World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The social situation in Greece

கிரேக்கத்தின் சமூக நிலைமை

By Marcus Salzmann
25 February 2010

Use this version to print | Send feedback

கிரேக்கில் தற்பொழுது இருக்கும் வரவு-செலவு பற்றாக்குறையை அதன் 13 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதத்திற்கும் குறைவாகக் கொண்டுவரும் இலக்கை ஒட்டி ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்கு மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. கிரேக்க மக்களின் பரந்த பிரிவுகள் அரசாங்கம் அறிவித்துள்ள குறைப்புத் திட்டங்களை எதிர்கொள்ளும் வகையில் தெருக்களுக்கு வந்து நேற்று வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். தங்கள் பங்கிற்கு முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களானது ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக கட்சி நிர்வாகத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களையும் அரசாங்கத்திற்கு பாதிப்பு இல்லாமல் வேறுவிதத்தில் திசைதிருப்பப் பார்க்கின்றன.

நேற்றைய வேலைநிறுத்தத்தில் முக்கியமானவர்கள் பொதுத்துறை ஊழியர்களாவார்கள். அரசாங்கக் வெட்டுக்களால் இவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பை அடைவார்கள். நேற்று அவர்களுடன் உதவித் தொகைகள் வெட்டுக்களை எதிர்க்கும் பல விவசாயிகளும் சேர்ந்து கொண்டனர். அத்தகைய வெட்டுக்களானது அவர்களுக்கு பிழைப்பு இல்லாமல் செய்துவிடும்.

எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் ஐரோப்பிய அரசியல்வாதிகள், வணிகர்கள் மற்றும் செய்தி ஊடகப் பிரதிநிதிகள் திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்கள் இரக்கமின்றி செயற்ப்படுத்தப்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். சில இடங்களில் இருந்து அரசாங்கத் திட்டம் மிருதுவாக உள்ளது என்ற விமர்சனம் கூட வந்துள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான Jean-Claude Trichet, அதன் மிகப்பெரிய வரவு-செலவுப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளின் திறன் பற்றி தன் முயற்சிகளுக்கு கிரேக்கம் வலுக் கொடுக்க வேண்டும் என்றார். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் Maastricht அளவுகோல்களை குறுகிய காலத்தில் சந்திக்கப் போதாதவை என்று Trichet கருதுகிறார். இன்னும் கடினப் போக்கு வேண்டும் என்று இவர் வலியுறுத்துகிறார்.

மூனிச்சை தளமாகக் கொண்ட Ifo Institute for Economic Research-ன் தலைவர் Hans Werner Sinn, "உண்மையில் வலியைத் தரக்கூடிய" நடவடிக்கைகள் வேண்டும் என்றார், கீலில் இருக்கும் Institute for World Economy- யின் துணைத் தலைவர் Rolf Langhammer நாட்டின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு உண்மை ஊதியத்தரம் குறைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜேர்மனிய அரசாங்க நிதிச் செயலர் Jorg Asmussen, " கிரேக்கத்தால் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் வேண்டும் என்ற உறுதியான கருத்தை நாங்கள் கொண்டுள்ளோம்" என்று அறிவித்தார். Amussen கருத்துப்படி, அயர்லாந்து (அதுவும் யூரோவைத்தான் நாணயமாகப் பயன்படுத்துகிறது) மற்றும் லட்வியா (அது யூரோவைப் பயன்படுத்தவில்லை) ஆகியவற்றிற்கு எதிராக ஒப்பிடப்பட வேண்டும் -- இரு நாடுகளும் தம் கடன் சுமைகளைக் குறைக்க மிகக் கடுமையான குறைப்புக்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டன.

இந்த முறையீடுகள் செய்தி ஊடகத்திலும் எதிரொலிக்கின்றன. மக்கள் மீது பெரும் தாக்குதல்கள் வேண்டும் என்று The Nürnberger Nachrichten வலியுறுத்துகிறது. "இல்லை, இங்கு ஒரு வழிதான் உள்ளது. யூரோப் பங்காளியை நல்ல பாதையில் கொண்டுவருவதற்கு பெரியளவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் ஓய்வூதிய முறைகளில் குறைப்புக்களைத் தவிர, ஏராளமான அரசாங்க ஊழியர்களை குறைப்பதும் முக்கியமானது ஆகும். உண்மையான ஊதியங்களில் குறைப்பு வேண்டும், வரிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் மற்றும் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்."

இதன்பின் இழிந்த முறையில் செய்தி ஊடகம் கிரேக்க மக்கள்தான் கடன் நெருக்கடிக்கு பொறுப்பு என்று கூறுகிறது. பல பேட்டிகளும் கருத்துக்களும், "கிரேக்கம் அதன் சக்திக்கு மீறி வாழ்ந்துள்ளது", "இப்பொழுது வயிற்றை இறுக்க வேண்டும்" என்ற குறிப்புக்களுடன் முடிவுறுகின்றன.

ஊதியங்கள் மற்றும் சமூகத் தரங்களைப் பொறுத்தவரை, உண்மையில் கிரேக்கம் ஐரோப்பாவில் மிகக் குறைந்த ஊதியம் பெறும் நாடுகளில் ஒன்றாகத்தான் உள்ளது.

மக்களில் பெரும்பாலானவர்களின் சமூக நிலைமை ஏற்கனவே தெளிவாக கடந்த ஆண்டுகளில் சரிந்துவிட்டது. உத்தியோகபூர்வ வேலையின்மை இப்பொழுது 18 சதவிகிதம் என்று உள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி கிரேக்கர்களில் 20 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். சமூக பொதுநல அமைப்புக்கள் இன்னும் அதிக உயர்ந்த அளவு வறுமையைத்தான் காட்டுகின்றன.

மிகப் பெரிய அரசாங்க ஓய்வூதிய நிதியங்களில் பதிவு செய்து கொண்டுள்ள ஓய்வூதியம் பெறுவோரில் 60 சதவிகிதத்தினர் மாதம் ஒன்றிற்கு 600 யூரோக்களுக்கு குறைவான பணத்தில் வாழ வேண்டும். பொதுத்துறையில் சராசரி ஊதியம் 1,200 யூரோவை ஒட்டித்தான் உள்ளது.

குறிப்பாக இளைஞர்களிடையே வேலையின்மை சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்து விட்டது. 1998-ல் 15-24 வயது இளைஞர்களில் 21 சதவிகிதத்தினர் வேலையின்றி இருந்தனர். 2009-ல் இந்த எண்ணிக்கை 27 சதவிகிதத்திற்கும் மேல் போய்விட்டது. வேலை கிடைக்கும் அதிருஷ்டம் உடைய இளைஞர்கள் சராசரி மாதத்திற்கு 700 யூரோக்களில் வாழும் தேவையில் உள்ளனர்.

பல பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்களிடையே வேலையின்மை ஒரு பிரச்சினை ஆகும். மருத்துவர்களின் நிலைமை இன்னும் மோசமாகும். உலக சுகாதார அமைப்பு கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள்படி, கிரேக்கம் இந்த வேலைத்துறையில் மிக அதிக வேலையின்மையைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் வாழ்க்கை செலவினங்களோ ஜேர்மனி போன்ற நாட்டுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது. அடிப்படை உணவுப் பொருட்களான பால், சீஸ், முட்டைகள் போன்றவை இரு மடங்கு அதிக விலையுள்ளவை. கிரேக்கத்தில் தொலைபேசிக் கட்டணங்கள் ஐரோப்பாவிலேயே மிக அதிகமானவற்றுள் ஒன்றாகும். வாழ்க்கைச் செலவு நிலை பிரதேசங்களுக்கு பிரதேசம் குறிப்பாக மாறுகிறது. கிரேக்கத்தின் பல தீவுகளில் அதிக போக்குவரத்துச் செலவுகளால் விலைவாசி அதிகம் ஆகும்.

கடந்த சில ஆண்டுகளில் வீட்டு வாடகைகளும் கணிசமாக உயர்ந்துவிட்டன. பெரிய நகரங்களில் இவை ஜேர்மனியுடன் ஒப்பிடத்தக்க விதத்தில் உள்ளன. கிராமப் பகுதிகளில் வாடகை குறைவு, ஆனால் வீடுகள் கிடைப்பதில்லை. பல வீட்டுச் சொந்தக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம் கொடுப்பதால் பற்றாக்குறை உள்ளது.

வாழ்க்கை செலவினங்களை பொறுத்தவரை, கிரேக்கத்தில் ஊதியத் தரங்கள் மற்றய மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு ஆகும்--இதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. தெசலோனிகியில் தொழிலாளர்கள் ஏதென்ஸ் ஊதியத்தில் கால் பங்கு குறைவாகத்தான் சம்பாதிக்கின்றனர். நாட்டின் மற்றய பகுதிகளில் கிட்டதட்ட 35 சதவிகிதம் குறைவு ஆகும்.

எழுத்தர் பணியில் உள்ளவர்கள் சராசரியாக ஜேர்மனியில் அவர்களைப்போல முழு நேரம் வேலை செய்பவர்கள் பெறும் ஊதியத்தில் 40 சதவிகிதத்தைத்தான் பெறுகின்றனர். யூரோ பகுதிக்குள்ளேயே இதைவிட ஊதியக் குறைவு போர்த்துக்கலில்தான் உள்ளது. ஒரு பகுதி நேர வேலை செய்யும் ஒரு தனிக் குடும்பத்திற்கு வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கப் போதாததாக உள்ளது.

சட்டபூர்வ குறைந்த பட்ச ஊதியம் கிட்டத்தட்ட 700 யூரோக்கள் ஆகும். அதே நேரத்தில் மிக அதிகமாக கிடைக்கும் துவக்க ஊதியம்1,000 யூரோக்கள் ஆகும். ஆனால் இது நிதித்துறையில் மட்டும்தான். ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கு குறைந்தளவு ஊதியமானது 680 யூரோக்கள், இவை இயந்திரப் பொறியியல் மற்றும் மின்சார, மின்னணுத் தொழில்களில் கொடுக்கப்படுகின்றன. மூன்று ஆண்டுகள் தொழிலில் அனுபவம் உடைய பொறியியல் வல்லுனர் மாதத்திற்கு மொத்தம் குறைந்தது 1,050 யூரோக்கள் சம்பாதிக்கிறார். கணணி programmer சராசரியாக 700 யூரோக்களையும், வெளிநாட்டு மொழி அறிந்த செயலாளர் 710 யூரோக்களையும், கணக்காளர் 770 யூரோக்களையும் மற்றும் கார்ச் சாரதி 715 யூரோக்களையும் பெறுவார்கள்.

பெரும்பாலான ஓய்வூதியங்கள் குறைந்தபட்ச ஊதியத்தைவிடக் குறைவு ஆகும். கடந்த சில ஆண்டுகளில் ஓய்வூதியப் பணம் அதிகம் உயராத நிலையில், அரசாங்கங்கள் பல முறையும் ஓய்வூதிய வயதை அதிகரித்து வந்துள்ளன. 1980 மற்றும் 1990- களில் பொதுப் பணி ஊழியர்கள் கிரேக்கத்தில் 50 வயதுக் கடைசியில் அல்லது 60 வயதில் ஓய்வு பெற்றனர். இன்று ஓய்வூதிய வயது 65 என்று உள்ளது. பாப்பாண்ட்ரூ அரசாங்கம் இதை இன்னும் அதிகமாக 67 என்று உயர்த்த விரும்புகிறது.

நாட்டின் சுகாதார முறையிலும் வெட்டுக்களை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது மோசமான நிலையில் உள்ளது. ஒரு தேசிய சுகாதாரப் பணி அமைப்பு (ESY) 1980- களில் தோற்றுவிக்கப்பட்டு, அனைவருக்கும் அடிப்படை சுகாதாரக் பாதுகாப்பை உறுதிபடுத்தியது. குறிப்பாக கிரேக்கத்தின் கிராமப்புறப் பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.

1990-களில் சமூக ஜனநாயக மற்றும் பழமைவாத அரசாங்கங்களானது அரசாங்கம் நடத்தும் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது. சில தெளிவற்ற பங்குச் சந்தை நடவடிக்கைகளில் பங்கு பெற விரும்பியது இதற்கு ஓரளவு காரணம் ஆகும். இதன் விளைவாக சுகாதார காப்பீட்டு முறை பெருகிய முறையில் பிரச்சினைகளை சந்ததித்தது. இவை ஊதியத் தேக்கங்களால் இன்னும் அதிகரித்தன. தற்பொழுது 5 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய விண்ணப்பங்கள் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களில் நிலுவையில் உள்ளன. அவை மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களால் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

சுகாதாரத்துறையில் பேரழிவு தரும் இந்த நிலை பரந்த ஊழலுக்கு வகை செய்தது. குறைந்த ஊதியங்கள் இணைப்பும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் என்று இன்னும் பணிக் காலியிடங்கள் அரசாங்க மருத்துவமனைகளில் நிரப்பப்படவில்லை அதன் அர்த்தம் இலஞ்சங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு சீக்கிரமாக நாள் குறிக்க விரும்பும் நோயாளிகள் மருத்துவர்களுக்கு "Fakelaki" எனப்படும் ரொக்கம் இருக்கும் பையைக் கொடுக்க வேண்டும்.

இளம் மருத்துவர்கள், இத்தகைய அறம் பிறழ்ந்த வழக்கங்களுக்கு எதிராகப் பேசுபவர்கள் அல்லது அத்தகைய பணத்தை நிராகரிப்பவர்கள் தங்கள் சக ஊழியர்களால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர், அல்லது அச்சுறுத்தப்படுகின்றனர். பிந்தையவர்கள் இதை ஒரு முக்கியமான ஊதியத்திற்கு துணையாகக் கிடைக்கும் வருமானம் என்று நினைக்கின்றனர். "ஒரு பொது மருத்துவமனையில் குழந்தை பிறப்பது என்பது, உதாரணமாக, 1000 யூரோக்கள் இலஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும்" என்று Goethe Institute- ன் ஏதென்ஸ் அலுவலகத்தின் தலைவர் Ellen Katja Jaeckel கிரேக்கத்தில் எதிர்ப்புக்கள் பற்றிய 2008-ம் ஆண்டு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.

Zachos Kamenids உம் இதே அனுபவத்தைத்தான் பெற்றுக்கொண்டார். அவர் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான தெசலோனிகிக்கு அருகில் குழாய்கள் பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பலரைப் போல் இவரும் பெருகிய சமுதாயச் சரிவைக் குறிப்பிடுகிறார். "இங்கு பெரும்பாலான மக்கள் 600, 700 யூரோக்களுக்கு இடையே பெறுகின்றனர்" என்றார் அவர். அரசாங்கத்திடம் இருந்து அவருடைய மூன்று சிறு குழந்தைகளுக்கு மாதம் 250 யூரோக்களைப் பெறுகிறார். இவருடைய மனைவி கடைசிக் குழந்தை பேறுகால நேரத்தில் ஒரு தனியார் மருத்துவருக்கு ultrasound- ற்காக 140 யூரோக்கள் கொடுக்க வேண்டியிருந்தது. தெசலோனிகியின் அரசாங்க மருத்துவமனைகளில் இதற்கான கருவிகள் இல்லை.

அதே நேரத்தில் ஊழல் சுகாதாரத்துறையுடன் நின்றுவிடவில்லை. லீப்சிக் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியர் Spiros Paraskewopoulos, ஒரு சராசரி கிரேக்கக் குடும்பம் ஆண்டு ஒன்றிற்கு 1,600 யூரோக்களை இலஞ்சமாகக் கொடுக்கிறது என்று மதிப்பிட்டுள்ளார்.