World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Binyam Mohamed case and the threat of dictatorship

பின்யம் மொஹமத் வழக்கும் சர்வாதிகார அச்சுறுத்தலும்

Robert Stevens
22 February 2010

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களின் போது அமெரிக்காவால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதில் பிரிட்டிஷாரின் முழுத் தொடர்பு பற்றிய புதிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவருகின்றன.

வெள்ளியன்று, லண்டன் பெருநகர பொலிஸ் மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை M15 ஆகியவை கியூபாவின் குவாண்டநாமோ குடாவில் காவலில் வைக்கப்பட்டிருந்த கடைசி எஞ்சிய பிரிட்டிஷ் குடிமகன் ஷாகர் ஆமரின் சித்திரவதையில் உடந்தை இருப்பது பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கிறது என்று தெரியவந்துள்ளது.

பெப்ருவரி 2002-ல் இருந்து ஆமர் குவாண்ரநாமோ பேயில் குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய வக்கீல்கள், பிரிட்டிஷ் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பக்ரம் விமானத் தளத்திலுள்ள அமெரிக்க இராணுவச் சிறையில் அமெரிக்கக் காவலில் இருந்தபோது முன்னதாகவே சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை நன்கு அறிவர். ஒரு M15 அதிகாரியின் முன் "சுவருடன் மோதவிடப்பட்டு அதி வேகமாகத் திரும்பும் அளவிற்கு கடினமாக அவர் அவருடைய தலை பலமுறை தாக்கப்பட்டது" என்றும் கிட்டத்தட்ட ஒரு டஜன் மனிதர்கள் அவரை அடித்தனர் என்றும் பலமுறையும் இறப்பு அச்சுறுத்தலுக்கு உட்பட்டார் என்றும் ஆமர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஆமர் சித்திரவதை தொடர்புடைய ஆவணங்கள், அமெரிக்க அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் அவற்றை கொடுக்க வேண்டும் என்று வந்த வேண்டுகோளை நிராகரித்திருந்தார்.

சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு இப்பொழுது பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புக்கள் 20- க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை சித்திரவதை செய்த தொடர்புடையவர்கள் என்னும் கூற்று பற்றிய விசாரணையை கோரியுள்ளது.

இந்த வளர்ச்சி நிலை M15 அமெரிக்க அதிகாரிகளுடன் பின்யம் மொஹ்மத் சித்திரவதையில் உடந்தையாக இருந்தனர் என்ற முன்னைய தீர்ப்பை உறுதிபடுத்தி அவர் விடுவிக்கப்பட்ட பிரிட்டிஷ் மேன்முறையீடு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வந்துள்ளன. அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டும் நீதிமன்றம் ஒரு ஏழு பத்திகள் உடைய தீர்ப்பை சொற்களில் மாற்றி வெளியிட்டு, மொஹ்மத் நடத்தப்பட்ட விதம் "குறைந்த பட்சம் கொடூரம் எனக் கூறத்தக்க, மனிதாபிமானமற்ற, இழிந்த செயற்பாட்டை அமெரிக்க அதிகாரிகளால் பெற்றார்" என்ற முடிவு கொண்டதை வெளியிட்டது.

பிரிட்டனில் வசிப்பவரான பின்யம் மொஹ்மத் ஏப்ரல் 2002-ல் பாக்கிஸ்தானில் கைது செய்யப்பட்டு, பாக்கிஸ்தானில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். அமெரிக்கர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர் மொரோக்கோவிற்கு விமானத்தில் அனுப்பப்பட்டு, பின்னர் ஆப்கானிஸ்தானிற்கும் இறுதியில் குவாண்டநாமோ குடாவிற்கும் அனுப்பப்பட்டார். அங்கு பலமுறை பெப்ருவரி 2009-ல் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் விடுவிக்கப்படுமுன் பலமுறையும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். M15 ஆனது அமெரிக்கச் சித்திரவதையாளர்களுக்கு இவரைக் கேட்க வேண்டிய வினாக்கள் மற்றும் மற்றய தகவல்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

சித்திரவதை மற்றும் தவறாக நடத்துதல் என்பவை வாடிக்கையாக இருந்தது பற்றிய பெருகிய சான்றுகள் பிரிட்டனில் மட்டும் இல்லாமல், அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் பெரும் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த வழக்குகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முழு அரசியல் இயந்திரமும் இழிந்த குற்றங்களுக்குக் காரணம் என்றும் இதில் கொடுரமான சித்திரவதைகளும் அடங்கியிருந்தன என்பதைக் காட்டுகின்றன. சட்டவிரோத காலனித்துவ ஆக்கிரமிப்புப் போர்கள், அமெரிக்காவாலும் மற்றும் பிரிட்டனாலும் ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு எதிராகத் தொடரப்பட்டவற்றினால் இந்தச் செயல்கள் குற்றம் சார்ந்த கொள்கைகளின் அடிப்படை விளைவுகள் ஆகும்.

சட்டத்தின் உறுதியான வகைகள் இத்தகைய கொள்கைகளில் இருந்து வரவேண்டும். அவை முன்னைய ஜனநாயக வழிவகையில் இருந்து முழுவதும் முறித்த தன்மையை அடிப்படையாகக் கொண்டவை.

தன்னுடைய போர் நோக்கங்களைத் தொடர்வதற்காக புஷ் நிர்வாகம் ஜெனீவா உடன்படிக்கையில் அடங்கிய சர்வதேசச் சட்டத்தை நிராகரித்தது. குறிப்பாக மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கையில் போர்க் கைதிகளுக்கு மனிதாபிமானப் பாதுகாப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா இத்தகைய விதிகள் "சட்டவிரோத எதிரிப் போராளிகள்" என்று அழைக்கப்படுபவர்களுக்கு பொருந்தாது என்று கூறிவிட்டது.

ஆனால், பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசாங்கம், பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் அவருக்குப் பின் வந்த கோர்டன் பிரெளனின் கீழ் அத்தகைய சர்வதேச சட்டத்தை திமிர்த்தனமாக எதிர்த்து நிற்க முடியவில்லை. மாறாக வாஷிங்டனுடன் கூட்டாக நடத்திய குற்றங்களை மூடிமறைக்கும் முயற்சியில் முன்னணியில் தன்னை இருத்தி, குற்றங்களுக்கு விடையிறுக்க வேண்டியதற்கு பொறுப்பு உடையவர்களை பாதுகாக்க முற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அரசியல் ஸ்தாபனங்கள் குற்றம் நிறைந்த செயல்கள், இழிவானவை ஆகியவற்றில் ஆழ்ந்துள்ளன. மற்றய முதலாளித்துவ நாடுகளில் உள்ள இதே போன்ற தலைமையும் தொடர்பு கொண்டுள்ளன. ஆக்கிரமிப்புப் போரில் அவர்கள் செய்துள்ள குற்றங்கள் மற்றும் சித்திரவதைகள் நடவடிக்கையை மறைத்து, குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் அவர்களுடைய முயற்சியால் அதிகரித்துள்ளன.

ஒபாமா நிர்வாகமும் இந்த மூடிமறைத்தலில் முழுத் தொடர்பைக் கொண்டுள்ளது. பதவி ஏற்றதில் இருந்து ஒபாமா சித்திரவதைக்கு இசைவு கொடுத்த புஷ் அதிகாரிகளை குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதை தடுத்துள்ளார். இதுவே ஜெனீவா உடன்படிக்கை இன்னும் பல சர்வதேச சட்டங்களை மீறுதல் ஆகும். அவை போர்க் குற்றம் செய்தவர்கள்மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கங்கள்மீது கடமையச் சுமத்தியுள்ளன.

பின்யம் மொஹ்மத் வழக்கைப் பொறுத்தவரை, ஒபாமா நிர்வாகம் இங்கிலாந்துடன் அமெரிக்கத் தகவல் பறிமாற்றம் பகிரங்கமாக்கப்படுமானால் பிரிட்டனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது. இது பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திற்கு தேசியப்பாதுகாப்பு நலன்களுக்கு இரகசியம் முக்கியம் என்ற வாதத்தை முன்வைக்க தளமாயிற்று.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வக்கீல் ஒரு நீதிபதியுடன் இரகசியத் தொடர்பு கொண்டு மொஹ்மத் சித்திரவதை பற்றி எம்.15 பங்கைக் குறைகூறிய ஒரு பத்தி பெரிதும் மாற்றப்படுவதற்கு ஈடுபட்டார் என்று தெரியவருகிறது. இங்கிலாந்தின் சட்ட நீதிமன்றங்களில் இத்தகைய இரகசியத் தொடர்பு குறைந்தது 400 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.

முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒரு முக்கிய பழமைவாதக் கட்டுரையாளர் Bruce Anderson, Independent ஏட்டில், தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கக் கட்டுரை பற்றி "சித்திரதை செய்யும் உரிமை மட்டும் கொண்டிருக்கவில்லை, நாம் ஒரு கடமையையும் கொண்டுள்ளோம்" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.

சித்திரவதையைப் பயன்படுத்துவது பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக மட்டும் இல்லாமல் அவர்களுடைய குடும்பங்களுக்கு எதிராகவும் பயன்படுத்துவதை ஆண்டர்சன் ஆதரித்துள்ளார். "ஒரு அரக்கத்தன அறிவார்ந்த முறை மாற்றத்தால் நாம் ஒரு பயங்கரவாதியைக் கைப்பற்றியுள்ளோம், ஆனால் அவன் கடினச் சித்தம் உடையவன். நாளடைவில் மனம் தளர்ந்து ஒப்புக் கொள்ளுவான் என்று நம்புவதற்கு இல்லை. அவனுடைய மனைவி, குழந்தைகளையும் கைப்பற்ற வேண்டும்." என்ற விதத்தில் அவர் வாதத்தை எழுப்புகிறார்.

அத்தகைய சூழ்நிலையில், "ஒரே ஒரு விடைதான் உள்ளது என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்....மனைவி, குழந்தைகளையும் சித்திரவதைப்படுத்துக." என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்பின் ஆண்டர்சன் முறையீட்டு நீதிமன்றத்தையும் தாக்கினார்: "ஒரு முழுப் பாதுகாப்புப் பிரிவையும் தாக்கியுள்ளது. அதன் அதிகாரிகள் வாடிக்கையாகக் காட்டும் பெரும் தைரியத்தை உணரவில்லை--உண்மையில் நீதிமன்ற அறையின் நயமான சொற்களுக்கு அப்பால் எந்த உணர்வையும் காட்டவில்லை."

இத்தகைய கருத்துக்கள் எந்த அளவிற்கு ஆளும் வர்க்கத்தின் பரந்த தட்டுக்கள் சட்டத்தின் ஆட்சி நெறியைக் கைவிட்டுவிட்டன என்பதை வெளிப்படுத்துகின்றன. ஜனநாயக நெறிகள் பொதுவாக அகற்றப்பட வேண்டும் என்ற சிந்தனையைத் தவிர இத்தகைய சித்திரவதை மற்றய கொடூர வழக்கங்களுக்கு ஆதரவு என்பதைத் தவிர இந்த அப்பட்டமான வாதிடலின் போதிய விளைவுகள் என்ன? "பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களுக்கு" எதிராக சித்திரவதையில் ஈடுபடுவது என்பது சமூக, அரசியல் அதிருப்தி எழுச்சியினால் அச்சுறுத்தப்படக்கூடும் என்று உணரும் ஒரு உயரடுக்கு அரசாங்க வன்முறையையைப் பரந்து கொண்டுவருவதற்கு ஒரு முன்னோடிதான்.

இந்த அரசியல் ஆபத்து விடையிறுப்பு இல்லாமல் விட்டுவிடப்பட முடியாதது. எந்த பயமும் இல்லாமல் இத்தகைய குற்றங்களை செய்யலாம் என்ற கருத்தை ஏற்பது அரசியல் அளவில் இன்னும் அப்பட்டமான அடக்குமுறைக்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கத்தை ஆயுதமிழக்கச்செய்துவிடும்.

இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஜேர்மனிய நாஜி ஆட்சியின் தலைவர்கள் சிலர் நீதியின் முன் நுாரெம்பேர்க் போர்க்குற்றங்கள் நீதிமன்றத்தின் நிறுத்தப்பட்டபோது, அதன் தீர்ப்பின் அடிப்படையில் விளைந்தவைதான் நுாரெம்பேர்க் கொள்கைகள். இது சர்வதேச சட்டத்துடன் பிணைந்துள்ளது. ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் போர்க் குற்றங்களுக்கான திட்டம் ஆகியவையும் இதில் அடங்கும்.

2006-ம் ஆண்டு நுாரெம்பேர்க் வழக்குகளில் ஒரு முன்னாள் தலைமை அரசாங்க வக்கீல் Benjamin Ferencz "அமெரிக்கா மனித குலத்திற்கு எதிராக தலையாய குற்றம் செய்துள்ளது, ஒரு இறைமை பெற்ற நாட்டிற்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரில் என்ற துவக்க அடிப்படை வழக்கு தொடுக்கப்படலாம்" என்றார்.

நுாரெம்பேர்க் விசாரணையில் ஜேர்மனிய அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் முக்கிய கூறுபாடு சிறைக் கைதிகளைத் தவறாக நடத்தியது என்பதாகும். அமெரிக்கா, ஐ.நா. உடன்படிக்கை மற்றும் ஐ.நா.வின் சித்திரவதை பற்றிய விதிகள் ஆகியவற்றையும் மீறியுள்ளது.

போர்க் குற்றம் செய்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும். இதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், முன்னாள் துணை ஜனாதிபதி டிக் சேனே, முன்னாள் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயர், முன்னாள் M15 இயக்குனர் தளபதி எலிசா மன்னிங்காம்-புலர் மற்றும் M15 உளவு-எதிர்ப் பிரிவின் தலைவர், இப்பொழுது M15 தலைமை இயக்குனர் ஜோனதன் ஈவான்ஸ் ஆகியோர் அடங்குவர்.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்கள் ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஒரு இன்றியமையாத பகுதியாக சர்வதேச அளவில் அணிதிரள வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையாக இருக்கிறது.