World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP concludes presidential election campaign with successful Colombo rally

வெற்றிகரமான கொழும்பு கூட்டத்துடன் சோசலிச சமத்துவக் கட்சி தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறது

By our correspondents
25 January 2010

Use this version to print | Send feedback

ஜனவரி 23ம் தேதி சனிக்கிழமை கொழும்பில் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தை அடுத்து ஒரு ஆறு-வார கால சக்திவாய்ந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி முடிவுக்கு கொண்டுவந்தது. தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் செவ்வாய் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸினதும் ஏனைய பேச்சாளர்களின் உரைகளை கவனத்துடன் கேட்டனர். அதைத் தொடர்ந்து சபையில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலளிப்பும் இடம்பெற்றது.


கொழும்பு சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தில் பங்குபற்றியவர்களின் ஒரு பிரிவு

முந்தைய வாரங்களில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் போரினால் சேதமுற்ற வட மாகாணத்தின் தலைநகரான யாழ்ப்பாணம் உட்பட தீவில் பல இடங்களிலும் பிரச்சாரம் செய்து பொதுக்கூட்டங்களையும் நடத்தியிருந்தனர். பிரச்சாரத்தின்போது அவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் பல பிரசுரங்களையும் நூறாயிரக்கணக்கில் வினியோகித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழுவினதும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினருமான கே. ரட்னாயக்க கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை பரந்த மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அர்ப்பணித்த சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி கூறினார். "பிரச்சாரத்தின்போது சோசலிச சமத்துவக் கட்சி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் தனது முன்னோக்கு பற்றி உரையாடவும் விவாதிக்கவும் முடிந்தது." என அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியடைந்த பின்னரும், ஆளும் வர்க்கம் ஒற்றுமையான இலங்கை பற்றிப் பெருமை அடித்துக் கொண்டாலும், ஆளும் வர்க்கத்தின் போட்டி வேட்பாளர்களான தற்பொழுது பதவியில் உள்ள ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவும் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிற்கும் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் பொன்சேகாவும் தமிழர் எதிர்ப்பு இனவாதத்தை தங்கள் பிரச்சாரங்களில் முக்கிய தளமாகக் கொண்டுள்ளனர். "சுதந்திரம் பெற்றதில் இருந்து தொழிலாளர்களை இனவழியில் பிரிக்க பயன்படுத்திய வகுப்புவாத அரசியலை இந்த ஆளும் வர்க்கம் கைவிடமுடியாது" என்று ரட்னாயக்க கூறினார்.

ஜனநாயக நெறிகள் வெளிப்படையாக மீறப்படும் சூழ்நிலையில் தேர்தல்கள் நடைபெறுகின்றன என்று ரட்னாயக்க கூறினார். இராஜபக்ஷ போர்க் காலத்தில் பயன்படுத்திய அனைத்து சட்டங்களையும் பேணிவருவதோடு, ஒரு இலட்சத்துக்கும் மேலான தமிழர்களை இன்னமும் தடுப்பு முகாங்களில் வைத்திருப்பதுடன் நாட்டின் தேர்தல் சட்டங்களை வெளிப்படையாக மீறியுள்ளார் என்று அவர் கூறினார்.


சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர் அமைப்பின் பேச்சாளர் கல்ப பெர்னான்டோ

சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர் அமைப்பின் இலங்கை பகுதியின் சார்பில் பேசிய கல்ப பெர்னான்டோ மாணவர்களையும் இளைஞர்களையும் எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த சமூக நெருக்கடி பற்றி விவரித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் ஏராளமான உறுதிமொழிகளைக் கொடுத்துள்ளனர். வேலைகள் வழங்குவது, கல்வி முறை மேம்படுத்தப்படுவது பற்றி பலவற்றைக் கூறியுள்ளனர். இதேபோன்ற உறுதிமொழிகளைத்தான் இராஜபக்ஷ நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் கொடுத்தார் என்று பெர்னாண்டோ குறிப்பிட்டார். இராஜபக்ஷவின் கீழ் இலங்கை இராணுவம் த.வி.புலிகளை அழிக்க நடத்திய போரில் படைத்தளபதியாக பணிபுரிந்த பொன்சேகா தான் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 2,000 ரூபாய்கள் (அமெரிக்க $17.50) அவர்கள் தொழிற்பயிற்சி பெறும்போது கொடுப்பதாக கூறுகிறார். ஆனால் உலக பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ் மற்றும், இனவாத யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டின் எதிர்காலமே அடகு வைக்கப்பட்ட நிலையில் நிலைமையின் கீழ், அத்தகைய வேலைத் திட்டத்துக்கு அவர் எங்கிருந்து பணம் பெறுவார் என்பதை பொன்சேகா கூறவில்லை.

"தனியார் பல்கலைக்கழகங்கள் பிரச்சினையில் பொன்சேகா தான் இது பற்றி விசாரிக்க ஒரு குழு அமைப்பதாகக் கூறுகிறார். வேறுவிதமாகச் சொன்னால் அவர் ஒன்றும் கல்வி தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை" என்று பெர்னான்டோ தொடர்ந்து கூறினார்.

இடதுசாரிகள் எனக் கூறிக்கொள்ளும் சிங்கள பேரினவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது (IUSF), சிங்கள முதலாளித்துவத்தின் இரு பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (யூ.என்.பி.) ஒன்று சேர்ந்து பொன்சேகாவை முன்னிலைப்படுத்துகிறது. "மாணவர்களும் இளைஞர்களும்", அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதும், ஜே.வி.பி. யினதும் பிற்போக்கு இனவாத முன்நோக்கை "நிராகரிப்பதோடு" "வேலையின்மை, கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு பற்றிய பிரச்சினைகளை தீர்ப்பற்கான ஒரே வழியாக, அனைத்துலகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும்" என பெர்னான்டோ கூறினார்.


கூட்டத்தில் விஜே டயஸ் உரையாற்றுகையில் அவருக்கு இடது பக்கத்தில் அவருடைய உரையை சாந்தகுமார் தமிழில் மொழிபெயர்க்கின்றார்

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ் பல போலி சோசலிச குழுக்கள் தீவிரவாத புத்திஜீவி என்று பாராட்டும் காமினி வியாங்கொட எழுதிய கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்ட வகையில் தன்னுடைய உரையை ஆரம்பித்தார். கடந்த வார இறுதியில் வந்த றாவய பத்திரிகை கட்டுரையில் வியாங்கொட சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை கண்டித்துள்ளார். "விஜே டயஸுஇற்கு மகிந்த இராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவை நிராகரிக்க வாக்களிக்கலாம். அத்தகைய வாக்கினால் இருவரில் ஒருவரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள். எது காப்பாற்றப்படும் என்றால் விஜே டயஸின் கோட்பாட்டு தூய்மைதான்." என்று அவர் அதில் எழுதியிருந்தார்.

"இங்கு வியாங்கொட சோசலிச சமத்துவக் கட்சியின் தத்துவார்த்த, வேலைத்திட்ட உறுதி, சரியான தன்மைக்கு "தூய்மை" என்ற பெயரைக் கொடுக்கிறார். இச் சொல்லை இவர் இழிந்த முறையில் பயன்படுத்தும் விருப்பத்தை கொண்டுள்ளார். ஆனால் கொள்கைத் தகமை உடைய வேறு கட்சி எதையும் குறிக்கும் திறன் அவரிடம் இல்லை. "ஒருவர் இரு கறுப்பு நபர்களை எதிர்கொள்ளும்போது, கூடுதலான கறுத்த நபரை அதிக கறுப்பு இல்லாத நபரிடம் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும்" என்று கூறி பொன்சேகாவிற்கு போடும் வாக்கு பற்றி முடிவை நியாயப்படுத்துகிறார். இந்த மனிதரின் 2005ம் ஆண்டு அதிக கறுப்பு இல்லாத நபர் இராஜபக்ஷ இப்பொழுது அதிக கறுப்பு உடையவராக மாறிவிட்டார்; புதிய மென் கறுப்புத் தன்மை உடையவர் பொன்சேகா. இந்த முன்னாள் தீவிரவாதிகள் எத்தகைய பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகிவிட்டனர்?"

இதன்பின் டயஸ் இலங்கையை எதிர்கொண்டிருக்கும் தீவிர அரசியல், பொருளாதார நெருக்கடி பற்றிப் பேசினார். இத்தேர்தலில் போலி இடது வேட்பாளர் உட்பட அனைத்து பிறரும் தேர்தலை இரு ஆண்டுகள் முன்கூட்டியே நடத்துவதின் உண்மைப் பிரச்சினைகளை மறைக்க முற்பட்டுள்ளதோடு இதை இராஜபக்ஷக்கும் பொன்சேகாவிற்கும் இடைய வெறும் அதிகாரப் போராட்டமாக குறைத்துக் காட்டுகின்றனர் என டயஸ் விளக்கினார்.

உண்மையில் தேர்தலை முன்கூட்டி இராஜபக்ஷ நடத்த முடிவெடுத்ததற்குக் காரணம் பெருகிய சமூக அமைதியின்மையை அடுத்த அரசாங்கம் எதிர்கொள்ளுகையில் தன் கரத்தை வலுப்படுத்திக் கொள்ளுவதுதான். அந்த அரசாங்கம் இராஜபக்ஷ அல்லது பொன்சேகா இருவரில் எவர் தலைமையில் வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தால் கடுமையான சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செய்யும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும்.

சமீபத்திய மாதங்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெட்ரோலியம், எரிபொருள், நீர்விநியோகத்துறை தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள், மற்றும் உயரும் விலைகளை பற்றிய மக்களின் பெருகிய அதிருப்தி ஆகியவற்றைக் காட்டுகின்றது.

முதலாளித்துவத்தின் முக்கிய பிரிவுகள் மக்களின் பெருகிய எதிர்ப்பை, 17 கட்சிகள் கூட்டணி என்ற ஆட்டங்கண்ட கூட்டை நம்பியிருக்கும் இராஜபக்ஷவின் திறனில் ஐயமுற்றுள்ளனர். எனவே அவர்கள் முன்னாள் தளபதி பொன்சேகாவிற்குப் பின் அணி திரண்டுள்ளனர். அவர் தன்னை "அரசியல் மோதல்களுக்கு அப்பாற்பட்டவராக" காட்டிக்கொள்வதுடன், அரச எந்திரத்தின் அடக்குமுறை அதிகாரங்களை அணிதிரட்டிக்கொள்ள முடியும் என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர் என டயஸ் தெரிவித்தார்.

"வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பரினவாத ஜே.வி.பி. உடைய ஆதரவில் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பொன்சேகா காட்டிக்கொள்வது ஒரு கோரமான மோசடி ஆகும். இவர் இராணுவத்தைத்தான் நம்பியுள்ளார், வெளிப்படையாக தான் எப்படி ஆட்சி நடத்துவேன் என்பதற்கு இராணுவ சொற்களைத்தான் பயன்படுத்துகிறார்" என டயஸ் மேலும் கூறினார்:

உலகப் பொருளாதார மந்தநிலையின் பாதிப்பு மற்றும் பெரும் சக்திகள் தெற்கு ஆசியப் பகுதியில் போட்டியிடுவது பற்றியும் டயஸ் விவாதித்தார். அமெரிக்கா அதன் கொள்ளைத்தனமான ஆப்கானிய போரை பாக்கிஸ்தானிலும் விரிவாக்கி, இந்தியாவை சீனாவுக்கு எதிரான போட்டி நாடாக கட்டமைக்க விரும்பும் தாக்கங்களைப் பற்றியும் டயஸ் கலந்துரையாடினார்.

"இலங்கை மக்களை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தேசியரீதியில் தீர்க்கப்பட முடியாதவை. இப்பிரச்சினைகள் சர்வதேச அபிவிருத்திகளுடன் பிணைந்துள்ளதால் அவற்றிற்கு சர்வதேச தீர்வுகள்தான் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுதான் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை உழைக்கும் மக்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்வைக்கிறது. தெற்கு ஆசியா, மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் முழு நனவுடன் ஐக்கியத்துக்கான போராட்டத்தை மேற்கொள்ளாவிடில், இலங்கை மக்கள் உள்ளூர் முதலாளித்துவத்தின் ஏதேனும் ஒரு பிரிவின் பாதிப்புக்குள்ளாகிவிடுவர். அது தேசப்பற்று, தேச கட்டமைப்பு போன்ற கோஷங்களின் கீழ் தேசியவாத பொறிகளை இவர்களுக்கு வைக்கும் .

"சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் சர்வதேச ரீதியிலும் சோசலிச குடியரசுகளை அமைப்பதன் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவிலான தொழிலாள வர்க்க ஆட்சிக்காக போராடுகிறது. இந்தப் போராட்டம் தேர்தலின் பின்னரும் தொடர்வதோடு சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறு நாம் எமது ஆதரவாளர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்," என டயஸ் தெரிவித்தார்.

பேச்சுக்களை தொடர்ந்து உயிரோட்டமான விவாதங்கள் நடந்தன. பார்வையாளர்களில் ஒருவர் ஒரு பொனபார்ட்டிச ஆட்சிக்கும் சாதாரண முதலாளித்துவ ஆட்சிக்கும் இடையே என்ன வேறுபாடு என்று கேள்வியெழுப்பினார். தீவிர நெருக்கடி, மற்றும் தொழிலாளர் வர்க்க போராட்ட வளர்ச்சி நிலைமையில் முதலாளித்துவம் பல நேரமும் நாட்டின் உருவகமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒரு பலமான மனிதனை முன்கொண்டுவந்து, அவர் மரபார்ந்த பாராளுமன்ற அரசியல் உத்திகளுக்கு அப்பால் நிற்பவர் என்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் முதலாளித்துவத்திற்கு இடையேயான போராட்டத்திற்கும் அப்பால் நிற்பவர் என்றும் காட்டும். ஆனால் யதார்த்தத்தில் பொனபார்ட்டிச ஆட்சி இரக்கமின்றி முதலாளித்துவத்தின் நிகழ்ச்சிநிரலையே செயல்படுத்தும். அது ஒரு வெளிப்படையான இராணுவச் சர்வாதிகாரத்தை நோக்கி முன்வைக்கும் ஒரு படியாகும், என டயஸ் விளக்கினார்.

யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மத்தியில் பகிரங்கமாக அரசியல் வேலைகளை முன்னெடுக்க சோசலிச சமத்துவக் கட்சிக்குக்கு கிடைத்துள்ள சாத்தியங்கள் பற்றி மற்றொரு பார்வையாளர் சபையில் இருந்து கேட்டார். அண்மையில் யாழ்ப்பாணத்திலும் உரையாற்றிய டயஸ் கூறுகையில், தொடரும் அரசியல் குழப்பம் மற்றும் பொருளாதார சீரழிவு நிலைமையின் கீழ், வடக்கில் உள்ள மக்கள் என்ன நடந்தது மற்றும் மாற்றீடு என்ன என்பது பற்றி மதிப்பீடு செய்ய முயல்கின்றனர். அவர்கள் இலங்கை ஆளும் உயரடுக்கு தொடுத்த ஈவிரக்கமற்ற இனவாத போரால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறையையும் எதிர்கொண்டனர். தசாப்த காலங்களான தமிழர்-விரோத பாரபட்சத்தின் காரணமாக மட்டுமே புலிகளால் இளைஞர்களை ஈர்த்துக்கொள்ள முடிந்தது, என்றார்.

போர்க்காலம் முழுவதும், அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்கு முறை இருந்த போதிலும், சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் வடக்கில் அரசியல் வேலைகளை முன்னெடுத்தது வந்தது. கடும் சிரமங்களை எதிர்கொண்ட வடக்கில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்கள், இப்பொழுது ஏராளமான தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று ஜனநாயக, சர்வதேச, சமத்துவ முன்னோக்கிற்கு ஆர்வம் காட்டுபவர்களிடம் பேச முடிகிறது.

கூட்டத்திற்கு முன்னரும் கூட்டத்தின் பின்னரும் வருகை தந்திருந்தவர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். 35 வயதான தனியார் துறை தொழிலாளி ஒருவர் பேசுகையில், "நாங்கள் உலக பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை நேரடியாக சந்திக்கின்றோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. இப்போது நிரந்தரத் தொழிலாளர்களை சேர்த்துக்கொள்வதில்லை. தொழிற்சங்கம் ஒன்று உள்ளது. ஆனால் அது முதலாளிமாரின் தேவைக்காக பகிரங்கமாக சேவை செய்கின்றது. இவை ஒரு சர்வதேச நிகழ்வுப் போக்கின் பகுதிகளே என்பதையும் தீர்வு சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும் என்பதையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்," என்றார்.

ஊவா மாகாணத்தின் ஒரு பிற்படுத்தப்பட்ட பிரதேசமான மஹியங்கனையைச் சேர்ந்த ஒரு விவசாயியான கருணாரட்ன பேசுகையில், ""நான் விவசாயிகள் அதிகம் உள்ள இடத்தில் வசிக்கிறேன். அங்குள்ள மக்கள் மிகவும் வறியவர்கள். போருக்கு பின்னர் ஏதாவது நிவாரணத்தையும் முன்னேற்றத்தையும் அவர்கள் எதிர்பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. உர மானியம், நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் இலகு கடன் திட்டங்கள் போன்ற வாக்குறுதிகளை 2005 தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகளுக்கு உர மானியம் மட்டுமே கிடைத்தது, அதுவும் ஒரு அளவுக்கு மட்டுமே. பிரச்சினைகள் தாங்க முடியாததாக வருகின்றன. மக்கள் குழம்பிப் போயுள்ளதோடு என்ன செய்வதென்று என்ன செய்வது என்று திகைக்கின்றனர். இப்போது என்னால் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தை அவர்களுக்கு விளக்க முடியும்," எனத் தெரிவித்தார்.