World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish unions offer meek protests against pension reforms

ஸ்பெயினின் தொழிற்சங்கங்கள் ஓய்வூதியச்சீர்திருத்தங்களுக்கு எதிராக அமைதியான எதிர்ப்புக்களை காட்டுகின்றன

By Paul Mitchell, Vicky Short and Tom Eley
26 February 2010

Use this version to print | Send feedback

ஸ்பெயினின் தொழிலாளர்கள் இந்த வாரம் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) முன்வைத்த ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ஜபடேரோ ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67க்கு உயர்த்தவும், கடும் சிக்கன நடவடிக்கைகளை 50 பில்லியன் யூரோக்களுக்கு செயல்படுத்தவும், பொதுத்துறை ஊழியர் நியமனத்தில் தேக்கமும் மதிப்புக் கூட்டு விற்பனை வரியில் (VAT) உயர்த்தவும் விரும்புகிறார்.

PSOE மற்றும் அதன் பின் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நிதியம் ஆகியவை ஸ்பெயின் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பாவிலேயே கடுமையான நிலையில் உள்ளவற்றில் ஒன்றான நாட்டின் நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. ஸ்பெயினின் பற்றாக்குறை 2013க்குள் 2014ல் இருந்த 11.4 சதவிகிதத்தில் இருந்து 3 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர். இந்த இலக்குகளை அடைவதற்கு, நிதிய அமைப்புக்கள் நாட்டை இலக்கு கொண்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் கிரேக்கத்துடன் ஏற்கனவே மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் இருக்கும் நாட்டில், ஐந்தில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், கடுமையான குறைப்புக்களை செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

ஸ்பெயினின் பொருளாதாரம் கடந்த தசாப்தத்தில் ஊகம் நிறைந்த வீடுகள் மதிப்பு ஏற்றத்தின் மூலம் விரைவில் வளர்ந்தது. இது நிதிய உயரடுக்கிற்கு ஆதாயம் கொடுத்தது. ஆனால் வீடுகள் துறையின் சரிவு வேலையின்மையை 20 சதவிகிதத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது யூரோப் பகுதியிலேயே இது மிக அதிகம் ஆகும். சமூக நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் ஜபடேரோ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த வேலைகள் வழங்கும் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக இது 100 பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு அதன் Fondo de Resconsturacion Ordenada Bancaria (FROB) மூலம் கொடுத்துள்ளது; விகித அளவில் உலகின் பிணை எடுப்பு பெற்ற பெரிய வங்கிகளில் இது ஒன்றாகும்.

இந்த வார ஆர்ப்பாட்டகளில் மக்கள் கூட்டம் பற்றி மதிப்பீடுகள் மாறுபட்டாக உள்ளன. இவை CCOO எனப்படும் தொழிலாளர்கள் குழுக்களால் அழைப்பு விடப்பட்டன. PSOE தொடர்புடைய பொதுத் தொழிலாளர்கள் சங்கத்துடன் இணைந்த விதத்தில் வழிநடத்தப்பட்டதுடன் மேலும் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியும் (PCD) சேர்ந்திருந்தது. தொழிற்சங்கங்கள் மாட்ரிட்டில் 70,000, பார்சிலோனாவில் 50,000, வாலென்ஸியாவில் 30,000 என்று ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர் என்று கூறுகின்றன.

பல கருத்துக்கள்படியும் எதிர்ப்புக்கள் மிகக் குறைவாகத்தான் இருந்தன. இவை ஸ்பெயினின் தொழிற்சங்கங்களின் "சரியும் செல்வாக்கை" சுட்டிக் காட்டின. ஒரு அறிக்கைப்படி அவை தொழிலாளர் பிரிவில் 16 சதவிகிதத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெறாதவர்கள் எனக் கூறப்படுபவர்கள் இளம் தொழிலாளர்கள் ஆவர். இவர்களுள் பாதி பேர் வேலைகளில் இல்லாதவர்களும், ஸ்பெனியின் குடியேறிய மக்களின் கூடுதலான அளவினருமாவர்.

தொழிற்சங்கங்கள் அடிமைத்தனமாக ஜபடேரோ அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன. எவ்விதமான எதிர்ப்புகள் தொடர்வதையும் கடினமாக்குகின்றனர். தொழிற்சங்கங்கள் வேண்டுமென்றே ஆர்ப்பாட்டங்களை அதிக ஊக்கம் இல்லாமல், அரசாங்கம் பற்றிய விமர்சனங்களை குறைந்தளவில் கூறின என்பதில் எந்த ஐயமும் கிடையாது.

நகரங்களுக்கு வெளியே எதிர்ப்புக்கள் வாரம் முழுவதும் அவ்வப்பொழுது நடந்தன. தலைநகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் வேலைநாள் முடியும் மாலை வரையில் நடக்கவில்லை. கோஷ அட்டைகளோ, பேச்சுகளோ ஜபடேரோவிற்கும் அவருடைய மந்திரிகளுக்கும் விரோதப் போக்கைக் காட்டவில்லை. மாறாக தொழிற்சங்கத் தலைவர்கள் Bank of Spain ஆளுனர் Miguel Angel Fernandez Ordonezக்கு எதிராக ஓய்வூதிய மாற்றங்களுக்கு அவர் கொடுக்கும் ஆதரவு மற்றும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும்போது ஏற்படும் செலவுகளைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் சந்தையில் மற்ற சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கூறியதற்காக முடிந்த வரை குறைகூறினர்.

UGT யின் பொதுச் செயலாளர் Candido Mendez "சமூக அமைதி ஒவ்வொருவருடைய சொத்து, பொறுப்பு.... நாம் அதை முறிக்கப்போவதில்லை, வருங்காலத்திலும் அவ்வாறு செய்யமாட்டோம், ஆனால் இது அரசாங்கத்தின் திட்டங்கள், நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்கும்" என்றார்.

CCOO வின் தலைவர் Ignacio Fernandez Toxo அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டங்கள் "தேவையற்றவை, நியாயமற்றவை" என்று அழைத்து, அரசாங்கம் "புத்திசாலித்தனமாக செயல்படவில்லை" என்றார். இது ஓய்வூதியங்களின் வருங்காலம் பற்றிய பொது எச்சரிக்கைக்கு அடையாளமாக இருக்கிறது, 1995 சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியச் சீர்திருத்தம் ஆகியவை பற்றிய அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான Toledo உடன்பாட்டை கேள்விக்குட்படுத்துகிறது என்றும் கூறினார்.

கிரேக்கத்தில் காணப்படுவது போல் வேலைநிறுத்தங்களுக்கு Toxo அழைப்பு விடவில்லை, PSOE யின் திட்டமிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அழைப்பு விடவில்லை. மாறாக அவர் தொழிற்சங்கம் அரசாங்கத்துடன் முன்கூட்டிய ஓய்வை முடிப்பதற்கு ஒத்துழைப்பைத்தரும் என்று அறிவித்தார். "இந்த நாட்டில் ஒரு பண்பாட்டுப் பிரச்சினை உண்டு. மக்கள் 54 வயதில் ஓய்வூதியம் பெறுவது மோசம் என்ற உணர்வை நாம் அடைய வேண்டும்" என்று அவர் கூறினார்.

CCOO, UGT தலைவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டவர்கள் PCE எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் Jose Luis, Centella, United Left (IU) வின் தலைவர் Cayo Laro மற்றும் முன்னாள் IU தலைவர் Gaspar Llamazres ஆவர்.

PSOE இன் தாக்குதல்களுக்கு Cayo Laroவின் விடையிறுப்பு "அரசாங்கம் சமூக, அரசியல்ரீதியாக மீண்டும் இடது நோக்கிய திருப்பத்தை செய்வதற்கு" மக்களைத் அணிதிரட்டுவது தேவை என்று அறிவித்ததுதான்.

ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பு தொழில்துறை மந்திரி Celestino Corbacho அரசாங்கம் ஓய்வூதிய திட்டங்களை திரும்பப் பெற தயாரில்லை, "சமூகத்தின் எதிர்கொள்ளல் இதற்கு எதிராக வலுவாக இருந்தாலும்" என்று அறிவித்தார். மேலும் அரசாங்கம் நிதி பெறும் நிறுவனங்கள் குறிப்பாக மக்கள் முன்கூட்டி ஓய்வூயம் பெறுவதை நிறுத்த விரும்புகிறது என்றார்.

"அரசாங்கம் அதன் திட்டத்தைத் திரும்பப் பெறாது. இந்த விவாதம் தேவைதான்" என்று அவர் அறிவித்தார். உலகமே "எப்படி ஸ்பெயினின் சமூகப் பாதுகாப்புச் சீர்திருத்தங்களின் போக்கு இருக்கப் போகிறது என்பதை அக்கறையுடன் கண்காணிக்கிறது" என்றார் அவர்.

உண்மையில் உலக நிதியம் ஆர்ப்பாட்டங்கள்மீது கவனத்தைக் காட்டியது. "எதிர்ப்பின் அளவு, சோசலிச பிரதம மந்திரி ஜோஸே லூயிஸ் ரோட்ரிக்ஸ் ஜபடேரோவிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நட்த்தும் முதல் எதிர்ப்பு சர்வதேச முதலீட்டாளர்களால் அரசாங்கம் ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67 க்கு உயர்த்துவது, 50 பில்லியன் கடும் சிக்கன நடவடிக்கைகளை எடுப்பது இவற்றிற்கு எதிராக வரும் சமூக சீற்றத்தை கட்டுப்படுத்த முடிகிறதா என்பதை கண்காணிக்கப்படுகிறது" என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.

ஸ்பெயினின் ஆளும் வர்க்கம் தொழிற்சங்கங்களை பற்றி நன்கு அறிந்துள்ளது, அவை நிதிய மூலதனம் ஆணையிடும் குறைப்புக்களைச் செயல்படுத்த பயன்படுத்தப்படலாம் என்று நம்புகிறது.

ஜபடேரோவிற்கு ஆதரவு கொடுக்கும் முக்கிய நாளேடான El Pais, அரசாங்கம் தொழிற்சங்க ஒத்துழைப்புடன் சீர்திருத்தங்களை தொடர வேண்டும் என்று கோரியுள்ளது. மற்ற பொருளாதார, தொழிலாளர் "சீர்திருத்தங்களில்" உடன்பாடு இருந்தால் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல் ஒத்திவைக்கப்படலாம் என்று அது ஆலோசனை கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள் மிகவும் "அவசரமானவை", ஆனால் "ஓய்வூதியங்கள் சற்று தாமதமாக, நிதானத்துடன் உடன்பாட்டைக் காணலாம்."

இத்தகைய கொள்கையில் அதிகம் மறைக்கப்படாத தன்மை தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அரசியல் மறைப்பு கொடுத்து, தொழிலாளர்களின் சீற்றத்தை சமாதானப்படுத்துவது ஆகும். அதில் அதிக வயதான தொழிலாளர்கள்தான் உள்ளனர். தொழிலாளர்களின் மற்ற பிரிவுகளை இலக்கு கொள்ளும் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்திய பின்னர் அரசாங்கம் ஓய்வூதியம் பெறும் வயதை உயர்த்தலாம்.

தொழிற்சங்கங்கள் "தங்களுக்கு பெரும் பள்ளத்தைத் தோண்டிவிட்டன", ஓய்வூதிய வயதிற்கு அவற்றின் "பொருத்தமற்ற" எதிர்ப்பின் மூலம் என்று El Pais விளக்கியுள்ளது. ஆனால் அவை ஊதிய உடன்பாட்டை முதலாளிகள் கூட்டமைப்புடன் கையெழுத்திட்டு இன்னும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் பற்றி பேச்சுக்கு தயார் என்று கூறியதை "பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளன" என்று பாராட்டியுள்ளது.

வலதுசாரி El Mundo பத்திரிகை இந்த வார ஆர்ப்பாட்டங்களை குறிப்பிடத்தக்கவை அல்ல என்று உதறித்தள்ளியது. 1988 இல் பொது வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்த பிலிப்பி கொன்ஸாலஸ்ஸின் PSOE அரசாங்கத்திற்கு எதிராக இருந்த உணர்வு இதில் இல்லை என்று கூறியுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் ஜபடேரோவிற்கும் இடையே உள்ள நெருக்கமான உறவுகளைக் குறிப்பிட்டு "ஒரு நாடகக்காட்சியை பார்க்கிறோம், நிறைய கூச்சல், பலூன்கள், கோஷ அட்டைகள் உண்டு, ஆனால் உண்மையில் மோதல் இங்கு இல்லை" என்று கூறியுள்ளது.

El Mundoவின் நம்பிக்கையான தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை கட்டுப்படுத்தும் என்பது தவறானது.

ஸ்பெயின் மக்கள் ஜபடேரோ அரசாங்கம் தயாரிக்கும் சிக்கன நடவடிக்கைகளை பெரிதும் எதிர்க்கின்றனர். Publico நாளேடு இந்த முன்னதாக நடத்திய கருத்துக்கணிப்பு ஸ்பெயின் மக்களில் 49 சதவிகிதத்தினர் அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டங்களுக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருவர் என்று காட்டியுள்ளது. மற்றொரு கணிப்பு சிக்கன நடவடிக்கைகள் முழுவதையும் 84 சதவிகிதத்தினர் எதிர்ப்பதைக் காட்டியுள்ளது.

ஆனால் இந்த எதிர்ப்பு, அழுகிய தொழிற்சங்கங்கள் அல்லது ஜபடேரோவைக் பாதுகாக்கும் முன்னாள் இடது அரசியல் அமைப்புக்கள் மூலமோ வெளிப்பாட்டைக் காணமுடியாது. ஏனெனில் அவைதான் அவருடைய தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளுக்கு பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஸ்பெயினின் தொழிலாளர்கள் இருக்கும் அரசியல் ஒழுங்கமைப்பில் இருந்து விடுபட்டு சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைத்து கிரேக்கம், போர்த்துக்கல், ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் போராட்டத்துடன் இணைய வேண்டும். இத்தகைய போராட்டம் நிதியாளர்களின் இலாப உந்துதலுக்கு என்று இல்லாமல் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொருளாதார மறுசீரபைப்பு ஒரு சோசலிச முன்னோக்குத் தளத்தில் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும். இந்தக் கருத்தினை பகிர்ந்துகொள்ளும் தொழிலாளர்களும் இளைஞர்களும் உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.