World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

Russia announces expansion of nuclear capabilities, sanctions pre-emptive nuclear strikes

அணு ஆயுத வசதிகளை விரிவாக்கல், தடுப்பு அணுவாயுத தாக்குதல்களுக்கு அனுமதி ஆகியன பற்றி ரஷ்யா அறிவிப்பு

By Andrea Peters
7 January 2010

Use this version to print | Send feedback

டிசம்பர் இறுதியில், ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் தனது அரசாங்கம் புதிய தலைமுறை அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்ய நோக்கங்கொண்டிருப்பதாக அறிவித்தார். அண்மையில் காலாவதியாகிப்போன அணு ஆயுதங்கள் மீதான ஸ்டார்ட் 1 உடன்பாட்டை பதிலீடு செய்யும் ஒரு புதிய உடன்படிக்கையை கையெழுத்திடுவது தொடர்பான அமெரிக்காவுடனான தற்போது நடந்துகொண்டிருக்கும் மற்றும் இவ்வாறு மிகவும் வெற்றிபெறா பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மெத்வதேவின் அறிக்கை வெளி வந்தது.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய பொழுது தொலைக்காட்சியில் பேசும்பொழுது, ரஷ்ய ஜனாதிபதி நாட்டின் "தேசிய நலன்களைப் பாதுகாக்க" அதன் முயற்சியின் பகுதியாக புதிய ஏவுகணைகளை கட்டுவதற்கான கிரெம்ளினின் திட்டங்களை முன்வைத்தார். பத்திரிகை அறிக்கைகளின்படி, அணுவாயுத பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உடன்பாடின்மையின் முக்கிய புள்ளி ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு முறையை கட்டுவதற்கான வாஷிங்டனின் தொடர்ச்சியான திட்டங்கள் ஆகும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், ஒபாமா நிர்வாகமானது அது போலந்திலும் செக் குடியரசிலும் ஏவுகணை எதிர்ப்பு கேடயத்தை நிறுத்துவதற்கான ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யு.புஷ்-ன் கீழ் தோன்றிய திட்டங்களின் துண்டு துணுக்காகும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், நிர்வாகமானது ஐரோப்பிய நிலப்பரப்பில் எங்காவது ஒரு மாற்றை, கிரெம்ளின் சமமாக எதிர்க்கும் ஒரு வகை மாற்றீட்டை அபிவிருத்தி செய்யும் கருத்தை ஒரு போதும் முற்றிலும் கைவிடவில்லை.

டிசம்பர் 29 அன்று, நின்று போய்விட்ட ஸ்டார்ட்-1 பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான செய்தியாளர் ஒருவரின் கேளவிக்கு பதிலளிக்கையில், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் விவரித்தார், "என்ன பிரச்சினை? எது அமெரிக்க பங்காளிகள் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தைக் கட்டி வருகிறார்கள், நாம் ஒன்றும் கட்டவில்லை...ஒருவர் ஏவுகணை பாதுகாப்பு முறையை அபிவிருத்தி செய்யாவிடில், அப்பொழுது அங்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது, அத்தகைய ஒரு குடையை உண்டுபண்ணுவதன் காரணமாக, எமது பங்காளிகள் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று உணர்ந்து, அவர்கள் விரும்பும் எதையும் செய்வர்."

ரஷ்யா அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள புதிய ஆயுதங்கள் அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்பாடு என்னென்னவோ அவற்றுடன் பொருத்தும் வகையில் இருக்கும் என்று மெத்தவதேவ் கூறும் அதேவேளை, கிரெம்ளினின் அறிவிப்பானது அணுவாயுதப் போரின் அச்சுறுத்தலை மேசையிலிருந்து அகற்றிவிட நோக்கங்கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

உண்மையில், முன்கூட்டிய தடுப்பு அணு ஆயுதத்தாக்குதலை அனுமதிக்க நாட்டின் இராணுவ கொள்கை நெறி திருத்த்த்தைப் பின்தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பு வருகிறது. கிரெம்ளின் ஆதரவு ஆங்கில மொழி செய்தி முகவாண்மையான, இன்றைய ரஷ்யா இல் அறிவிக்கப்பட்டவாறு, டிசம்பர் நடுப் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு சபையானது "எந்த இராணுவ அச்சுறுத்தலையும் தடுக்கும்" அணு ஆயுத தாக்குதல்களை மட்டுமல்லாமல், சிறய அளவிலான மோதல்களிலும் அணுஆற்றல் பயன்படுத்துவதற்கும்" கூடனுமதி அளிக்கும் புதிய கொள்கையின் வரைவை அங்கீகரித்தது.

புஷ் நிர்வாகத்தின் கீழ் அதன் இராணுவ கொள்கை நெறி தொடர்பாக அமெரிக்காவால் செய்யப்பட்ட அதேபோன்ற திருத்தங்களை ஒத்த, நாட்டின் அணுவாயுதக் கொள்கை தொடர்பான இந்த மாற்றமானது, தனது ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும் சர்வதேச அரங்கில் தங்களின் தோற்றத்தை அதிகப்படுத்தவும் ரஷ்யாவால் எடுக்கப்பட்ட பரந்த முயற்சியின் ஒரு பகுதி ஆகும்.

டிசம்பரில், ரஷ்யன் டுமாவின் மேல் சபையில், மத்திய அவையானது நாட்டின் எல்லைகளுக்கு வெளியில் பாராளுமன்றத்தின் உதவியை நாடாமலேயே படையை பயன்படுத்துவதற்கு அதிகாரமளிக்க ஜனாதிபதிக்கு பரவலான அதிகாரங்களை வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜேம்ஸ்டெளன் பவுண்டேஷனின் யுரேஷியா டெய்லி மானிட்டரில் டிசம்பர்10 கட்டுரையின் படி, ஜனாதிபதி மெத்வதேவ் இப்பொழுது "ரஷ்ய கூட்டமைப்பின் மற்றும் அதன் குடிமக்களை காப்பதற்கு" சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் அல்லது மட்டுப்பாடுகள் எதுவுமின்றி, பகைவனை சுட்டிக்காட்ட, படையின் அளவைத் தீர்மானிக்க, எங்கும் எந்த நேரத்திலும் வெளியில் நடவடிக்கையில் ஈடுபட துருப்புக்களை அனுப்ப முடியும்."

இந்த நகர்வு கிரெம்ளின் அதனோடு ஒத்த இனம் சார்ந்ததில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஒரு சட்டரீதியான அடிப்படையை அதற்கு வழங்குவதாக பரவலாக பார்க்கப்படுகிறது, அது 2008 ஆகஸ்டில் எதிர்த்து நிற்கும் தெற்கு ஒசெட்டியா மீதாக ஜோர்ஜியாவுடன் அதன் போரின் பொழுது எடுத்தது. அந்த நேரத்தில், திபிலிசியிலிருந்து ஏறபடுத்தப்பட்ட ஆத்திரமூட்டல்களால் அதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, ரஷ்யா ஜோர்ஜிய எல்லையில் நுழைந்து, ஜோர்ஜிய படைகளை நிலைகுலைய செய்தது.

போரை அடுத்து உடனடியாக, ரஷ்யன் அரசியற் நிறுவன அமைப்புக்குள்ளே கிரெம்ளின் நடவடிக்கைகளின் அரசியற்சட்டரீதியான தன்மை மற்றும் எதிர்காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகளுக்காக ரஷ்ய சட்டத்திற்குள்ளே ஒரு தெளிவான அடிப்படையை உருவாக்குவதற்கான தேவையைப் பற்றி கேள்விகள் எழுந்தன. அண்மையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, வெளியில் ரஷ்ய குடிமக்களைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்க வரம்பிலா அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கிறது என்ற உண்மையானது, பெரிய அளவிலான ரஷ்ய இன மக்ள்தொகையினராகையால், முன்னாள் சோவியத் கோளரங்கில் உள்ள நாடுகள் முழுவதிலும் வசிக்கும் பகுதியினர் ரஷ்ய குடி உரிமையைக் கொண்டிருப்பர் அல்லது அவ்வுரிமையைக் கோர முடியும் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சோவியத் ஒன்றியம் பொறிந்துபோனதிலிருந்து அனைத்து முனைகளிலும் பொதுவாக வீழ்ச்சியடைந்திருந்த அதன் இராணுவம் பற்றிய சீர்திருத்தத்தில் கடந்த ஆண்டின்பொழுது, ரஷ்யா சம்பந்தப்பட்டிருந்தது. அதனை செப்பனிடல் என்பது ஆயுதப்படைகளை அமைப்பு ரீதியாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் நவீனப்படுத்துவதை இலக்கு கொண்டதாக இருக்கிறது.ஜேம்ஸ்டெளன் பவுண்டேஷனின் ரோஜர் மெக்டர்மாட் சீர்திருத்தங்கள் ஜோர்ஜியாவுடனான 2008 போரின் படிப்பினைகளை கற்றுக்கொள்ள ரஷ்ய இராணுவம் எடுத்த முயற்சியினால் உந்தித்தள்ளப்படுகிறது. ரஷ்யாவின் வெற்றி இருப்பினும் அந்த போர், சிறிய அளவிலான நடவடிக்கைகளில், விரைந்து துருப்புக்ளை இறக்குவதில் நாட்டின் ஆயுதப் படைகள் மோசமாக தேவையான பொருள் அளிப்பு செய்யப்பட்டிருந்தது.

"நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் ஓரளவுக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான, ஒருவேளை அதற்கு முன்னர் இருந்தும் கூட, ரஷ்ய ஆயுதப் படைகளின் வரலாற்றில் ஈடு இணை அற்றதும என்று ஆகஸ்டு 2009ல் மக்டெர்மோட் எழுதினார்.

"கொள்கையின் உடகுறிப்பு மீதான எந்த கருத்தும் அவசரப்பட்டதாகும்" என்று கூறிய அவர், "ரஷ்ய மரபுரீதியான ஆயுதப் படைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் சோவியத் அரங்கிற்குள்ளே , திடீரென்று திறனுடையதில், தீர்க்கமாக தலையிடுவதில் போட்டியிட முடியாத, மேலாதிக்க சக்தியாக வெளிப்படுவது பெரும்பாலும் நிகழக்கூடும்."

ரஷ்யாவின் இராணுவக் கொள்கைநெறியில் மற்றும் கட்டமைப்பில் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்கள், பாரம்பரியமாய் அதன் செல்வாக்கெல்லையினுள்ளே உள்ள பகுதிகளில் மாஸ்கோவின் புவிசார் அரசியல் நிலையை சவால் செய்துவருவது பற்றி ஆளும் தட்டின் பதட்டத்தின் பிரதிபலிப்பாகும். இவையும் கூட ரஷ்யா தன்னின் எதிர்கால சிதையாத்தன்மை பற்றிய கவலைகளுடன் இடையிடையே தூவப்பட்டதாய் பார்க்கப்படுகின்றன.

டிசம்பர் 17 அன்று, ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணை படை கொமாண்டர், அந்திரேய் ஷ்வைச்சென்கோவை இண்டர்பேக்ஸ் மேற்கோள்காட்டியது. நாட்டின் அணுவாயுத தாக்குதல் கொள்கை மீதாக கருத்து தெரிவிக்கும் முகமாக, அவர் கூறினார்: "(இன்று) ரஷ்யாவுக்கு சாதகமில்லாத புவிசார் அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய மாற்றங்களைக் கட்டாயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரையற்ற இயற்கை சேர்ம இருப்புக்களையும் வளங்களையும் கொண்டிருக்கும் நாடான ரஷ்யா, எதிர்காலத்தில், பேரளவிலான இராணுவ ஆக்கிரமிப்பிற்கான இலக்காக ஆகக் கூடும் என்பதை, புறந்தள்ளிவிட முடியாது.

ரஷ்யாவின் மேற்குப் பக்கவாட்டம் நாடு, கிழக்குப் பகுதி விரிவாக்கத்திற்கான நேட்டோவின் நடந்து கொண்டிருக்கும் முயற்சிகளை எதிர்கொள்கிறது. 2000களின் பொழுதுஜோர்ஜியா, உக்ரைன் இவ்விரண்டும் அமெரிக்க ஆதரவு "வண்ணப் புரட்சிகளில்" சென்றிருந்தன. அவற்றின் உடனடி விளைவு வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட ஆட்சிகளை நிறுவுதலாக இருந்தன. ஏனைய மற்றவற்றுடன், ஐரோப்பிய சந்தைகளுக்கு செல்லும் சக்தி வளங்களைக் கொண்டு செல்லும் இடமாற்ற புள்ளிகளாக அவை பங்காற்றுவதன் காரணமாக இவ்விருநாடுகளும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

அதே நேரத்தில், ரஷ்யாவானது ஆப்கானிஸ்தானில் வெடித்துவரும் போரின் வடிவத்தில் மத்திய ஆசியாவில் அமெரிக்க தலையீட்டின் விரிவாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. குறுகிய காலப் பகுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோல்வியுறும் சாத்தியத்தை, இது இப்பிராந்தியத்தில் இஸ்லாமிய ஆதரவு உணர்வுகளை தூண்டி விடக்கூடும் என்பதால், அது அதன் சொந்த செயற்பட்டியலை கீழறுத்துவிடம் என்பதாலும் கிரெம்ளின் அது குறித்து எச்சரிக்கையாக இருக்கிறது, அமெரிக்க இராணுவ நடவடிக்கையின்விரிவாக்கமும் கிரெம்ளினைப் பொறுத்தவரை அதன் கவலைக்கான பிரதான காரணமாகவும் இருக்கிறது.ஆப்கானிஸ்தான் மீதான குவிப்பை ஒபாமா நிர்வாகம் அதிகரிப்பது, ரஷ்யா தனது நீண்டகால பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கும் பகுதியான, மத்திய ஆசியாவின் எண்ணெய்க் குழாய் வழித்தடங்கள் மற்றும் எரிபொருள் வளங்கள் மீதான கட்டுப்பாட்டில் அதன் பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு செயற்பட்டியலால் உந்தித்தள்ளப்படுகிறது.

இந்த பகுதிகளில் அதன் புவிசார் அரசியல் நிலைப்பாட்டை சவால் செய்வது பற்றிய ரஷ்யாவின் கவலைகள் அதன் பொருளாதார நெருக்கடியால் மோசமடைந்திருக்கிறது. 2009ல், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.8 சதவீதம் அளவில் வீ.ச்சி அடைந்தது. நெசவிசிமையா கெசட்டாவின்படி, அது "15 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆழமான சரிவாகும்." பொரிவின் கடுமையும் வேகமும் கிரெம்ளினை வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் போக்கில் அது அதன் பொருளாதார திட்டமிடல்கள் கீழ்நோக்கிய வகையில் தொடர்ந்து திருத்தி அமைக்கவேண்டி இருந்தது.

BRIC நாடுகளின் மத்தியில் (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.25 சதவீதத்தால் வாழ்ச்சி அடைகையில், இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி, மெதுவான வேகத்தில் இருப்பினும் தொடர்கையில், அந்தக் குழுவில் உள்ளவர்களுடன் ஒப்பீட்டளவில் அதன் சுருங்குதலில் ரஷ்யாவானது, வேறுபடுத்திக் காணக்கூடியதாக இருக்கிறது. ஏனைய BRIC நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவின் மோசமான நிலையானது, சில நிபுணர்களை, அது உலகின் முன்னனி பொருளாதார அபிவிருத்தி கொண்ட சக்திள் மத்தியில் உள்ளதாக தொடர்ந்து கருதப்படமுடியுமா என்று கேள்வி கேட்க இட்டுச்செல்கிறது.

பொருளாதார நெருக்கடியானது அதன் பொருளாதாரத்தை தாக்குப் பிடிப்பதற்காக எரிபொருள் வளங்களில் ரஷ்யா சார்ந்திருப்பதன் ஆழத்தையும் உக்கிரத்தையும் அம்பலப்படுத்துகிறது. கடந்த இரண்டு மாதங்களின் பொழுது ரஷ்யப் பொருளாதாரத்தின் குருதி ஒழுக்கு நின்றுவிட்டிருந்தது, அது பெரும்பாலும் எண்ணெய்விலைகள் ஏதோ ஒரு வகையில் திருப்பித் தாக்கிவிட்டிருந்ததன் காரணத்திலாகும்.

அரசியல் நிறுவன அமைப்புக்குள்ளே உள்ள கூறுகள், மெத்வதேவ் அவதானிக்கின்றவாறு, எரிபொருள் வளங்களில் "அவமானகரமாக சார்ந்திருத்தல்" என்பதற்கு அப்பால், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் ஒரு மாற்றத்தை ஆதரிப்பதன் மூலம் பதிலிறுக்கையில், காரணிகளின் ஒட்டுமொத்த வரிசையும் ஆளும் தட்டை, அரசியல் அதிகாரம் மற்றும் செல்வத்தின் மாற்று ஆதாரவளங்களை பின்பற்றுவதிலிருந்து தடுக்கிறது மற்றும் மிகவும் குறைவாய் கண்டறிய தூண்டுகிறது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தலுடன் சேர்ந்து, கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் அனுபவமானது, ரஷ்ய ஆளும் தட்டை அதன் எண்ணெய் வளம் மற்றும் மத்திய ஆசியா மற்றும் காகசஸ் வழியான எரிபொருள் கொண்டு செல்லும் வழித்தடங்கள் மீதான அதன் கட்டுப்பாட்டை இராணுவ ரீதியாக பாதுகாப்பதற்கு தயார் செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலிமைப்படுத்தி இருக்கிறது.