World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The capitulation of the German pilots' union

ஜேர்மனிய விமானிகள் தொழிற்சங்கம் சரணடைகின்றது

Peter Schwarz
24 February 2010

Use this version to print | Send feedback

நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தம் என முதலில் திட்டமிட்டிருந்த Lufthansa விமானிகள் தங்கள் நடவடிக்கையை ஒரு நாளில் முடித்துக் கொண்டனர். திங்களன்று விமானிகள் தொழிற்சங்கமான Cockpit நிர்வாகம் செய்தி ஊடகம் மற்றும் ஜேர்மனிய அரசாங்கம் ஆகியவற்றின் இணைந்த அழுத்தத்திற்கு சரணடைந்தது. பிராங்பேர்ட் நகர தொழில்துறை நீதிமன்றத்தின் முன் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாகவும் வேலைநிறுத்தத்தை மார்ச் 8 வரை எந்த முன்னிபந்தனைகளும் இல்லாமல் முடிப்பதாகவும் உறுதியளித்தது.

இதன் பொருள் Cockpit ஆரம்ப நோக்கமான வேலைநிறுத்தத்தை கைவிட்டுவிட்டது என்பதாகும். இப்பொழுது தீர்க்கப்பட வேண்டிய ஒரே பிரச்சினை ஜேர்மனி பகுதிக்குள் உள்ளே விமானிகளின் ஊதியம்தான். வேலைநிறுத்தத்தின் நோக்கமான நிறுவனத்தின் குறைவூதிய துணை நிறுவனங்களுக்கு பணிகளை வழங்குவதை தடுத்தல் ஒதுக்கப்பட்டுவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக Cockpit இன் சரணடைதலுக்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. எதிர்பாராவிதமாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நிறுவனங்களை நேரடியாக எதிர்கொள்ளும் விதத்தில் ஐரோப்பா முழுவதும் பரந்து அச்சுறுத்தும் இயக்கமாக விமானிகள் தொழிற்சங்கம் வெளிப்பட்டது. அத்தகைய இயக்கத்திற்கு தயாராகவோ, ஆதரவு கொடுக்கவோ சங்கம் உறுதிகொள்ளவில்லை. எனவேதான் அரசாங்கமும் பிராங்பேர்ட் தொழில்துறை நீதிமன்றமும் உடனடியாக பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும் என்று கூறிய முன் முயற்சியை ஆர்வத்துடன் பற்றிக்கொண்டது.

ஜேர்மனிய தொழிற்துறை சட்டத்தை மீறிய விதத்தில், மத்திய போக்குவரத்து மந்திரி பீட்டர் ரம்சவர்(CSU) கடந்த வார இறுதியில் Lufthansa பூசலில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு கோரினார். இதே கோரிக்கை திங்களன்று பிராங்க்பேர்ட் நீதிமன்றத்திலும் வைக்கப்பட்டது. அங்குத்தான் Lufthansa வேலைநிறுத்தத்திற்கு எதிராக இடைக்கால இழப்பீட்டுத் தொகைக்காக வழக்குப்பதிவு செய்திருந்தது.

வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை தெளிவாக மீறும் வகையில் வேலைநிறுத்தத்தை தடைக்கு உட்படுத்த நீதிபதி தயங்கினார். மாறாக அவ்வம்மையார் இரு தரப்பினரையும் தாங்களாகவே பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புமாறு வலியுறுத்தினார்.

இந்த வேண்டுகோளை Cockpit உடனடியாக ஏற்றது. ஒரு செய்தி அறிக்கையில் தொழிற்சங்கம் "முன்னிபந்தனைகள் ஏதுமின்றி பேச்சுவார்த்தைகள் தொடர்வதை அது வரவேற்பதாகவும், போக்குவரத்து மந்திரி டாக்டர் பீட்டர் ரமசவரின் மத்தியஸ்த முயற்சிகளையும் வரவேற்பதாகவும்" கூறியது.

விமானிகள் தொழிற்சங்கம் நடவடிக்கையை நிறுத்தியபோது மிகவலுவான நிலைமையில் இருந்தனர். அநேகமாக 100 சதவிகித விமானிகளும் வெளிநடப்பு செய்திருந்தனர். பாதிக்கும் மேலான Lufthansa பயணங்கள் திங்களன்று இரத்து செய்யப்பட்டன. எஞ்சிய பயணங்களை Lufthansa நடாத்தமுடிந்ததற்கு காரணம் மற்ற விமான நிறுவனங்களில் இருந்து கணிசமான செலவில் சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்து, விமானிகளாக பயிற்சி பெற்ற நிர்வாக உறுப்பினர்களை கொண்டு ஓட்ட முடிந்தது. வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சி நிறுவனத்தின்மீது கடுமையான நிதியப் பாதிப்பை கொடுத்திருக்கும்.

இன்னும் முக்கியமான விதத்தில், விமானிகள் வேலைநிறுத்தம் விமானத்தொழிலை விமானப் பணியாளரின் இழப்பில் ஐரோப்பா முழுவதும் மறுகட்டமைக்கும் முயற்சிகளுக்கு எதிரான எல்லை கடந்த நடவடிக்கைகளில் இது முதலாவது ஆகும்.

திங்களன்று Lufthansa வின் 16,000 விமான பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Independent Flight Attendants Organization (UFO) உடனடியாக அவர்களுடைய பணிநிலைகள், ஊதியங்களைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தாவிட்டால் அடையாள வேலைநிறுத்தங்களை தொடங்குவதாக அச்சுறுத்தியது.

இங்கிலாந்தில் பிரிட்டஷ் ஏயர்வேஸின் 12,000 விமான பணியாளர்களில் 80 சதவிகிதத்தினர் அதே தினத்தில் அச்சுறுத்தப்பட்ட குறைப்புக்களுக்கு எதிராக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் செவ்வாயன்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறை ஒன்றாக்கப்படுவதால் ஏற்படும் பணி நிலைமைகள், வேலை இழப்புக்களுக்கு எதிராக நான்கு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

சனிக்கிழமையன்று ஏயர் பிரான்சின் விமானிகள் சீரமைப்பு நடவடிக்கைகள், வேலைக் குறைப்புக்கள் இவற்றிற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். கிரேக்கத்தில் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நடக்கும் பொது வேலைநிறுத்தம் புதனன்று நாட்டின் முழு விமானப் போக்குவரத்தையும் முடக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.

ஜேர்மன் செய்தி ஊடகம் Lufthansa விமானிகளை சலுகை பெற்ற குழு, தங்கள் ஆடம்பர ஊதியங்களை, வசதியான நிலைமைகளை மற்றவர்களின் இழப்பில் காக்க விரும்புபவர்கள் என்று அவதூறுத் தாக்குதலில் இறங்கியுள்ளது. உண்மையில் நிலைமையே வேறுதான். விமானிகளின் வேலைநிறுத்தம் விமானத் தொழிலில் ஏற்படும் மாறுதலைத் தடுக்கும் முயற்சியாகும். அது முன்பு ஒப்புமையில் பாதுகாப்பான, அதிக ஊதிய வேலைகளை கொடுத்தது. இப்பொழுது குறைவூதிய, மோசப்பணி நிலை மையமாக மாற்றப்பட உள்ளது.

இத்தகைய மாற்றம் அமெரிக்காவில் நீண்ட நாள் முன்பே ஏற்பட்டுவிட்டது. இதற்கான முன்னிபந்தனை பல கடுமையான வேலைநிறுத்தங்கள் தோல்வி அடைந்தது, மற்றும் அரசாங்கத்தால் அடக்கப்பட்டு, தொழிற்சங்கங்களால் நாசப்படுத்தப்பட்ட தொழில்துறை நடவடிக்கைகள்தான்.

இதேபோன்ற மாற்றம்தான் இப்பொழுது ஐரோப்பாவிலும் முழுவீச்சில் உள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழு விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு ஊக்கும் கொடுத்து வருகிறது. பல குறைவூதிய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை முக்கிய விமான நிறுவனங்களில் ஊதியங்கள், நிலைமைகள் ஆகியவற்றை தாக்குவதற்கு நெம்புகோல் போல் பயன்படுகின்றன. இதற்கிடையில் Ryanair, Easyjet, Air Berlin போன்ற நிறுவனங்கள் கண்டத்தின் பெரிய விமான நிறுவனங்களாக வெளிப்பட்டுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி விமானத் தொழிலில் கட்டணப் போட்டியை தீவிரப்படுத்தத்தான் உதவியுள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது, பல நிறுவனங்கள் முன்பு அதிக கட்டணம் இருந்த வணிக வகுப்புக்களை தங்கள் ஊழியர்களுக்கு அளித்தவை இப்பொழுது குறைவூதிய விமானங்களை நாடுகின்றன. விமான நிறுவனங்கள் பலமுறையும் புதிய சுற்று ஊதிய வெட்டுக்களை கொண்டுவந்துள்ளன.

2011 ஆண்டு முடிவதற்குள் Lufthansa தன் செலவுகளை ஆண்டிற்கு ஒரு பில்லியன் என குறைக்கப்பார்ப்பதுடன் பணியில் இருப்பவர்களையும் 5 சதவிகிதம் பயணிகள் பிரிவிலும், சரக்குப்பிரிவில் 10 சதவிகிதமும் குறைக்கப்பார்க்கிறது. பிரிட்டிஷ் ஏயர்வேஸ் தன்னுடைய 13,000 விமான பயண ஊழியர்களில் 1,700 பதவிகளைக் குறைக்கப் பார்க்கிறது. ஏயர் பிரான்ஸ் அதன் ஊழியர்களில் 4.4 சதவிகிதத்தை ஆண்டு ஒன்றிற்கு குறைக்கும் வகையில் காலி இடங்களை நிரப்பாமலும், தாங்களாவே வேலையை விட்டு நீங்க 1,700 ஊழியர்களுக்கு ஊக்கமும் கொடுக்கும் திட்டத்தையும் கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் இத்தகைய தாக்குதலை முற்றிலும் எதிர்க்க முடியாமல் உள்ளன. முதலாளித்துவ இலாபமுறை ஆணையிடும் நிபந்தனைகளை அவை ஏற்கின்றன. இதையொட்டி நிறுவனங்கள் புதிய சுற்றுக்கள் குறைப்பைக் காண, பங்குதாரர்கள் கோரிக்கையை திருப்தி செய்யும் விதத்தில், முற்படுகின்றன. தொழிற்சங்கங்கள் தங்கள் அரசாங்கங்கள், நிர்வாகங்களுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்து சர்வதேசப் போட்டியின் எதிரே தேசிய பொருளாதாரத்தின் இலாபத்தை பெருக்குவதில் ஆதரவு கொடுக்கின்றனர்.

இவை நிர்வாகங்களுடனும் அரசாங்கத்துடனும் தங்கள் ஒத்துழைப்பிற்கு தடையாக இருக்கும் எவ்வித தொழிலாளர் பிரச்சனைகளுக்கும் விரோதமாக உள்ளன. எனவேதான் ஜேர்மனியின் மிகப் பெரிய பொதுத்துறை தொழிற்சங்கமும் Lufthansaவின் தரைப்பகுதி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Verdi பகிரங்கமாக விமானிகளைத் தாக்கியது.

ஒரு ஜேர்மன் நாளேட்டினால் வினவப்பட்டதற்கு Verdi செய்தித்தொடர்பாளர் கொர்னேலிய ஹாஸ் வேலைநிறுத்தம் செய்யும் விமானிகளுடன் தங்கள் ஒன்றுமையை அறிவிக்க மறுத்துவிட்டார். Junge Welt பத்திரிகையிடம் இப்பெண்மணி கூறியது: "இதைப்பற்றிப் பேச வேண்டும் என்றால், விமானிகள் தங்களை பற்றித்தான் கவலைப்படுகின்றனர்."; பின்னர் Verdiதான் விமானத்துறை ஊழியர்களின் ஒரே பிரதிநிதி என்ற கூற்றை நியாயப்படுத்த முற்பட்டார். "இத்தகையை மோதல்களில் ஒருவேளை Lufthansa நிறுவனத்தில் மூன்று தொழிற்சங்கங்களை தொடர்புபடுத்துவது புத்திசாலித்தனமான மூபோலாயம் அல்ல என்று உணர்ந்திருக்கக்கூடும்."

Cockpitஇன் முன்னோக்கு அடிப்படையில் Verdiயில் இருந்து வேறுபட்டிருக்கவில்லை. சிறப்புத் துறையின் தொழிற்சங்கம் என்ற முறையில் Verdiயின் கூட்டுழைப்புவாத பார்வையை பகிர்ந்துகொண்டு விமானிகள் பிரச்சினையை மட்டுப்படுத்தப்பட்ட, தேசிய நிலைப்பாட்டில் இருந்து நோக்குகின்றது.

Cockpit இன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தும் தோமஸ் வான் ஸ்டுர்ம் Süddeutsche Zeitung பத்திரிகைக்கு வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரியும். "போட்டித்தன்மை" என்பதை ஸ்டுர்ம் வலியுறுத்தி, Cockpit ஒப்பந்த உடன்பாடுகள் "நவீனப்படுத்துவது" என்பதை கொள்கையளவில் விரைவில் ஒப்புக் கொண்டது என்றார். ஆனால், "இரு புறமும் உடன்பாட்டின்மூலம் இதைக் காண வேண்டும், Lufthansa ஒப்பந்தத்தை இனி ஏற்க முடியாது என்று கூறுவதால் அல்ல."

தற்போதுள்ள ஒப்பந்தத்தின் உண்மைத்தன்மையை "நீதித்துறை மூலம் சரிபார்க்க" தான் அனுமதிக்கத் தயார் என்றும், அதுவரை "போர்நிறுத்தத்திற்கு" உடன்படத்தயார் என்றும் கூறினார். இந்த முடிவை பிராங்பேர்ட் தொழில்துறை நீதிமன்றம் உடனே ஒப்புக் கொண்டது.

விமான ஓட்டிகள் வேலைநிறுத்தம் பற்றிய சர்வதேச பிரதிபலிப்பை Cockpit கருத்தில் கொள்ளவுமில்லை, விரும்பவும் இல்லை. இது அதிர்ச்சியுடன் விடையிறுக்கும் வகையில் நடவடிக்கையை உடனே நிறுத்திவிட்டது.

இப்போக்கில் இருந்து இரு முக்கிய படிப்பினைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றைக் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்திடையே சர்வதேச அளவில் ஐக்கியம் தேவை. தனிப்பட்ட நிறுவனம் அல்லது தேசிய நாட்டின் போட்டித் தேவைகளுக்காக தொழிலாளர்களின் நலன்களை அடிபணியச்செய்யும் தொழிற்சங்கங்களின் முன்னோக்கு முற்றிலும் பிற்போக்குத்தனம் ஆகும்.

இரண்டாவதாக, சமூக நலன்கள் பாதுகாப்பு முதலாளித்துவ முறையின் அஸ்திவாரங்களுக்கு சவால் விடும் அரசியல் முன்னோக்கு ஒன்றைத் தளமாகக் கொள்வதின் மூலம்தான் செயல்படுத்தப்பட முடியும். தற்போதைய சமூக வீழ்ச்சி பெருகியிருப்பது, மற்றும் கெளரவமான வருமானங்களை பாதுகாப்பது என்பதற்கு பெருவணிகத்தின் இலாப நோக்கிற்கு என்று இல்லாமல் சமூக தேவைகளை திருப்தி செய்யும் அடிப்படையில் முழுப் பொருளாதாரத்தை மறுசீரமைத்தல் ஒன்றுதான் ஒரே வழியாகும். இதற்காக ஒரு சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை அடித்தளமாக கொண்ட ஒரு புதிய தொழிலாளர் கட்சியை கட்டுவது அவசியமாகும்.