத்துவது பற்றி கடிந்து பேசுவதோடு, போரில் டச்சு ஈடுபாட்டினால் ஏற்படக்கூடிய உள்நாட்டு சமூக, அரசியல் விளைவுகளைப்பற்றி அஞ்சுகிறார்.

போருக்கான மக்கள் எதிர்ப்பானது பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்பு ஆகியவற்றைப் பற்றிய சமூக அதிருப்தியுடன் பிணைந்துள்ளது. பால்கெனென்டே ஓய்வூதியம் பெறும் வயதை உயர்த்தவும் சமூக நலத் திட்டங்ககளில் கடுமையான குறைப்புக்களையும் அறிவித்துள்ளார். இவை அரசாங்கம் டச்சு வங்கிகளை பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மீட்பதற்காக ஒதுக்கிய பெரும் நிதியங்களை மீட்க உதவும்.

இராணுவக் கொள்கை விவகாரம் போலவே, சமூக ஜனநாயகவாதிகள் இத்தகைய கொள்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. 1990 களில் இருந்து தொழிற் கட்சி செல்வத்தை மறுபங்கீடு செய்யும் கட்சி என்று கருதப்பட்டது அதாவது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு மாற்றும் கட்சி என்று.

இந்த நேரத்தில்தான் அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த Wim Kok கீழிருந்த PvdA அரசாங்கமானது பொதுநலத் திட்டங்களில் தீவிரக் குறைப்புக்களை செயல்படுத்தியது. அதையொட்டி பால்கெனண்டேயின் தலைமையில் பழமைவாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு பாதை அமைக்கப்பட்டது. தற்போதைய தொழிற் கட்சித் தலைவர் போஸ் என்பவர், Shell Oil-ன் முன்னாள் உயர் நிர்வாகி மற்றும் டச்சு வணிக உலகுடன் நெருக்கத் தொடர்புகள் கொண்டவராவர்.
இப்பொழுது போஸ் மற்றும் தொழிற் கட்சியின் தலைமையானது சர்வதேச நிதியத்தின் பார்வையில் நெதர்லாந்தின் கடன்திறன் தன்மையை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மதிப்பிழந்துவிட்ட Balkendende கூட்டணியினால் தொடர முடியாது என்ற முடிவிற்கு வந்தாயிற்று. மாறாக தொழிற் கட்சியானது தொழிற்சங்கங்களுடன் அது கொண்டுள்ள நெருக்கமான பிணைப்புக்களை பயன்படுத்திய டச்சு பெருவணிக நலன்கள் மற்றும் வங்கிகள் கோரும் வெட்டுக்களை செயல்படுத்த புதிய கூட்டணியை உருவாக்க முற்படும்.