World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold election meetings

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டங்களை நடத்துகிறது

30 December 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக இலங்கை பூராவும் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. சோ.ச.க. யின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினராவார். தெற்காசியாவில் மற்றும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்துக்காக - ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக- டயஸ் போராடுகிறார்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தொடக்கம் முன்னால் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி வரை ஏனைய அனைத்து 21 வேட்பாளர்களும், 26 ஆண்டுகால அழிவுகரமான இனவாத யுத்தத்தை ஏற்படுத்திய மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது கடும் தாக்குதலுக்கு புதிதாக தயாரிக்கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ ஒழுங்கை பேணிக் காக்கவே அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர்.

சோ.ச.க. தேர்தல் கூட்டங்களில், உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் தீர்க்கமான சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை டயஸ் கலந்துரையாடுவதோடு அவற்றை தீர்ப்பதற்கான சோசலிச வேலைத் திட்டத்தை விளக்குவார். நாம் எங்களது கூட்டங்களில் பங்குபற்றுமாறும் சோ.ச.க. பிரச்சாரங்களில் பங்கேற்குமாறும் தொழிலாளர்கள், குடும்பத் தலைவிகள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

கூட்ட விபரங்கள்:

காலி: நகர மண்டபம்
ஜனவரி 3, ஞாயிறு மாலை 4.00 மணி

கம்பஹா: சனசமூக மண்டபம், நகர மண்டப மைதானம்
ஜனவரி 9, சனிக்கிழமை, மாலை 4.00 மணி

மாத்தறை: சனச மண்டபம், நூபே சந்தி
ஜனவரி 9, சனிக்கிழமை மாலை 4.00 மணி

ஹட்டன்: சக்தி மண்டபம்
ஜனவரி 9, சனிக்கிழமை, பி.ப. 2.00 மணி

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுரவு சங்க மண்டபம்
ஜனவரி 17, ஞாயிறு, பி.ப. 2.00 மணி

அம்பலங்கொட: கடற் தொழிலாளர் கூட்ட மண்டபம்
ஜனவரி 17, ஞாயிறு மாலை 4.00 மணி

பண்டாரவளை: நகர மண்டபம்
ஜனவரி 17, ஞாயிறு, பி.ப. 3.00 மணி

கொழும்பு: பொது நூலக கேட்போர் கூடம்
ஜனவரி 23, சனிக்கிழமை பி.ப. 3.00 மணி