World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German government falls in behind US strategy for Afghanistan

ஜேர்மனிய அரசாங்கம் அமெரிக்காவினுடைய ஆப்கானிஸ்தான் மூலோபாயத்துடன் இணைகிறது

Stefan Steinberg
28 January 2010

Use this version to print | Send feedback

ஜேர்மனிய பாராளுமன்றத்திற்கு (Bundestag) புதனன்று கொடுத்த உரையில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU), ஜனாதிபதி பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் விரிவாக்கத்திற்கு ஆதரவு கொடுக்க கூடுதலான ஜேர்மனிய படைகளை அனுப்பவதாக உறுதி கொடுத்தார். ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி Guido Westerwelle (சுதந்திர ஜனநாயகக் கட்சி, FDP), அமெரிக்க-நேட்டோ போருக்கு ஜேர்மனியின் புதிய துருப்புக்களின் பங்களிப்பு பற்றி வியாழனன்று லண்டனில் நடக்கவிருக்கும் 60 வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் கூறுவார்.

திங்கள் மாலை ஜேர்மனிய அரசாங்கமானது அதன் தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ள 4,500 துருப்புக்களுடன் இன்னும் 500 துருப்புக்களையும் மற்றும் 350 துருப்புக்களை "எளிதில் அடிக்கடி மாற்றக்கூடிய நோக்கத்திற்காக வைத்திருப்பவையான" வடிவத்தில் அதிகரிக்க இருப்பதற்கு உடன்பட்டது.

அதே நேரத்தில் ஜேர்மனி போருக்கு அதன் நிதிப் பங்களிப்பையும் அதிகரித்தது, அதாவது 50 மில்லியன் யூரோக்களில் இருந்து (70 மில்லியன் டாலர்) 350 மில்லியன் யூரோக்கள் என்று சர்வதேச நிதியை உயர்த்தியது; இந்த நிதி தாலிபன் உறுப்பினர்களுக்கு ஆக்கிரமிப்புப் படைகளுடன் ஒத்துழைக்க இலஞ்சமாக பயன்படுத்தப்படும். "சிவிலிய வளர்ச்சி" திட்டங்கள் என்று அழைக்கப்படுவதற்கு தன் பங்களிப்பை பேர்லின் இருமடங்காக ஆக்கி மொத்தம் 430 மில்லியன் யூரோக்களை கொடுக்கும்.

துருப்புக்கள் மற்றும் நிதியை அதிகரித்தல் ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையின் (ISAF) தளபதி அமெரிக்க ஜெனரல் ஸ்டான்லி மக்கிரிஸ்டன் கொடுத்துள்ள முறையீடுகளின் பேரில் வந்துள்ளது; அவர் German Bild செய்தித்தாளுக்கு இந்த மாதம் முன்னதாக ஜேர்மனியின் கூடுதல் உறுதியை நாடியிருந்தார்.

கிட்டத்தட்ட ஜேர்மனிய மக்களில் முக்கால்வாசிப் பேர் போரை எதிர்த்துள்ள நிலையில், அரசாங்கம் பொதுமக்கள் கருத்தை மீறி போரினால் சேதமுற்றிருக்கும் ஆப்கானிஸ்தானில் இறப்பு எண்ணிக்கை, அழிவு ஆகியவற்றைத் தவிர்க்க முடியாமல் உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. இன்னும் அதிக துருப்புக்கள், நிதியைத் தவிர, ஜேர்மனிய அரசாங்கம் அமெரிக்க இராணுவ மூலோபாயமான "பங்காளித்தனத்திற்கும்", அதாவது ஜேர்மனிய படையினரை ஆப்கானிய துருப்புக்களுடன் இணைத்து போரில் ஈடுபடுத்தலுக்கும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த பின்னைய நடவடிக்கையும் மக்கிரிஸ்டல் எழுப்பிய கோரிக்கைகளுக்க இணங்கவே உள்ளது; அவர் ஜேர்மனிய இராணுவத்தை (Bundeswehr) நேரடிப் போரில் ஈடுபடக்காட்டும் தயக்கத்திற்கு குறைகூறியிருந்தார். புதிய ஜேர்மனிய இராணுவ மூலோபாயம் இன்னும் அதிகமாக இறப்பு எண்ணிக்கைகளை ஆப்கானிய எழுச்சியாளர்கள் மற்றும் சாதாரணக் குடிமக்கள் இடையே ஜேர்மனிய படைகள் மூலம் ஏற்படுத்தும்; இதைத்தவிர ஜேர்மனிய படையினரின் இறப்பு எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்கும்.

தன்னுடைய ஆப்கானிஸ்தான் கொள்கையின் உண்மை பொருளுரையை மேர்க்கெல் மறைக்க முற்பட்டு, ஏமாற்றுத்தனமாக இதை செவ்வாயன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் "புதிய அணுகுமுறை" என்று விவரித்து "இது தற்காப்பு அணுகுமுறையைவிடக் கூடுதலாகும், இதையொட்டி ஜேர்மனிய இராணுவத்தின் தாக்குதல் திறன்கள் மறுகட்டமைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

தன்னுடைய Bundestag உரையில் மேர்க்கெல் ஆப்கானிய படையினர் மற்றும் போலீசாருக்கு ஜேர்மனிய துருப்புக்கள் கொடுக்கும் பயிற்சி பற்றிய பங்கை வலியுறுத்தினார்; இந்த வாரம் முன்னதாக அரசாங்கத்தின் வளர்ச்சித் துறை மந்திரி Dirk Niebel (FDP) "சிவில் மறுகட்டமைப்புத் திட்டங்களில்" ஜேர்மனியின் பங்கை வலியுறுத்தியிருந்தார்.

இவை அனைத்துமே மோசடியாகும்; ஜேர்மனிய மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதை நோக்கமாக உடையவை. ஆப்கானிஸ்தான் போரின் உண்மை தன்மையில் உள்ள உறவைப் பற்றிய மேர்க்கெலின் மோசடித்தனமும் ஜேர்மனியின் புதிய நிலைப்பாட்டின் விளைவுகள் பற்றிய மோசடித்தனமும், அரசியல் எதிர்ப்புகள் இந்த புதிய பாதைக்கு ஆதரவு உண்டு என்பது சாத்தியம் தான் என்று காட்டுகிறது. ஜேர்மனிய பாராளுமன்றத்தில் உள்ள சமூக ஜனநாயகப் பிரிவின் தலைவரும் ஆப்கானிஸ்தான் பற்றிய ஜேர்மனிய இராணுவக் கொள்கைக்கு பொறுப்பான முன்னாள் வெளியுறவு மந்திரியுமான Frank Walter Steinmeier அரசாங்கத்தின் புது அணுகுமுறையை வரவேற்று, "அரசாங்கம் நம் திசையில் நகர்வது பற்றி மகிழ்ச்சியாக உள்ளது" என்று அறிவித்தார்.

தன்னுடைய ஓட்டிற்கு மதிப்பு இல்லை என்று அறிந்த சூழ்நிலையிலும், இடது கட்சி கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனியத் துருப்புக்கள் பங்கு பெறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" நட்த்துவதற்கு அந்நாடு உரிய இடம் இல்லை என்று வாதிட்டு இருந்தது. அதே நேரத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், முன்னாள் தலைவர் ஓஸ்கார் லாபோன்டைன் உட்பட, ஜேர்மனிய துருப்புக்கள் வெளியேறுவது பற்றிய மூலோபாயத்தை கைவிட்டு, தக்க "வெளியேறும் மூலோபாயம்" பற்றி அரசாங்கத்துடன் விவாதிக்கத் தயார் என்ற குறிப்பையும் காட்டினர்.

கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து CDU-FDP கூட்டணி அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் எப்படி மேலே நடந்து கொள்ளுவது என்பது பற்றி ஒருமித்த நிலைப்பாட்டை காண்பதற்கு திணறியுள்ளது. செப்டம்பர் 4ம் தேதி குண்டுஸில் இரு டாங்கர்கள் மீது குண்டுவிசப்பட்டு, அதன் விளைவாக 170 ஆப்கானியர்களின் உயிர்கள் பலியாக்கப்பட்டதானது ஜேர்மனியில் மக்கள் விவாதமானது ஆப்கானிஸ்தானில் Bundeswehr பங்கு பற்றிய பொது விவாதத்திற்கு எரியூட்டியது. குண்டுஸ் படுகொலைகள் ஜேர்மனிய இராணுவத்தின் கரங்களில் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் Wehrmacht செய்த கொடுமைகளுக்கு அடுத்தாற்போல் பெரும் சிவிலிய உயிரிழப்புக்களைப் பிரதிபலித்தது.

இம்மாதம் முன்னதாக ஜேர்மனியின் புரட்டஸ்டான்ட் திருச்சபையின் தலைவர் பிஷப் Margot Kassmanjn அரசாங்கத்தின் பிரிவுகளில் இருந்து பெரும் குறைகூறலுக்கு அவர் போருக்கு எதிராகப் பேசியபோது எதிர்கொண்டார்; போர் நியாயப்படுத்தப்பட முடியாது என்றும் Bundeswehr திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

எப்படி மேலே செல்லுவது என்பது பற்றிய வேறுபாடுகள் அரசாங்கத்தின் பல மட்டங்களிலும் விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், வெளியுறவு மந்திரி Westerwelle லண்டனில் ஜனவரி 28 நடக்கும் மாநாட்டை அது இன்னும் அதிக படைகளை அனுப்பும் பிரச்சினையில் குவிப்பு காட்டினால், அதைப் புறக்கணிக்கக்கூடும் என்று அறிவித்திருந்தார்.

"தடையற்ற சந்தை" FDP யின் தலைவர் Westerwelle, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் ஒரு பிரிவை பிரதிபலிக்கிறார்; அதற்கு நல்ல உதாரணம் முன்னாள் நீண்டகாலம் FDP யின் வெளியுறவு மந்திரியாக இருந்த Hans Dietrich Genscher ஆவார்; அவர், பலரும் இணைந்த கருத்துக்கள் கொண்ட வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவு கொடுத்தார்; அது ஜேர்மனி நேட்டோக்கு கொடுத்த உறுதியை மற்றய ஐரோப்பிய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுடன் சமன்படுத்தும்; அதில் கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளும் அடங்கும்.

FDP இடம் இருந்து அழுத்தம் வந்தபோதிலும், மேர்க்கெல் ஜேர்மனிய படைகள் திரும்ப பெறுவதற்கான தேதி பற்றி குறிப்பிடுவதில் எதிர்ப்புக் காட்டியுள்ளார். இவ்விதத்தில் அவருடைய கொள்கை ஆப்கானிஸ்தான் பற்றி லண்டன் மாநாட்டிலேயே தெளிவாக்கப்பட்டுவிட்டதுடன் இணைந்துள்ளது.

மாநாட்டிற்கு தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை மற்றும் செய்தி ஊடகத்திற்கு வெளியிடப்பட்டது, திரும்பப் பெறுவதற்கான காலஅட்டவணை எதனையும் குறிப்பிடவில்லை. மாறாக இந்த அறிக்கை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குத் தன் பாதுகாப்பிற்கு முழுப் பொறுப்பை ஏற்க ஆப்கானிஸ்தானால் முடியாது என்று அறிவிப்பதுடன் நேட்டோ நட்பு நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு "நீண்ட கால உத்தரவாதம்" கொடுப்பதையும் வலியுறுத்தியுள்ளது.

இன்னும் கூடுதல் துருப்புக்களை அனுப்புவதற்கு ஜேர்மனிய அரசாங்கம் ஒப்புக் கொண்டது அமெரிக்காவின் முழுக்கோரிக்கைகளை திருப்தி செய்யாது, ஜேர்மனிய உயர் இராணுவக் கட்டுபாட்டின் விருப்பத்திற்கு குறைவாகவும் இருக்கும்; இதைத்தான் பாதுகாப்பு மந்திரி Karl Theodor zu Guttenberg (CSU) இந்த வாரம் தெளிவுபடுத்தினார். ஆப்கானிய கொள்கை பற்றி அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்ற உண்மை ஜேர்மனிய அதிபர், பாதுகாப்பு மந்திரி, வெளியுறவு மந்திரி ஆகியோர் பொது "புதிய அணுகுமுறையை" புகழ்வதற்கு தனித்தனி செய்தியாளர் கூட்டங்கள் நடத்தினர் என்பதில் இருந்து தெரியவந்தது.

ஆயினும்கூட, நடக்கும் பூசல்கள் ஒருபுறம் இருக்க, ஜேர்மனிய அரசாங்கத்தின் கூட்டணியின் பங்காளிகள் ஒன்றாய் சேர்ந்து போரை கணிசமாகத் தீவிரப்படுத்தும் ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளன.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆகியோருடன் இணைந்து மேர்க்கெல் கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் பற்றிய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்; அதன்நோக்கம் போருக்கு புதிய மூலோபாயத்தை வளர்த்தல் என்று கூறப்பட்டது.

"புதிய மூலோபாயம்" இப்பொழுது தெளிவு; அதாவது ஏற்கனவே இறப்பையும், வறுமையையும் நூறாயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு கொண்டுவந்துள்ள ஒரு போரின் குற்றம் சார்ந்த ஆக்கிரமிப்பு தன்மை அதிகப்படுத்தப்பட வேண்டும்; இதுவோ முதல் உலகப்போரைவிட இருமடங்கு அதிக காலத்தை ஏற்கனவே எடுத்துக் கொண்டுள்ளது. கூடுதலான ஜேர்மனிய துருப்புக்கள் இப்பொழுது அமெரிக்க, நேட்டோ படைகளுடன் முடிவில்லா போரில் தங்கள் கரங்களிலும் அதிக இரத்தக் கறையைக் கொள்வார்கள்.

போருக்கு உண்மையான எதிர்ப்பிற்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அணிதிரட்டப்பட்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளும் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று போராடுவதுடன், போரில் இறந்தவர்களுக்கு இழப்பீடுகள் சரியீடு செய்தல் உறுதி செய்யப்படுவதுடன், அழிவிற்குட்பட்டுள்ள நாட்டைக் கட்டியமைக்க நிதி வழங்கவும் போராடப்படுதல் அவசியமாகும்.